மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவருமான மேரி கோமின் சாதனைகளையும், அவர் சந்தித்த தடைகளையும் கதைக்களமாக கொண்டு உருவான படம் தான் மேரி கோம்.
இந்த படம் கடந்த 5 ம் தேதி வெளியாகி, இன்றுவரை வெற்றி நடை போட்டு வருகிறது. மேரி கோம் படம் விளையாட்டில் ஆர்வமுள்ள பெண்களை ஊக்குவிப்பதாக இருப்பதால், இந்த படத்திற்கு ஏற்கனவே உத்திரபிரதேச அரசு வலிவிலக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநில அரசு, மேரி கோம் திரைப்படத்திற்கு 100 சதவிகித வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பென் படேல் இம் முடிவை எடுத்துள்ளார்.
சமீபத்தில் முன்னாள் காவல்துறை பெண் அதிகாரியான கிரண் பேடி கூட இத்திரைப்படத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|