LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சீறாப்புராணம்

ஹிஜூறத்துக் காண்டம் படலங்கள் 1-11


3.1 மதீனத்தா ாீமான் கொண்ட படலம் (1- 65)
1    மணிதிரண் டனைய றிண்டோன் முகம்மது மக்க மீதி
லணிபெற விருந்து வல்லோ னருளொடு மதீனத் தேகி
பணியாித் துவந்த பாாிற் குபிாிருட் படலநீக்கித்
திணிசுடர் நிலாத்தீ னோங்கச் செய்தவை யெடுத்துச் சொல்வாம்.     3.1.1
2    கதிமனைக் குாிய தாரை காட்டுநல் வினையு மூழற்
பதிசய்தீ வினையு மாறு பட்டொரு தலஞ்சேர்ந் தென்ன
விதிமறைக் கதிர்மெய்த் தீனும் வெங்குபிர்க் களையு மொன்றாய்ப்
பொதுவறக் கலந்து மக்கா புரத்தினி லிருக்கு நாளில்.    3.1.2
3    பாய்திரைப் பரவை சூழ்ந்த படிக்கணி திலத மாவி
யாயமக் காவின் ஹஜ்ஜி லணிபெற வைம்பத் தாறு
தேயுமா னிடருங் கூண்ட திரனொடு மதீன மென்னுந்
தூயமா நகரத் தோரும் வந்தனர் துலங்க வன்றே.    3.1.3
4    வால்வளைத் தரளஞ் சிந்தும் வாவிசூழ் மதீனா வாழு
மேலவன் அசு அதென்னும் விறலுடைப் படலைத் தோளான்
காலமூன் றுணரும் வேதக் கடலினுக் கெல்லை காணுஞ்
சீலநந் நபியைக் காணச் சிந்தையிற் சிந்தித் தானே.    3.1.4
5    தன்னுயி ரென்ன நீங்கார் தலைமையி னுாிய தோழர்
பன்னிரு வருக்கு நேர்ந்த பண்புட னெறிகள் கூறிப்
பின்அக பாவென் றோதும் பெருந்தலத் துறைந்து காட்சி
மன்னிய முகம்ம தின்றண் மலர்ப்பதம் வந்து கண்டார்.    3.1.5
6    மக்கமா நகாில் வாழு முகம்மது பாதம் போற்றிப்
பக்கலி ருந்தன் பாகப் பாிவொடுங் கலிமா வோதி
மிக்கதீன் பெருகிச் செல்வம் விளங்கிட யீமான் கொண்டு
தக்கநல் வணக்கத் துற்ற ஷறுந்தினைக் கருத்துட் கொண்டார்.    3.1.6
7    நல்வழிக் குாிய ராகி நடுக்கமொன் றின்றித் தங்கள்
கல்பினிற் கசடு நீத்துக் கரகம லங்க ணீட்டிச்
செல்வநந் நயினார் செவ்வித் திருக்கரத் திடத்திற் சேர்த்திப்
பல்விதம் வாினும் வார்த்தைப் படிதவ றிலமியா மென்றார்.    3.1.7
8    வெற்றிவாண் முகம்ம துள்ளம் வேண்டிய வார்த்தைப் பாடு
முற்றுற முடித்துத் தீனின் முறைமையிற் றலைவ ராகி
நற்றவ முடையீர் மேலு நல்வழி சிதையா வண்ண
முற்றொரு வரையின் றெங்க ளுடன்படுத் திடுக வென்றார்.    3.1.8
9    இதத்தநன் மொழிய தாய்ப்பன் னிருவரு முரைத்த மாற்ற
மதித்துமா மறையிற் றேர்ந்த முசுஇபை வள்ளல் கூவி
விதித்தநன் னெறிவ ழாமற் குறானையும் விாித்துக் காட்டிப்
பதித்தலத் திவர்க்குற் றோர்க்கும் நல்வழிப் படுத்து மென்றார்.    3.1.9
10    வடிவுறை அசுஅதோடு முசுஇபு மகிழ்விற் காம
ரடலாி யிறசூ லுல்லா வம்புயப் பதத்திற் றாழ்ந்து
படரொளி குலவு மாடப் பதிகடந் தடவி நீந்திப்
புடைவளம் பலவு நோக்கிப் போயினர் மதீன மூதூர்.    3.1.10
11    கோட்டுடை மலாின் மன்றல் குலவிய மதீனம் புக்கித்
தோட்டுணை அசுஅதோடு முசுஇபு தோன்ற றானும்
பாட்டளி முரலுந் தாமத் தலைவர்பன் னிருவர் சூழ
வேட்டமுற் றாதிதூதர் விாித்ததீன் விளக்கஞ் செய்தார்.    3.1.11
12    இல்லகத் திருந்து தீனி னியன்மறை முறைவழாது
சொல்லிய முசுஇபேரடு தொடைப்புயத் தசுஅ தும்மோர்
தொல்லிருள் கிடந்த தென்னச் சுடரவன் கதிர் புகாது
பல்லிய மளிக ளார்க்கும் பன்மலர்க் காவிற் புக்கார்.    3.1.12
13    தண்டலை யிடத்திற் புக்கித் தடத்தின்சம் பரத்து ளாடிக்
கொண்டொலுக் கவினச் செய்து குதாதனை வணங்கி யேத்தி
மண்டலம் புரக்கும் வள்ளன் முகம்மது தமையும் போற்றி
விண்டலை தடவுங் கோட்டுத் தருவின்வீற் றிருந்தா ரன்றே.    3.1.13
14    உரந்தனி யுருகி யாதி யுறுதிநா யகனுக் கன்பாய்ச்
சிரந்தரை தீண்டத் தீனோர் செய்முறை வணக்கஞ் செய்தோர்
மரந்தரு நீழல் வைகு மாந்தர்க டொியா வண்ணங்
கரந்ததி சயித்து நோக்கிக் கறுத்தொரு காளை நின்றான்.    3.1.14
15    குறித்துநோக் கியசஃ தென்னுங் கொற்றவன் கருத்தி னூடு
வெறுத்திவ்வூ ாிடைமக் காவில் விளைந்தவல் வினைக ளெல்லாம்
பொறுத்தது காணுமென்னப் புழுங்கிப்பூம் பொழிலி னீழ
லிறுத்தவர்க் கெதிர் கொடாம லெழுந்துபோ யுசைதைச் சார்ந்தான்.    3.1.15
16    நறுங்கதிர் குலவு மாட மக்கமா நகாில் ஹாஷிம்
பெறுங்குலத் தொருவன் றோன்றப் பெரும்பகை விளைந்தவ் வூரு
முறங்கின செல்வ மாறி யொருவருக் கொருவ ராகா
மறங்கிளர் மனத்த ராகி மாறுபட் டிருந்தா ரன்றே.    3.1.16
17    அன்னவன் மாய வஞ்ச மதத்தினு ளாயெ னன்னை
முன்னவள் மகனென் முன்னோன் முசுஇபோ டிணங்கித் தோன்றி
யிந்தகர் தனையு மார்க்கத் தீடுபட் டொழிய நின்றா
னுன்னுவ தென்கொ னள்ளா ரூன்புலா லுணங்கும் வேலோய்.    3.1.17
18    மதியிலி யவராய் மக்க மாநக ரவரைப் போலிப்
பதியினிற் புகுந்தும் பின்முன் பார்ப்பது பழுது கோறல்
விதியிது சரத மென்னச் சகுதுளம் வெகுண்டு செந்தே
னுதிர்தரும் படலைத் திண்டோ ளுசைதுநெஞ் சுழுக்கச் சொன்னான்.    3.1.18
19    சாதுரை யெனும்வே லுள்ளந் தைத்திட மார்க்க மாறும்
பாதக மிவ்வூ ருள்ளும் படர்ந்ததோ பலருங் காணிற்
பேதுனு முன்ன மியாமே பெரும்பகை துடைத்துக் கோடற்
கேதுபோ தஞ்சொ லென்றா னிவனதற் கெடுத்துச் சொல்வான்.    3.1.19
20    குரவாி லொருவன் முன்னோற் கொல்வதற் குலகங் கொள்ளா
தருமறை மாறி நின்றோ ராருயி ாிழந்தா ரென்னத்
தொிவரு மாற்றா லுன்னைத் தெறுபவ ாிலையான் கொன்றாற்
பாிவுறும் பழியைச் சாருஞ் சாரவும் படுவ தன்றே.    3.1.20
21    அன்னதான் மார்க்க மாறு மவருயிர் செகுப்ப வேண்டி
மின்னிய கதிர்வாட் டாங்கி விரைகெனச் சகுது வீறாச்
சொன்னசொன் மறாது சைது கோறலைத் துணிந்து சென்றான்
மன்னிய மலர்த்தேன் றாது மாாியொத் துதிர்க்குங் காவில்.    3.1.21
22    மருங்கினில் விசித்த கச்சும் வலக்கரந் தாங்கும் வாளுங்
கருங்காிக் கரத்தி னீண்ட கரந்தனி வீச்சுங் கோப
நெருங்கிய நோக்கும் வேர்வை நித்திலப் பனிப்பு மாக
வொருங்கினிற் சோலை புக்கு முசைதைக்கண் டைய முற்றார்.    3.1.22
23    இங்கிவ னிவ்வூ ருள்ளார்க்க் கியல்புறுந் தலைவன் வேகந்
தங்கிய மனத்தி னோடுஞ் சார்ந்தனன் சார்த னோக்கின்
வெங்கொலை விளைத்தல் வேண்டு மெனவுரை விாித்துச் சொன்னார்
பொங்குசீர் அசுஅ தென்போர் புண்ணிய முசுஇ புக்கே.    3.1.23
24    வருபவன் றன்னை நோக்கி மனமறு குதவன் றல்லா
திருவரு ணம்பா லுண்டு தெருட்சியிற் சிறிது சொல்லால்
விரைவொடு மவன்ற னுள்ளம் விளக்குவன் காண்டி ரென்ன
முருகுலா அசுஅது துக்கு முசுஇபன் புறச்சொன் னாரால்.    3.1.24
25    மாாித்தண் ணலர்கள் சிந்தும் வனத்தினில் வடிவா ளேந்தி
வீரத்தின் விழைவு கூர மென்மனம் புழுங்கி விம்மக்
கோரத்தின் கடைக்க ணங்கிக் கொழுந்தெழ வுசைது நோக்கிப்
பாரைத்தீன் படுத்தி நின்றோர் பயப்பட வெகுண்டு சொல்வான்.    3.1.25
26    வியனுறு மக்க மூதூர் வேறுபட் டொழியச் செய்தோர்
வயினுறைந் திவணின் வந்து வழிகெட மதீனத் தார்க்குப்
பயிலுத றொடுத்தீர் மாற்றம் பகர்வது தவிர்ந்து நீங்கி
யயலகல் வதுவே நுங்கட் கடவென வறிய வேண்டும்.    3.1.26
27    என்னுரை மறுத்திவ் வூாி லிருந்திரேற் குருதி சிந்த
மின்னவிர் வடிவாட் காவி விருந்துசெய் திடுவன் வேறு
பன்னுவ தென்கொல் சூழ்ச்சித் தருமத்தாற் பகர்ந்தே னென்றான்
பொன்னவி ரலங்கற் றிண்டோட் புரவல னுசைதென் போனே.    3.1.27
28    கடுத்துநின் றுரைத்த மாற்றங் காவலன் முசுஇ போர்ந்து
தொடுத்தெடுத் துரைத்த வாய்மை யெங்கட்குச் சூழ்ச்சித் தாகு
மடுத்தவர்க் கறமீ தன்றோ வாயினு மொருசொற் கேட்டென்
னிடத்தினிற் சிறிது போழ்திங் கிருந்தெழுந் திடுக வென்றார்.    3.1.28
29    ஈங்கிவ னுரைக்கும் வாய்மை யிதமல தயித மேனும்
பாங்கொடு மறிவோ மென்றே யிதயத்துட் படுத்திக் கொல்லுந்
தீங்கினை யொருபாற் சேர்த்திச் செவ்விதி னிருந்தான் செந்தேன்
பூங்குலாய் விாிந்த சோலைப் புதுநிழற் பரப்பி னன்றே.    3.1.29
30    ஒருவனை யிறசூல் தம்மை யுளத்தினி லிருத்தி யார்க்குந்
தொிதரப் பிசுமி லோதித் தீன்முதன் முறைமைத் தரய
விாிதருங் குறானை யோதிக் காட்டினர் விளைந்த தீமைக்
கருவெனு நினைவு சிந்திக் கட்டழிந் தோட வன்றே.    3.1.30
31    மூதுரை மறையின் றீஞ்சொன் முசுஇபாண் டுரைப்பக் கேட்டுக்
காதுளங் குளிர்ந்து பொல்லாக் கசடெறிந் தறிவி னாழ்ந்து
பாதகம் பலியா வண்ணம் பாாிற் றொல் விதியி னாலிம்
மாதவங் கிடைக்கப் பெற்ற தின்றென மகிழ்வு கூர்ந்தார்.    3.1.31
32    நிலத்தும் விண் ணிடத்து முற்றோர் நின்றநன் னெறியு மீதே
சொலத்தகாத் தூயோன் றூதென் றுண்மையிற் சொல்வ தீதே
பொலத்தினி லமைத்த சொர்க்கம் புகுத்துவிப் பதுவு மீதே
நலத்தகு முறைமை யீதென் றகத்தினி னாட்டி னாரால்.    3.1.33
33    மனத்தினன் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபைப் போற்றி மன்ன
ாினத்தினு முயிாின் மிக்கா யெனவெடுத் தினிய கூறிக்
கனத்தநூன் முறையின் வாய்த்த நபிகலி மாவை யோதிச்
சினத்திடர்க் குபிரை மாற்றித் தீனிலை நெறிநின் றாரே.    3.1.33
34    உள்ளகம் பொருந்தி யீமான் கொண்டுசை தென்னும் வேந்தர்
வள்ளலா ாிருவர் செவ்வி மதியெனும் வதன நோக்கிக்
கொள்ளுமென் மனத்தினுற்ற குறிப்பெனுங் கரும மின்னே
விள்ளுதல் செவிக்கொள் வீரென் றணிபெற வியத்திச் சொல்வார்.    3.1.34
35    பூதலத் துயர்ந்த மேன்மைப் பொறையினி லறிவின் மிக்கான்
மாதவ ருரைக்கும் வேத வழிமுறை யொழுகி நின்றான்
காதுவெங் களிறே யன்ன கருதலர்க் காியே றொப்பான்
சாதெனு மரச னிவ்வூர்த் தலைவாிற் றலைமை யானே.    3.1.35
36    மன்னுமென் னுயிரே யன்னான் மாற்றமே தெனினு மென்சொற்
றன்னுரை யென்னத் தேறுந் தன்மையன் வடுவொன் றில்லா
னன்னவன் கலிமா வோதி யாரண தெறிநின் றானே
லிந்நகர் முழுது மீமான் கொண்டதற் கைய மின்றே.    3.1.36
37    பிடித்தொரு மொழியி னெஞ்சம் பேதுறா வவனை நுங்க
ளிடத்தினில் வரச்செய்வே னியா னிதத்தொடு மினிய மாற்றந்
தொடுத்துரைத் தருங்கு றானைச் செவிவளைத் துளைக்கு ளோட்டிப்
படித்தநல் லறிவிற் றேற்றித் தீன்வழி படுத்து மென்றார்.    3.1.37
38    இருவருங் களிப்பக் கூறி யெழின்மலர்ப் பொழில்விட் டேகித்
தொிதர யீமான் கொண்ட சிந்தையிற் புளகம் பூப்பத்
திருமருப் புயங்க ளோங்கச் செம்முக மலர்ந்து தோன்ற
வருவது நோக்கிச் சஃது மன்னவ னுளத்திற் சொல்வான்.    3.1.38
39    மடித்தித ழதுக்கிக் காந்தி வாள்வல னேந்தி மீசை
துடித்திட வேகத் தோடுஞ் சென்றனன் றுணர்ப்பைங் காவை
விடுத்துள மகிழ்ச்சி கூர மெய்மயிர் சிலிர்ப்ப நம்பா
லடுத்தன னவணி லுற்ற தறிகில மென்று நின்றான்.    3.1.39
40    இன்னணஞ் சகுது நெஞ்சத் தெண்ணிநின் றுலவுநேர
மன்னவ ருசைதும் புக்கார் மாமரை வதன நோக்கி
மினிய கதிர்வாட் டாங்கிப் போயது மீண்ட வாறும்
பன்னுக வென்றான் கேட்டங் கவரெதிர் பகர்வ தானார்.    3.1.40
41    பொழிலிடைப் புகுந்தே னின்ற புரவலர் தம்மைக் கண்டேன்
வழிவச மலது வேறோர் வடுவருந் தகைமை காணேன்
மொழிவபின் னொன்று கேட்டேன் முன்னவ னசுஅ தென்போன்
பழிபடக் கோறல் வேண்டி வந்தனர் பகைஞ ரென்றே.    3.1.41
42    தாய்க்குமுன் னவடன் சேய்பாற் றாியல ரடைந்தா ரென்னும்
வாய்க்கொளாக் கொடிய வெஞ்சொன் மனத்தினை வெதுப்பக் கண்க
டீய்க்கொளச் சினந்து சீறிச் செங்கரம் பிசைந்து நக்கி
மூக்கினில் விரலைச் சேர்த்தி முரணொடு மெழுந்து நின்றான்.    3.1.42
43    என்னுயிர்த் துணைவன் றன்மு னெதிர்ந்தவ ாியாவ ரேனும்
பன்னரும் விசும்பி லாவி படவிடுத் திடுவ னென்னத்
தென்னுறுங் கதிர்வா ளேந்திச் சீற்றமுன் னடப்பச் சென்றான்
முன்னையூழ் விதியின் வண்ண முறை நெறி யறிகிலானே.    3.1.43
44    செங்கதிர் வடிவாட் டாங்கிச் சென்றவன் றுடவை புக்கி
யெங்கினுந் தொிய நோக்கி யிகன் மரு வலரைக் காணான்
