LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

நோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !!

நமது உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது.

இவற்றில் ஏற்படும் பிரச்சனைகளே நமது உடலின் ஆரோக்கிய குறைவிற்கான காரணம். பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

உணவு [ நிலம் ]

பசி இல்லாதபோது சாப்பிடக்கூடாது.

வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம் போன்ற தொந்தரவுகளுக்கு அடிப்படை காரணமே பசி இல்லாதபோது சாப்பிடுவது தான்

பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இனிப்பு சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும்.

ஆறு சுவைகளும் உண்ணும் உணவில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும். நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.

சாப்பிடும்பொழுது கண்களை மூடி, உதட்டை மூடி, உதட்டைப் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்று நம் ஜீரணத்திற்கு எதிரி.

முடிந்தவரைச் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்துவதைத் தவிருங்கள். தேவை ஏற்பட்டால் சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் ஜீரணத்திற்கு எதிரி .

குளித்த பின் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படிக் குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடல் வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.

பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது

கால்களைத் தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக்கூடாது. முதல் ஏப்பம் வந்த உடனோ அல்லது உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.

நீர் [நீர்]

தண்ணீரைக் கொதிக்க வைத்தோ அல்லது நீரை வடிகட்டியோ குடிப்பதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்தத் தாது உப்புக்களுக்காக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.

தாகம் எடுத்தால் உடனே தேவையான அளவு மெதுவாக வாய்வைத்து சப்பிக் குடிக்க வேண்டும். மினரல் வாட்டரை குடிக்க பயன்படுத்தக் கூடாது. அப்படிக் குடிக்க நேர்ந்தால் உணவில் அதிக நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு போன்றவற்றை பருகலாம்.

தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் தேவைக்கு அதிகமாகவே குடித்துவிடுவோம். நீரை நிதானமாக வாய்வைத்துச் சப்பி குடிக்க வேண்டும்.

நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரைத் தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.

பால் அருந்துவதைத் தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பாசி எடுக்கும். அப்படிப் பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் . இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், சிறுநீரக கற்கள் ஏற்படும்.

ஓய்வு [ஆகாயம்]

இரவு 10 மணிக்கு முடிந்தவரைத் தூங்க முயற்சிக்கவும். இரவு 11 மணி முதல் 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பித்தப்பையும் உடம்பிலுள்ள இரசாயன கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.

வடக்கே தலை வைத்துப் படுப்பதை தவிர்க்கவும். தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.

புகைப்பழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.

இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.

படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.

குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணிநேரம் தூங்க வேண்டும். மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பவர்கள் குறைந்தது 6 மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும். இரவில் எளிதில் ஜீரணமாக்கக்கூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது.

தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையைப் போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் நுனியையும் நடு விரல் நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதைப் போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரைத் தேடி ஓட வேண்டாம்.

காற்று [வாயு]

புகைப்பழக்கம்,கொசுவை விரட்டிகள் நம் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகப்படுத்தும் அனைத்து இரசாயனங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.

தூங்கும் பொழுது A/C பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது

தலையை போர்வையால் முழுமையாகப் போர்த்தி கொண்டு தூங்க கூடாது

மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதைப் புரிந்துகொண்டு ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் கொசுவலையை வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள்.

சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும்.
சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்தப் பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.

உழைப்பு [நெருப்பு]

பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும்.

தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது.

இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.

காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும்.

காய்ச்சலைத் தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும்.

எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்துப் பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைக்காட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை.

by Swathi   on 26 May 2015  0 Comments
Tags: Healthy Living Tips   Udal Nalam Kurippugal   Health Tips   Tamil Health Tips   Arokiya Kurippugal   ஆரோக்கிய குறிப்புகள்     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
நோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !! நோய்கள் அற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !!
தினமும் பின்பற்ற வேண்டிய சில உடல் நலக் குறிப்புகள் !! தினமும் பின்பற்ற வேண்டிய சில உடல் நலக் குறிப்புகள் !!
நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள் !! நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள் !!
குழந்தைகளை உற்ச்சாகமாக்கும் எண்ணெய் குளியல் !! குழந்தைகளை உற்ச்சாகமாக்கும் எண்ணெய் குளியல் !!
தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது? தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?
உங்கள் உடல் நலத்தை காக்க பயனுள்ள 10 குறிப்புகள் உங்கள் உடல் நலத்தை காக்க பயனுள்ள 10 குறிப்புகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.