LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- வயிறு(Stomach)

வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!

வாயுத் தொல்லை ஏற்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம் ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை சாதரணமாக ஏற்படக்கூடியது.  சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  ஒருவர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  

வாயுத் தொல்லை ஏற்பட காரணம் :

உணவு செரிமானமாகி, ஒரு பகுதி வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறியா எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.

வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். மொத்தம் மூன்று வகையாக வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைப் பிரிக்கலாம்.

அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள்

பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை.......

மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள்

ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட்............

குறைந்த வாயுவை வெளியேற்றும் உணவுகள்

முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி..........
 
வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்னதான் வழி?

சமைத்த உணவை சாப்பிடும் போது, கூடவே பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, சிறிது இடைவெளி விட்டு, பிறகு சமைச்ச உணவை சாப்பிடுவது நல்லது.
காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைத்த உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டாக்கும்.

சில பேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம்.

மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கிறதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறையும்.

வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம்பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, வாயு பிரச்சினை குறையும்.

கிழங்கு சாப்பிட்டா முதுகு பிடிச்சிருச்சு, கடலை சாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறைய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப்பகுதில மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சினைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.

சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலுக்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலையை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.

பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ளில் நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம், இஞ்சி காபினு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.

by Swathi   on 06 Oct 2015  10 Comments
Tags: Gas Trouble   Gas Trouble Treatment   Gas Trouble Tamil   Gas Trouble Solution   Gas Trouble Tamil   Vayu Treatment   Vaayu Thollai Neenga  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !! வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 39 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 39
கருத்துகள்
08-Jan-2018 16:59:40 anu said : Report Abuse
na etthu saptalum epavum eppam varuthu thondala nenju valiku nenju kela valiku ithu gas trouble ah
 
18-Mar-2017 23:43:01 சுமன் said : Report Abuse
எனக்கு ௨ வராம நெஞ்சுல வாயு மாரி எதோ இருக்கு அதுனால என்னால சரி ஆஹ் மூச்சு விடமுடில ஏப்பம் கூட ஒழுங்கா வரமாட்டிக்கிது ரொம்ப கஷ்டமா இருக்கு நனையும் என்னென்னமோ பண்ணி பாத்துட்டேன் சரி அகல. உயிரே போற அளவுக்கு கஷ்டமா இருக்கு வலி இருந்த சொல்லுங்க முடில. வாயு நெஞ்சுக்குள்ள நிக்கிது அதுனால பிரீஅஹ் காத்து போக மடித்து ஹெல்ப் பண்ணுங்க. இது வாயு பிரச்னை தான சொல்லுங்க என்னோட போன் நம்பர் 9500399389
 
17-Jan-2017 03:03:38 கிஷோர் குமார் said : Report Abuse
எனக்கு ரொம்ப நாலா வாய்வு தொல்லை அதிகமா இருக்கு எனக்கே தெரியாமல் வாய்வு வெளிய வருது அதுக்கு எதாவது வழி உண்டா . நம்பர் 7448983888 7200305595
 
17-Jan-2017 03:00:18 கிஷோர் குமார் said : Report Abuse
எனக்கு ரெண்டு வருடங்களாக வாய்வு தொல்லை உள்ளது உதவி பண்ணுங்க
 
06-Nov-2016 03:55:59 vetrivel said : Report Abuse
எனக்கு 3years கு மேல ஆயிடுச்சி வைருக்குள எதோ காத்து சுத்துது சத்தம் போடுது கேஸ் சரியாய் பிரியறது இல்ல நாத்தமான கேஸ் வெளிய வருது.பசிக்கிறது இல்ல. வயிறு இழுத்து பிடிச்சிகிட்டேய் இருக்கு.ரொம்ப கஷ்ட படுறான் ப்ளீஸ் ஹெல்ப் மீ
 
22-Aug-2016 11:10:12 sankar said : Thank you
எனக்கு ரொம்ப நாலா வாய்வு தொல்லை அதிகமா இருக்கு எனக்கே தெரியாமல் வாய்வு வெளிய வருது அதுக்கு எதாவது வலி உண்டா .
 
06-Aug-2016 08:15:33 மீனாட்சி said : Report Abuse
ஐயா எனக்கு வாயுத்தொல்லை அதிகமாக உள்ளது அது அடிக்கடி கை கால்களை இழுத்து பிடித்துக்கொல்லும் அப்பொழுது வலி இறந்தே விடலாம் என நினைக்கும் அளவிற்கு இருக்கும் தயவு செய்து ஏதாவது வைதியம் கூறுங்கள்
 
28-Jun-2016 00:40:12 தூரிகை பசும்பொன் said : Report Abuse
தலையணை வைத்து தூங்குவதால் நன்மை..தீமை...என்னென்ன? தயவுசெய்து கூறுங்கள்...
 
03-Jun-2016 09:54:28 ஷா.ஜாகீர் உசேன். விழுப்புரம். said : Report Abuse
அய்யா, வணக்கம், நான் 4 ஆண்டுகளாக வயிறு உப்பிசம், பசியின்மை, ருசின்மை, சுமார் 15தடவைகளுக்கு மேல் சத்ததுடன் காற்று பிரிகிறது, நாற்றம் இல்லை ஆனால் வயிறு கருங்கல் போல் உள்ளது. மலம் சிறிது சிறிதாக வருகிறது, தற்பொழுது உடல் எடை அதிகரித்துடன், வயிறு பானை போல் உள்ளது, அகவை 27 ஆண் ,எடை80கி , பல மருத்துவம் சித்தா,அலோபதி,அக்குபஞ்சர் ,நாட்டு வைத்தியம் என எதிலும் தீர்வு இல்லை . தயவு செய்து உதவும் எனது செல் எண்: 9843032747 ஜாகீர் உசேன் விழுப்புரம்
 
30-Mar-2016 10:43:31 v.senthil kumar said : Report Abuse
madhubanam pazhakathal vaivu thollai airpaduma?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.