LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

கிராமத்து காதல் க(வி)தை - சங்கர் ஜெயகணேஷ்

ராஜா ஒரு கிராமத்து வேலை தேடும் இளைஞன், இப்ப தான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வேலை தேடி கொண்டு இருக்கிறான்.  வேலை தேடும் சாக்கில் தினமும் வீட்டில் இருந்து நல்லா சாப்பிட்டு கொஞ்சம் உடம்பையும் தேறினான்.  வேலை இல்லாத காரணத்தினால் தினமும் இவன் அம்மா அப்பா சொல்லும் வேலைகளை தட்டாமல் செய்து வந்தான், ஒரு நாள் இவன் அப்பா அருகில் உள்ள ஒரு ஊரில் உள்ள பேங்க் ஒன்றிற்கு செல்ல சொன்னார். இவனும் வேண்டா வெறுப்பாக சென்றான், வேலையை முடித்து விட்டு ஒரு சினிமா பார்த்து விட்டு மாலையில் வரும் போது   பஸ் முழுவதும் கூட்டம், இவன் படியில் தொற்றிக்கொண்டான், திடீரென பஸ் நடுவபட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றது.  அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது, இது வரை கல்லூரி படிப்பை முடிக்கும் வரை ஒரு பெண்ணையும் பார்க்காதவன் முதல் முறையாக பார்த்தான் அந்த தேவதையை.  அவள் சிரித்துக்கொண்டே தனது தோழிகளுடன் சென்றாள்.  அவளை பார்த்த அந்த நிமிடம் இவனுக்கு சினிமாவில் கதாநாயகர்கள் கூருவது போல ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது, வானத்தில் மிதப்பது போல இருந்தது. அன்று இரவு முழுவதும் இவன் காதில் மட்டும் இளையராஜா பாட்ட கேட்டு கொண்டு இருந்தது.   மறுநாள் கலையில் வேகமாக எழுந்து அதே பேருந்துதை பிடித்தான், ஆனால் இன்று பேருந்தில் வெளியே நில்லாமல் உள்ளே சென்றான்.  அவள் அமர்திற்கும் இடத்திற்கு பின்னல் நின்று கொண்டு அவள் ஜடை அழகையும் அவள் வைத்திருந்த மல்லிகை பூவின் வாசனை பிடித்து கொண்டு இருக்கும் போதே அவள் இறங்கும் நிறுத்தம் வந்து விட்டது. தினமும் இதுவே வாடிக்கை ஆனது, ராஜா அவளை பற்றி ஆதர் கார்டுல் இல்லாதது கூட அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் மூலம்  அறிந்தான்.   அவள் பெயர் செல்வி, ஊர் நடுவபட்டி, வயது 18, படிப்பது கலை கல்லூரியில் தமிழ், ஜாதி வழக்கம் போல உயர் ஜாதி, கூட பிறந்தது இரண்டு அண்ணன், இருவரும் முரடன்கள்.  அவள் அப்பா ஒரு விவசாயி, அம்மா வீட்டில் இருந்து கொண்டு மாட்டையும், கோழியையும் பார்த்துகொண்டு இருக்கிறாள்.   தினமும் அவள் கல்லூரி விட்டு வரும் போது அந்த பேருந்தில்  வருவதை வழக்கமாக செய்தான்.  முதல் பத்து நாள் அந்த நிலா இவனுக்கு வெளிச்சம் கட்டவே இல்லை அம்மாவாசையை போல. இவனது நடவடிக்கையை பார்த்து ஒரு மாதம் கழித்து மேகத்தில் சிக்கி கொண்ட நிலவு மெல்ல மெல்ல வெளி வருவதை போல இவனை நோக்கினாள். அவள் பார்க்காமலே ஆயிரம் பட்டாம் பூச்சி பறந்தது, இப்ப அவள் வேற பாக்குறா வேற என்ன வேண்டும். இவன் முகம் மிகவும் பிரகாசம் ஆனது.  இவன் எழுதுவது எல்லாம் கவிதை போல தோன்றின, தினமும் அடிக்கடி    முக அலங்காரம் செய்தான். தினமும் கண்ணாடி முன் நின்று கொண்டு அவளிடம் என்ன பேச என்று ஆயிரம் தடவை யாவது ஒத்திகை செய்து பார்த்திருப்பான்.