பொங்கிய மன்ற றூங்கும் பொழிலிலவ் விருவர் தாமே
தங்கியங் கிருப்பக் கண்டான் றனித்தவண் சார்ந்து நின்றான்.    3.1.44
45    இரைந்தளி சுழலுங் காவி லிருப்பவர் தம்மை நோக்கி
விரைந்திவ ணகன்று வேற்றூர் புகுமிவை வினவிரேற் சோ
கருந்திட வுடலம் வீழ்த்தி யாருயிர் பறித்து நுங்கட்
பெருந்தமர் தமக்குங் கூடப் பிழைவிளைத் திடுவன் மாதோ.    3.1.45
46    சாற்றிய தெனது தம்பித் தமையனென் பதனி னானு
மாற்றலர்க் கொருசொற் றன்மம் வகுத்தமர் மலைவ தென்னத்
தேற்றுநல் லறிவோர் கூறுந் திறத்தினும் பொறுத்த தல்லாற்
கூற்றெனும் பழியை நாணிக் கூறின னலனியா னென்றான்.    3.1.46
47    மருவலர்க் கெனிலு மோர்சொல் வகுத்தமர் விளைப்ப ரென்ன
விாிமறை யவர்கள் கூறு மெய்மொழி யதனான் வேண்டி
யொருநொடிப் பொழுதெம் முன்ன ருவந்தினி திருந்தோர் மாற்றந்
தொிதரக் கேட்டுப் பின்னுன் றிறல்செலுத் திடுக வென்றார்.    3.1.47
48    முன்னவ னொருவ னீதி முறைமையிற் குாியன் மற்றோ
னின்னவர்க் காக வேண்டி யிருந்தறி குவமியா மென
வுன்னிய வெகுளித் தீயை யுணர்வெனு நீரான் மாற்றிப்
பின்னெதி ாிருந்து நீவிர் பிதற்றுவ தெவைகொ லென்றான்.    3.1.48
49    நகாினுக் குாிய னோது நாவினன் றௌிந்த நீரா
னிகரரும் வீரத்தானந் நெறியினுக் கமைந்தா னென்னப்
புகரற மனத்துட் கொண்டு பூாித்த புளகத் தோடும்
பகரரும் வேதத் துற்ற சொல்லினைப் பகுத்துச் சொன்னார்.    3.1.49
50    முறைமையிற் சிதகா வண்ண முசுஇபு பகுத்துச் சொன்ன
மறையுமம் மறையி னுற்ற வழியுமவ் வழியி லுற்ற
பொறையுநல் லமிர்த மெனச் செவிவழி புகுதக் கேட்டு
நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக் குருகினாரே.    3.1.50
51    ஆரமு தனைய வேதத் தருமொழி யகத்துட் டேக்கிப்
பேருணர் பொங்கி யாவுந் தோற்றிடாப் பெருக்கா நந்தக்
கார்முகிற் கவிகை வள்ளல் தீனெனுங் கடலு ளாழ்ந்து
வாரமுற் றறிவி னாலீ மானெனும் போகந் துய்த்தார்.    3.1.51
52    மாதவ ாிறசூ லென்னு முகம்மதை வாழ்த்தி வாழ்த்தி
வேதநன் னிலையிற் றோன்றும் விதிமுறைக் கலிமா வோதிப்
பூதலத் துயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலா மாகி
மூதறி வுடைய வள்ளன் முசுஇபைத் தழுவி னாரால்.    3.1.52
53    என்னுயிர்த் துணைவ நின்னை யிருங்கொலை நினைத்தே னென்ன
முன்னிருந் திருக ணாலி கலுழ்தர மொழிந்து முன்னோன்
பொன்னடி பரவி யிந்தப் புகழ்நிலை நிறுத்தித் தந்த
மன்னவ ருசைதென் றோதி மார்புறத் தழீஇயி னாரே.    3.1.53
54    வேறு
முசுஇபை யசுஅதென் றுயர்முன் னோனையு
முசைதையுந் தணப்பிலா துவந்து கொண்டுசென்
றசைதருங் கொடிமறு ககன்று மாறடர்ந்
திசைதரும் வேலினார் மனையி னேகினார்.    3.1.54
55    மன்னிய செழுங்கதிர் மாடத் துட்கொடு
மின்னிய தவிசினி லேற்றி வீரத்தின்
முன்னிய மூவரு முவப்ப மூரலிட்
டின்னறைப் பாகொடு மினிதி னூட்டினார்.    3.1.55
56    வெள்ளிலை யாிபிள வீய்ந்து மெலவ
ருள்ளம துவப்புற வுழையி னோர்மனக்
கள்ளம தறக்கலி மாவை நாவினின்
விள்ளுதல் படுத்தித்தீன் விளக்கு வேனென்றார்.    3.1.56
57    அன்னது கேட்டகங் குளிர்ந்து மூவரு
மன்னிய விடத்தினிற் புக்க மனவர்
தம்முயி ரெனுங்கிளை யவரைச் சார்பினி
லின்னலற் றிடவழைத் திருத்தி னாரரோ.    3.1.57
58    இனத்தவர் குழுவினை நோக்கி யென்னுநும்
மனத்தினி லெவரென மதிக்கின் றீர்சொலும்
பினைத்தனி புகல்வனியா னென்னப் பேசினார்
சினத்தடக் கதிரயி லேந்துஞ் செங்கையார்.    3.1.58
59    சாதெனு மன்னவர் சாற்றக் கேட்டலும்
பேதுறு மனத்தொடும் பொிது நைந்திவ
ரேதிவை யுரைத்தன ரோவென் றெண்ணுறுங்
காதரத் தொடுமெதிர் கவல்வ தாயினார்.    3.1.59
60    இத்தலைத் தலைவாி னெவர்க்கு நாயக
வுத்தமக் கிளைக்கெலா முயிாின் மிக்கெனப்
பத்தியிற் கொண்டனம் பகர்வ தென்னுளப்
புத்தியிற் றௌியுநீ ரெனப் புகன்றனர்.    3.1.60
61    உறமுறைக் கிளைஞர்க ளொருப்பட் டியாவரும்
பெறுமொழி யறுதியிற் பேசி னாாிவை
மறைபகர் முகம்மதின் பறக்கத் தாலெனத்
திறனுறுங் கருத்தினிற் சிந்தித் தாரரோ.    3.1.61
62    பெருக்கிய கிளையவ ரெவரும் பெட்புறத்
திருக்கிளர் நபிகலி மாவைத் தேர்ந்தெடுத்
துரைக்கிலீ ரெனிலும துறவுக் குண்மையுற்
றிருக்கில னியானென வெடுத்துக் கூறினார்.    3.1.62
63    இத்தகை யெவரெடுத் தியம்பு வாருமக்
கொத்தவை யெமர்களுக் கொத்த செல்வமே
வித்தக விவ்வுரை வெறுத்திட் டோமெனிற்
பித்தரென் றுலகினிற் பேச வேண்டுமே.    3.1.63
64    என்றுரைத் தினியன புகன்று நந்நபி
மன்றலம் புகழ்பெறும் புதுமை வாழ்த்தியே
யொன்றிய திருக்கலி மாவை யோதியே
பொன்றிலாத் தீனிலைப் பொருந்தி னாரரோ.    3.1.64
65    கனம்பயில் கொடைக்கரன் சகுது கல்பினி
லுனும்பொருள் குறித்துநல் வுணர்வு பெற்றிடுஞ்
சனம்பல ரெவரவர் தமக்கன் சாாிக
ளெனும்பெய ருலகெலா மிலங்க நின்றதே.    3.1.65

- மதீனத்தா ாீமான் கொண்ட படலம் முற்றிற்று. -

- படலம் 1க்குத் திருவிருத்தம் - 65.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.02 மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் (66- 120 )
66    உயர்புகழ் முகம்மதுக் கும்பர் கோனபிப்
பெயரளித் தாண்டுபன் மூன்று பேர்பெற
நயமுற நடக்குமந் நாளில் ஹஜ்ஜினுக்
கியல்பெற யாவரு மீண்டி னாரரோ.    3.2.1
67    அருவரைத் தடப்புய சகுது அசுஅதுந்
தருமநன் னெறியுசை துடனன் சாாிகள்
பெருகிய காபிரும் புறப்பட் டெண்ணிலா
நரரொடு மக்கமா நகரை நண்ணினார்.    3.2.2
68    வாய்ந்தவெண் டிசைஞரு மதீன மாநகர்
வேந்தரு மக்கமா நகாின் வீரரும்
போந்துகஃ பாவினிற் புகுந்து தொன்முறை
யேய்ந்தஹஜ் ஜெனுநெறி முடித்திட் டாரரோ.    3.2.3
69    மணமுர சொலிமறா மதீன மாநக
ருணர்வெழுந் தீனிலைக் குாிய ராருயிர்த்
துணைவருஞ் சூழ்தர வெழுந்து திண்சுடர்ப்
பணைதிரட் புயநபி பாத நண்ணினார்.    3.2.4
70    மல்லணி புயஅபித் தாலி மன்னவ
ாிலுறைந் திரவினி லிருப்ப வொல்லையின்
வில்லணி தடக்கையப் பாசும் விண்ணகச்
செல்லலங் கவிகையா ாிடத்திற் சேர்ந்தனர்.    3.2.5
71    மதிதவழ் கொடிமதிண் மதீன மென்னுமப்
பதியுரை மன்னவர் பலரும் பண்புற
விதமொடு நபிசில மொழியி யம்பலுந்
துதிசெய்தப் பாசுவாய் விண்டு சொல்லுவார்.    3.2.6
72    தங்கிய மறைமுகம் மதுவைச் சார்ந்துதீன்
பொங்கிய நிறைநிலை பொருந்தி னீாினி
யெங்கடங் குலத்தினுக் கினிய வாருயி
ருங்களை யலதுவே றுலகி லில்லையே.    3.2.7
73    மக்கமா நகருறை ஹாஷி மாகுலத்
தொக்கலின் முதியவர்க் குறுகண் மாமணித்
தக்கமெய்ப் பொருளெமர் தமக்கு ளாவியின்
மிக்கவர் முகம்மதே யன்றி வேறின்றே.    3.2.8
74    தெறுபடை வீரத்திற் பொருளிற் செல்வத்தி
னுறுபவர் நுமக்கெதி ரொருவ ாில்லையாற்
பெறுமொழி யொன்றுள குறிப்பின் பெற்றியை
யறிவினோ டிரகசியத் தமைத்தல் வேண்டுமால்.    3.2.9
75    உரைத்திடு மொழியினை யுறுதி யாகவுள்
ளிருத்திவே றொருநினை வின்றி யாவருங்
கருத்தொரு கருத்தெனப் படுத்திக் காதுறப்
பொருத்தியென் மொழியினைப் பொருத்தல் வேண்டுமால்.    3.2.10
76    எனக்குயிர்க் குறுதுணை யீன்ற மாமணி
மனக்கலை யறிவினின் மதித்தி டாய்பொருள்
கனக்குமெய்க் காரணக் கடலிக் காசினி
தனக்கொரு திலதமொத் தனைய தன்மையார்.    3.2.11
77    பெரும்புகழ் முகம்மது பிறந்த நாட்டொடுத்
தரும்புவி யிடத்திற்றீங் கடுத்திடா வகை
வரம்பெறு மவரவர் வணக்கந் தன்னொடு
மிரும்பெருங் குலமெலா மிறைஞ்சி நின்றதே.    3.2.12
78    கண்ணுறு மணியெனக் காமுற் றியாவரு
மெண்ணருஞ் சிறப்பொடு மினிது கூர்ந்தன
மண்ணலைக் குறித்தும ரடுத்துத் தீனெனும்
வண்ணமொத் தொழுகிநல் வழிபட் டாரரோ.    3.2.13
79    அன்றுதொட் டும்மிடத் தடுத்துத் தீனிலைக்
கொன்றிய முதியவ ரொழுங்குஞ் செய்கையு
நன்றியும் வணக்கமு நயந்து நாட்குநாள்
வென்றிகொண் முகம்மது விருப்புற் றாரரோ.    3.2.14
80    மருப்பொதி துடவைசூழ் மதீன மன்னவர்
விருப்பொடுந் தம்மன விருப்பும் வேறிலா
தொருப்பட வுயிர்த்துணை யுடைய ராக்குடி
யிருப்பது கருத்தில்வைத் திருத்தி னாரரோ.    3.2.15
81    திருநபி முகம்மதுந் திருந்து நும்முழை
வருவது சரதமம் மதீனந் தன்னினுங்
கருதல ருளருறுங் கருத்தின் பெற்றியை
விாிதர வறிகிலன் விளம்ப வேண்டுமால்.    3.2.16
82    இன்னவை யனைத்தையு மெடுத்தப் பாசெனு
மன்னவ ருரைத்தலு மதீன மாகிய
நன்னகர்த் தலைவர்கள் கேட்டு நன்கெனச்
சென்னிக டுயல்வரச் செப்பு வாரரோ.    3.2.17
83    நரபதி முகம்மதை மதீன நன்னகர்க்
கரசென விருத்தியூ ரவர்க ளியாவரும்
விரைவின்குற் றேவல்செய் திருப்ப வேண்டுமென்
றொருவருக் கொருவர்முன் னுரைத்த துண்டரோ.    3.2.18
84    ஊக்கமுற் றெமதுளத் துள்ளு மாறுநும்
வாக்கினி லுரைத்தனிர் மதிக்கு மேலவ
னாக்கிய திஃதினி தொழிவ தன்றமர்
நீக்கிய கதிரயி னிருபர் வேந்தரே.    3.2.19
85    நனிகளிப் பெய்தியெம் முள்ள நன்குற
வினியவை யிவையென விசைந்தோர் வாசகந்
தனியவன் றூதுவர் சாற்று வாரெனிற்
றினையள வினுமொரு சிதைவு மில்லையால்.    3.2.20
86    மறுவற வினையன மதீன மன்னவர்
நிறைபெற வுரைத்தவை கேட்டு நீணிலத்
திறையவன் றூதுவ ாினிய மாமறை
முறையொடுந் தௌிதர மொழிவ தாயினார்.    3.2.21
87    அரும்பொருள் வேதமுந் தீனி னாக்கமும்
பெரும்புவி யிடத்தினிற் பெருக நாளுமவ்
விரும்பதி யிடத்துறைந் திருப்ப வென்மனம்
விரும்பிய துங்கடம்னட்பின் மேன்மையால்    3.2.22
88    எமக்கணு வெனுமிட ாியையு மேனுமர்
தமக்குவந் தவையெனுந் தகைமை வேண்டுமால்
கமைக்கருத் தொடுமவ ணுறைவன் காணுங்குங்
குமக்குவ டெனும்புயக் கொற்ற வேந்தரே.    3.2.23
89    என்றுநன் னபியிவை யியம்ப வீறொடு
மன்றலம் புயபறா வென்னு மன்னவர்
நன்றுநன் றெனக்கலி மாவை நாட்டிய
வென்றியி னவையினில் விளம்பு வாரரோ.    3.2.24
90    நிலைமுறை தவறிலா நீதி மன்னவர்
தலைமுறை தலைமுறை வீரந் தாழ்விலார்
நலனுறும் புகழினர் நம வேலின
ரலைவிலா ரெமர்குலத் தறிவின் செல்வரே.    3.2.25
91    இத்திறத் தவர்களு மியாங்க ளும்மும
துத்தரத் தாடியி னுறையும் பாவைபோல்
வித்தக நெறிமுறை விளக்கு வோமிவை
யத்தலத் துறைந்தபி னறிய வேண்டுமால்.     3.2.26
92    இந்தநன் மொழிக்கியைந் திறைவ நம்பதி
வந்திருந் தனிரெனின் மருவ லார்களா
லுந்திய பெரும்பகை யொடுக்கி வேர்வைகள்
சிந்திடி லுதிரமே சிந்தச் செய்குவோம்.    3.2.27
93    இவ்வணந் தவறிலா தியற்று வோமெனச்
செவ்வணக் கருத்தொடும் வலக்கை சேர்த்துவ
மைவணக் கவிகையீ ரெங்கள் வாய்மையிற்
குவ்வினிற் குறையிலை யென்னக் கூறினார்.    3.2.28
94    முகம்மது நபிக்கெதி ருண்மை வாசக
மிகலறத் டிறல்பறா விசைப்பக் கேட்டிவண்
புகல்வது பொறுமினென் றுரைத்துப் புந்தியி
னகமகிழ் கைதமென் பவாி யம்புவார்.    3.2.29
95    இறையவன் றூதுவ ாிசைத்த நன்மொழிக்
குறுதிகொண் கெழில்பறா வுரைத்த மாற்றமே
பெறுமுறை யாயினு மின்னும் பேச்சினிற்
சிறுமொழி யொன்றுண்டென் றுரைத்துச் செப்புவார்.    3.2.30
96    மாாிவிண் டணிதிகழ் மக்க மாநகர்ச்
சீாியர் தமக்குமெம் மரபின் செல்வர்க்கும்
பேர்பெறும் வசனநிண் ணயத்தின் பெற்றியா
லீரமற் றொல்லையி னிகலு மில்லையால்.    3.2.31
97    வரமுறுஞ் செல்வநும் வசனத் தாலெமர்க்
குாியவ ாியாவரு முரைத்த வாய்மையும்
பெருகிய கிளையெனுந் தொடரும் பேரற
முரணொடு மன்பற முறிக்க வேண்டுமால்.    3.2.32
98    மறைமொழி குறித்துத்தீன் வமழிம றாதிவண்
குறைஷிக ளொடும்பகை கொள்ளுங் காலையி
லுறமுறை யென்றும துளமி ரங்குமேற்
பிறமொழி யெடுத்தெவர் பேச வல்லரே.    3.2.33
