LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி..

May-27, அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து மாகாணங்களில், திங்கள்  கிழமையும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. வசந்தம் முடிந்து கோடை ஆரம்பமாவதால் பெரும்பாலானாவர்கள் விமுறை கொண்டாட ஆயத்தமாயினர்.

ஆனால் மே -27 ம் தேதி சனிக்கிழமை, நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தின் நாஷுவா நகரில் தமிழ் வம்சாவழியை சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கில் தமிழுக்காக அணிதிரண்டனர். ஆம், அமெரிக்கத் தமிழர் வரலாற்றில் முதல் முறையாக தமிழுக்காக நடைபெற்ற ஓர் விழிப்புணர்வு பேரணி அது. உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டில் தமிழ் ஆணையம்/இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டும் பேரணி. தமிழிருக்கை நிறுவுவதன் மூலம் தமிழ்க் கல்வி, ஆராய்ச்சி பெருகும், அமெரிக்காவில் தமிழ் மலரும், உலகெங்கும் தமிழின் பெருமை என்றென்றும் பரவும்.

இப்பேரணி விழாவில் கலந்த்துகொண்டு பேசிய தமிழ் இருக்கை அமைப்பின் அறங்காவலர் திரு.சம்பந்தம் அவர்கள் " எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று, சங்கே முழங்கு " என கோஷமெழுப்பி, தமிழர்களின் ஒற்றுமையும், தமிழுணர்வும் மெய்சிலிர்க்க வைப்பதாக கூறினார்.

தமிழ் பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவிகள் லயா அனந்தகிருஷ்ணன் மற்றும் சக்தி குமரேசனின் தமிழ் சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகள் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது. திருமதி. பமீலா வெங்கட் அவர்கள், தமிழர் விழிப்புணர்வை பாராட்டி நன்றி நவில, கனெக்டிகட் மாகானத்தின் பிரசித்தி பெற்ற " மானுடம் " பறைக் குழுவினர் பறை இசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்த பேரணியின் மூலமாக சுமார் 75,000 டாலர்கள் நிதி திரட்ட பட்டுள்ளது என்பது வியக்க வைக்கும் உண்மை. திரு. அணில் சைகல் மற்றும் திருமதி.ரஞ்சனி சைகலின் அனல் பரக்கும் பிரச்சாரம், அனைவரின் நன்கொடையை ஈர்த்தது. இது தமிழர்களிடையே சமீப காலமாக ஏற்பட்டுருக்கிற தமிழுணர்வு மற்றும் எழுச்சியின் வெளிப்பாடு என்கிறார் நியு இங்கிலாந்து மாகான தமிழ் மக்கள் மன்றத்தலைவர் திரு. R.கார்த்திகேயன்.


சாதி, சமய சண்டைகள், அரசியல் காழ்ப்புணர்வு, லஞ்சம், ஊழல், இவைகளுக்கு அப்பார்பட்டு உண்மையான தமிழர் உணர்வு, இலக்கிய அறிவு, அறிவியல் சார்ந்த கல்வியின் அவசியம் உணர்ந்து, தமிழ் வம்சாவழி மருத்துவர்களான Dr. Sambantham மற்றும் Dr.Janakiraman இருவரும் தலா 500 ஆயிரங்கள் வழங்கி ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்தை பெற்றனர். ஆனால் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் நிதி தேவை. இதுவரை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருக்கும் தமிழ் ஆர்வலர்களால் வழங்க பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இது போன்ற பேரணிகள் மற்றும் நிதி திரட்டும் விழாக்களின் மூலம் திரட்டித் தருவதாக அமெரிக்காவில் உள்ள பல மாகாண தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக தமிழ் இருக்கை அறங்காவலர் குழு கூறுகிறது.

தமிழால் ஒன்றிணைவோம் .! ஹார்வர்டில் தமிழ் வளர்ப்போம்! நமது அமுதத் தமிழை ஒரு நிரந்தரமான சிம்மாசனத்தில் அமர்த்தும் இது போன்ற சரித்திர நிகழ்வுகளை ஆதரிப்போம்.ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு உங்களால் இயன்ற நன்கொடையை இன்றே வழங்குங்கள். மேலும் விவரங்களுக்கு http://www.harvardtamilchair.org .

by Swathi   on 09 Jun 2017  0 Comments
Tags: Harvard   Harvard University   Harvard Tamil Chair   USA Harvard Tamil Chair   Harvard Tamil Chair Walkathon   ஹார்வர்டு   ஹார்வர்டு தமிழ் இருக்கை  
 தொடர்புடையவை-Related Articles
ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும்  வள்ளுவன் தமிழ் மையம்  40000 வெள்ளிகளை திரட்டியது .. ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்காக வெர்ஜினியாவில் இயங்கும் வள்ளுவன் தமிழ் மையம் 40000 வெள்ளிகளை திரட்டியது ..
ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி.. ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி..
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் தமிழ்த்துறை !! ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் முதலீட்டில் தமிழ்த்துறை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.