LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

விக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும்....

நமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள உதரவிதானம்(Thoracic Diaphragm) என்ற தசைப்பகுதி தான் நாம் சுவாசிக்க உதவி செய்கிறது.

மூச்சை உள்ளிழுக்கும்போது, இந்த உதரவிதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை நிரப்பவும், மூச்சை வெளிவிடும்பொழுது மேலேறி நுரையீரலை அழுத்தி காற்று வெளியேறவும் உதவி செய்கின்றது.

விக்கல் இங்கிருந்துதான் துவங்குகின்றது. சில சமயங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ஹிக் ஹிக் என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல்.

விக்கல் வருவதற்கான காரணங்கள் :
 

உணவை வேகமாகச் சாப்பிடுதல்.

அளவுக்கு மீறிய உணவை உண்ணுதல்.

வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்துதல்.

அளவிற்கதிகமாக மது அருந்துதல்.  

வயிற்றில் திடீரென ஏற்படும் வெப்பமாற்றம்.

ஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் போது விக்கல் நிற்பது ஏன்?

பயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன. இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.

தீர்வுதான் என்ன?

விக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10-20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.   

by Swathi   on 02 Feb 2015  38 Comments
Tags: விக்கல்   விக்கல் தீர்வு   விக்கல் காரணங்கள்   Hiccups   Vikkal        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
விக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும்.... விக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும்....
கருத்துகள்
28-Apr-2020 03:38:55 Abdullah said : Report Abuse
ரொம்ப ரொம்ப thanx. மூச்சு பயிற்சி பயனளித்தது
 
10-Aug-2018 15:13:33 R.Hari prasad said : Report Abuse
I am getting once upon a time hiccups but i cant stop the hiccups and i drinking water and sugar and hold breathing and try all and not stopping and i eating some food then only stopping and again starting hiccups and please tell me how to stop hiccups
 
10-Jul-2018 17:44:36 அபி said : Report Abuse
என் மாமாவிற்கு 70வயது கடந்த 3 நாட்களாக விக்கல் எடுத்துக்கொண்டு இருக்கிறது.சர்க்கரை உள்ளது.நாட்களாக குளிர் காய்ச்சலும் திடீர் என வருகிறது.ஒரு காலில் ரத்த ஓட்டம் இ்லாமல் நரம்பு சுருண்டு உள்ளது.அதுவும் வீக்கமாக உள்ளது இது எதற்கான அறிகுறி.எவறேனும் பதில் கூறவும்
 
19-May-2018 07:23:28 நாகலட்சுமி said : Report Abuse
௧௦ நிமிடம் ஒரு முறை விக்கல் வருது . அதுவும் ஒரு முறை மட்டும் வருது . தொடர்ந்து வரவில்லை .
 
05-Mar-2018 04:24:11 Divya said : Report Abuse
மூச்சை இழுத்து பிடித்து செய்த பயிற்சி வேலை செய்தது நன்றி
 
21-Feb-2018 16:41:27 VIJAYAKUMAR said : Report Abuse
No changes,plz any other idea
 
21-Feb-2018 16:40:59 VIJAYAKUMAR said : Report Abuse
No changes,plz any other idea
 
18-Jan-2018 07:00:47 Vinayagan said : Report Abuse
It's true. I am also try.
 
17-Dec-2017 21:36:48 Desinguraja k said : Report Abuse
I struggled because of hiccups nearly 4 to 5 hours, Finally this breathing remedy worked, just try for long breath and hold 15 to 30 minutes
 
29-Nov-2017 10:01:23 AMU said : Report Abuse
இந்து எதுவுமே சரி ஆகல என்ன செய்றது
 
03-Nov-2017 20:42:14 மு.சித்து said : Report Abuse
எனக்கு விக்கல் உள்ளபோதுதான் இந்த செய்தியை படித்து 20 வினாடிகள் மூச்சை பிடித்து பின்பு விட்டு முயற்சித்தேன் விக்கல் நின்றது. -நன்றி
 
13-Oct-2017 15:41:36 சுந்தரேசன் said : Report Abuse
தேங்க்ஸ் ௨௦ செகண்ட் மூச்சை இழுத்து பிடித்து பின்பு மெதுவா விட்டேன் நிறுவிட்டது
 
28-Sep-2017 19:50:05 Selvam s said : Report Abuse
நன்றாக மூச்சை உள்வாங்கிக் கொண்டு பாதி அளவு மூச்சை வெளியே விட்டு மீண்டும் முடிந்த வரை மூச்சை உள்வாங்கிக் கொண்டு பாதி அளவு வெளியே விட்டு தொடர்ந்து மூன்று முறை இப்படி செய்ய விக்கல் நின்று விடும்
 
24-Sep-2017 16:51:08 Sabari said : Report Abuse
Very use full information.. It is helped me to stop my hiccups... Tanx for this information... And it's a good explanation too..
 
14-Sep-2017 09:03:38 jambulingam Subramani said : Report Abuse
Hiccups - forget holding your breath or waiting for someone to give you a shock, there could be a better way to beat the embarrassing condition. The next time you're facing a pesky bout of involuntary respiratory spasms, grab a bottle of bitters and head to the kitchen for a lemon. Known as the bartender's hiccup cure, the remedy works like this: Douse a lemon slice or wedge with several drops of Angostura bitters and either eat it or chew on it for a minute or so. If you can't stomach the bitter taste you can add a sprinkle of sugar. That's it - no more hiccups.
 