99    இனையன பலமொழி கைத மென்பவர்
மனநிலை தௌிதர வகுத்துக் காட்டலும்
நனிமுறு வலின்முகம் மதுநன் மாமறைப்
புனைதரு நாவினாற் புகல்வ தாயினார்.    3.2.34
100    ஆதிமுன் மொழிக்கலி மாவை யன்பொடு
மோதின ரெனதுட லுயிாின் மிக்கவர்
பேதுறத் தீனிலை பிழைத்து நின்றவர்
தீதுற விருமையுந் தீய ராவரால்.    3.2.35
101    வரைத்தடஞ் சாயினு மதிதெற்க் காயினுங்
கரைத்தெறி திரைக்கடல் சுவறிக் காயினுந்
தரைத்தலம் புரளினும் வாய்மை தக்கயா
னுரைத்தவை மறுத்தெடுத் துரைப்ப தில்லையால்.    3.2.36
102    முன்முக மலர்ச்சியின் மொழிந்து வேறொரு
வன்மமுற் றிடிலவை மறந்து மேலவர்
நன்மனத் தொடர்விடு நட்பு நாடொறுந்
தின்மையை வளர்ந்தறந் தீய்த்து நிற்குமே.    3.2.37
103    சாலவு நட்பினைத் தணப்பி லாதவர்
மேலவர் நட்பினை வெறுக்கும் வாய்மையர்
சீலமொன் றின்றிய சிறுமை யாரென
நூலினும் வழக்கினு நுவலு கின்றதே.    3.2.38
104    ஈதுமுத் திரையும திதயத் தெண்ணியத்
தீதறு மாமறைச் செவ்வி யோர்களி
லேதமிற் றலைவர்பன் னிருவ ரைத்தொிந்
தாதரத் தொடுமிவ ணடைக வென்றனர்.    3.2.39
105    மல்வளர் புயமுகம் மதுதம் வய்மொழிக்
கல்பினி லிருத்திநன் கென்னக் காவலர்
நல்வளம் பொருந்திய மதீன நன்னகர்ச்
செல்வர்தம் முழையிவை யெடுத்துச் செப்பினார்.    3.2.40
106    ே வ று
கேட்ட மன்னவ ரனைவருங் கிளரொளி வனப்பிற்
பூட்டு வார்சிலை வீரத்திற் குறைவறாப் பொருளின்
வாட்ட மின்றிய கசுறசு வங்கிஷத் தவர்கள்
கூட்டத் தாாினி லொன்பது பெயாினைக் குறித்தார்.    3.2.41
107    கான்றி டுங்கதிாி வாண்மற வாதகை யினரா
யூன்று வெஞ்சின வீரத்தி னுடன்பிறந் தவரா
யான்ற பேரறி வவுசுவங் கிஷத்தவ ரதனின்
மூன்று பேரையு முதன்மைய ரெனும்படி முடித்தார்.    3.2.42
108    இருகு லத்தினு முதியவர் பன்னிரு வரையும்
வாிச நாயகன் றூதுவர் முகம்மது நபிமுன்
விரைவி னிற்கொடு வந்தனர் விறலுட னுலவித்
திாியுங் கேசாிக் குடன்படு முழுவையின் றிரள்போல்.    3.2.43
109    இலகு தீனிலைக் குாியாி னெழுபத்து மூன்று
தலைவ ாினுயர் தலைவர்பன் னிருவர்க டமக்கு
ணிலைமை முன்னிலைத் தலைவராய் அசுஅதை நிறுத்தி
யுலகின் மேல்வருந் திறனெடுத் தியனபி யுரைப்பார்.    3.2.44
110    மாறி லாதும திருகுலத் தினிற்சிலர் மறுத்து
வேறு கூறினு மிந்நகர்க் குறைஷிகள் வெகுண்டு
சீறி னுமறு புறநகர்ப் படைதிரண் டிடினுந்
தூறு தோன்றியின் பறப்பெருந் துன்பமே வாினும்.    3.2.45
111    படைக்க லத்திரை யெறிந்தெதிர் வரும்பகைக் கடலைக்
கடக்கும் வேல்வல னேந்திய செழுந்தடங் கரத்தீ
ருடற்கு ளாவியொத் திருப்பதிற் றிருவர்க ளுறைக்கீ
ணடக்க வேண்டுமென் றுரைத்தனர் நபிகணா யகமே.    3.2.46
112    புகலு நன்மொழி யனைத்தையு மனத்துறப் பொருத்தி
யிகல றத்தௌிந் தாய்ந்துசீர் தூக்கியிந் நிலத்திற்
பகரு மிம்மொழிக் கீறிலை யெனநிலை படுத்தி
மகித லம்புகழ் மதீனமன் னவர்கள்சம் மதித்தார்.    3.2.47
113    முத்த வெண்கதிர் முகம்மதே முனிவிலாத் திருவா
யுத்த ரத்தினி லறிவுபெற் றனமுளந் ததும்பப்
புத்தி பெற்றனம் பெருகிய கதிபெறும் பொருட்டா
யித்த லத்தெமக் கியம்புவ தியம்புமென் றிசைத்தார்.    3.2.48
114    அந்த வேலையி லருளுடை யமரருக் கரச
ாிந்த மாநிலத் தரசெனு முகம்மதி னிடத்திற்
சிந்தை கூர்தர வாதிதன் றிருசலா முரைத்து
வந்தி ருந்தனர் பிறரவ ரறிகிலா வண்ணம்.    3.2.49
115    இறைவன் றூதுவ வெனதுயிர்த் துணைவவிவ் விரவே
யறிவி னாலுயர் மதனியர் தம்மகத் துண்மை
யுறைய வாய்மையிற் பெறுகவொவ் வொருவர்பா லொழுங்கா
முறையி வர்க்குப்பி னிவரென மொழிந்துவிண் போனார்.    3.2.50
116    அவிரொ ளிச்சிறைச் சபுறுயீ லருளுரைப் படியே
தவிசின் மீதிருந் தவரவர் வரன்முறை தவறா
தெவரும் புந்தியின் மகிழ்வுற வலக்கர மீந்து
செவிகு ளிர்ந்தநன் மொழியொடு மறுதிசெய் கென்றார்    3.2.51
117    மதியின் மிக்கநன் முகம்மதங் குரைத்தலு மதீனாப்
பதியின் மன்னவர் முறைமுறை யெழுந்தடி பணிந்து
சிதைவி லாத்திட மொழிகொடுத் தணிக்கரஞ் சேர்த்தி
விதுவுஞ் சூழுடு வினமுமொத் திருந்தனர் விளங்கி.    3.2.52
118    திடங்கொண் மும்மதக் காிக்குபிர்ப் பகையறச் செழுந்தீன்
மடங்க லேறென வருதிரண் மதீனமன் னவர்க
ளிடங்கொள் சிந்தையிற் றொிதருந் தமியர்க ளினிமேற்
றொடங்கும் வீரத்தின் றிறமெனப் பணிவொடுஞ் சொன்னார்.    3.2.53
119    என்று மிம்மொழி தவறிலா துறநிறை வேற்றி
நின்ற மன்னவர்க் காதிதன் கிருபையு நிறைந்த
வென்றி யுஞ்சுவர்க் கமுமருள் குவனென விாித்தார்
மன்ற றுன்றிய மதுமல ரணிமுகம் மதுவே.    3.2.54
120    கனைக்கும் வெண்டிரைக் கடற்புவி புகழ்அபுல் காசிம்
நினைக்குஞ் சிந்தையிற் பொருந்துற நிறைந்தநன் னபியைக்
குனிக்கும் வார்சிலைக் கரத்தொடு பணிந்திரு குலத்தோர்
தனிக்க டந்தரு களிறெனச் சார்பினிற் சார்ந்தார்.    3.2.55

மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம் முற்றிற்று --

ஆகப் படலம் 2க்குத் திருவிருத்தம்-120 -

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.03 யாத்திரைப் படலம் (121- 280 )
121     மண்ண கம்புகழ் முகம்மது மனங்களித் திருப்பப்
புண்ணு லாவயிற் கரத்தரும் விடுதியிற் புகுதக்
கண்ண கன்புவிக் கெவைவிளைந் தனவெனக் கருத்தி
னெண்ண மோடழிந் தெழுந்திருந் தனனிபு லீசு.    3.3.1
122    அற்றைப் போதிர வினிலணி மக்கமா நகாி
னுற்ற நன்னடு மறுகினி லுருத்தொி யாமன்
முற்றுங் காத்தளித் திடுமவர் மொழிந்திடு மொழிபோற்
சுற்று நாற்றிசை யடங்கலுந் தொனிபரந் திடவே.    3.3.2
123    குறைவி லாவள மக்கமா நகர்க்குறை ஷிகளே
யுறையு மிந்நகர் முகம்மது மதீனத்துள் ளவரு
மறையும் வாய்மையின் வலக்கரங் கொடுத்தவ ரவர்க்கே
முறைமு றைப்படி யொன்றுபட் டொருமொழி முடித்தார்.    3.3.3
124    ஏதெ னிற்குறை ஷிகள றபிகளிவ ணிருந்தோர்
வேத னைப்படக் கொலைவிளைத் தாலயம் வீழ்த்திச்
சூது வஞ்சனைத் தொழிலொடு மாய்ந்திடத் துணிந்து
போது கின்றன ரென்றுகூக் குரலொடும் புகன்றான்.    3.3.4
125    விாிந்த வீதிக டொறுந்தொறுங் கூக்குரல் விளக்கித்
திாிந்த மாயவஞ் சகன்றனை நோக்கிக்கண் செவந்து
புாிந்த நின்வலி கெடுக்குவன் காணெனப் புகன்றார்
சொாிந்து வானவர் புகழ்தர வருமிற சூலே.    3.3.5
126    தேய மெங்கணு மிருள்கெடச் செழுங்கதிர் குலவ
மேய வாவியின் வனசங்கள் விாிதர விளங்க
மாய வஞ்சகன் கூக்குரன் மறுத்துவா யடைப்பக்
கூய வெத்திசை தொறுந்தொறுஞ் சேவலின் குலங்கள்.    3.3.6
127    ஒடிந்து வீழ்திரைக் குணகடற் கதிரவ னுதிப்ப
விடிந்த காலையின் மக்கமா நகாினின் வீரர்
கடந்த சொல்லொடு மதீனமன் னவர்களைக் கடிதி
னடர்ந் திவண்கொடு வருகெனத் தூதுவிட் டழைத்தார்.    3.3.7
128    உலவு நீள்கொடி மதீனமா நகாினி லுறைந்த
தலைவ ாிற்சில காபிர்க டமைவிளித் திரவி
னலித லன்றியோர் கூக்குரல் கேட்டனம நடுவு
நிலைமை யற்றசொற் கேளுதி ரெனநிகழ்த் துவரால்.    3.3.8
129    மதின மன்னவ ரடங்கலு முகம்மது தனக்கு
முதிய சத்தியஞ் செய்தவன் தீனிலை முயன்று
பதியி னிற்கொடு போயெம ருடன்பகை விளைப்பப்
புதிய மாற்றமு முடித்தன ராமறைப் பொருட்டால்.    3.3.9
130    ஈது வந்ததென் னெமர்க்கிடர் நினைத்ததென் னிணங்காச்
சூதன் றன்னொடு பொருந்திய வாறதென் றொலையாப்
பாத கப்பழிக் கடியிட முடித்ததென் பகர்ந்தீ
தோதக் கேட்டெவர் மனங்கொள்வர் நகைக்குமிவ் வுலகே.    3.3.10
131    இந்த வாறுமெய் யெனில்கசு றசுவெனு மினமுஞ்
சிந்தெ னப்பெரு கௌசெனுங் குலத்தவர் திரளு
நந்து வெம்பகை முடித்திட மக்கமா நகாில்
வந்த தல்லது நல்வினைக் கலவென வகுத்தார்.    3.3.11
132    மாட மோங்கிய மக்கமன் னவர்வகுத் துரைப்பக்
கேடி லாமதீ னத்துறை காபிர்கள் கேட்டுக்
கூடு மெம்மினத் தவர்களி லிதிலொரு குறிப்பும்
நாடு வாாில ரென்கொலோ நீர்நவின் றதுவே.    3.3.12
133    சமய பேதக முகம்மதென் பவன்றனை விளித்தோ
ாிமை நொடிப்பொழு தடுத்திருந் தறிகில மியாங்க
ளுமை மறுத்தவர்க் குண்மைக ளுரைப்பதெவ் வழியெம்
மமைதி யுற்றறிந் தும்மிவை யுரைத்ததென் றறிவால்.    3.3.13
134    இந்நி லத்தவர் மதீனமன் னவரொடு மிணங்கி
நன்னி லைப்பட விருப்பது பிாிப்புற நலியா
மன்னும் வஞ்சக முகம்மது மாயவிச் சையினா
லுன்னி வந்ததக் கூக்குர லுரைத்திடு முரையே.    3.3.14
135    அலது வேறிலை யெனச்செழு மதீனமன் னவர்கள்
பலருங் கூறின ாியாவருங் கேட்டிவை படிறொன்
றிலை யெனச்சிர மசைத்தவர்க் கினியன புகன்று
தலைவ மாரொடு மவரவர் சார்பினிற் சார்ந்தார்.    3.3.15
136    குறைஷி கட்கெதிர் மொழிந்திடுங் காபிர்கள் குலமு
மறைப டத்தனி யிருந்தமெய்த் தீனின்மன் னவரு
முறைமை யாகிய ஹஜ்ஜினைக் குறைவற முடித்துப்
புறநி லத்தரு மவரவர் பதியினிற் போனார்.    3.3.16
137    பரத்த லத்தவர் போயபி னறமெனும் பழைய
புரத்தினி னுற்றவன் காபிர்கள் மதீனமா புரத்தோர்
திருத்துந் தீனிலை முகம்மதி னொடுந்திட வசன
முரைத்துப் போயவை யுற்றறிந் தொருங்கினிற் றிரண்டார்.    3.3.17
138    இடுசு தைக்கதிர் மறுகினு மாவணத் திடத்துங்
கொடுமு டிப்பெருங் கோயில்க ளிடத்தினுங் குறுகா
ருடனு றைந்திடு மனையினு மதீனத்து ளோரைக்
கடிதிற் றேடினர் திாிந்தனர் சினத்தொடுங் கறுத்தே.    3.3.18
139    தேடி யெத்திசை தொறுந்திாிந் தலுத்தொரு தெருவிற்
கூடி முந்திறென் பவரையுஞ் சகுதையுங் குறுகி
யாடை முந்திதொட் டீழ்த்துறுக் கொடுமலக் கழித்து
வீடு றைந்தொளித் தவாிவ ரெனக்கொடு விடுத்தார்.    3.3.19
140    விரந்து காபிர்கண் முன்கொடு விடுக்குமந் நேரங்
கரந்து முந்திறென் பவரொடு திசைநெறி கடந்தார்
பரந்து தேடின ரோடினர் காண்கிலர் பதைத்து
வருந்திச் சஃதொருத் தரையுமே நெருக்கிட வளைந்தார்.    3.3.20
141    பற்று வார்சில ரடருவர் சிலர்கரம் பதிய
வெற்று வார்சில ாிணைவிரன் மடக்கிமெய் சேப்பக்
குற்று வார்சில ரடிக்கடி கொதித்தவ ரலது
சற்று மாறின ரலர்கொடுங் காபிர்க டாமே.    3.3.21
142    அடிமி னென்பவர் சிலர்சில ராதகா திவரை
விடுமி னென்பவர் சிலர்சில ரவர்களை வெகுண்டு
பிடிமி னென்பவர் சிலர்சில ாிவனுயிர் பிசைந்து
குடிமி னென்பவர் சிலர்சிலர் காபிர்கள் குழுமி.    3.3.22
143    ஒலித பூஜகு லுத்துபா வுடனுமை யாவு
மலித ருங்குறை ஷிகளொடு மிவர்மன மறுக
வலைவு செய்திடும் வேளையில் சுபைறுமா ாிதுவுங்
கலியி தென்கொனீர் செய்தவை யெனக்கழ றுவரால்.    3.3.23
144    குற்ற மின்றிய ஒளசுடன் கசுறசுக் குலத்தோர்க்
குற்றி டும்பெருந் தலைமையிற் பெயாினி லுயர்ந்தோன்
பற்ற லர்க்காி யேறிவ னொடும்பகை விளைப்ப
முற்று மோநமர் குலந்திர ளினுமுடி யாதே.    3.3.24
145    மதின மானக ரவர்க்குமிப் பதியின்மன் னவர்க்கு
மிதம தன்றியே யிகலிலை யின்றிவன் பொருட்டாற்
புதிய வெம்பகை விளைந்தது போக்கவு மாிதிச்
சதிவி ளைத்தது தகுவதன் றெனவுரைத் தனரால்    3.3.25
146    குவித ருங்குலத் தவர்சினங் கெடமதிக் குறிப்பாய்ச்
சுபைறு மாாிது முரைத்தலு மிதயங்க டுணுக்குற்
றவம றிந்தில மெனவிடுத் தகன்றனர் மறைநேர்
தவமு யன்றிடு சகுதுவுஞ் சார்பினிற் சார்ந்தார்.    3.3.26
147    குறைஷிக் காபிர்கள் விளைத்திடுங் கொடியவல் வினையை
மறைத ாித்தநன் முகம்மதி னுடன்வகுத் துரைத்து
நிறைம னத்தொடும் பணிந்தெழுந் தவாிட நீங்கி
யுறையுந் தந்நகர் புகுந்தனர் சகுதெனு முரவோர்.    3.3.27
148    மகித லம்புகழ் சகுதுமன் னவர்வள மதீனா
நகர்ப் குந்தபின் செழுமறை முகம்மது நயினா
ரகம கிழ்ந்துதீ னவர்களை யழைத்தரு கிருத்திப்
புகர றத்தம துளத்தினி னினைத்தவை புகல்வார்.    3.3.28