ஒரு பத்து நாள் மாரியம்மாவுக்கு விரதம் எல்லாம் இருந்தான், அவள் கூட பயப்படாமல் பேசுவதற்காக.  இப்படியே ஒரு ஆறு மாதம் ஓடின. ராஜாவின் வீட்டில் வேலையை பற்றி பேசும் முன்னே ஒரு பகுதி நேர வேளையில் அருகில் உள்ள ஒரு ஊரில் சேர்ந்தான், அது அவளை பார்க்கும் யுத்திகளில் ஒன்றும் கூட, ஏன்னா அவளும் அந்த ஊரில் தான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தாள். ஒரு நாள் செல்வியுடன் வரும் தோழி பேருந்தில் வரவில்லை, அன்று ராஜா முழு தைரியத்தை வர வைத்து கொண்டு அவள் இருந்கும் பஸ் நிறுத்தத்தில் இறங்கினான். அவள் பின்னாடியே சென்றான், என்னமோ பேச நினைத்தான் ஆனால் ஒரு வார்த்தையும் வெளியே வராமல் ஊமை போல ஆனான். அவள் திரும்பி பார்த்து என் பின்னாடி வர வேண்டாம், எங்க அண்ணன் பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும் என்றாள்.   உடனே திரும்பி வந்து விட்டான், வந்து வீட்டில் உறங்கும் போது தான் அவன் காதிற்கு அவள் சொன்ன வார்த்தை மந்திரம் போல திரும்ப திரும்ப ஒலித்தது "எங்க அண்ணன் பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும்"   அப்பத்தான் அவனுக்கு புரிந்தது அவளுக்கும் நம் மேல் ஒரு இது இருக்கிறது என்று நினைத்து விட்டான்.  மறுநாள் அவள் கல்லூரிக்கு அருகில் சென்று சந்தித்தான்.  மறுநாள் அவள் கல்லூரிக்கு அருகில் சென்று சந்தித்தான், இன்று அடைமழை போல பேசினான், எனக்கு வயது 27 ஆகுது, நான் இதுவரை யாரிடமும் எப்படி நின்று பேசியது இல்லை, எனக்கு உன்னை  ரொம்ப பிடித்திருக்கு, உன்னை கல்யாணம்  பண்ணி கொள்ள ஆசை? யோசித்து ஒரு நல்ல முடிவை சொல் என்று நடக்க ஆரம்பித்தான்.  பிறகு மீண்டும் வந்து இதுவரை இந்த ஆங்கில வார்த்தையை யாரிடமும் சொன்னதில்லை, ஆனால் இன்று உன்னிடம் சொல்கிறேன் என்று சொல்லி "ஐ  லவ் யு"  என்று உரக்க சொன்னான்.  அன்று இரவு முழுவதும்  வானத்தில் தான் மிதந்தான், ஏதோ உலக சாதனை போல துள்ளி துள்ளி குதித்தான்.  அவன் நண்பனிடம் சேர்ந்து அன்று ஒரு பீரும் குடித்தான்.  மறுநாள் அதே இடத்தில் சென்று காத்து இருந்தான், அவள் வருகைக்காக, அவள் இவனை நோக்கி வந்தாள்.  உங்களுக்கு ரொம்ப தான் தைரியம், நான் எங்க அண்ணன்களை பற்றி சொல்லியும் நீங்க வந்து என்கிட்டே ஐ லவ் யு சொல்கிறேர்கள் என்றாள்.   இவள் இவ்வளவு பேசியதும் அவனுக்கு தெரிந்தது இவள் மனதில் நாம் நன்றாகவே நங்கூரம் போட்டு விட்டோம் என்று நினைத்தான்.    ஆனால் அவள் தன் காதலை உடனே சொல்லவில்லை, இரண்டு மாதம் கடத்தி அவனை பற்றி முழுவதும் விசாரித்தாள். பிறகு ஒரு வெள்ளி கிழமை நாளில் அவனுக்கு சம்மதம் சொன்னாள், அன்று அவனுக்கு மட்டும் மழை பெய்தது, காதில் இளையராஜா வயலின் கேட்டது, அவன் எழுதுவது எல்லாம் கவிதை போல தோன்றின, அவன் குடிசை வீடு கூட ராஜமாளிகை போல உணர்ந்தான், அன்று பார்த்து அவன் அம்மாவும் அவன் அப்பாவும் கூட அழகாக தெரிந்தனர்.  அந்த மாதம் சம்பளம் வாங்கிய உடன் முதலில் ஒரு மொபைல் போன் வாங்கி அவளுக்கு பரிசளித்தான். முதலில் இருவரும் பூச்சாண்டியை பார்த்து குழந்தை பயப்படுவதை போல பயந்து பயந்து சில நிமிடங்கள் மட்டும் பேசினர். நாட்கள் ஓடின, பிறகு இருவரும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தூங்கிய உடன் மணி க்கணக்கில் பேசினர்.  முதலில் வழக்கம் போல எல்லா காதலர்களை போல பேசினர், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியம், கவிதை, நாட்டு நடப்பு என்று பேச ஆரம்பித்தனர். சில தொலைபேசி உரையாடலின் தொகுப்பு

