LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தெய்வப் பாடல்கள் - தோத்திர பாடல்கள் பகுதி-2

 

3. வேலன் பாட்டு
ராகம்-புன்னாகவராளி   தாளம்-திஸ்ர ஏகம்
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா!   1
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை-இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்திலேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா!   2
ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
மாகுதே;-கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள்
வைரனிவ பெற்ற பெருங்கன
லே.வடி வேலவா!   3
4. கிளி விடு தூது
பல்லவி
சொல்ல வல்லாயோ?-கிளியே!
சொல்லநீ வல்லாயோ?-
அனுபல்லவி
வல்ல வேல்முரு கன்தனை-இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
சரணங்கள்
1. தில்லை யம்பலத்தே-நடனம்
செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
2. அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே-அங்கோர்
முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)
3. பாலை வனத்திடைடே-தனைக் கைப்
பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)
5. முருகன் பாட்டு
வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றே-
எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே;-மலை
வாரத் திலேவிளை யாடுவான்-என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்.  1
வேடர் கனியை விரும்பியே-தவ
வேடம் புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்
பார மலைகளைச் சீறுவான்;-மறை
யேடு தரித்த முதல்வனும்-குரு
என்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.   2
தேவர் மகளை மணந்திடத்-தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்;மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்;மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்;தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரிவ்ல அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.  3
தீவளர்த் தேபழ வேதியர்-நின்தன்
சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையி னாலறம் நாட்டினார்!;-ஐய!
நீவள ருங்குரு வெற்பிலே-வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம்-நின்றன்  4
6. எமக்கு வேலை
தோகைமேல் உலவுங் கந்தன்
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவது எமக்கு வேலை.
7. வள்ளிப்பாட்டு -1
பல்லவி
எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ!
குற வள்ளீ!சிறு வள்ளீ!
சரணங்கள்
(இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி-நின்றன்
வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம்
ஆரத் தழுவி அமரநிலை பெற்று
அதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்)
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன்
பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம்
பின்ன மறச்செல்ல விட்டு அடி
தெள்ளி ஞானப் பெருஞ்செல்வ மே!நினைச்
சேர விரும்பினன்,கண்டாய்! (எந்தநேரமும்)
வட்டங்க ளிட்டுக் குளமக லாத
மணிப்பெருந் தெப்பத்தைப் போலே-நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிட லின்றி-அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
யிரவினைப் போன்ற முகத்தாய்! முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்தநேரமும்)
8. வள்ளிப் பாட்டு-2
ராகம்-கரஹரப்பிரியை தாளம்-ஆதி
பல்லவி
உனையே மையல் கொண்டேன், வள்ளீ!
உவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்! (உனையே)
சரணங்கள்
எனை யாள்வாய், வள்ளீ!வள்ளீ!
இளமயி லே!என் இதயமலர் வாழ்வே!
கனியே!சுவையுறு தேனே!
கலவியி லேஅமு தனையாய்!-(கலவியிலே)
தனியே,ஞான விழியாய்!நிலவினில்
நினைமருவி, வள்ளீ!வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)
9. இறைவா!இறைவா!
ராகம்-தன்யாசி
பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-எங்கள்
இறைவா!இறைவா!இறைவா!  (ஓ-எத்தனை)
சரணங்கள்
சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்கு
சேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ-எத்தனை)
முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு
முழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய்
பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள்
பரமா!பரமா!பரமா! (ஓ-எத்தனை)
10. போற்றி அகவல்
போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
மாற்றுவாய்,துடைப்பாய்,வளர்ப்பாய,காப்பாய்!
கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்
கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்
உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி 5
அன்னை, போற்றி!அமுதமே போற்றி!
புதியதிற் புதுமையாய் முதியதில் முதுமையாய்,
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,
உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே
நானெனும் பொருளாய்,நானையே பெருக்கித் 10
தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,
கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,
யானென தின்றி யிருக்குநல் யோகியர்
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய் 15
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி! 20
சக்தி,போற்றி!தாயே,போற்றி!