149    வற்று றாப்புனற் றடந்திகழ் மதீனமன் னவரை
யுற்ற மெய்த்துணை யாயுடற் குயிரதா யுறுந்தீன்
வெற்றி யாய்வலி யாய்ப்புகழ் நிலைபெற விளக்க
முற்றும் நம்வயி னளித்தனன் றனிமுத லவனே.    3.3.29
150    இந்த வூாினிற் குபிருழை யுழன்றன மினிமே
லந்த நற்பதி புகுவமே லெதிரடை யலரால்
வந்த வெம்பகை தடிந்திசு லாமினை வளர்த்து
நந்த மர்க்கெவ ாிணையெனத் தீனெறி நடத்தும்.    3.3.30
151    ஆதி நாயக னுரையவண் புகவரு மளவு
மேத மின்றியிங் கிருந்துபின் வருகுவ னியான்முன்
போதல் வேண்டுநம் மினத்தவ ரெனப்புகழ்ந் துரைத்தா
ாீது முத்திரைப் பொருளென யாவரு மியைந்தார்.    3.3.31
152    சோதி நாயகன் றிருமறைத் தூதுவ ாிறசூ
லோதும் வாய்மையு மறைப்பொரு ளெனவுளத் திருத்திச்
சாதி மனவர் மூவரு மிருவருந் தனித்தும்
போதும் வல்லிருட் பொழுதினும் பகலினும் போனார்.    3.3.32
153    உரத்தின் மிக்கபூ பக்கரு முமறுது மானும்
வரைத்த டப்புய வலியலிப் புலியும்வன் காபிர்
கரத்த கப்படும் பெயருமல் லதுசெழுங் கலிமாத்
திருத்துந் தீனவ ாியாவரு மதீனத்திற் சேர்ந்தார்.    3.3.33
154    மக்க மாநகர்த் தீனவ ாியாவரு மதீனம்
புக்கி னாரெனு மொழிபல பலபுறம் பொசிய
வுக்கு பாவுத் பாவுமை யாபொலி துரைப்பத்
தக்க பேருடன் கேட்டபூ ஜகுலுட றளர்ந்தான்.    3.3.34
155    வடித்து மும்மறை தௌிந்தமன் னவரைவும் வடிவா
ளெடுத்த வீரத்தின் றிறத்தவ ாினத்தையு மிசுலாந்
தடுத்து நின்றவர் குலத்தையுந் தனக்குயிர்த் துணையா
யடுத்த பேரையும் விரைவினிற் றனித்தனி யழைத்தான்.    3.3.35
156    குறைஷி யங்குலக் காபிர்க ளனைவருங் கூண்டு
நிறைத ரும்பெருங் குழுவினிற் புகமன நேடிச்
சிறியன் வஞ்சகச் செய்கைய னியாவர்க்குந் தீயோ
னிறைவ னேவலைத் தவிர்த்திடுங் கசட்டிபு லீசு.    3.3.36
157    பொறுமை யுள்ளவன் போலவும் வணக்கத்திற் புகழி
னறிவின் மிக்கவன் போலவு மறபிவங் கிடத்தின்
பிறவி போலவு முதிர்ந்தவன் போலவும் பிாியா
துறவி னுற்றவன் போலவு மவையினுற் றனனால்.    3.3.37
158    சாரு மெய்நரை பிறங்கிய முதியவன் றனைக்கண்
டாரு மிங்கிவர் பொியரா மெனவகத் திருத்தி
வாரு மிங்கிரு மெனவுரைத் தனர்மன மகிழ்வுற்
றீர முற்றிடு மறிவர்க ளிடத்தினி லிருந்தான்.    3.3.38
159    மருளி லாதுநன் மறைகளை மறுவறத் தேர்ந்து
தெருளு மேலவர் சிறியவ ாியாவர்க்குந் தொியப்
பொருளஞ் சொல்லுமொத் திருந்தன மொழிகளாற் பொருந்த
விருளும் புன்மனக் கொடியவ னபூஜகு லிசைப்பான்.    3.3.39
160    வேறு
மறுவெனப் பிறந்திவ் வூாிடை வளர்ந்த
    முகம்மது மாயவித்தை யினா
    லறிவுறா வினைமேற் போட்டுநம் மினத்தா
    ரவர்சிலர் தமையகப் படுத்தி
    யுறையுமந் திரத்தி னுருமுடித் திவையே
    புதுமையென் றுலகெலாஞ் செலுத்தி
    நிறைபெறத் தனது பெயரையு நிறுத்தித்
    தீனையு நிலைநிறுத் தினனால்.    3.3.40
161    இனம்பெருத் திருந்து மிவைபாி காித்தோ
    மிலையெனு மவமொ ழியுலகத்
    தனினிலை நிறுத்தி விட்டன மறிவுந்
    தரணியிற் பெருமையு மிழந்தே
    மனமுழற் றுவதென் னினியவ ரவர்க்கு
    வந்ததாய் நினைத்திடின் விளைந்த
    வினைகளுஞ் சிதறி நமரவ ரெவர்க்கு
    மேன்மையும் வீடுமுண் டாமால்.    3.3.41
162    வருந்தகை யிஃதென் றகுமதின் வலியை
    மாய்த்திட லாிதென மனைக்க
    ணிருந்துபே தையர்போ லெண்ணின மெனினம்
    மிரும்புய வீரமும் பணையுந்
    திருந்திடா தினந்தேய்ந் திகலவ ரெவருஞ்
    சிாித்திட வுலகமு நகைக்கு
    மருந்தவத் துடையீ ாீதலாற் பிழைவந்
    தடருவ தலதொழி யாதே.    3.3.42
163    இகத்தினி லெவர்க்கு முடித்திட வாிதென்
    றிருக்குமோர் வல்வினை யெனினு
    மகத்தினி லொருமித் தெடுத்தொரு துணிவா
    யடுப்பதோர் முயற்சியுண் டாயின்
    செகத்தினில் விளக்கும் புகழொடு முடியுஞ்
    சிறியனென் வாக்கிற்செப் புவதென்
    பகுத்தறி வுடையீ ருங்கடம் மனத்திற்
    படுமொழி யலதுவே றலவே.    3.3.43
164    முன்னைநா ளபித்தா லிபுவயின் பலகான்
    மொழிந்துவற் புறுத்திய தனைத்து
    முன்னியுட் கணித்தா னிலன்கொடும் புலிவா
    லுருவிய தகைமையொத் திருந்தா
    னினைநாட் டொடுத்தும் விடுவதன் றௌிதின்
    விட்டன மெனிலிரும் பதியி
    லன்னவன் முரணி லெவ்வள வெனினு
    மமைத்திட நமர்க்காி தாமால்.    3.3.44
165    எள்ளுதற் காிதாய் மிகுவலி படைத்திங்
    கிருந்தன னிதற்குமுன் னொருநா
    ணள்ளிடை யிரவிற் றேவதன் மையினா
    னான்மறு கிடத்தினுஞ் சிறப்ப
    விள்ளுதற் காிதா யொருதொனி யெவர்க்கும்
    விளங்கிற்று விடிந்தபின் றொடுத்துத்
    தெள்ளுநன் மொழியா லெவரையும் வினவும்
    பொழுதினி லவைதொிந் திலவே.    3.3.45
166    புரத்தினி லிரவிற் பிறந்தசொன் னென்னற்
    பொழுதினிற் றொிந்ததே தென்னில்
    வரத்தினி லுயர்ந்த மதீனமா நகரார்
    முகம்மதின் மார்க்கமன் னெறியைக்
    கருத்தினிற் பொருத்தி யுண்மைகொண் டவ்வூர்
    காக்குதற் கிவரையு மரசா
    யிருத்துதற் காிய வலக்கரங் கொடுத்தங்
    கெழுந்தன ாியாவரு மியைந்தே.    3.3.46
167    அந்நெறி முறையே முகம்மதுக் கீமான்
    கொண்டவ ரனைவரு மதீனாப்
    பொன்னகர் புகுந்தா ரவர்களு மிவர்க்குப்
    பொருவிலா வாிசைக ளளிப்ப
    மன்னியங் கிருந்து நாட்குநாள் தீனை
    மறைபடா தோங்கிட வளர்த்தா
    ாிந்நிலத் திவனு மப்பெரும் பதியிற்
    போவதற் கிசைந்திருந் தனனால்.    3.3.47
168    புதுமறை வளர்க்கு முகம்மது மதீனாப்
    பதியினிற் புகுவனேற் றொலையாச்
    சதிவிளைந் திடுவ தறுதிதன் வலியாற்
    றணிப்பவ ாிவணிலை யெவரும்
    பதியைவிட் டருங்கான் புகுந்தின மெனும்பேர்ப்
    பற்றறத் திாிவது மல்லாற்
    கதிபெறு தேவா லயங்களு நமர்தஞ்
    சமயமுங் காண்பதற் காிதே.    3.3.48
169    இந்தவல் வினைகண் முடியுமுன் றமர்க
    ளெவர்களு மறையினாற் றௌிந்து
    புந்தியிற் றொிந்து செய்வது தவிர்வ
    தெனுவினை பிறந்திடப் பொருந்தி
    மந்திரப் பொருளாய்க் குலநலந் தழைக்க
    மாற்றமொன் றுரைமின்க ளென்ன
    நிந்தையும் படிறுங் கொலையுமுள் ளமைத்த
    நெஞ்சின னபூஜகு லுரைத்தான்.    3.3.49
170    தலைவாிற் றலைவ னபூஜகு லெடுத்துச்
    சாற்றிய மாற்றம தனைத்து
    முலைவுறக் கேட்டுப் பொிதழிந் தொக்கு
    மொக்குமென் றொருவருக் கொருவர்
    நிலைபெறத் தேறி யிருக்கிமவ் வவையி
    னெஞ்சழன் றொருகொடுங் காபிர்
    கலைவலான் சகுதைச் சிறைப்படா விடுத்தல்
    கருமமன் றெனக்கழ றினனால்.    3.3.50
171    முறைததும் பியதை நினைப்பதென் னினிமேன்
    முடித்திடுஞ் சூழ்ச்சியீ தென்ன
    நிறைபெறத் தேர்ந்தொத் தெவருமோர் கருத்தாய்
    நினைப்பது வினைத்திற மலது
    மறைபட விருந்து விரைவறத் தூங்கி
    வகுத்திடும் பழியெனக் குறித்துப்
    பொறையுட னிருத்தல் வினைக்கிடங் கொடுத்த
    லெனப்புகன் றனனொரு முதியோன்.    3.3.51
172    இதத்ததிம் மொழியே முகம்மதென் பவனை
    யிருங்கொலைப் படுத்தலே வேண்டும்
    வதைத்தவ ாிவர்பொன் றினாிவ ரெனுஞ்சொல்
    வழக்கினிற் றோன்றிடா வண்ணம்
    புதைத்தலுக் கிடமுற் றிருக்குமோர் வினையாற்
    பொருந்துவ தன்றிமேற் பழியாய்ச்
    சதித்திட லெவர்க்குந் தகுவதன் றெனவே
    சாற்றின னதிலொரு தலைவன்.    3.3.52
173    நன்கில துறுஞ்சொன் முகம்மதைப் பிடித்தோர்
    மனையினி னள்ளிரு ளடைத்துப்
    புன்கமும் புனலுஞ் சிறிதுத விலவாய்ப்
    போக்குடன் வரத்துமில் லாம
    லின்கணி னெவர்க்குந் தொிகிலா வண்ண
    மிழைத்தமே லொல்லையி லிறப்பன்
    வன்கொலை தொடரா மறுவுமற் றொழியு
    மெனவுரைத் தனனொரு மதியோன்.    3.3.53
174    இல்லகத் தடைத்து மெனுமொழி யிபுலீ
    செனுமவன் கேட்டிள நகையாய்
    நல்லவை யுரைத்தீ ரடைத்தொரு மனைக்கு
    ணாள்பல கழிந்தபின் பார்க்கின்
    மெல்லணைப் படுத்தங் கிருந்தவர் போல
    வருகுவன் விரைவினிற் பசியே
    தொல்லையி லிறப்பே தவன்றன்வஞ் சனைக்கீ
    துரையல வொழிகவென் றுரைத்தான்.    3.3.54
175    மற்றொரு தலைவன் முகம்மதைப் பிடித்தோ
    ரொட்டையின் வொிநுற வனைந்து
    பற்றிய வுகிர்க்காற் கொடுவாிக் குழுவு
    மடங்கலுங் கரடியும் பாம்புந்
    துற்றிய வனத்திற் போக்கிடி லவன்ற
    னாமமுந் தொலைந்திடு மிஃதே
    யுற்றதென் றுரைத்தான் கேட்டிபு லீசு
    முளம்வெகுண் டெவரொடு முரைப்பான்.    3.3.55
176    
    காட்டினில் விடுத்தீர் குடியறக் கெடுத்தீர்
    கடுவிடப் பாந்தளும் புலியுங்
    கோட்டுடைக் களிறுங் கரடியின் குழுவுங்
    கொணர்ந்துநம் பதியினில் விடுத்து
    வீட்டுவன் குலத்தி னொடுமவன் படித்த
    விச்சையி னாலிஃ தொழிக
    தீட்டுவெண் புகழீர் மறுத்தொரு சூழ்ச்சி
    செப்புமென் றுரைத்தனன் றீயோன்.    3.3.56
177    அவரவ ருரைத்த வசனமு மிபுலீ
    சானவ னுரைத்திடுந் திறனுங்
    கவரறக் கேட்டுப் புந்தியிற் றேர்ந்து
    காவல ரெவரையும் விழித்துப்
    புவியினி லெவர்க்கும் பொருந்துறு மாற்றம்
    புகன்றன ாியானுமென் கருத்துற்
    பவிதருஞ் சூழ்ச்சி யொன்றுள கேண்மி
    னெனவபூ ஜகல்பகர்ந் திடுவான்.    3.3.57
178    வங்கிடத் தொருவர் படைக்கல மெடுத்து
    முகம்மதைப் பொதுவுற வளைந்து
    செங்கர மெடுத்திட் டியாவரு மோங்கிச்
    சின்னபின் னம்பட வுடலிற்
    பொங்கிய குருதி சிதறிடத் துணிகள்
    புரடரப் புவியினில் வீழ்த்தி
    நங்களை கடிவோங் கீர்த்தியை யுலகி
    னடத்துவோ நறைதரு புயத்தீர்.    3.3.58
179    இவ்வண முடித்தோ மெனிலொரு தீங்கு
    மியைந்திடா திரும்பழி சுகக்கி
    னொவ்வொரு பயருன்க் கொருபழி தொடர்வ
    ரெவருல கினிற்கொடுப் பவாியார்
    செவ்விதி னெறியே யலதுவே றிலையென்
    றிசைத்தன னியாவர்க்குந் தொியப்
    பவ்வமுங் கொலையுந் திரண்டுரு வெடுத்த
    பாதக னெனுமபூ ஜகுலே.    3.3.59
180    அபுஜகு லுரத்த மொழிவழி துணிந்தங்
    ககங்குளிர்ந் தனரனை வோரும்
    புவியினி லெவர்நின் சூழ்ச்சியை நிகர்ப்ப
    ரெனப்புகழ்ந் திருந்திபு லீசு
    குவிகுலத் தெவர்க்குங் குறிப்பிவை யலது
    வேறிலை முகம்மதைக் குறுகிச்
    சவிமதிண் மதீனா புகுமுனம் விரைந்தித்
    தந்திர முடித்திடு மென்றான்.    3.3.60
181    இன்னவா றலது வேறொரு குறிப்பு
    மிலையெனச் சம்மதித் தெழுந்து
    மன்னிய காபிர் மனையிடம் புகுத
    வரமுறும் வானவர்க் கிறைவர்
    பன்னருங் கிரணச் சிறைபல வொடுக்கிப்
    படாிரு விசும்பினின் றிழிந்து
    நன்னபி யிறசூல் முகம்மதி னிடத்தி
    னண்பொடு சலாமுரைத் துறைந்தார்.    3.3.61
182    மேலவன் றூதை முகம்மதை விளித்து
    வினைக்கொடுங் காபிர்க டிரண்டு
    கோலிய பழியை முடித்திடத் துணிந்த
    குறிப்பெலாம் படிப்படி யுரைத்து
    மாலமர் புதுமை மக்கமா நகர்விட்
    டணிதிகழ் மதீனமா நகாிற்
    சீலமுற் ாிருந்து நன்னெறி வழாது
    தீனிலை நிறுத்திடு மெனவும்    3.3.62
183    கட்டுரைக் கடங்காக் காபிர்தம் மாவி
    களைந்திடு மென்னவு மிறையோ
    னிட்டமுற் றாயத் திறங்கிய வசன
    மெடுத்துரைத் தெழின்முகம் மதுவை
    மட்டறப் புகழ்ந்து பிறரவ ரறியா
    வண்ணத்தி னொருநொடிப் பொழுதின்
    விட்டொளி பரப்பிக் ககனிடைப் படர்ந்தார்
    விறல்பெறும் விண்ணவர்க் கரசர்.    3.3.63
184    மங்குலிற் சுழலுந் துவசநீண் மாட
    மதீனமா நகாினி லுறைந்து
    வெங்குபீர் கடிந்து பீஸபீல் செய்ய
    மேலவன் விதித்தன னென்ன
    விங்கிவ ருரைத்த மாற்றமு மனத்தி