ஒரு கவிதை சொல்லுங்கள்?

செல்வி என சொன்னேன், 

நான் கவிதை சொல்ல சொன்னேன், என் பெயரை இல்ல.

இதை விடவா சிறந்த கவிதை உள்ளது

ஓ அப்படியா, ஆமாம் இது சிறந்த கவிதை தான்

என்ன பரிசு என் கவிதைக்கு? நான் சொன்னது சிறந்த கவிதை, அது போல உனது பரிசும் சிறப்பாக இருக்க வேண்டும்

ஒரு முடிவோட தான் இன்று உள்ளீர்கள் போல? பரிசையும் நீங்களே சொல்லுங்கள் பார்போம்?

இந்த உலகத்தில் சிறந்த பரிசு உனது முத்தமே

எனது முத்தம் சிறந்த பரிசா? எப்படி?

இப்ப கடவுள் என் முன்னாடி வந்து இவள் முத்தம் வேணுமா இல்லை? சொர்க்கம் வேணுமா? என்று கேட்டால், நான் உன் முத்தம் தான் வேணும் என்பேன், அது தான் எனக்கு சொர்க்கம் என்று சொல்லுவேன்.

ஓ அப்படியா?

எனக்குள் உந்து சக்தியையும், விந்தையும் உற்பத்தி செய்வது உனது முத்தம் ஒன்றே

போதும் போதும் நான் நீங்கள் கேட்ட முத்தத்தை இப்பவே தருகிறேன் என்று சொல்லிவிட்டு குடுத்தாள். வாங்கியவன் சில மணித்துளிகள் பேசாமல் இருந்தான், அவள் என்ன சத்தத்தை காணோம் என்றாள்

அமிர்தம் குடிக்கும் போது பேச கூடாது என்று மறுபடியும் அன்று கவிதையாகவே பேசினான்.

மற்றொரு நாள் அவள் கேட்டாள்

ஒரு வேலை எங்கள் வீட்டில் வேறு ஒருவருடன் என்னை திருமணம் முடித்து விட்டாள் நீ என்ன செய்வாய் என கேட்டாள்

அது உன் வீட்டு சூழ்நிலை என்று நினைத்து விட்டு உன்னை மன்னிப்பேன், ஆனால் நம் காதலை மன்னிக்க மாட்டேன், அதற்காக எனக்கு மரண தண்டனை நானே கொடுத்து கொள்வேன் என் கூறினான்.

என் மேல அவ்வளவு காதலா உங்களுக்கு?

அவ்வளவு காதல் எல்லாம் இல்ல, அவ்வளவு உயிர் உன் மேல்.