முக்தி போற்றி! மோனமே போற்றி!
சாவினை வேண்டேன்,தவிர்ப்பாய் போற்றி!
11. சிவசக்தி
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1
அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2
உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய் 3
தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம் 4
அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம் 5
கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்! 6
நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம். 7
எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் 8
12. காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்   1
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.  2
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.  3
13. நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2
14. மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன
யாவையும் செய்பவளே!  1
பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்
செத்த வுடலாக்கு;
இந்தப் பதர்களையே-நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.  2 
உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே!  3
15. அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!  1
16. பூலோக குமாரி
பல்லவி
பூலோக குமாரி ஹே அம்ருத நாரி
அனுபல்லவி
ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே,
கால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே.
சரணம்
பாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,
நீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பதநீரஜ மாலே-
லீலா ஜ்வாலா நிர்மித வாணீ,நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸீந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி.

3. வேலன் பாட்டு
ராகம்-புன்னாகவராளி   தாளம்-திஸ்ர ஏகம்
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;வேலவா!-அங்கொர்வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவா!சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறுவள்ளியைக்-கண்டுசொக்கி மரமென நின்றனைதென்மலைக் காட்டிலேகல்லினை யொத்த வலிய மனங்கொண்டபாதகன்-சிங்கன்கண்ணிரண் டாயிரங் காக்கைக்கிரையிட்ட வேலவா!பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்வள்ளியை-ஒருபார்ப்பனக் கோலந் தரித்துக்கரந்தொட்ட வேலவா!   1
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்கடலினை-உடல்வெம்பி மறுகிக் கருகிப்புகைய வெருட்டினாய்.கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்செல்வத்தை-என்றும்கேடற்ற வாழ்வினை-இன்பவிளக்கை மருவினாய்.கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வுகுலைத்தவன்-பானுகோபன் தலைபத்துக் கோடிதுணுக்குறக் கோபித்தாய்.துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவனமானைப்போல்-தினைத்தோட்டத்திலேயொரு பெண்ணைமணங்கொண்ட வேலவா!   2
ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்பமாகுதே;-கையில்அஞ்ச லெனுங்குறி கண்டுமகிழ்ச்சியுண் டாகுதே,நீறு படக்கொடும் பாவம் பிணிபசியாவையும்-இங்குநீக்கி அடியரை நித்தமுங்காத்திடும் வேலவா!கூறு படப்பல கோடி யவுணரின்கூட்டத்தைக்-கண்டுகொக்கரித் தண்டங் குலுங்கநகைத்திடுஞ் சேவலாய்!மாறு படப்பல வேறு வடிவொடுதோன்றுவாள்-எங்கள்வைரனிவ பெற்ற பெருங்கனலே.வடி வேலவா!   3
4. கிளி விடு தூது
பல்லவிசொல்ல வல்லாயோ?-கிளியே!சொல்லநீ வல்லாயோ?-
அனுபல்லவிவல்ல வேல்முரு கன்தனை-இங்குவந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
சரணங்கள்1. தில்லை யம்பலத்தே-நடனம்செய்யும் அமரர்பிரான்-அவன்செல்வத் திருமகனை இங்கு வந்துசேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
2. அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்அந்திப் பொழுதினிலே-அங்கோர்முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினைமுற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)
3. பாலை வனத்திடைடே-தனைக் கைப்பற்றி நடக்கையிலே-தன் கைவேலின் மிசையாணை-வைத்துச் சொன்னவிந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)
5. முருகன் பாட்டு
வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றிவேலும் மயிலும்என் முன்னின்றே-எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னைநீலி பராசக்தி தண்ணருட்-கரைஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்ஊக்கத்தை என்னுளம் நாடுதே;-மலைவாரத் திலேவிளை யாடுவான்-என்றும்வானவர் துன்பத்தைச் சாடுவான்.  1
வேடர் கனியை விரும்பியே-தவவேடம் புனைந்து திரிகுவான்;-தமிழ்நாடு பெரும்புகழ் சேரவே முனிநாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்பார மலைகளைச் சீறுவான்;-மறையேடு தரித்த முதல்வனும்-குருஎன்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.   2
தேவர் மகளை மணந்திடத்-தெற்குத்தீவி லசுரனை மாய்த்திட்டான்;மக்கள்யாவருக் குந்தலை யாயினான்;மறைஅர்த்த முணர்த்துநல் வாயினான்;தமிழ்ப்பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்பாரிவ்ல அறமழை பெய்குவான்;-நெஞ்சின்ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.  3
தீவளர்த் தேபழ வேதியர்-நின்தன்சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளிமீவள ருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்மேன்மையி னாலறம் நாட்டினார்!;-ஐய!நீவள ருங்குரு வெற்பிலே-வந்துநின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்இன்னருளே யென்று நாடுவோம்-நின்றன்  4
6. எமக்கு வேலை
தோகைமேல் உலவுங் கந்தன்சுடர்க்கரத் திருக்கும் வெற்றிவாகையே சுமக்கும் வேலைவணங்குவது எமக்கு வேலை.