    னெண்ணிய நினைவுமொன் றாச்சென்
    றங்கமு மகமு முவகையிற் குளிப்ப
    அகுமதி யாத்திரைக் கியைந்தார்.    3.3.64
185    தருமுகம் மதுநம் மிறையவன் றூதாய்
    நபியெனும் பட்டமே தாித்து
    வருமுறை பதினான் காண்டினின் மாசத்
    தொகையினில் றபீவுலவ் வலினிற்
    றொிதருந் தேதி யைந்தினிற் றிங்க
    ளிரவினிற் சிறப்பொடு மதீனாப்
    பெருநகர் கேக விருந்தன ாிஃது
    பிறந்தது காபிர்க டமக்கே.    3.3.65
186    இற்றையி னிரவின் முகம்மது மதீனத்
    தேகுதற் கிசைந்திருந் தனரென்
    றொற்றாி லிபுலீ கரைத்திடு மொழிகேட்
    டூரவ ரனைவருந் திரண்டு
    பற்றறும் உக்பா வுத்துபா முதலப்
    பாதக னபுஜகு லுடனு
    முற்றுறுங் கதிர்வாட் கரங்களி னேந்தி
    முரட்பெருங் கணத்தொடு மெழுந்தார்.    3.3.66
187    அறபிகள் குலத்தின் முதியர்போ லிபுலீ
    சானவ னவர்கண்முன் னடப்ப
    வுறைதரும் பவத்துக் கொருவருக் கொருவ
    ருரைக்கொணாப் பாஷைக ளுரைத்து
    மறுவறு மடங்க லேற்றினங் கிடந்த
    மலைமுழைஞ் சினைக்கொறித் திரள்க
    ளறளைந் ததுபோற் காபிர்க ளெவரு
    மகுமது மனையினை வளைந்தார்.    3.3.67
188    தெருவினும் வாயிற் புறத்தினுங் கதிர்க
    டிகழ்சுதை மாளிகைப் புறத்தும்
    பெருகிய திருமுன் றிலின்செழும் புறத்தும்
    பிறங்கிய திருமதிட் புறத்து
    நிரைநிரை காபிர் செறிதிர ணெருங்கி
    நின்றன ாிருந்தன ரவாி
    லொருவாி னொருவர் பிாிந்திடா துறைந்தாங்
    குரவாிற் சிலவர்சொல் லுவரால்.    3.3.68
189    இருந்திடத் தோற்றா திமைக்குமுன் பறப்ப
    னெவர்கணுந் தொிகிலா தொளிப்ப
    னருகிருந் தவரை மதிமயக் கிடுவ
    னறிகிலா வேற்றுரு வெடுப்பன்
    வெருவியிங் கெவரு நாவழங் காமல்
    விழித்தது விழித்ததா யிருப்பக்
    கருவிளைத் திடுவன் முகம்மது படித்த
    மாயங்கள் கவலுதற் காிதே.    3.3.69
190    இல்லகத் துளனோ புறத்தடைந் தனனோ
    வெவரறி குவர்வளைந் தவாிற்
    கல்லகங் குழைய விலங்கின மலையக்
    கற்றிடு மாயமந் திரத்தா
    னொல்லையி னெதிர்ந்தா னெனிற்றொடர் பவரா
    ருயிர்செகுத் திடவளைந் திருந்தார்
    வில்லணித் தடக்கை வீரர்கள் பலபா
    லென்கொலோ விளைவதென் றுரைத்தார்.    3.3.70
191    எடுத்தெடுத் தெவரும் வெருவுறு மாற்ற
    மியம்புதல் விடுத்திாில் லகத்துட்
    படுத்தனன் கரந்து போயின னலனோர்
    கடிகையி னமர்கையிற் படுவன்
    றொடுத்திடுங் கரும முடித்தனந் துணிந்த
    துணிவைவிட் டையுற லெனச்சொற்
    கொடுத்திபு லீசு காபிர்தம் மனங்கள்
    குறைவறத் திருத்தியங் கிருந்தான்.    3.3.71
192    உரப்பிய வுரைகண் மறுத்துநித் திரையை
    யொழித்திடுந் திசைதிசை பதின்ம
    ாிருப்பிடம் பெயர்ந்து நின்றுநின் றுலவி
    யெவ்வழி யினும்விழி பரப்புங்
    கரப்பிட மினிமற் றில்லைமா மதீனாக்
    காண்பது மாிதவன் மார்க்கம்
    விாிப்பது மொழிந்த தின்றென வுரைத்து
    வீறுட னபூஜகு லிருந்தான்.    3.3.72
193    நபிமுகம் மதுவைத் தீவினை யிருளைத்
    துடைத்திடு நறுஞ்சுடர் மணியைக்
    கவலுதற் காிய கொலைசெய நினைத்துக்
    காபிர்கள் வளைந்தவ ணிருப்பப்
    புவனமும் விசும்புஞ் செறிந்திருட் படலம்
    போர்த்ததவ் விரவினிற் றுயிலொன்
    றவரவர் கருத்துங் கண்களு மயங்கத்
    தலைகுழைத் தசைப்பவந் தடுத்த    3.3.73
194    சாய்ந்துடன் முடக்கிக் கிடப்பவர் சிலர்வாட்
    டனைமறந் தணிமுக முழந்தாட்
    டோய்ந்திடத் துயின்றோர் சிலருட னிமிர்த்துச்
    சுடாிணைக் கருவிழி செருக
    மாய்ந்தவர் போலக் கிடந்தவர் சிலர்வெண்
    மணியிதழ் விாிப்பவைம் புலனுந்
    தேய்ந்தற வொடுங்கிக் கிடந்தவ ரெவருந்
    திருமனைப் புறந்தொறுஞ் செறிந்தே.    3.3.74
195    தனைமதித் தடர்ந்த காபிாின் குலமுந்
    தறுகண னெனுமிபு லீசுங்
    கனைகட லுறங்குங் காட்சிய தென்ன
    வுறங்கிய காலையி லுலக
    நினையுமு னறியும் பொியவ னருளா
    னெடுவிசும் பிழிந்துநந் நயினார்
    மனையிடத் துறைந்தார் செவ்வியிற் சிதையா
    மணிச்சிறை வானவர் கோமான்.    3.3.75
196    மன்றன்முங் கியபொற் புயமுகம் மதுவை
    விளித்திறை சலாம்வகுத் தோதி
    யின்றிர வினினும் மனையினி லலியை
    யியல்பெறத் துயிலுதற் கியற்றிப்
    பொன்றிலாப் பசிய போர்வையிற் போர்த்துப்
    புறத்தினிற் காபிர்கண் முகத்தில்
    வென்றிகொண் டொருகை மண்ணெடுத் தெறிந்து
    விரைவினி லெழுமெனப் புகன்றார்.    3.3.76
197    அமரருக் கரசர் மொழிப்படி திருந்த
    அலிதமை அணைமிசைப் படுத்தித்
    தமரொடு மிருந்து மூன்றுநாள் கடந்தென்
    றன்வயின் சாருமென் றுரைத்துக்
    கமைதரு மிருகண் மணியினுஞ் சிறந்த
    புதல்வியர் தமக்குங்கட் டுரைத்துத்
    தமைவளர்த் துவந்த பாத்திமா வெனுமத்
    தாயர்க்கு முரைத்தெழுந் தனரால்.    3.3.77
198    திருமனைப் புறத்தி னின்றொரு பிடிமண்
    செங்கையி னினிதெடுத் தேந்தி
    யொருதரம் யாசீ னோத்நாற் றிசையு
    முறங்கிய காபிரை நோக்கி
    யிருதிருக் கினும்வா யினும்புக வெனவென்
    றெண்ணியம் மண்ணினை யெறிந்து
    சொாிகதிர்ச் சுதைமா மனையிடங் கடந்து
    தோன்றினர் நீண்டமா மறுகில்    3.3.78
199    ஒருகதிர் நிகராப் பெரும்பதித் தெருவி
    னுலவிய தெனத்தனி நடந்து
    கருவிழித் துவர்வா யாயிஷா வெனும்பெண்
    கனியெனுங் கன்னியைப் பயந்த
    மருமலர்த் தொடைத்திண் புயத்தபூ பக்கர்
    மனைத்தலை வாயிலைக் குறுகி
    விரைவொடு மொருசொற் பிறந்திட வுரைத்து
    விளித்தனர் முகம்மது நபியே.    3.3.79
200    மறுவிலா வசன முகம்மதின் றொனியீ
    தெனமனத் தினிற்குறித் தெழுந்து
    நிறைதரு மிருளி னொருதர மெனினு
    நினைத்திவ ணடைந்தவ ரலாின்
    றிறையவ னருளா லென்னினை வதனா
    லடைந்தன ரோவென வெண்ணிக்
    கறைகெழும் வடிவேல் வலக்கர னேந்திக்
    கடைத்தலை யடுத்தனர் கடிதின்.    3.3.80
201    வேறு
உறுப்பொன் றுறையாப் பெருந்தகையை
    யொளிரும் புவன மடந்தையாின்
    சிறப்புற் றிருப்பச் செய்தவிற
    சூலே வாிசை நயினாரே
    யறப்பொங் கிருளிற் றனித்திவணி
    னடைந்த வரவா றென்செவியிற்
    பிறப்ப வுரைப்ப வேண்டுமெனப்
    பிாிய முடனின் றினிதுரைத்தார்.    3.3.81
202    உரைக்கு முறுதி மொழிகள்சில
    துளது மனையிற் பிறரவர்க
    ளிருக்கி லகற்று மெனவிறசூ
    லிசைப்ப விவணி வயலவர்கள்
    வருக்க மிலையிங் கெழுகவென
    மனையிற் கொடுபோய்த் தவிசின்மலர்
    விாிக்கு மணிப்பஞ் சணையிருத்தி
    வெற்றி யபூபக் கருமிருந்தார்.    3.3.82
203    இற்றை யிரவி னியாத்திரையென்
    றிபுலீ சறிந்து காபிருடன்
    சொற்ற துணிவு மருவார்கள்
    சூழ்ந்து மனையை வளைந்ததுவு
    முற்ற துணைவா னவர்க்கரச
    ருரையின் படியாற் பூழ்தியெடுத்
    தெற்றி யெறிந்த வரவுமெடுத்
    திசைத்தார் மரவ மலர்ந்தாரார்.    3.3.83
204    கோதுங் கதவெங் குபிர்க்குலத்தைக்
    குறைப்ப மதீன மாநகாிற்
    போது மெனுஞ்சொற் கேட்டுணர்ந்து
    புதியோன் றூதே யினியிவணிற்
    றீது விளையுந் தாிப்பதல
    செல்வ தறனே யிமைப்பிற்றறு
    காதி யானு முடன்வருதல்
    சரத மெனக்கட் டுரைத்தனரால்.    3.3.84
205    உறுமெய்த் துணைவர் வருவனெனு
    முரையான் மிகவு மனமகிழ்ந்து
    செறுந ரறியா நெறிவிரைவிற்
    சேறல் வேண்டு மதற்கியையப்
    பெறுவா கனங்க ளிலையிருவர்
    தனித்துப் பெருங்காண் கடத்தனம
    திறைவன் பரமென் றிசைப்பஅபூ
    பக்க ரெடுத்தங் கியம்புவரால்.    3.3.85
206    உரத்தின் வலியிற் சுமைக்கிளையா
    தொட்டை யிரண்டென் னிடத்தினுள
    பாித்தற் குமக்கொன் றியானளித்தே
    னென்றார் நபியும் பாிவினொடும்
    பொருத்துங் கிறையம் பொருத்தியெமக்
    கருளு மெனுஞ்சொற் புகலமனத்
    திருத்தி யிஃதே நெறிமுறையென்
    றிணங்கி விரைவிற் கொடுத்தனரால்.    3.3.86
207    இருவர் மனமும் பொருந்தவரு
    மிளவ லொருவன் றனையழைத்துத்
    தொிய நெறிக்கூ லியுமளித்தொட்
    டகமு மவன்ற னிடஞ்சேர்த்தி
    முருகு துளிக்குந் தௌறுமலைப்
    பொதும்பிற் றினமூன் றகன்றதற்பின்
    விரைவி னாலாந் தினத்திரவின்
    வாவென் றிவையும் விளம்பினரால்.    3.3.87
208    திாிகைக் கனியு மோதகமுந்
    திரட்டித் துகிலிற் பொதிந்துதம
    தருமை மகவா ரசுமாதன்
    னரையிற் கயிற்றா லுறவிறுக்கி
    வாிசை மனையார் கொடுப்பவெதிர்
    மருவா ருயிரை விசும்பேற்றுங்
    குருதி வடிவே லேந்துமலர்க்
    கொழுஞ்செங் கரத்திற் கொண்டனரால்.    3.3.88
209    கொறிக டமைமேய்த் தாமீறைக்
    குறும்பி னிடத்திற் றினந்தோறு
    முறைய வுரைத்தி ரெனச்சாற்றி
    யுயிரோ ருருக்கொண் டுற்றனைய
    சிறுவ ரப்துல் லாவெனும்பேர்ச்
    செம்மற் செழுஞ்செங் கரம்பிடித்து
    மறுவி கமழ்ந்த முகம்மதுட
    னெழுந்தார் மனையா டமக்குரைத்தே.    3.3.89
210    புகழோர் வடிவு கொண்டவபூ
    பக்கர் பொதிசோ றினிதேந்தி
    யிகலா ரறியா தெழுந்துநடு
    விருளின் மறுகூ டினிதுவர
    முகிலார் கவிகை முகம்மதுமக்
    கானங் கடந்து முரம்படர்ந்த
    வகிர்வார் நெறியிற் காறடவி
    வந்தார் தௌறு மலைச்சார்பில்.    3.3.90
211    ஓங்க லடுத்தோர் பொதும்பாின்மூன்
    றுழுவை யுறைந்த தெனநபியும்
    வாங்கு சிலைக்கை வள்ளலபூ
    பக்க ரெனுமெய் மதியோரும்
    பாங்க ரப்துல் லாவெனுமப்
    பல னுடனு மினிதிருப்ப
    வீங்கு திரைப்பைங் கடற்குணபால்
    வெய்யோன் கரத்தின் விளர்த்தனவால்.    3.3.91
212    மரையு மதியும் பொருவாத
    வதன நபிமா ளிகைப்புறத்தி
    னிரவின் வளைந்து காத்திருந்தோ
    ரெழுமு னிபுலீ செழுந்தனனித்
    திரைவிட் டணிவாய் முகத்தினுமண்
    கண்டான் றிகைத்தா னிருகரத்தால்
    விரைவிற் றுடைத்தான் வாய்ப்பூழ்தி
    யுமிழ்ந்தான் றனைமெய் மறந்தானே.    3.3.92
213    அவதி யுறக்க மனைவோர்க்கும்
    வருமோ வென்ன வதிசயிப்ப
    னெவரு மிருப்பத் தனிகரப்ப
    திவனோ வெனவா யிதழ்கறிப்ப
    னுவர்மண் ணெவர்வா யினும்புகப்போ
    டுவனோ வெனவு நகைத்துழல்வன்
    புவியிற் பகையும் விளைந்ததெனப்
    பொருமி மனத்திற் புழுங்குவனால்.    3.3.93
214    எண்ணி யிடைந்து வளைந்துவிழித்
    திருக்கின் றீர்கா ளெவர்வாய்க்கு
    மண்ணை யறைந்தான் முகம்மதென்போன்
    மாயம் விளைத்துப் புறம்போனான்
    பண்ணுந் துயிலி லிறந்தவர்போற்
    கிடந்தாற் பயனும் பெறுவதுண்டோ
    துண்ணென் றெழுமி னெழுமினெனச்
    சொன்னான் மறுத்துஞ் சொன்னானே.    3.3.94
215    அதிருந் தொனியா லிபுலீசு
    மறையக் கேட்டு நடுங்கியுடற்
    பதறி யெழுந்தார் சிலர்குழறிப்
    பகர்ந்திட் டெழுந்தார் சிலர்முகத்திற்
    புதயக் கிடந்த பூழ்திதுடைத்
    தெழுந்தார் சிலர்வாய் மண்ணையுமிழ்ந்
    திதென்ன கொடுமை கொடுமையென
    வெழுந்தார் சிலர்நெஞ் சிடைந்தாரே.    3.3.95
216    குழுமிக் கிடந்த பலதிசையுங்
    குழறி யெழக்கண் டபூஜகுலு
    முழுகிக் கிடந்த குலத்தினடு
    வெழுந்தான் முகம்வய் முழுதினுமண்
    விழுமித் தொழிலியா தெனக்கேட்ப
    விரைவி னிபுலீ சென்பவனியா
    னொழிய வெவர்க்கும் வாயினின்மண்
    விழுந்த தெனக்கட் டுரைத்தனனால்.    3.3.96
217    எடுக்கு முவர்மண் ணெடுத்தினத்தோ
    ரெவர்வா யிடத்தும் புகுத்திக்குடி
    கெடுக்கும் படிக்குக் கெடுத்தெழுந்து
    கிளத்துந் தனது மறைநெறியி
    னடுக்கு மவர்கள் வயினடைந்தா