இனிமேல் இதுமாதிரி எல்லாம் விளையாட்டுக்கு கூட சொல்லாதீர்கள்

நீயும் இதுபோல என்கிட்டே விளையாட்ட கூட கேட்காதே 

இருவரும்  அடிக்கடி கோவில், பஸ் ஸ்டாப், ஐஸ் கிரீம் பார்லர் என்று சந்தித்து கொண்டனர்.  ஆனால் ராஜாவின் விரல் கூட அவள் மேல் பட்டது கிடையாது.  இப்படியே இவர்கள் காதலும் ஒரு வருடம் கடந்தது யாருக்கும் தெறியாமல் இருந்தது. கத்திரிக்காய் முற்றினா கடை தெருவிற்கு வந்து தானே ஆக வேண்டும், அது போல இவர்கள் காதலும் இவர்கள் வீட்டிற்கு லேசா தெரிய ஆரம்பித்தது.  உடனே செல்வி ராஜாவிடம் சொன்னாள், இனி மேலும் நீ இங்கே இருந்தால் நாம் வீட்டில் மாட்டிக்கொள்வோம்.  நீ எங்கயாவது வெளியூர் சென்று முதலில் ஒரு நல்ல வேளையில் சேர்ந்து எனக்கு தகவல் அனுப்பு நானும் வருகிறேன்.  நமது புது வாழ்வை அங்கிருந்து ஆரம்பிப்போம் என்று கூறினாள்.  இதை கேட்டவுடன் முதலில் பேசவே இல்லை ராஜா, பிறகு இரண்டு நாள் பிறகு போன் செய்து தினமும் சந்திக்கும் இடத்திற்கு வர சொன்னான்.  அவள் வந்ததும் பேச முடியாமல் தொண்டை கட்டியது, காலையில் இலைகளின் மேல் உள்ள பனி துளி போல சில கண்ணீர் துளிகள் இமை இடுக்கில் தேன் போல உருள காத்து இருந்தது.  அவளே ஆரம்பித்தால், நாம் இங்கே இருந்தால் இடிக்கி பின் வரும் மழை போல, இந்த சமூகத்தில்  காதலுக்கு பின் வரும் சாவு நிச்சயம்.   ஓகே செல்வி, எனக்கு கொஞ்சம் டைம் கொடு, இன்னும் ஒரு மாதத்தில் நான் என் நண்பன் மூலமா சென்னை போக முடிவு செய்து உள்ளேன்.   ஆனால் நான் வரும் முன்னே நீ வேற யாருக்கும் வாக்கபட்டு போக மாட்டாயே? என ஒரு குழந்தயை போல கேட்டான், இல்லைபா உன் மேல நான் என் உயிரையே வைச்சி இருக்கேன்,  ராஜா அவன் சென்னையில் உள்ள நண்பனிடம் விபரத்தை சொல்லி ஒரு வேலை ஏற்பாடு செய்ய சொன்னான்.  சுமார் 10 நாள் கழித்து அவனிடம் இருந்து ஒரு போன் வந்தது, வரும் திங்கள் கிழமை வந்து வேலையில் சேர சொல்லி, ஆனா திங்கள் கிழமைக்கு நான்கு நாளே இருந்தது.  சரி என்று நண்பனிடம் சொல்லி விட்டு சென்னை முகவரி வங்கி கொண்டான்.  உடனே செல்விக்கு தகவலை போன் மூலம் தெரிவித்தான்.  அவள் அதற்கு நம்ம காதல் உறுதியானது எதற்கும் பயப்படாமல் கலங்காமல் இருங்க என்று மெசேஜ் மூலம் சொன்னாள்.  அன்று இரவு சென்னைக்கு போகும் விபரத்தை இவன் அம்மா மற்றும் அப்பாவிடம் சொன்னான், அதற்கு இவன் அம்மா உடன்படவே இல்லை.  நீ எங்களுக்கு ஒரு பையன், நீ வேலை பார்த்து தான் இந்த வீடு நெறையனுமா சாமி? என எதிர்  கேள்வி கேட்டாள்.  