LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

‘தமிழ் மொழி, பண்பாட்டுத் திங்கள்’ அமெரிக்காவின் வடகரோலினா மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் இராய் கூப்பர் அறிவிப்பு

வடகரோலினா மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் இராய் கூப்பர் (ஆளுநர் மக்களால் நேரடியாகத்தேர்ந்தெடுக்கப்படுபவராவார்) அவர்கள் தமிழின் தொன்மையையும், பண்பாட்டு வளத்தையும் பாராட்டித்தைத்திங்களை வடகரோலினாவின் ‘தமிழ் மொழி, பண்பாட்டுத் திங்கள்’ என்று அரசுப் பொதுஅறிவிப்பு விடுத்துள்ளார். அதற்கான ஆவணப் பட்டயத்தையும், அதனை அவர் அறிவித்து வெளியிடும் நிகழ்படத்தையும் தமிழர்களிடம் வழங்கியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக வடகரோலினா மாநிலத்தில் வாழ்ந்து வரும் தமிழர்கள், கரோலினாதமிழ்ச்சங்கத்தை நிறுவி அதன் மூலம் தமிழரின் மொழியையும், பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்துவருகின்றார்கள். தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் மூலம் தம் எதிர்காலத் தலைமுறையினர்க்கும், தமிழ் மொழி கற்கும்ஆர்வமுடைய அயல் இனத்தவர்களுக்கும் தமிழ் மொழி கற்பிப்பதைப் பெரும் தொண்டாகச் செய்துவருகின்றார்கள். தமிழ்ப்பள்ளியில் இப்பொழுது ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர் தமிழை ஆர்வமுடன் கற்றுவருகின்றார்கள்.

அத்துடன் தமிழர்கள் வடகரோலினா மாநிலத்தின் முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றார்கள்.இம்மாநிலத்தில் இயற்கைப் பேரிடர்கள் வரும்போதெல்லாம் அரசுடன் இணைந்துப் பல நற்பணிகளைச் செய்துவருகின்றார்கள். பல்வேறு துறைகளில் முதலீடு செய்து மாநிலத்தின் பொருளாதாரத்தையும்முன்னேற்றுகின்றார்கள்.

உழவுத் தொழிலைச் சிறப்பிக்கும் வகையில் தமிழர்கள் மரபு வழியாகத் தைத்திங்களை அறுவடைத்திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும் தைப்பொங்கலிட்டுக் கொண்டாடி வருகின்றார்கள். பல்லாயிரக்கணக்கானஆண்டுகளாகச் செழிப்புடனும் இளமையுடனும் திகழும் தமிழரின் மொழியும் பண்பாடும், வடகரோலினா மாநிலஆளுனரால் ஏற்பிசைவு பெற்றுள்ளது. அவர் தமிழைச் சிறப்பித்துத் தாமும் தமிழரின் வரலாற்றில்சிறப்பெய்தியுள்ளார். தமிழரின் புத்தாண்டு தைத் திங்களின் முதல் நாளில் தொடங்குவதையும், வடகரோலினாவில்வாழும் தமிழர்கள் இம்மாநிலத்தின் குமுக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் நன்முறையில் தாக்கத்தைஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழ் இந்நாட்டின் பண்பாட்டுப் பன்மைக்கும் தொன்மைக்கும் பங்களித்திருப்பதாகவும்,தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் உலகின் மிகப்பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று என்றும்மனமுவந்து பாராட்டியுள்ளார்.

‘தமிழ் மொழி, பண்பாட்டுத் திங்கள்’ என்று சனவரியை வடகரோலினா அரசு அறிவித்திருப்பது உலகெங்கும்வாழும் தமிழர்கள் அனைவர்க்கும் பெரும் மகிழ்வளிக்கும் செய்தியாகும். வடகரோலினாவில் வாழும் தமிழர்களின்நீண்டநாள் கனவுகளில் ஒன்று இந்த ஆண்டு நிறைவேறியுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர் அனைவர்க்கும்வரகரோலினா வாழ் தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் !

NC Governor's Declaration Video Link:https://youtu.be/hG1zI1JDBQM

 


North Carolina, USA – Tamil Culture and Heritage Month – Governor Declared

Governor Roy Cooper of the State of North Carolina in the United States of America has issued a proclamation proclaiming “January 2019 as ‘TAMIL LANGUAGE AND CULTURAL MONTH’ in North Carolina and commending its observance to all citizens”.  It should be mentioned that unlike in India, the Governors in USA who have executive authority are directly elected by the citizens of the respective States.  

In his proclamation, Governor Roy Cooper has stated that Tamil is widely spoken in India, Singapore, Sri Lanka, and many communities throughout USA and world and that this language is central to Tamil identity and it is recognized as one of the world’s longest-surviving written and spoken languages.

In recognizing that Tamil people celebrate, during January, Thai Pongal which is a four-day harvest festival that coincides with the first day of the month of Thai in Tamil calendar, Governor Cooper has proclaimed that the State of North Carolina joins in celebrating Thai Pongal and in recognizing Tamil community for their ongoing contribution to the State.

Governor Roy Cooper has commended North Carolina’s Tamil community for its dedication to preserving Tamil culture and heritage and to preserving Tamil language for generations to come through language schools designed to educate young people.

by Swathi   on 28 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.