30-Aug-2017 17:58:15 டங் said : Report Abuse
கையில பிடித்தேன் விக்கல் மின்னுட்டே
 
28-Jul-2017 11:09:16 Nisar said : Report Abuse
இது எதுவுமே எனக்கு சரி வரல அதனால் வேற வழி ஏதாவது இருக்கா?
 
10-Jul-2017 09:59:14 விவேக் said : Report Abuse
20 வினாடிகள் மூச்சை நிறுத்தி மெதுவாக மூச்சை விட்டேன்...விக்கல் நின்றுவிட்டது... நன்றி...
 
25-Jun-2017 09:41:21 surendran said : Report Abuse
Mikka nandri 30 seconds moochai pidithu irunthen .takkunu vikkal nindrathu
 
19-Jun-2017 09:24:50 ரா பாஸ்கரன் said : Report Abuse

சூப்பர் ௨௦ வினாடிகள் மூச்சை நிறுத்தி மெல்ல மூச்சை விட்டேன் விக்கல் உடன் நின்றது தகவலுக்கு மிக்க நன்றி

 
21-Jan-2017 02:55:28 ஹரி said : Report Abuse
30 வினாடி மூச்சை பிடித்து மெதுவாக விட்டேன் விக்கல் நின்றது மிக்க நன்றி
 
14-Jan-2017 11:00:52 arun said : Report Abuse
நன்றி ..அற்புதம்..உடனே நின்று விட்டது விக்கல்
 
30-Dec-2016 04:12:42 Deepa said : Report Abuse
நன்றி ௨௦ வினாடி மூச்சை நிறுத்தும் தங்களின் தகவலால் என் மகனின் விக்கல் நின்றது nandri
 
03-Dec-2016 06:31:06 Nithya said : Report Abuse
அப்பா ஹை pressure வந்து சைடு எபெக்ட் எ ஸ்டோக் அண்ட் விக்கல் வந்துருச்சு அதனுடன் சிறிய மூளை தண்டு மடடும் தலையில் அதிக இடங்களில் பிளட் கிளாட் ஆகி இருக்கு .மூன்று மாதம் கடந்து விட்டது. விக்கல் குறைய வில்லை. தற்பொழுது டிரீட்மெண்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார் அனால் இன்னும் Vikal குறைய வில்லை. ஏதேனும் வலி உள்ளதா விக்கல் சரி செய்ய ???????
 
25-Nov-2016 09:27:01 RANJITH said : Report Abuse
மிகவும் சரியான பதிவு. எனக்கு விக்கல் உள்ளபோதுதான் இந்த செய்தியை படித்து 20 வினாடிகள் மூச்சை பிடித்து பின்பு விட்டு முயற்சித்தேன் விக்கல் நின்றது.
 
09-Nov-2016 07:02:46 prabu said : Report Abuse
மிகுந்த நேரமாக விக்கலால்சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன் . 20 நொடிகள் மூச்சை இழுத்து பிடித்து பின்பு மெதுவாக மூச்சை விட்டேன் உடனடி தீர்வு கிடைத்தது , தகவலுக்கு நன்றி
 
05-Oct-2016 11:47:03 Saranya said : Report Abuse
Super mallaka paduthu kondu pulipu muttai thinan vikkal poya pochu
 
12-Sep-2016 23:32:51 செந்தில் said : Report Abuse
விவரமான விளக்கம். நன்றி!!
 
14-Aug-2016 06:23:15 vaithy said : Report Abuse
லெமன் ஜூஸ் சில சக்கரை அதிகம் போட்டு குடித்தால் விக்கல் நிற்கும்.
 
06-Jun-2016 07:13:16 பிரகாஷ் said : Report Abuse
படுத்து கொண்டு தண்ணீர் குடித்தேன் விக்கல் நின்று விட்டது மிகவும் நன்றி
 
02-Feb-2016 09:40:51 jayakumar said : Report Abuse
படுத்துகொண்டு சிறிது தண்ணீர் குடித்தால் உடனே விக்கல் நின்று விடும்
 
12-Nov-2015 00:33:03 sudalairaman said : Report Abuse
Treatment very very super thank you verymuch
 
03-Nov-2015 06:49:43 Saravanan said : Report Abuse
தேன் சாப்பிட்டேன் விக்கல் நின்றது . நன்றி..
 
27-Oct-2015 09:11:54 சதிஷ்குமார் said : Report Abuse
குட் அன் கிரேட் ஐடியா . எனக்கு உடனடியாக விக்கல் பிரச்னை சரியாகி விட்டது . நன்றி.
 
16-Oct-2015 04:43:12 PSPபிரபாகரன் கொட்டாம்பட்டி said : Report Abuse
மிகவும் சரியான பதிவு. எனக்கு விக்கல் உள்ளபோதுதான் இந்த செய்தியை படித்து 20 வினாடிகள் மூச்சை பிடித்து பின்பு விட்டு முயற்சித்தேன் விக்கல் நின்றது. -நன்றி PSPபிரபாகரன் கொட்டாம்பட்டி
 
28-Sep-2015 15:47:18 koddesvaran.a said : Report Abuse
Honey sapitathal udan vikkals stop achu. Namakkal koddeswaran
 
22-Sep-2015 03:50:18 jeevan said : Report Abuse
ஏறகனவே தெரிஞ்ச தகவல் புதியத சொலுங்க..
 
27-Mar-2015 01:40:22 shyamala said : Report Abuse
Very well explanation..!!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.