LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

கர்வம் பிடித்த கழுதை !!

அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.
அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.
கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.
அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.
மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.
சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.
 
சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.
கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.
“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை. 
அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.
கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.
நீதி: நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும். 

கழுதை ஒன்று வழி மாறி கிராமத்தில் இருந்து ஒரு அடர்ந்த காட்டிற்கு வந்தது. கழுதை வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு அழகான புள்ளி மானும் இருந்தது. 


அந்த கழுதை, புள்ளி மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கிறீர்கள்?” என்று கேட்டது. அதற்கு புள்ளி மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. 


கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு குட்டையைப் பார்த்தது.


கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த குட்டைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.


அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் சிங்கம் என நினைத்துக் கொண்டு பயந்து ஓடின.


மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.


சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.


சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் பயத்துடன் கூறியது.


கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கனைத்தது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.


“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை. 


அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.


கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்து, தன் மேல் போர்த்தியிருந்த சிங்கத் தோலை கழற்றியது.


என்ன குட்டீஸ் இந்த கதையில் வரும், கழுதையின் கதாபாத்திரம் என்ன நீதியை உணர்த்துகிறது என்றால், "நாம் நாமாக இருக்கும் போதுதான் நமக்கு மதிப்பு, மற்றவர் போல் நடந்து கொண்டால், நமக்கு அவமானமே மிஞ்சும். 

by Swathi   on 19 Mar 2014  1 Comments
Tags: கர்வம் பிடித்த கழுதை   Haughty Donkey                 
 தொடர்புடையவை-Related Articles
கர்வம் பிடித்த கழுதை !! கர்வம் பிடித்த கழுதை !!
கருத்துகள்
18-Dec-2016 22:44:45 sathish said : Report Abuse
nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.