7. வள்ளிப்பாட்டு -1
பல்லவிஎந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ!குற வள்ளீ!சிறு வள்ளீ!
சரணங்கள்(இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதியோரத்தி லேயுனைக் கூடி-நின்றன்வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம்மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல்பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலையோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம்ஆரத் தழுவி அமரநிலை பெற்றுஅதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்)
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடிவிரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக்கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன்பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம்பின்ன மறச்செல்ல விட்டு அடிதெள்ளி ஞானப் பெருஞ்செல்வ மே!நினைச்சேர விரும்பினன்,கண்டாய்! (எந்தநேரமும்)
வட்டங்க ளிட்டுக் குளமக லாதமணிப்பெருந் தெப்பத்தைப் போலே-நினைவிட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்மேனி தனைவிட லின்றி-அடிஎட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலையிரவினைப் போன்ற முகத்தாய்! முத்தம்இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்தநேரமும்)
8. வள்ளிப் பாட்டு-2
ராகம்-கரஹரப்பிரியை தாளம்-ஆதி
பல்லவிஉனையே மையல் கொண்டேன், வள்ளீ!உவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்! (உனையே)
சரணங்கள்எனை யாள்வாய், வள்ளீ!வள்ளீ!இளமயி லே!என் இதயமலர் வாழ்வே!கனியே!சுவையுறு தேனே!கலவியி லேஅமு தனையாய்!-(கலவியிலே)தனியே,ஞான விழியாய்!நிலவினில்நினைமருவி, வள்ளீ!வள்ளீ!நீயா கிடவே வந்தேன். (உனையே)
9. இறைவா!இறைவா!
ராகம்-தன்யாசி
பல்லவிஎத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-எங்கள்இறைவா!இறைவா!இறைவா!  (ஓ-எத்தனை)
சரணங்கள்சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்குசேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சியமாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ-எத்தனை)
முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்குமுழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய்பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள்பரமா!பரமா!பரமா! (ஓ-எத்தனை)
10. போற்றி அகவல்
போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!மாற்றுவாய்,துடைப்பாய்,வளர்ப்பாய,காப்பாய்!கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி 5
அன்னை, போற்றி!அமுதமே போற்றி!புதியதிற் புதுமையாய் முதியதில் முதுமையாய்,உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளேநானெனும் பொருளாய்,நானையே பெருக்கித் 10
தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,யானென தின்றி யிருக்குநல் யோகியர்ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய் 15
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி! 20
சக்தி,போற்றி!தாயே,போற்றி!முக்தி போற்றி! மோனமே போற்றி!சாவினை வேண்டேன்,தவிர்ப்பாய் போற்றி!
