LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- அசைவ பொரியல் (Rosters)

கிரீன் பீஸ் புலாவ் (Green piece pulao)

தேவையானவை :


பாசுமதி அரிசி - ஒரு கப்

பச்சைப் பட்டாணி - 1/2 கப்

நறுக்கிய காரட் துண்டுகள் - 1/2 கப்

பச்சைமிளகாய் - 2

இஞ்சி - சிறுதுண்டு

பூண்டு - 6 பல்

பெரிய வெங்காயம் - 1

பட்டை கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் + நெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :


1. இஞ்சி, பூண்டு இவைகளை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் இவைகளை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.


2. காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.


3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்புத்தூள் போட்டு வெடிக்க விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.


4. தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.


5. இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.


6. அவ்வளவுதான் கிரீன் பீஸ் புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

Green piece pulao

INGREDIENTS for Green piece pulao:

Basmati Rice1cup

Green peas-1/2 cup

Chopped carrot pieces-1/2cup

Green Chilly-2

Ginger-small piece

Garlic-6 Flakes

Big Onion-1

Cinnamon, Cloves Powder-1/2tbsp

Oil+Ghee-2tbsp

Salt-Enough Need

PROCEDURE to make Green piece pulao:

1. Grind ginger and garlic like a paste. Cut the onion and green chilies vertically.

2. Cut the carrot like small pieces and wash the rice and keep aside.

3. Heat oil and ghee in a pan, add cinnamon, cloves powder and let them splutter. Then add ginger, garlic paste.

4. Then add onion, green chilly, carrot, green peas and fry them.

5. Add rice along with prepared masala and stir them frequently.Then allow rice to get roasted, after that transfer it in to a pressure cooker, add 2 cup of water (for 1cup rice 2cup of water is sufficient) and allow 2 whistle and turn off the stove.

6. Now green piece pulao is ready. Tomato kuruma, onion curd pachadi combination is good to taste with this pulao.  

by   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.