    னவனா லினிமே நமதினத்திற்
    றொடுக்கும் பகையைத் துடைப்பவர்க
    ளிலையென் றிவையுஞ் சொனானே.    3.3.97
218    வேறு
உரைத்தவை யனைத்துங் கேட்டங் கபூஜகு லொழியாத் துன்பம்
பெருத்துநின் றிடைந்து வாடிப் பிறர்சிலர் தம்மைக் கூவித்
தாித்தவ ரெவரென் றில்லுட் சார்ந்துநோக் குகவென் றோத
வாித்திறற் குருளை போன்ற வலியல திலைவே றென்றார்.    3.3.98
219    இல்லுறைந் திரவின் கண்ணே யிருந்தனன் கண்கட் டாக
வொல்லையிற் புறாத்திற் போந்தா னுறுதொலை கடந்தா னன்று
சொல்லருங் குவடுன் கானுஞ் சுற்றியே திாிவன் றேடிப்
பல்லரு மெழுக வென்றான் ாிசைதிசைப் பரந்து போனார்.    3.3.99
220    பாடுறைந் திற்புக் கோனைப் பற்றிலார் வீணின் முட்சார்
காடிறந் தெவர்கள் காண்பார் கான்பது மாிதென் றெண்ணி
வீடிலாப் புகழ்சேர் வண்மை விறன்முகம் மதுவைத் தானுந்
தேடிய பெயர்கள் போலச் செல்லுந்தன் றிசையிற் சென்றான்.    3.3.100
221    ஆலயத் திடத்துந் தீனோ ரணிமனை யிடத்துஞ் சேர்ந்த
சோலையி னிடத்துஞ் சீறூர் சுற்றினுந் துறுகற் சார்புங்
கோலமுள் ளீந்தின் கானுங் குாிசினந் நபியை மேலுங்
காலிட விடமின் றென்னக் காபிர்க டேடி னாரால்.    3.3.101
222    கிாிப்பொதும் பிருந்து மாறாக் கிளரொளி வனப்பின் மிக்கார்
மருப்புய னப்துல் லாவைக் கூவிமா நகரம் புக்கி
யிருப்பவ ரெவர்க்குந் தோன்றா தேதிலார் நடத்துஞ் செய்கை
விருப்புறத் தொிந்து வல்லே விரைந்திவண் வருக வென்றார்.    3.3.102
223    அறநெறி வடிவங் கொண்ட அபூபக்கர் மதலை யான
சிறுவரும் பதியிற் புக்கிச் செய்திக ளனைத்துந் தேர்ந்து
பொறையிடத் திவர்கட் கோதிப் பொருந்தலர் காண்கி லாது
முறைமுறை மூன்று நாளு மிவ்வண்ண மொழியா நின்றார்.    3.3.103
224    கொறிகண்மேய்த் தாமி றென்னுங் கோளாி யவர்க்குந் தோன்றா
திறையவன் றூதர் பால்வந் திருந்துபால் கறந்து காய்ச்சி
நிறையுறப் பருகச் செய்து நெறிவிடுத் தடவி சுற்றித்
திறனொடு நகரஞ் சேர்ந்து மீண்டுசென் றடைவன் மாதோ.    3.3.104
225    நிலம்பிற ழாத நன்னேர் நெறிமறை தவறா வள்ளல்
சிலம்புறைந் திருப்பக் கண்ட சிலம்பியப் பொதும்பர் வாயிற்
சலம்புாிந் திகலா நின்ற தாியலர் நோக்கா வண்ணம்
பலன்பெற மெய்நூ லார வேய்ந்தது பாிவி னன்றே.    3.3.105
226    முகம்மத ாிருக்குஞ் சார்பிற் சிலம்பிநூன் மறைப்ப வோர்பாற்
புகைநிறக் குன்றிச் செங்கட் புறவினங் குடம்பை செய்திட்
டகடுறைக் கருவிட் டன்பா யணிமணிச் சிறையாற் போர்த்துப்
புகரறச் சேவ லோடும் பொருந்தியங் கிருந்த தன்றே.    3.3.106
227    பொருந்துதல் பயிலாக் காபிர் திசைதொறும் புகுந்து தேடிக்
கருந்தடங் கொண்டற் செவ்விக் கவிகையி னுலகங் காத்து
விாிந்ததீன் விளக்கஞ் செய்யும் வேதிய ாிறசூ லுல்லா
விருந்தவா னுரைஞ்சி நின்ற விறும்பிடத் தடைந்தா ரன்றே.    3.3.107
228    விரலிட வாிதாய் நின்ற வேய்வனத் திடத்துஞ் சாய்ந்த
பருவரைத் துறுகற் பாங்கும் பருதியின் கரம்பு காமற்
செருகிய கடத்துந் தேடிச் சேரலர் சிலம்பி நூலாற்
புரையறப் போர்த்து வைகும் பொதும்பாின் வாயில் வந்தார்.    3.3.108
228    கர்த்திலேந் தியவை வேலுங் காலிணைக் கபுசு நீண்ட
வுரத்தினு முகத்தும் வேர்வை யிதிர்ப்பொடுங் காபிர் கூண்ட
வரத்தினை யிருகண் ணார மன்னபூ பக்கர் நோக்கித்
திருத்துமெய் யிறசூ லுல்லா செம்முகம் பார்த்துச் சொல்வார்.    3.3.109
230    இரவினி லிருளி னூர்விட் டிவணிடை யடைந்தோ மாற்றா
ரருவரை யிடத்துந் தேடி யடைந்தனர் முழந்தாண் மட்டுந்
தொிவது நமக்கிங் கன்னோர் திறத்தொடுங் கவிழ்ந்து நோக்கின்
விரைவொடுங் காண்ப ரென்ன வேதியர்க் கொடுத்துச் சொன்னார்.    3.3.110
231    இருவர்நா மிருப்பப் பூவி னிருந்தபல் லுயிருங் காக்கு
மொருவனம் மிடத்தி நீங்கா துடனுறைந் திருப்பக் காபிர்
தொிதருங் கண்ணிற் காணச் செயலுமற் றுண்டோ வென்றா
ரருவரை முழையிற் புக்கி யருக்கனொத் திருக்கும் வள்ளல்.    3.3.111
232    ஒருங்கினி னின்ற காபி ரொருவருக் கொருவ ாிந்த
மருங்கினிற் பொதும்பிற் புக்கி நோக்குவம் வருக வென்றார்
நெருங்கிய சிலம்பி நூலும் நீள்சிறைப் புறவின் கூடுஞ்
சுருங்கிடா தழியா தியாவர் தொடருவர் பொதும்பி னென்றார்.    3.3.112
233    இப்படிச் சிலர்கூ றக்கேட் டெவருமெம் மருங்கு நோக்கி
மைப்படி கவிகை வள்ளன் முகம்மதைக் காண்கி லோமென்
றொப்புர வகன்ற நெஞ்சோ டுளைந்துலைந் தடவி சுற்றி
மெய்ப்பொடும் வயர்வை சிந்த விலங்கல்விட் டகன்று போனார்.    3.3.113
234    முகம்மதின் புகழைப் போற்றி வகுதைவா ழபுல்கா சீந்தன்
னகமலர் களிக்கு மாறா யணிச்சிறைப் பறவை யாவு
மிகலவர் போனா ரென்ன விதயங்க ளுறப்பூ ாித்துப்
புகரறக் கூவிச் சுற்றிப் பொருப்பைவிட் டகன்றி டாதே.    3.3.114

யாத்திரைப் படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 3க்குத் திருவிருத்தம்-234.

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.04 விடமீட்ட படலம் (235 - 280 )
235    நகரைவிட் டகன்று கான்சூழ் நகத்திடத் துறைந்து தேடு
மிகலவர் கண்ணிற் காணா திருந்தவ ணிருக்குங் காலைப்
புகலபூ பக்கர் செவ்வி மடிமிசைப் பொருந்த வாசந்
திகழ்சிரஞ் சேர்த்தி வள்ளல் செழுந்துயில் புரிவ தானார்.     3.4.1
236    விடுங்கதிர்க் கனற்கண் வேங்கை மெய்யணைச் சிரத்தைச் சேர்த்த
மடங்கலே றென்னச் செவ்வி முகம்மது துயிலும் போதி
லிடங்கொளந் தரமு மண்ணு மிடனற நெருங்கி விண்ணோர்
நெடுங்கழை வரையைச் சுற்றிக் காவலி னிறைந்து நின்றார்.     3.4.2
237    மறைநபி துயிலா நின்ற மலைமுழை யதனின் கண்ணே
குறுவளை யனேக மாங்கோர் வளையினிற் கொடுங்கண் வெவ்வாய்த்
தெறுநுனைப் புரைப்பற் புண்ணாச் சிறுபொறிப் படத்த செஞ்சூட்
டெறுழ்வலிக் கரிய பாந்த ளிருந்தலை நீட்டிற் றன்றே.     3.4.3
238    பொரியரைத் தருக்க ளியாவும் புதுமலர் சொரியுங் கானின்
கிரியிடைப் பொதும்பர் வாயிற் கேசரி யனைய வள்ளல்
வரிதருங் கமலச் செங்கண் வளரிடத் தரவு தோன்றக்
கரிமருப் புதிர்க்கும் வெள்வேற் கரத்தபூ பக்கர் கண்டார்.     3.4.4
239    படியடி பரப்பச் செய்யா முகம்மதும் பரிவு கூர
மடிமிசை துயின்றா ரிந்த வளையிடத் தரவுங் கண்டேம்
விடிவதெவ் வாறோ வென்ன வெருவிநெஞ் சுளைந்து போர்த்த
பிடவையிற் கிழித்துச் சுற்றிப் பேதுறா தடைத்து நீன்றார்.     3.4.5
240    அடைத்தவப் புடையை நீக்கி யகுமதுக் கணித்தாய் வேறோ
ரிடத்துறும் வளையிற் சர்ப்ப மெதிர்ந்தது கண்டு தேங்கிப்
படத்தினி லொருபாற் கீறிப் பதுமமென் கரத்தை நீட்டி
விடத்தினுக் கஞ்சி யேதும் வௌியறப் புகுத்தினரால்.     3.4.6
241    மற்றொரு வளையிற் றோன்ற வடைத்தனர் பொதும்பர் வாயிற்
சுற்றிய வளைக டோறுந் தோன்றிய துகிலைக் கீறி
முற்றினு மடைத்தா ரோர்பான் முழையினுக் காடை காணா
துற்றுள மிடைந்து வாடி யுருகினர் துயிற லோர்ந்தே.     3.4.7
242    ஒருவளை யன்றி யாவு மடைத்தன முரக மீங்கு
வருமெனின் மறைப்ப யாது மிலைத்திரு வள்ள லார்நித்
திரைமறுத் திடுத னன்றன் றெனவுட ரிடுக்கிட் டேங்கிப்
பருவரல் சுமந்து நின்றார் பணிவர வறிகி லாரே.     3.4.8
243    இருமனம் பேதுற் றங்ங னிருப்பவப் புழையின் கண்ணே
விரிதரு கவைநா நீட்டிக் கட்செவி விரைவிற் றோன்றப்
பெரியவன் றூதர் தம்பால் வருமுனம் பெட்பி னோடு
மொருதிருத் தாளை நீட்டிக் காப்பதற் கொருமித் தாரால்.     3.4.9
244    மடிமிசை யிருந்த காந்தி மதிமுக மசைந்தி டாமற்
கடிநறைப் பொதுளுஞ் செவ்விக் கமலமென் வலத்தா ணீட்டி
விடவர வுறையும் பாலில் வௌியணு வெனினுந் தோன்றா
திடனற வுள்ளங் கால்கொண் டின்புற வடைத்தா ரன்றே.     3.4.10
245    புறப்படற் கரிதாய் வேகம் பொங்கிக்கண் செவந்து சீறி
மறைப்படும் வளைக்கு ளார்ந்த வல்லுட னௌித்து நீட்டிக்
குறிப்பொடு கெந்த நான்குங் குழைவற நிமிர்த்து வாய்விண்
டுறப்பட வுள்ளந் தாளிற் கவ்விய துரக மன்றே.     3.4.11
246    கடிவழி யுதிரஞ் சிந்தக் காறளர்ந் தசைந்தி டாம
னெடியவன் றூதர் செய்யு நித்திரைக் கிடரில் லாமற்
புடையினி லிருந்த சர்ப்பம் புறப்படற் கிடங்கொ டாம
லுடலணு நடுக்க மின்றி யிருந்தன ருணர்வின் மிக்கார்.     3.4.12
247    மிதிப்படும் வளையிற் காலை விடுத்திலர் கடித்து மென்னக்
கொதிப்பொடு கெந்த நான்குங் குறைபடச் சீறிக் சீறிப்
பதிப்பொடு முடலை வீங்கிப் படுவிட மனைத்துஞ் சிந்தி
யதிர்ப்பொடும் வேக மீக்கொண் டடிக்கடி கடித்த தன்றே.     3.4.13
248    மாசறத் தௌித்த பஞ்சின் வாய்ப்படு நெருப்புப் போன்றும்
வேசறச் சுட்ட சாம்பர் மீதுறும் புனலைப் போன்று
மூசிவெள் ளெயிறு சிந்த முரணராக் கடித்த வாயி
னாசொடும் விடத்தின் வேக மாகத்தின் முழுது மேற்ற.     3.4.14
249    பன்னருங் கொடிய வேகம் பரந்துட லனைத்துந் தாக்கிச்
சென்னியிற் பரப்பச் சற்றே சிந்தையின் மயக்கந் தோன்றத்
தன்னிலை தளரா துள்ளந் தாளையும் பெயர்த்தி டாம
லந்நிலை யிருந்தார் செவ்வி யகுமதும் விழித்தா ரன்றே.     3.4.15
250    மதியிடத் திரண்டு செவ்வி மரைமலர் பூத்த தென்ன
விதியவன் றூதர் கண்கள் விழித்தபூ பக்கர் தம்மை
யெதிரினி னோக்கச் சற்றே மயக்கமுற் றிருந்தார் கண்டு
புதியகா ரணங்க ளேது முளதெனிற் புகலு மென்றார்.     3.4.16
251    தடவரைப் பொதும்பி னீவிர் தண்மதி கடுப்பச் சாய்ந்தென்
மடிமிசை துயில வாதி வல்லவ னுரையா லிந்த
நெடுமுழை யதனி னேராய் நெட்டுடல் வளைக்கும் பாந்தள்
கடிதினிற் றலையை நீட்டக் கண்டனன் கவலை கூர.     3.4.17
252    அப்பெரும் பாந்தள் ளிங்ஙன் வருமுன மடைப்பான் வேண்டி
யொப்பரு மதியின் காந்தி யுரித்தெனத் துகிலை யென்றன்
கைப்படக் கீண்டுள் ளோடிக் கரந்திட வடைத்தே னப்பாற்
றுப்பொடும் வேறு வேறு புழைதொறுந் தோன்றிற் றன்றே.     3.4.18
253    இனையன புழைக ளெல்லா மரவெழுந் தெதிரத் துன்ப
மனதினிற் படரச் சோதிக் கலையினை வலிதின் வாங்கி
நனிபெறக் கீண்டு கீண்டு நலந்தர வடைத்து நின்றேன்
குனிசிலைத் தழும்பின் கையாய் கொடும்புரை யொன்றல் லாமல்     3.4.19
254    முடங்கிநீண் டிருளுள் ளார்ந்த முழையொன்றிற் றலையை நீட்டத்
தடங்கொள்கோ டிகமில் லாதாற் றாளினை நிமிர்த்துக் காலுந்
தொடங்கிலா வண்ண நீங்கா தடைத்தனன் றுளைப்பற் பார்ந்தள்
விடங்கள்கான் றரிதிற் சீறி வெகுளியிற் கடித்த தன்றே.     3.4.20
255    ஊறுபட் டுதிரங் கால வலதுளந் தாளைப் பற்றி
மாறிலா தின்னுந் தீண்டி வாங்கிய ததனா லுள்ளம்
வேறுபட் டிமைப்பி னேர மெய்மயக் குற்றே னென்று
மீறிலான் றூதே யிங்ஙன் விளைந்தவா றிதெனச் சொன்னார்.     3.4.21
256    அடலுறு மரியே றென்னு மபூபக்க ருரைப்பக் கேட்டுப்
படர்பரு வரலுற் றாதி யளித்திடும் பயனு மோர்ந்து
புடையினிற் பொருந்துந் தாளைப் பெயர்த்திடு மெனப்பு கன்றார்
வடிவினி னிகரின் றென்ன வந்தமா முகம்ம தன்றே.     3.4.22
257    தரைத்தலம் புகல வீரந் தகத்தமை நினையா நீட்டு
மரைத்தடப் பதத்தை மெல்ல வாங்கினர் வாங்கச் சோதி
விரித்தசூட் டெரிகட் பாந்தள் விளங்கியவ் வளையை நீங்கித்
துருத்திநீர் வௌிவிட் டென்ன விரைவொடுந் தோன்றி நின்ற.     3.4.23
258    நெட்டுடன் முடக்கி வாய்ந்த கழுத்தையு நிமிர்த்து நின்ற
விட்டறா விடத்தின் பாந்த டனைவிழித் தெதிர்ந்து நோக்கி
வட்டவா ருதிசூ ழெட்டுத் திக்கினு மணிவா னத்து
மெட்டிய கீர்த்தி கொண்டோ ரினியன மொழிகள் சொல்வார்.     3.4.24
259    அருமறைப் பொருளாய் நின்றோ னமைத்தபன் னகமே யாங்கள்
வரையினோ ரிடுக்க ணுற்று வந்திருந் தனமல் லாமற்
பரிவுட னுனக்கி யாது குற்றமும் பயின்ற துண்டோ