11. சிவசக்தி
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:செயற்கையின் சக்தியென்பார்-உயித்தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;வியப்புறு தாய்நினக்கே-இங்குவேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும்நயப்படு மதுவுண்டே?-சிவநாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1
அன்புறு சோதியென்பார்-சிலர்ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;புன்பலி கொண்டுவந்தோம்-அருள்பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்மின்படு சிவசக்தி எங்கள்வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2
உண்மையில அமுதாவாய்;-புண்கள்ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்குவளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;அண்மையில் என்றும் நின்றே-எம்மைஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய் 3
தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுஙசேர்த்தனம்,நினக்கது சோமரசம்;ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதைஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;களியுறக் குடித்திடுவாய்-நின்றன்களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம் 4
அச்சமும் துயரும் என்றே-இரண்டுஅசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.துச்சமிங் கிவர்படைகள்-பலதொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒருபெருநகர் உடலெனும் பெயரின தாம் 5
கோடி மண் டபந்திகழும்-திறற்கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்நாடிநின் றிடர்புரிவார்-உயிர்நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.சாடுபல் குண்டுகளால்-ஒளிசார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்! 6
நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கேபொன்னவிர் கோயில்களும்-எங்கள்பொற்புடை மாதரும் மதலையரும்அன்னநல் லணிவயல்கள்-எங்கள்ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,இன்னவை காத்திடவே அன்னைஇணைமலர்த் திருவடி துணைபுகந்தோம். 7
எம்முயி ராசைகளும்-எங்கள்இசைகளும் செயல்களும் துணிவுகளும்,செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்மும்மையின் உடைமைகளும்-திருமுன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;அம்மைநற் சிவசக்தி-எமைஅமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் 8
12. காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்-பராசக்திகாணி நிலம் வேண்டும்;-அங்கு,தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்துய்ய நிறத்தினதாய்-அந்தக்காணி நிலத்திடையே-ஓர் மாளிகைகட்டித் தரவேணும்;-அங்கு,கேணி யருகினிலே-தென்னைமரம்கீற்று மிளநீரும்   1
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்பக்கத்திலே வேணும்;-நல்லமுத்துச் சுடர்போலே-நிலாவொளிமுன்புவர வேணும்?அங்குகத்துங் குயிலோசை-சற்றே வந்துகாதிற்பட வேணும்;-என்றன்சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்தென்றல்வர வேணும்.  2
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொருபத்தினிப் பெண்வேணும்;-எங்கள்கூட்டுக் களியினிலே-கவிதைகள்கொண்டுதர வேணும்;-அந்தக்காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்காவலுற வேணும்;என்தன்பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்பாலித்திட வேணும்.  3
13. நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே-அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி, சிவசக்தி;-எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,வல்லமை தாராயோ,-இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே?சொல்லடி,சிவசக்தி!-நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,தசையினைத் தீசுடினும்-சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,அசைவறு மதிகேட்டேன்;-இவைஅருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2
14. மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்மூச்சை நிறுத்திவிடு;தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்சிந்தனை மாய்த்துவிடு;யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்ஊனைச் சிதைத்துவிடு;ஏகத் திருந்துலகம்-இங்குள்ளனயாவையும் செய்பவளே!  1
பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்பாரத்தைப் போக்கிவிடு;சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்செத்த வுடலாக்கு;இந்தப் பதர்களையே-நெல்லாமெனஎண்ணி இருப்பேனோ?எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்றுஇயங்கி யிருப்பவளே.  2 
உள்ளம் குளிராதோ?-பொய்யாணவஊனம் ஒழியாதோ?கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்கண்ணீர் பெருகாதோ?வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறுவேட்கை தவிராதோ?விள்ளற் கரியவளே அனைத்திலும்மேவி யிருப்பவளே!  3
15. அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்,நல்லவே எண்ணல் வேண்டும்;திண்ணிய நெஞ்சம் வேண்டும்,தெறிந்தநல் லறிவு வேண்டும்;பண்ணிய பாவ மெல்லாம்பரிதி முன் பனியே போல,நண்ணிய நின்முன் இங்குநசித்திடல் வேண்டும் அன்னாய்!  1
16. பூலோக குமாரி
பல்லவிபூலோக குமாரி ஹே அம்ருத நாரி
அனுபல்லவிஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே,கால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே.
சரணம்பாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,நீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பதநீரஜ மாலே-லீலா ஜ்வாலா நிர்மித வாணீ,நிரந்தரே நிகில லோகேசாநிநிருபம ஸீந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி.

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.