ஒரு வழியா போராடி இரவு ஒரு மணி அளவில் சென்னை செல்ல, அம்மா அப்பாவிடம் சம்மதம் வங்கி விட்டான் மறுநாள் வேகமாக எழுந்து பக்கத்து ஊர் சென்று சென்னை செல்ல பேருந்துக்கு முன் பதிவு செய்தான்.  வெள்ளிகிழமை இரவு ரொம்ப நேரம் செல்வியுடன் போனில் பேசிக்கொண்டே இருந்தான்.  சில நிமிடங்கள் அவள் இல்லாத சென்னை உலகத்தை நினைத்து சகதியில் சிக்கிய சக்கரம் போல தான் வார்த்தைகள் மெல்ல மெல்ல இவன் வாயில் இருந்து வந்தது.  உடனே அவள் நாளைக்கு நீ மதியம் நாம் எப்போதும் சந்திக்கும் கோவில் அருகே உள்ள மரத்தடிக்கு வர சொன்னாள்.  சனிக்கிழமை கலையில் எழுந்து அம்மா அப்பாவுடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு பூசாரியிடம் ஆசீர்வாதம் வாங்கி வந்தான்.  மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நண்பர்களை பார்க்க செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு செல்வியை பார்க்க புறப்பட்டான். செல்வியும் இன்று அவனுக்கு எதாவது சிறப்பா ஒன்னு கொடுக்க எண்ணி கடை தெருவிற்கு சென்று வாங்க முற்பட்டாள்.  முதலில் அவனுக்கு பிடித்த அதிரசம், முறுக்கு வாங்கினாள், பிறகு அவனுக்கு பரிசு அளிக்க எண்ணி ஒரு பரிசு பொருள் கடைக்குள் நுழைந்தாள்.  ஒவ்வொரு பொருளாக பார்த்தாள், கடைசியாக ஒரு ஜோடி முத்தம் இடும் பொம்மையை வாங்கினாள்.   அன்று இருவரும் சந்தித்த தருணம் பாரதிராஜா, பாக்கியராஜ் படங்களில் வருவதை போல பறவைகள் பறக்காமல் இருப்பதாய் போலவும், கடல் அலை அடிக்காமல் இருப்பதாய் போலவும், உலகமே சுற்றாமல் இருபது போல நிசப்தமாய் இருந்தது.  இருவர் கண்களில் குற்றாலம் வெள்ளம் போல மடை திறந்து வந்து கொண்டு இருந்தது கண்ணீர்.  இவனே அழுகையை முதலில் நிறுத்தி கொண்டு, அவளிடம் அழாதே அழாதே அழாதே என்று ஆறுதல் சொன்னான். பிறகு சில மணித்துளிகள் பிறகு இருவரும் அமர்ந்து திண்பண்டங்கலை சாப்பிட்டார்கள். பிறகு அவனுக்கு எதை பற்றியும் கவலை படாதே என்று அறிவுரை கூறினாள்.  அவனும் ஒரு மாதிரியாக அம்மாவிடம் பால் குடித்த குழந்தை சமாதனம் ஆவது போல சமாதானம் ஆனான்.  கடைசியாக அந்த பரிசை அவனிடம் காண்பித்தாள்.  அதை பார்த்த உடன் லேசா புன்முறுவல் புரிந்தான்.  எதோ இவனிடம் பல ஆண்டு வாழ்ந்ததை போல அவனின் புன்முறுவலுக்கு அர்த்தம் கண்டு பிடித்தாள்.  அந்த அர்த்தத்தை அவனுக்கு விளக்கி கையில் கொடுத்தாள், அவனும் அந்த கையில் அவள் எழுதிய கவிதை நல்ல இருந்தது என்று அவனும் ஒரு கவிதையை கையிலே எழுதினான், கண்ணியமாக. இருவரும் அங்கிருந்து விடை பெற்றனர்.