தரையினெம் முன்னோர் முன்னா ளியற்றிய தவறு முண்டோ.     3.4.25
260    ஏதொரு குறையுஞ் செய்த தின்றிவை யிகழ்ந்தெண் ணாம
னீதமில் லவரைப் போல நெடும்புடை யதனின் வந்து
தீதுறக் கொடிய வேகந் தலைகொளச் சினந்து சீறீ
வேதனைப் படவாய் வைத்த தென்னென விரைவிற் கேட்டார்.     3.4.26
261    வேறு
மறையின் வாயுரை கேட்டெழின் முகம்மதை நோக்கி
நிறுவி நின்றிடு நெடுந்தலை நிலத்திடை சேர்த்தி
முறைமை யின்சலா முரைத்துமுள் ளெயிற்றுவாய் திறந்து
குறைவி லாதுளத் திருந்தவை யனைத்தையுங் கூறும்.     3.4.27
262    ஆதி நாயகன் றிருநபி யேயிவ ணடியே
னீதி யன்றியே தீண்டின னலனெடுங் காலம்
பூத ரத்தினெம் முன்னவர் சிலமொழி புகன்றா
ரேதெ னச்செவி கொடுத்திட வேண்டுமெய் யெழிலோய்.     3.4.28
263    செவ்வி நாயகன் றிருவொளி வினிலுருத் திரண்டு
குவ்வி டத்தினி லுதித்தரும் புதுமையிற் குலவி
யவ்வி யங்களைந் தகுமது நபியென வழகா
யெவ்வெ வர்க்குநன் மறைநெறி நடத்துவ ரெனவும்.     3.4.29
264    அவர்க்கு நல்வழி யாயிசு லாமினி லானோர்
சுவர்க்க மெய்துவ ரெனவுமச் சொல்லினைக் கடந்தோர்
பவக்க டற்கிடந் தலைகுவ ரென்னவும் பரிவி
னுவக்கும் வேற்றுருச் சமயங்க ளொழிந்திடு மெனவும்.     3.4.30
265    பொருவி லாக்கடற் புவிநடு மக்கமா புரத்தி
னரிய நாயகன் றிருமறை விளக்கியங் கிருந்திவ்
வரையி னுந்தனி வருகுவ ரென்னவு மதீனாத்
திருந கர்க்கர சிருந்துதீன் றிருத்துவ ரெனவும்.     3.4.31
266    இனைய வாசக மனைத்தையு முணர்ந்துளத் திருத்திக்
கனியுஞ் சிந்தையுங் கண்களுங் களிப்புற நோக்கிப்
புனித மாகுவ தென்றெனத் தினந்தொறும் பொருவா
நினைவி னேர்வழித் தவத்தொடு மிருந்தன னெடுநாள்.     3.4.32
267    இற்றை யின்முதன் மூன்றுநாட் டொடுத்திறும் பிடத்திற்
குற்ற மற்றபே ரொளியொடு மான்மதங் குலவி
வற்று றாப்புது மணத்தொடுங் கமழ்ந்தன மனத்தி
னுற்றி தேதெனக் குறித்திடா தொருவளை யுறைந்தேன்.     3.4.33
268    அந்த ரத்தினும் நிலத்தினும் பெருங்குவ டனைத்தும்
வந்து வானவர் புகழ்தர வருஞ்சல வாத்தைத்
சிந்தை கூர்தரப் புகல்வது கேட்டுளந் தேறி
யெந்தம் நாயக ரிவணுறைந் தனரென விசைந்தேன்.     3.4.34
269    தொல்லை வல்வினை தொடர்பவங் களைந்துநற் சுவனத்
தெல்லை யின்பதங் கிடைத்ததின் றெனத்தவழ்ந் தேகி
வொல்லை யிற்குவ டடங்கலுந் தேடின னொளிருங்
கல்ல கத்துழை கண்டன னிருவிழி களிப்ப.     3.4.35
270    வரைமு ழைச்சிறு வாயிலிற் சிலம்பிநூன் மறைப்ப
விரிசி றைப்புற விருப்பது நோக்கினன் விரைவிற்
பெருகுங் காப்பழித் திடுவதன் றெனப்பிரிந் தொதுங்கிப்
புரைய றத்தனி மற்றொரு வளையினிற் புகுந்தேன்.     3.4.36
271    சிறுப்பு ழைக்குளென் னெட்டுட லொடுங்கிடச் செருகிப்
புறப்ப டுந்திசை யனைத்தையு மடைத்தனர் புழுங்கி
வெறுப்பொ டும்மிருந் தொருவயின் மேவினன் விரைவின்
மறைப்ப டத்தடத் தாள்கொடவ் வளையையு மறைத்தார்.     3.4.37
272    வரையி னிற்புற மகலவும் வழியிலா துமது
திரும லர்ப்பதங் காணவுஞ் செயலிலா தழிந்து
முரித ரும்படிக் குவட்டுளை யிடந்தொறு முடங்கித்
திரித லல்லது வௌிப்பட லரிதெனத் திகைத்தேன்.     3.4.38
273    போது தற்கிட மன்றியும் புதியனா யகன்றன்
றூத ரைத்தெரி சித்திட வரும்வழி தூர்த்த
பாத கத்தையு நினைத்துமைக் கொடுவிடம் பழுத்த
தீது றுங்கொடிற் றெயிற்றறக் கடித்தனன் சிறியேன்.     3.4.39
274    நெடிய காலமுற் றொருபல னினைத்தவர்க் கடுத்து
முடியும் போழ்தினிற் றடுப்பவ ரெவரையு முரணித்
தடித னன்றெனு மறிவினாற் றடிந்ததே யன்றிப்
படியி னேர்தவ றிலனென வுரைத்தது பாந்தள்.     3.4.40
275    பாந்தள் கூறிடக் கேட்டலும் பதுமமென் மலரிற்
சேந்த பொன்முகக் குளிர்ப்பொடுங் களிப்பொடுஞ் சிறப்ப
வாய்ந்த வாய்மையின் விளித்தரு குறவர வழைத்துக்
கூர்ந்த தம்மனத் துவகையிற் சிலமொழி கொடுப்பார்.     3.4.41
276    நெறியு ரைத்தனை கண்டனை நிலநெடுங் காலத்
துறவு கொண்டனை பவத்தொடர் துன்பமு மொழித்தாய்
குறைவ றப்பலன் படைத்தனை வாழ்ந்துநின் குலத்தோ
டுறைகெ னப்புக ழொடுமுரைத் தனர்மறை யுரவோர்.     3.4.42
277    வேத நாயக ருரைத்தலும் விடத்தெயிற் றரவம்
பாத மென்மல ரிடத்தினிற் சிரங்கொடு பணிந்து
கோத றக்கலி மாவெடுத் தோதிமெய் குழைத்துப்
பூத ரத்துறு நெடுவளை யிடைபுகுந் ததுவே.     3.4.3
278    அரவ கன்றபி னெழிலபூ பக்கர்செம் மலர்த்தாள்
விரித ருங்கடி வாயினிற் கொடுவிட மகல
மரையி தழ்த்துளி நீரினை விரலினால் வாங்கிப்
புரைய றத்தட வினர்செழும் புகழ்முகம் மதுவே.     3.4.44
279    இருள கற்றிய கதிரவன் கதிரென விதழிற்
பரிவு பெற்றிடு மமிர்தநீ ருடலெலாம் பரந்த
கரிய வெவ்விட மனைத்தையு மணுவறக் கடிந்து
சொரியுங் காந்திகொண் டரியமெய் மாசறத் துடைத்த.     3.4.45
280    பன்ன கக்கொடு விடப்பெரும் பருவர றீர்ந்து
மின்னு செங்கதிர் வேலபூ பக்கரும் விறலார்
மன்னர் மன்னவர் முகம்மது நபியுடன் வரையி
னின்னி சைப்புக ழொடும்புதி யனைத்தொழு திருந்தார்.     3.4.46

விடமீட்ட படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 4க்குந் திருவிருத்தம்... 280

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.05 சுறாக்கத்துக் தொடர்ந்த படலம் (281 -- 330 )
281    அடுக்க லின்புற மூன்றுநா ளிருந்துநா லாநாள்
விடுக்குஞ் செங்கதி ராதவன் மேற்றிசைக் கடலு
ளொடுக்கு மெல்வையி னத்தரி யிரண்டுட னுவனு
மிடுக்க ணின்றிமெய்த் திடத்தொடு மவ்விடத் தெதிர்ந்தான்.     3.5.1
282    கதிர்பு குந்திருள் பரந்தது தொத்தினன் கடிதி
னெதிரி னொட்டக மிரண்டுங்கொண்ட டடுத்தன னினியிவ்
விதிரு மென்மலர்க் கான்செறி வரையிடம் விடுத்துப்
புதிய தோர்நெறி புகவெழு மெனநபி புகன்றார்.     3.5.2
283    முத்தி ரைத்திரு வாய்மொழி முறைமையிற் சிதகாப்
பத்தி யினபூ பக்கரு முகம்மதும் பரிவிற்
குத்தி ரப்புறம் விடுத்தெழுந் தனர்கதிர் குலவச்
சித்தி ரத்திரு மதியிருந் தெழுந்தன சிவண.     3.5.3
284    துட்ட வல்விலங் கினங்களொன் றொன்றினைத் துரத்தி
விட்ட வாய்க்குர லதிர்தரும் வரையிடை விரைவின்
பட்ட காரிருட் போதினிற் படரொளி குலவ
வொட்ட கத்தின்மேற் கொண்டனர் தூதரி னுயர்ந்தோர்.     3.5.4
285    அறிவின் மிக்கபூ பக்கரு மாமிறென் பவனும்
பிறிதோ ரொட்டக மேற்கொடு வதிந்தனர் பிறங்கிச்
செறியும் வல்லிருட் கானிடை யாவர்க்குந் தெரியா
திறுகற் சின்னெறி கொண்டனன் கூலியி னிளவல்.     3.5.5
286    நஞ்ச முள்ளெயிற் றரவுறை வரையினள் ளிருளிற்
பஞ்ச ரத்திருந் தெழுமரி யேறெனப் பரிவின்
கஞ்ச மென்முக மலர்தரப் போயினர் கணியா
வஞ்சர் நெஞ்சகம் போன்றமுட் சிறுநெறி வனத்தில்.     3.5.6
287    கூன வான்றொறு வெனுங்குவட் டிடையெழில் குலவுந்
தான வாரண முகம்மதின் றனுவிற்றண் கதிரால்
வான வாவிர வியன்கதி ரெனமலை மலைந்து
கான வாரணக் குலஞ்சிலம் பினகடல் கடுப்ப.     3.5.7
288    எயிற்று வல்விலங் கினந்தரி கானெலா மெடுத்து
வயிற்றி டைப்படுத் திருந்தவல் லிருட்குல மறுகப்
பயிற்றும் வேதவா சகமுகம் மதைக்கொடு பரிவின்
கயிற்ற சைப்பிடா தேகின சுரிநெடுங் கழுத்தல்.     3.5.89
289    ஆவி போலுறு தோழரு மரசநா யகருங்
காவின் கானையும் வளைசெறி பொறைகளுங் கடந்தார்
பூவி ரிந்தசூட் டளகொடும் புள்ளினம் புலம்ப
வீவி லாக்கனைத் திரைக்குணக் கடற்றிசை வெளுத்த.     3.5.9
290    மட்டு வார்பொழில் சூழ்தரு மக்கமா நகரம்
விட்டு நந்நபி கொடியவெங் கானிடை விளங்கப்
பட்ட காரண மெவைகொலென் றஞ்சியுட் பயத்தோ
டெட்டிப் பார்ப்பபோ லெழுந்தன னெடுங்கதி ரிரவி.     3.5.10
291    இரவின் முட்செறி வனங்கடந் திரவிதோன் றியபின்
பரல்கி டந்தவெம் பாலையிற் பகனடுப் போதி
லொருகு றும்பொறை யிடத்தினி லறிவுறு முரவோர்
விரைவி னேகியங் கிறங்கினர் நிழலிலா வெயிலின்.     3.5.11
292    கடங்க டந்துமெய் வருந்தியங் கிருந்தகா வலர்க்கோர்
படங்க லின்புறம் விரித்திருந் தனரபூ பக்க
ரடங்க லாரெனுங் குபிரறுத் திடவவ தரித்தே
மடங்க லேறெனத் துயில்புரிந் தனர்முகம் மதுவே.     3.5.12
293    பஞ்சின் மெல்லணை விடுத்தரும் பரலினிற் படுத்த
மஞ்சு லாங்குடை யரசரை நோக்கிவஞ் சகரான்
மிஞ்சும் வல்வினை யெனத்திசை தொறும்விழி பரப்பி
யஞ்சி யையமுற் றிருந்தனர் துணையபூ பக்கர்.     3.5.13
294    செறிம யிர்த்திரு கியமருப் புடைச்சிறு கவைக்காற்
குறும றித்திர ளொடுமயிர்ப் போர்வைதோட் கொண்டு
வெறிக மழ்ந்திவ ணிருப்பவ ரெவரென வியந்து
தறிகை கோல்கடை காலொடு சார்ந்துநோக் கினனால்.     3.5.14
295    அடைந்து நோக்கிய தொறுவனை விளித்தபூ பக்கர்
மிடைந்த விக்கொறி நின்னதோ பிறரதோ விளம்பென்
றடைந்தி லாமொழி கொடுத்தலுந் திரியுமென் னுருக்க
ளொடும்பு றச்சில கூலியு முளதென வுரைத்தான்.     3.5.15
296    கூலி யின்கொறி விடுத்துநின் கொறியினைக் குறுகிப்
பாலி னைக்கறந் திவண்டரு கெனப்பணிந் தோடிக்
காலி னைத்தகைத் துறுங்கடை காலினிற் கறந்து
சீல முற்றவ ரிடத்தினிற் கொடுத்தனன் றிறலோன்.     3.5.16
297    வில்லு மிழ்ந்தமெய் முகம்மதுந் துயிலினை விடுத்திட்
டொல்லை யின்னெழுந் திருந்தபி னுயிரெனுந் துணைவர்
முல்லை மன்னவன் றருநறும் பாலினை முறையாச்
செல்லு லாங்கரத் தளித்தலும் பொசித்தனர் சிறப்ப.     3.5.17
298    மந்த ரப்புய முகம்மது மதிமுக நோக்கிக்
கந்த மென்மலர்ப் பதமிரு சுரங்கொடு தடவி
யெந்தை யீர்பவந் துடைத்தன னெனப்புகழ்ந் திடையன்
புந்தி கூர்தரக் கொறியொடும் வனத்திடைப் போனான்.     3.5.18
299    இருந்த நாயக ரிருவரு மிவணெடு நேரம்
பொருந்த றீதென வத்திரிப் புறத்தணை விசித்து
வருந்தி லாதெழுந் தருங்கட நெறிகளை மறுத்துத்
திருந்து நன்னெறி யிஃதென விரைவொடுஞ் சென்றார்.     3.5.19
300    இகன்ம னத்தபூ ஜகல்விடு மொற்றர்க ளியாரும்
பகும னத்தொடும் பன்னெறி தொறுந்தொறும் படர்ந்தார்
சகியி லாதொரு கொடியவன் றனித்தொரு பரிமேற்
றிகைம றுத்தவ ரிருவரும் வருநெறி சேர்ந்தான்.    3.5.20
301    கிள்ளை வேகமும் வலக்கரங் கிடந்தவெள் வேலும்
வெள்ளை மென்றுகிற் கஞ்சுகி நனைதரும் வெயர்வுந்
துள்ளி நாற்றிசை பரப்பிய துணைவிழி களுமாக்
கள்ள வன்மனத் தவன்வரும் வரவினைக் கண்டார்.     3.5.21
302    மாதி ரத்தினை யடர்ந்ததிண் புயத்தபூ பக்கர்
சீத மெய்நறை முகம்மது திருமுக நோக்கி
வேத னைத்தொழி லபூஜகல் திசைதொறும் விடுத்த
தூத ரின்னுள னலதுவே றலனெனச் சொன்னார்.     3.5.22
303    கசைபு றம்புடைத் திடப்புவி யதிர்ந்திடக் கலிமா
விசையும் வேகமுங் கையினிற் சுழற்றிய வேலு
நசைவி டாதுகொண் டிவணடுத் தனனிக னடப்ப
விசைவன் வேறினி யுரைப்பதின் றென்னவு மிசைத்தார்.     3.5.23
304    வலிய வெம்பகை வளைந்திடிற் றனித்தவர் மனத்தி
னலிவி லாதெதிர்ந் தடருதல் தீனடு நிலைமை
கலியி தென்கொலென் றையுதல் கலங்குத லீமா
னிலையும் வீரமும் புறம்விடுத் திடுபவர் நெறியே.    3.5.24
305    இறுதி யற்றவ னொருவனா மிருவரிங் கெய்தி
மறமு திர்ந்தெதிர் வருபவ னொருவன்மற் றிவனாற்
பெறுவ தென்கொலென் றுரைத்தனர் தீனிலை பிரிக்குஞ்
செறுந ராகிய விலங்கினங் கெடவருஞ் சீயம்.     3.5.25
306    புறாக்கத் தும்பருந் துயவும்பா சடைத்தருப் பொரிய
மறாக்க திர்க்கதி ரவன்சுடு நெடுஞ்சுர வழியி
னுறாக்க டும்விசைக் குசைப்பரி கடிதிற்கொண் டோடிச்
சுறாக்கத் தென்பவன் களிப்பொடு மடுத்தனன் றொடர்ந்தான்    3.5.26
307    அடுத்த வெம்பகை வனைமனத் திடையதி சயித்துப்
படுத்த மண்டனை நோக்கியிப் பாதகன் பரியை
விடுத்தி டாவிழுங் காவகைக் குளம்பினை விசித்துப்
