LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- ஆஸ்திரேலியா

மாகாண கவர்னராகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சசீந்திரன் முத்துவேல், சிவகாசித் தமிழன்

இந்தியாவுக்குத் தேவை தலைவன்... அரசியல்வாதி அல்ல!
பாரதப் பிரதமர் முதல் 15-வது வார்டு கவுன்சிலர் வரையிலான இந்திய அரசியல்வாதிகள் வாக்கு தவறி நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் அபிமானம் சம்பாதித்துவருகிறார் ஓர் இந்திய அரசியல்வாதி. அதுவும் இங்கு அல்ல... ஆஸ்திரேலியாவை அடுத்து அமைந்திருக்கும் பப்பா நியூகினி நாட்டில். அந்த நாட்டின் மேற்கு பிரிட்டன் மாகாண கவர்னராகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சசீந்திரன் முத்துவேல், சிவகாசித் தமிழன்.
 தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான பாமாயில் சுத்திகரிப்புத் தொழில் மேம்பாடு, சூரிய சக்தி மூலம் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார விநியோகம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளைப் பதவியேற்ற 100 நாட்களுக் குள் முடுக்கிவிட்டு இருக்கிறார் சசீந்திரன். தேர்தலின்போது அந்நிய அடையாளம் சுமத்திய அதே மீடியாக்கள், இன்று அவரது புகழ் பாடுகின்றன. ஆன்லைனில் பிடித் தேன் ஆளுநரை...  
''உங்க முன்கதைச் சுருக்கம்..?''
''சிவகாசிதான் பூர்வீகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை படிச்சேன். வேலை தேடி வெளிநாடுகளுக்கு வந்தபோது, பப்பா நியூகினி நாட்டின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். சில வருடங்களில் அதை வாடகைக்கு வாங்கி நடத்த ஆரம்பித்தேன். பிறகு, நானே சூப்பர் மார்க்கெட் துவங்கி பல கிளைகளும் திறந்தேன். அப்போது கிடைத்த நட்புகள் மூலம்தான் அரசியல் ஆர்வம் வந்தது. அரசியலில் ஈடுபடுவதற்காகவே 2007-ல் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றேன். இதோ இப்போது மாகாண கவர்னர்!''  
''இந்தியாவில் இன்னும் சோனியா காந்தி அந்நியர் என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். உங்கள் மீது அப்படி எழுந்த விமர்சனங்களை எப்படிச் சமாளித்தீர்கள்?''
''ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது, 'நீங்க நல்லவர்தான். ஆனாலும், எங்க நாட்டுக் குடிமகனுக்கு வாக்களிக்கிறதுதானே சரியா இருக்கும்’ என்று என்னிடமே பலர் சொன்னார்கள். அவர்கள் மனதில் நம்பிக்கை உண்டாக்கியதாலேயே இந்த வெற்றி சாத்தியமானது. இனி, பப்பா நியூகினி நாட்டு மக்களைப் பொறுத்தவரை நான் இந்தியன் அல்ல. மேற்கு பிரிட்டன் மாகாண கவர்னர். அந்தப் பொறுப்பில் நான் சறுக்கினால், கெட்ட பேர் என்னவோ இந்தியாவுக்குத்தான் வரும்!''
''உங்கள் பார்வையில் இந்திய அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?''
''உலக அரங்கில் இந்தியா நிச்சயம் யாராலும் தவிர்க்க முடியாத சக்தி. இப்போது உலகின் எந்த மூலையில் என்ன பொருள் தயாரித்தாலும், அதை இந்தியச் சந்தையையும் மனதில் கொண்டேதான் தயாரிக்கிறார்கள். அபார மக்கள்தொகைதான் இந்தியாவின் வளம். அதே சமயம், பல நல்ல திட்டங்கள் முழு வெற்றியை எட்டாமல் போவதற்கும் அதே மக்கள்தொகை தான் காரணம். என் மாகாணத்தில் வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு, தரமான கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இந்தியாவின் பல நல்ல திட்டங்கள்தான் எனக்கு முன்னோடி!''
''கேட்கவே சந்தோஷமா இருக்கு. ஆனா, இந்தியர்களுக்கே தங்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இல்லாத சூழலும் நிலவுகிறதே?''
''அரசியல்வாதிகள் பதவி ஆசைக்கு அடிபணிவதுதான் அதற்குக் காரணம். மக்களுக்குத் தலைவனாக இருக்க முயற்சியுங்கள்.  அரசியல்வாதியாக இருக்க வேண்டாம்!''
''உங்கள் குடும்பம்பற்றி?''
''முதன்முதலில் நான் வெளிநாட்டுக்குச் செல்ல என்னை ஊக்கப்படுத்திய என் அம்மா உலகம்மாள்தான் நான் வணங்கும் தெய்வம். திருநெல்வேலியில் வசிக்கும் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரான என் தந்தை காசிவிஸ்வநாதன்தான் இன்றும் என் வழிகாட்டி. என் மனைவி சுபா அபர்ணாதான் என் வெற்றிகளுக்குப் பின் இருக்கும் ஊக்க சக்தி. அவர்தான் இன்று வரை எங்கள் வீட்டில் தமிழ்க் கலாசாரம் நிலவுமாறு பார்த்துக்கொள்கிறார். 10 வயது மகன் ஷியாம் சுந்தர் ரேஸ் கார் பிரியன். ஆறு வயது மகள் லலிதாவுக்கு நடனத்தில் ஆர்வம்.''
''உங்களுக்கு இப்போது மிகவும் பிடித்தது இந்தியாவா... பப்பா நியூகினியா?''
''இந்தியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என்னை இந்த நிலைக்கு உயர்த்திய பப்பா நியூகினி நாட்டில் வாழவே விருப்பம்!''

                                                                                                                                         நன்றி: விகடன் 

by Swathi   on 20 Oct 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.