LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

மும்பையைச் சேர்ந்த மாணவி தீட்டிய ஓவியத்தின் மூலம் டூடுள் பக்கம் உருவாக்கிய கூகுள்!

மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி தீட்டிய ஓவியத்தை கொண்டு கூகுள் தேடும் பொறி தனது டூடுள் பக்கத்தை உருவாக்கி உள்ளது. 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், நவம்பர் 14- ந் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த நாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள படிக்கும் பள்ளி மாணவர்களின் சிந்தனைமற்றும் படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ’டூடுள்ஃபார் கூகுள்’  என்ற போட்டியை நடத்தியது.

இந்த போட்டிக்கான கருவாக என்னை ஊக்குவிப்பது எது? என்ற தலைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 75,000க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களில் மும்பையைச் சேர்ந்த பிங்ளா ராகுல் என்ற மாணவி தீட்டிய ஓவியம் டூடுளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

விண்வெளியை தொலைநோக்கு கருவி வாயிலாக பார்க்கும் ஒரு சிறுமியையும் GOOGLE என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் விண்வெளி சார்ந்ததாக இருக்கும்படியும் இந்த சிறுமி ஓவியத்தை தீட்டி இருந்தார். 

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பிங்ளா ராகுல், மிகப்பெரிய பிரபஞ்சத்தில் இருந்து பார்க்கும்போது மனிதர்களும், அவர்களது பிரச்சனைகளும் எத்தனை சின்னஞ்சிறியது என்பது தெளிவாகத் தெரியும் என்றும், இதை அனைவரும உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த ஓவியத்தை உருவாக்கியதாக தெரிவித்து உள்ளார். 

by Mani Bharathi   on 14 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்
பருவப் பெயர்கள் பருவப் பெயர்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.