LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

கூகுளின் வைஃபை கேமரா !! என்ன தான் ஸ்பெஷல் !!

இணைய உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் கூகுள் நிறுவனம், சமீபத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களை தயாரிக்கும் பணியில் காலடி எடுத்து வைத்துள்ளது. 


இதன் முன்னோட்டமாக செல்போன், டேப்லெட் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் கூகுள் கிளாசை அறிமுகப்படுத்தி, உலக மக்கள் அனைவரின் பார்வையையும் தங்களது பக்கம் திருப்பியது. 


தற்போது டிரைவர் இல்லாமல் இயங்கும் காரை தயாரிக்கும் பணியில் அதிக கவனம் செலுத்திவருகிறது. 


இந்நிலையில் கூகுள் நிறுவனம், மற்றொரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. 


அந்த கண்டுபிடிப்பு என்ன தெரியுமா... 


வைஃபை மூலம் இயங்கும் கேமராதான் கூகுளின் அடுத்த கண்டுபிடிப்பு. 


வைஃபை கேமரா என்ற உடன்... நீங்கள் ஏற்கனவே வைபையில் இயங்கும் கேமராக்கள் சந்தையில் நிறைய இருக்கிறது என்றுதான் நினைப்பீர்கள். 


ஆனால் கூகுளின் வைஃபை கேமராக்கள் மற்ற கேமராக்களை விட பல தனித்தன்மைகளை பெற்றுள்ளது. அதை பற்றி இங்கு விரிவாக காண்போம். 


வைஃபை மூலம் இயங்கும் இந்த கேமராவை வீடு அல்லது அலுவலகத்தில் பொருத்தி, அதை வைஃபையுடன் இணைத்துவிடவேண்டும். 


பின்னர் நாம் தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். காரணம் வைஃபையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கேமரா குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை அது பொருத்தப்பட்டுள்ள இடத்தை புகைப்படம் எடுத்து நமது ஸ்மார்ட் போனிற்கு அனுப்பிவிடும்.


வீட்டில் தீவிபத்து அல்லது மற்ற அசம்பாவிதங்கள் ஏதுவும் நேர்ந்தால் இந்த கேமராவில் உள்ள ஒரு சென்சார் கருவி புகைப்படத்துடன், அபாயத்தை தெரிவிக்கும் ஒருவித சங்கேத ஒலியையும் உங்களது ஸ்மார்ட் போனிற்கு அனுப்பும்.


இதன் மூலம் வெகு தொலைவில் இருந்தால் கூட வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து தெரிந்துகொள்ளலாம். 


கூகுளின் வைஃபை கேமரா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாவில்லை என்றாலும், இந்த கருவிக்கு சிறிய நிறுவனங்கள் இடையே இப்போதிருந்தே வரவேற்பு பெருகியுள்ளது.  

by Swathi   on 29 May 2014  0 Comments
Tags: Google Camera   கூகுள் கேமரா                 
 தொடர்புடையவை-Related Articles
கூகுளின் வைஃபை கேமரா !! என்ன தான் ஸ்பெஷல் !! கூகுளின் வைஃபை கேமரா !! என்ன தான் ஸ்பெஷல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.