மணி எழு ஆகியும்  ராஜா வீட்டிற்கு வர வில்லை, அவன் அப்பா அம்மா இரவு முழுவதும் தேடினர்.  ஆனால் கிடைக்கவில்லை.  செல்விக்கு வீட்டிற்கு வந்த உடன் யாரோ பின் தலையில் அடித்தது போல உணர்வு இருந்தது, உடனே சாப்பிடாமல் தூங்கிவிட்டாள்.  மறு நாள் கலையிலும் ராஜா அம்மா அப்பாவினர் தேடலை தொடங்கினர் செல்வியும் காலையில் இருந்து போன் மூலம் ராஜாவை தொடர்பு கொண்டாள், ஆனால் அவன் எடுக்கவே இல்லை.  இறுதியாக மாலை சுமார் 5 மணி அளவில் அவன் நடுவபட்டி அருகில் இறந்து  கிடப்பதாக செய்தி வந்தது.  உடனே ராஜாவின் அம்மாவும், அப்பாவும் நடுவபட்டி சென்று தனது மகனை பார்த்தனர். ஒரு காயமும் இல்லாமல் இறந்துகிடந்தான்.  உடனே போலீஸ்க்கு தகவல் சொல்ல பட்டது. அவர்களும் வந்து உடம்பை எடுத்து கொண்டு ஆஸ்பத்தரி சென்றனர்.  விஷயம் செல்வி காதுக்கும் போனது, இரவு முழுவதும் அழுது புரண்டாள். 

மறுநாள் கலையில் இன்ஸ்பெக்டர் வந்து பிரோதபரிசோதனை அறிக்கை வாங்கி பார்த்தார். அதில் கழுத்து பகுதியில் யாரோ நெரித்தது போல இருந்தது. உடனே கைரேகை எடுக்க உத்தரவு இட்டார். ராஜாவின் அம்மாவும் அப்பாவும் கண்ணீர் மல்க மகனின் உடம்பை வாங்கி சென்று தீயிட்டனர். இன்ஸ்பெக்டர் ராஜாவின் செல்போன் மூலமாக விசாரணையை தொடங்கினார்.  ராஜா கடைசியாக பேசியது செல்வியிடம் மட்டுமே, அது மட்டும்மின்றி கடந்த ஒரு மாத காலமாக அதிக முறை பேசியதும் செல்வியிடம் மட்டுமே.   உடனே நடுவபட்டி சென்று செல்வியிடம் விசாரணை ஆரம்பித்தார். செல்வி தங்களது காதல் கதைகளை இன்ஸ்பெக்டரிடம் சிறு குழந்தை பாட்டு ஒப்புவிப்பதை போல அழுகையுடன் சொன்னாள்.  இறுதியாக அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்னாள். இன்ஸ்பெக்டர்க்கு அவள் அப்பா மற்றும் அண்ணன்கள் மேல சந்தேகம் வந்தது. அவள் அப்பா மற்றும் அண்ணன்கள் பற்றி ரகசியமாக விசாரித்தார்.  முதலில் அவள் அப்பாவை காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் அழைத்தார், அவர் வந்தவுடன் அய்யா நான் அந்த பையனை பார்த்ததே கிடையாது. அக்கம் பக்கம் தான் அரசால் புரசலா பேசினார்கள், அதுவும் என் பிள்ளை அப்படி பட்ட பொண்ணு கிடையாது என கூறினார். இன்ஸ்பெக்டர் அவரிடம் இந்த வழக்கு முடியும் வரை நீங்கள் வெளியே எங்கேயும் செல்ல கூடாது, அது மட்டும்மில்லாமல் எப்ப கூப்பிடாலும் இங்கே வரணும் என்று கண்டிப்புடன் கூறினார்.  செல்வியின் அப்பா வீட்டிற்கு வந்தவுடன் செல்வியையும் அவள் அம்மாவையும் கோபம் தீர அடித்தார். நம் குடும்ப மானத்தை இப்படி சந்தி சிரிக்க வைச்சி, என்னை போலீஸ் ஸ்டேஷன் வரை போக வைச்சிடேயே என்று மறுபடியும் அடித்தார்.  இன்ஸ்பெக்டர் அடுத்து செல்வியின் அண்ணன்களை ஸ்டேஷன்க்கு அழைத்தார்.  இருவரும் எந்த கேள்விக்கும் சரியாக பதில் சொல்ல வில்லை.  இறுதியாக இருவரிடம் கைரேகை மட்டும் வாங்கி விட்டு அனுப்பினார்.  இவர்கள் கைரேகை ராஜாவின் கழுத்தில் இருந்த கைரேகையுடன் சேரவில்லை மற்றும் புலன்விசாரணையில் சம்பவம் நடந்த அன்று அவர்கள் ஒரு ஏலம் விஷயமா வெளியூர் சென்றது உறுதியானது.

