LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

ஞானத்தை அடைந்தீர்களா - கவிஞர் மகுடேசுவரன்

புதிய மகிழுந்தை
ஓட்டிப் பார்த்துவிட்டு
சக்கரங்கள் மாற்றப்படவேண்டிய
உங்கள் பழைய வண்டிக்குள்
வந்தமர்ந்தீர்களா ?

புதுமனை புகுவிழாவுக்குச் சென்றுவிட்டு
வண்ணமிழந்த
உங்கள் பழைய வீட்டுக்கு
மீண்டும்
வந்து சேர்ந்தீர்களா ?

புது மடிக்கணினி ஒன்றைப்
பழகிப் பார்த்துவிட்டு
தேநீர்க்கறை படிந்த உங்கள் பழைய கணினியைத்
திறந்தீர்களா ?

நான்குமுறை உடுத்திய பட்டை
நீங்கள் உடுத்துச் சென்ற விழாவில்
அனைவரும்
புதுப்பட்டு அணிந்துவரக் கண்டீர்களா ?

நினைவுக்கு வருகிறதா
அந்த மனநிலை ?

மறப்பீர்களா என்ன...
கலவரமான
கண்ணீர் துளிர்க்கச் செய்கின்ற
அந்தத் தருணத்தை ?

யாரோ முதுகு தள்ளி
பின்வரிசையில் நிறுத்துவதைப்போன்ற
மனப்பிறழ்வை உணர்ந்தீர்கள்தாமே ?

உங்கள் உடைமை தந்த நிறைவு
உம் கண்முன்னேயே மாள்வதை
என்னவென்று கொண்டீர்கள் ?

எல்லாம் பொருளிழக்கும் பாழ்வெளிக்குள்
யார் வேண்டுமானாலும்
எந்த நொடியிலும்
தள்ளிவிட முடியும் என்ற
ஞானத்தை அடைந்தீர்களா, இல்லையா ?

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.