LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவும் அனைவருக்குமான முழுமையான தகவல் தளம்..

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவுவதற்காக தொண்டுள்ளம் கொண்டு பலரும் களத்தில் முடிந்ததை செய்துவந்தாலும், அவற்றை மேலும் ஒருங்கிணைத்து, செம்மையாக செய்வது குறித்து பல்வேறு கேள்விகள் நமக்கு  எழத்தான் செய்கிறது.  அவை அனைத்திற்கும் விடை உண்டா?  எங்கே தேடுவது?  எதை நம்புவது? 

>>கஜா வில் பாதிக்கப்பட்ட எந்த கிராமங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்று சொல்ல முடியுமா? 

>>எத்தனைபேர் அந்த கிராமத்தில் வசிக்கிறார்கள்?

>>நிவாரணத்திற்கு உருவான புதிய சிந்தனையை எப்படி பயனுள்ள வகையில் பகிர்வது?

>>நிவாரணத்திற்கு தார்பாய், மெழுகுவர்த்தி போன்ற பொருள்களை விலை குறைவாக மொத்தமாக எங்கே வாங்குவது? எனக்குத் தெரிந்த விலை குறைந்த கடையை எப்படி மற்றவர்களுடன் பகிர்வது?

>>என் கிராமத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை எங்காவது பதிவிட முடியுமா?

>>எந்த கிராமங்கள் எந்த அமைப்புகளால் உதவப்படுகிறது?

>>என்னுடைய தேவைகளை எங்கே சொல்வது?

>>உதவ விரும்புகிறேன் எப்படி உதவுவது?

>>நான் பாதிக்கப்பட்ட கிராமத்தில் உள்ளேன். உதவிகள் பெற என் தொடர்பை எங்கே பதிவுசெய்வது?

>>பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறேன். என் தன்னார்வ அமைப்பை மற்றவர்களுடன் இணைந்து சேவை செய்ய எங்கே பதிவுசெய்வது?

பாதிக்கப்பட்ட கிராமங்கள்உதவி கிடைத்த கிராமங்கள்உதவி தேவைப்படும் கிராமங்கள் என்று அனைத்தையும் தொகுத்து எளிமையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தேடும் வசதியுடன் முதல் முறையாக தமிழ்நாட்டு இயற்கை சீரழிவினை செம்மையாக கையாள,  கிராமங்களை தத்தெடுக்கமுடிந்த உதவிகளை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று மக்கள்தொகை விவரத்தையும் இணைத்து பஞ்சாயத்து அளவில் மக்கள்தொகை பெரும்பாலான கிராமங்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

அவசர காலத்தில் தொழில்நுட்பம் (Technology), தரவுகள் (Data) ஒருங்கிணைத்து உதவிகளை எப்படி செம்மையாக்கமுடியும் என்பதற்கு ஒரு சோதனை முயற்சி இது. இது அனைவரும் பகிர்ந்துபயன்படுத்தி,தகவல்களை சேர்த்து கொண்டுசெல்வதில்தான் இதன் முழு பயனை அடையமுடியும்...

இதை பயன்படுத்துங்கள்... எழுதுங்கள்.. பகிருங்கள்.. உங்களுக்குத் தெரிந்த தகவலை இணையுங்கள்..

 

www.GAJAHelp.ValaiTamil.com

by Swathi   on 14 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு
ஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது! ஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது!
விமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு! விமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு!
கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன்
50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா? 50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?
உலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்! உலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்!
அனைத்துலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு - ஒரு நேர்முகப் பார்வை அனைத்துலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு - ஒரு நேர்முகப் பார்வை
தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி! தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.