எதற்கும் ஒரு முறை செல்வியை மறுபடியும் விசாரிக்க முடிவு செய்து செல்வி படிக்கும் கல்லூரிக்கு சென்றார். செல்வி வராத காரணத்தினால் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு புகை பிடித்து கொண்டுஇருந்தார்.  செல்வியின் பஸ் வந்தது, செல்வியும் வந்தாள், அவளிடம் சென்று ஒரு கையெழுத்து தேவை படுத்து என்று சொல்லி ஒரு நோட்டையும் ஒரு பேனாவையும் நீட்டினார், அந்த பேனா எழுதவில்லை.  உடனே தன் பையில் கொண்டு வந்த பேனாவை எடுத்து கையெழுத்து போட்டாள்.  அந்த எழுதாத பேனாவை கைரேகை பார்க்கும் இடத்திற்கு அனுப்பினார்.  கைரேகை சோதனை முடிவு இவருக்கு ஆச்சரியம் அளித்தது, ஆம் ராஜாவின் கழுத்தில் இருந்த கைரேகையும் இவளது கைரேகையும் ஒன்றாகவே இருந்தது.

மீண்டும் செல்வியை பற்றி விசாரிக்க முடிவு செய்து நடுவபட்டி சென்றார். அப்போது போகும் வழியில் உள்ள ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தி டீ குடித்தார்.  அப்போது ஒரு பெரியவர் பேசும் சத்தம் கேட்டது, ஒவ்வொரு வருசமும் அக்டோபர் மாதமும் நடுவபட்டி மரதடியல் ஒரு சாவு நடக்குது அந்த மரத்தை வெட்டி போட்ட தான் சரியாகும் என்று சத்தம் மட்டும் கேட்டது. உடனே இன்ஸ்பெக்டர் அந்த பெரியவரை அழைத்து முழு விபரம் கேட்டார். பிறகு ஸ்டேஷன் சென்று பழைய ரெகார்ட் அனைத்தும் எடுத்து பார்த்தார்.  அனைத்திலும் இதுபோல ஒரு அக்டோபர் மாதம் ஒரு ஆணோ / பெண்ணோ அந்த மரம் அருகில் ஒரு சாவு நடந்து உள்ளது உறுதியானது.  உடனே அணைத்து பிரோத பரிசோதனை முடிவுகளையும் ஆராச்சி செய்தார், விசித்திரமாக அணைத்து சாவுகளும் கழுத்து நெரித்து கொள்ள பட்டு இருக்கிறது என்று கண்டு பிடத்தார்.  உடனே செல்வியை ஸ்டேஷன்க்கு அழைத்தார்.

பொறுமையாக அன்று நடந்ததை மறுபடியும் ஒரு முறை விளக்க சொன்னார்.   செல்வி இந்த முறை தான் சொன்னாள், அன்று வீட்டிற்கு சென்றவுடன் தனக்கு முழு அசதியாக இருந்ததாகவும், கை முழுவதும் ரொம்ப வலி இருந்ததாகவும் சொன்னாள்.  அப்போது இன்ஸ்பெக்டர் சொன்னார், உனது கைரேகையும்  ராஜாவின் கழுத்தில் இருந்த கைரேகையும் ஒன்னாக தான் இருந்தது.  நீ தான் அவரை கொலை செய்து விட்டு நடிக்கிறாய், உடனே அவள் மயக்கி விழுந்தாள்,

அப்போது டீ கடையில் பேசிய அந்த பெரியவர் ஸ்டேஷன் உள்ளே நுழைந்தார், அய்யா என் பெயர் ராமசாமி கவுண்டர்.  

ஓகே இப்ப அதற்கு இப்ப என்ன என்று கூரினார்.

அய்யா என் மகள் பெயர் துர்கா, கடந்த ஏழு வருடம் முன்பு ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி பையனை காதலித்தாள்.  நானும் முதல் இருந்தே அவளை கண்டித்து பார்த்தேன், அந்த பையன் வீட்டிலும் சொன்னேன், மிரட்டவும் செய்தேன்.  ஆனால் என் மிரட்டல் அவுங்க காதலுக்கு முன்னால் எடுபடவில்லை. அவனுடன் ஓட நினைத்து ஒரு அக்டோபர் மாதம் மாரியம்மன் கோவிலில் வைத்து யாருக்கும் தெரியாமல் தாலி கட்டி கொண்டனர்.  அதுமட்டும் இல்லாமல் ஊரை விட்டு ஓடவும் முடிவு செய்தனர். இந்த விஷயம் தெரிந்த நான் அவர்களை போக விடாமல் பேசி பார்த்தேன், இருவரும் பிடி கொடுக்க வில்லை, முதலில் அவன் கண்ணுமுன்னே என் பொண்ணை கழுத்தை நெரித்து கொன்றேன், பிறகு அவனையும் அது போலவே கொன்றேன்.   அவர்களை யாருக்கும் தெரியாமல் அங்கே புதைத்து விட்டேன். ஒரு இரண்டு நாள் கழித்து ஸ்டேஷன் வந்து என் பொண்ணை காணோம் என்று மட்டும் புகார் தெரிவித்தேன், எப்படியே எழு வருஷம் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன், ஆனால் இப்ப என் உள்மனசு என்னை நிம்மதியாக இருக்க விடலை அதுதான் வந்தேன்.  

ஒவ்வொரு வருடமும் அந்த மரம் தான் ஒவ்வொருவராய் பலி வாங்குது அய்யா என்று கூறினார்.  உடனே இன்ஸ்பெக்டர் அந்த மரத்தை சுற்றி தோண்ட சொன்னோர்.  அந்த பெரியவர் சொன்னது போல அவன் மகளும், காதலனும் அங்கே இருந்தனர். அப்போது தான் இன்ஸ்பெக்டர்க்கு புரிந்தது ஆவி தான் செல்வி உடம்பில் புகுந்து ராஜாவை கொன்று உள்ளது என்றும் உடனே அந்த பெரியவரை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். 

இதை தெரிந்து கொண்ட செல்வி அன்று இரவே அதே மரத்தடியில் தூக்கு மாட்டி உயிரை விட்டாள். 

இருவரும் சொர்க்கத்தில் சேர்ந்து இதழ்களில் காதல் கவிதை எழுதினர்.  செல்வி ராஜாவின் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கபட்டது 



 

kiramathu kadhal ka(vi)thai
by jayaganesh sankar   on 04 Oct 2015  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
15-Mar-2018 00:08:40 nithiyazhagan said : Report Abuse
இது என்ன கேவலமான கற்பனை, ஒரு எதார்த்தம் இல்லை, சொற் சுவை இல்லை, நல்ல கதை வேண்டுமா என்னை அணுகுங்கள் நான் எழுதி தருகிறேன். அல்லது கதையை என்னக்கு அனுப்புங்கள் தவறு என்னவென்று நான் சுட்டி காட்டுகிறேன். படிப்பவர்கள் கதையுடன் ஒன்றும் பொழுது கதை வேறெங்கோ செல்கின்றது. கதை முழுதும் கதை மாந்தர்கள், சூழல்களை விலகியிருக்கிறீர்கள் ஆனால் கதையின் மைய கருத்தை தவற விட்டுவிடீர்கள். நல்ல ரசிகனின் கடமை படிப்பது மட்டுமில்லை, படித்தபின் அதை விமர்சிப்பதில் தான் இருக்கின்றது .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.