பிடித்தி டென்றனர் தூதென தீனிலை பிடித்தோர்.     3.5.27
308    ஈண்டு வல்லவன் றூதர்தந் திருமொழிக் கியைய
வேண்டு மல்லது வெறுத்திட லரிதென விரும்பித்
தூண்டி வந்தவன் பரியினாற் குளம்பையுஞ் சுருக்கிப்
பூண்ட ரங்கெனன் பிடித்தது கடனடுப் புடவி.     3.5.28
309    புதிய சித்திர மெனப்புரி நூலுடைக் குயவன்
கதையி னாற்சமைத் திடுபரி யென்னவுந் துணுக்காக்
குதியி லதுறை யாவளை முகங்குழை யாது
பதிய நின்றது கொடியவன் விடுநெடும் பரியே.    3.5.29
310    கடிய வெம்பரி நடந்தில வெனமனங் கனன்று
நெடிய மத்திதை விசைதர வங்கையி னிமிர
வடிய டித்தனன் காலினிற் புடைத்தன னனைய
கொடுமை யாற்றலை யசைத்தது நடந்தில குதிரை.     3.5.30
311    வேறு
தொலைதொடர்ந்தெய்த் திடுங்குணமோ கடுவிசையாற்
    குளம்புதுண்டப் பட்ட தோமெய்
    மலைதரவஞ் சனைவிளக்கு முகம்மதுசெய்
    வினைத்திறனோ மாய மியாதென்
    றுலைவுறுநெஞ் சினனாகிக் கவிழ்ந்துநோக்
    கலும்வேக மொடுங்க வாசி
    நிலைபடநாற் குளம்பையும்பூ தலம்புதையப்
    பிடித்திறுக்கி நெருக்கக் கண்டான்.     3.5.31
312    துரகதத்தின் பதத்தினைப்பூப் பிடித்திருப்ப
    தகுமதுதஞ் சூழ்ச்சி யாமென்
    றெரியுமனம் வெகுளாது முகமலர்ச்சி
    கொடுப்பவர்போ லினிது நோக்கி
    வரகருணைக் குரிசினும்மைத் தொடர்வதிலை
    யிகன்மறுத்து மக்க மீதிற்
    பரிவுடன்செல் குவன்புடவி விளைக்குமிடர்
    தவிர்த்திரெனப் பணிந்து சொன்னான்.     3.5.32
313    சத்தியமும் பொறையுமன நீங்காத
    நெறிதவறாத் தரும வேந்தும்
    புத்தமுத மொழுகுமறை விளைந்ததிரு
    வாய்மலர்ந்து புடவி நோக்கி
    யத்திரியின் றடைபடுத்தல் விடுத்தியென
    விடுத்திடமண் ணதிரத் தாவி
    யெத்திசையுந் தடவிவரு மருத்தென்னத்
    தாள்பெயர்த்திட் டெழுந்த தன்றே.     3.5.33
314    புன்மைகவர் வஞ்சகநெஞ் சினர்க்குமறை
    தினந்தோறும் புகட்டி னாலும்
    நன் மைபய வாரெனுஞ்சொற் பழமொழியைப்
    புதுக்குவன்போ னடுக்க நீங்கிக்
    கொன்னுனைவேல் கொடுதாக்கி முகம்மதினைக்
    தரைவீழ்த்திக் கொல்வே னென்ன
    வன்மைமனத் தொடும்புரவி தனைநடத்தி
    வெகுண்டுவந்தான் மதியி லானே.     3.5.34
315    சினந்துவெகுண் டடற்பரிகொண் டடர்பவனை
    முகம்மதுதந் திருக்க ணோக்கி
    மனந்தனிற்புன் முறுவலொடும் வெகுளாது
    முன்போல்வன் பரியின் றாளை
    யினம்பிடித்தி டெனவுரைப்பக் கொடியவன்ற
    னுயிர்பிடுங்கி யெடுத்து வாரிக்
    கனந்தனிலுட் படுத்தியுணும் படிமுழந்தா
    டெரியாமற் கவ்விற் றன்றே.     3.5.35
316    கள்ளமிகல் பழிபாவ மாறாத
    கொடியசுறாக் கத்தென் றோது
    முள்ளிரக்க மில்லாதான் முகம்மதுதந்
    திருப்பெயரை யுரைத்துக் கூவி
    விள்ளரிய குறைசெயினும் பொறுத்தளிப்ப
    துமதுமறை மேன்மை யன்றோ
    தள்ளரிய தடைவிடுத்தி ரிகலேனென்
    றகம்வேறாய்ச் சாற்றி னானால்.     3.5.36
317    இகலெடுத்து வருமுரைத் தவர்மறுத்தும்
    வணக்கமொழி யிசைத்தா ரென்னிற்
    புகலரிய பிழைபொறுத்தங் கவர்செயலுக்
    கியல்படுத்தல் புந்தி நேரென்
    றகமதனி லகுமதுதா நினைத்தவனி
    தனைநோக்கி யாடன் மாவின்
    றகைதவிர்த்தி டெனவுரைப்ப வெவர்க்குந்தெரி
    தரத்திரியத் தள்ளிற் றன்றே .     3.5.37
318    சுடரிடத்திற் பதங்கநினை வறியாது
    வருவதுபோற் சுறாக்கத் தென்போன்
    புடவிபரிப் பதம்பிடிக்கு முனம்வேகத்
    தொடுமடுத்துப் பொருவி லாத
    வடவரைபோற் புயமுகம்ம தினைச்செகுப்ப
    வேண்டுமென மனத்திற் றாங்கி
    கடிதினிற்கை வேல்கழற்றி யிமைக்குமுனம்
    வரநபியும் கண்ணுற் றாரால்.     3.5.38
319    எடுத்தகொலைத் தொழின்மறுப்பத் தடையிருபோ
    தடுப்பமனத் தினிலெண் ணாது
    தொடுத்தவன்றன் மனவலியும் வாள்வலியு
    மதிசயித்துத் தூயோன் றூத
    ரடுத்தபகை களைதரு மதீனநகர்க்
    கேகியபின் னாத லென்றாற்
    கடுத்திகலி யிவன்விளைக்கு மமரறிவ
    தென்கொலெனக் கருத்துட் கொண்டார்.     3.5.39
320    சிந்தையினில் வெருவலற முரணாடிப்
    பின்னுமெனைத் தெறுத றேறி
    வந்தனன்றன் வீரமுங்கோ ரமுநடுங்கப்
    பற்றெனவாய் மலர்ந்து கூறக்
    கந்துகத்தின் பதநான்கு மடிவயிறு
    மங்கவடிக் காலுங் கூட்டிக்
    குந்தியசை வறவமிழ்த்திப் பதித்ததென
    வசுந்தரைவாய்க் கொண்ட தன்றே.     3.5.40
321    தள்ளாத வருத்தமுடற் றேலாத
    பயமிதயத் தடத்த டாகங்
    கொள்ளாத நலிதலையந் துன்பமுடன்
    சூழ்ந்துகுடி கொண்டு தோன்ற
    விள்ளாத துணிவுமற மதமூக்க
    மிகனினைவு வெகுளி மானம்
    புள்ளாரும் வேல்வீர மனைத்துமதி
    மறப்பப்புறம் போய தன்றே.     3.5.41
322    பாடலத்தின் பதமுமத னகடுமவன்
    பரம்படுதப் படியுந் தோன்றா
    தீடுபடக் கவ்வ்யது நபியினுரை
    மறுத்தோரை யெரிமீக் கொண்டு
    சூடுபடு மழற்குழிவெவ் விடப்பாந்தட்
    பகுவாயின் றுளைப்பற் பூண
    வோடியற விழுங்குவதித் தரமெனச்சொல்
    வதுபோல வுணர்த்திற் றன்றே.     3.5.42
323    தலையசைத்து வால்வீசிப் புரவிபடும்
    பாடுமிரு தாளி னோவின்
    மலையமனம் வேறாகிக் கைவேலை
    நிலஞ்சேர்த்தி வாயங் காந்து
    சொலுமொழியீ தெனவறியா தடிக்கடிவாய்
    குழறிவிழி சுழல வாடி
    யுலையிலிடு மெழுகாகி யென்செய்வோ
    மிதற்கெனநின் றுருகி னானால்.     3.5.43
324    அபுஜகல்த னுரைதேறி நாற்றிசைக்கும்
    பரந்தவர்போ லாகா வண்ண
    மிவர்திசையிற் கொணர்ந்திடுக்கண் விளைத்ததுநம்
    விதிநோவ தென்கொல் மாயாச்
    சவிதரள வுருவெடுத்தோ ரிரங்கார்மே
    லிரங்கியுரை சாற்றி னாலும்
    புவிவிடுவ தலவிறுதி முடிந்ததெனப்
    பொருமலொடும் புலம்பி னானால்.     3.5.44
325    மனைமனைவி புதல்வர்பொரு ளவைநினைந்து
    கண்ணீர்வார்ந் தொழுகி யோட
    வினுமுகம்ம தினைப்பரவிக் கேட்கிலவ
    ரிரங்குவரென் றிதயந் தேறித்
    தனியவன்றன் றிருத்தூதே முகம்மதுவே
    பொறைக்கடலே தமியேன் கூற்றை
    யுனதுசெவிக் கிடவேண்டும் வேண்டுமென
    விரக்கமொடு முரைக்கின் றானால்.     3.5.45
326    என்போலுஞ் சிறியர்பெரும் பழியடுத்த
    குறைபிழையா யிரஞ்செய் தாலும்
    பொன்போலு மனப்பெரியோர் பொறுப்பரெனு
    மொழிதமியேன் புந்திக் கேற்ப
    நின்பாலிற் கண்டறிந்தேன் சிறியேனுய்
    திறத்தினொடிந் நிலத்தில் வாழ
    முன்போலுங் காத்தளித்தல் வேண்டுமது
    நினதுமறை முறைமைத் தாமால்.     3.5.46
327    உறுதியென மனத்திருத்தி யெனக்கிரங்கிப்
    புடவிவிடற் குரைசெய் தீரான்
    மறுமொழியில் லெனவகல்வே னினந்தேடி
    வருபவர்க்கு மறைத்துக் கூறி
    நெறியுடன் குரைத்துமணி மூதூர்கொண்
    டணைகுவனிர் ணயமீ தென்னைப்
    பெறுமவர்க டம்மாணை குபலாணை
    யுறுதியெனப் பிதற்றி னானால்.     3.5.47
328    நிற்குநிலை நில்லாது வசனமறுத்
    திருமுறைநிண் ணயமில் லேனா
    லெற்குரைக்க நாவிலையோர் நொடிப்போதி
    லிருதாளு மிறுமல் லாது
    பொற்பரியி னுயிருமென துயிருமழி
    வதுசரதம் பொருவி லாத
    நற்குணத்தீ ரழித்தலுங்காத் தளித்தலுநின்
    கிருபையென நவிற்றி னானால்.     3.5.48
329    கலங்கிவலி யிழந்துரைத்த மொழியனைத்துந்
    திரண்டுதிருக் காது ளோடி
    யிலங்கியநன் மறைததும்பு மனத்துறையக்
    குறைபோக்கி யிரக்க மூறி
    விலங்கினத்தின் றளையிவன்காற் றளைவிடுத்தி
    யெனவிபுலை விடுத்த லோடும்
    பிலங்கிடந்து பிறந்தெழுந்து வருபவர்போற்
    புரவியுடன் புறப்பட் டானால்.     3.5.49
330    வாசியுடன் முகம்மதுதாள் பணிந்துவரு
    நெறிமீட்டு மக்க நோக்கி
    யாசடுத்த திவணிவணென் றவ்வழியும்
    விலங்கிவிரைந் தகலுங் காலைப்
    பூசலிடத் தொடர்ந்துசிலர் வருபவர்க்கு
    நன்குரைத்துப் புறம்பு காமற்
    பாசமுற வுடன்கூட்டிப் பரிவொடும்போய்ப்
    புகுந்தனனப் பதியின் மன்னோ.     3.5.50

சுறாக்கதுத் தொடர்ந்த படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 5-க்குத் திருவிருத்தம்...330

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.06 உம்மி மகுபதுப் படலம் (331 - 356 )
331    காயும் வெஞ்சுரத் திடைதொடர்ந் தனன்மனங் கலங்கிப்
பாயும் வீரவெம் பரியுடன் வரும்வழி பார்த்துப்
போய பின்னபூ பக்கரு முகம்மதும் புளகித்
தேயி ழிந்தறி வுடன்றொழு தவிடம்விட் டெழுந்தார்.     3.6.1
332    கறையில் வெண்டிரை யுண்டவண் கவிகைமுன் னிழற்றக்
குறையு நீடருத் தளிர்த்தலர் நறவுகொப் பிளிப்பப்
பறவை யெங்கணுஞ் செழும்புகழ் பாடவொட் டகத்தின்
முறையி னேகின ரிறையரு ணிறைமுகம் மதுவே.     3.6.2
333    கரைகொ ழித்தவெண் வண்டலு நெடியகான் யாறுந்
திரைய லம்பிய குறுஞ்சுனை யிடங்களுஞ் செறிந்து
விரைகொண் முல்லையம் பந்தரும் விளைநறா வுடைந்து
சொரியுங் கொன்றையுந் தோன்றிடச் சென்றனர் தூயோர்.     3.6.3
334    வேயி சைத்தொனி யிருசெவி குளிர்தர வெருவாக்
காயும் வெஞ்சின வாரணம் பொருவகண் களிப்பத்
தோயும் வெண்டயிர் நறுநறை நாசிக டுளைப்பப்
பாய ரிக்குல மெனநெறி குறுகிடப் படர்ந்தார்.     3.6.4
335    நிறையுஞ் சாமையின் போர்க்குவை வரைகளை நிகர்ப்ப
வறையு முல்லையம் பறைகட லமலையை யவிப்பக்
குறைவில் பாலடு புகையிரு விசும்பெனக் குலவப்
பறழின் வாய்த்தொனி யிடையிறா திருந்ததோர் பாடி.     3.6.5
336    வந்த ரும்பெரு மொட்டக மிழிந்தபூ பக்க
ரெந்தை யீரிளைப் பாறிமற் றேகுவ மென்னப்
பந்த ரின்றியோர் புறம்வௌிப் படும்பழ மனையிற்
சிந்தை நேர்ந்தவ ணடைந்தனர் தெரிமறைச் செம்மல்.     3.6.6
337    அம்ம லோதிவெண் ணூலினிற் பிறங்கிட வழகார்
கொம்மை வெம்முலை தாழ்ந்தணி வயிற்றிடை குழைய
வம்மி னியாவரென் றொருமொழி வழங்கியங் கிருந்தா
ளும்மி மஃபதென் றிடும்பெயர் விருத்தைய ளொருத்தி.     3.6.7
338    ஆயர் தங்குல விருத்தையை விளித்துநின் னகத்துட்
போயெ மக்குண வுளதெனிற் றருகெனப் பொருந்தாக்
காயும் வன்கலிச் சாமமும் வறுமையுங் கலந்து
மாயு மில்லின ளருள்வதொன் றிலையென வகுத்தாள்.     3.6.8
339    திரைக்கு மெய்யினண் மனைப்புறஞ் செறிமயிர்க் கொறியொன்
றிரைக்கு நொந்தவ ணிருப்பக்கண் டிவ்வுரு மடியிற்
சுரக்கும் பாலிலை யோவென மகிழ்வொடுந் தூண்டி
யுரைக்க நந்நபி முகம்மதுக் கெதிரெடுத் துரைப்பாள்.     3.6.9
340    என்னி னும்முதிர்ந் தரும்பெரு நோயினா லிடைந்த
வன்ம லட்டது திரிவதற் குயிரிலா வரடு
தன்ம மில்லவண் மனையினிற் சார்ந்தநீ ரிசைத்த
லின்மை நோயினும் வலிதென வவசமுற் றிசைத்தான்.     3.6.10
341    விருத்தை யென்னுமத் தொறுவிசஞ் சலமொழி விளம்பக்
கருத்தி னூடுற விரங்கிமா நோயினிற் கசிந்து
வருத்த முற்றமை மலட்டினைக் கொணர்கென வலிதிற்
றிருத்தி மென்மெல முகம்மது திருமனம் விடுத்தாள்.     3.6.11
342    நிகரி லானருட் டூதுவர் நெடுங்கர நீட்டித்
தகைய மைமுது கிடத்தினிற் பயப்பயத் தடவப்
பகரு தற்கரி தாயிடந் தழைத்துடல் பருத்துப்
புகர றக்கொழுந் திளைமையிற் செழுமையும் பொதிந்த.     3.6.12
343    நிரைத்த செம்மயிர்க் குறங்குக ளகறர நிமிர்ந்து
விரித்த திற்றிரண் டடிவயி றுறமடி வீங்கிச்
சுரித்த சின்முலை நீண்டுவிம் மிதத்தொடுஞ் சுரந்து
புரைத்த லந்திறந் தமுதெழுந் தோடின புவியில்.     3.6.13
344    மூத்தி ருந்தவ டனைவிளித் துனதுகை முறையாய்
நாத்தி ருந்தநல் லமுதுகொள் கெனநபி நவில
வாய்த்தி ருந்தது பசிக்கென வெழுந்துதன் மனைக்குட்
பாத்தி ரந்தனை யெடுத்தனள் கறந்தனள் பாலை.     3.6.14
345    வரங்கொண் மைமுலை யினுமொழு கினவென மகிழ்வி
னரங்கி னுள்ளிருந் தெடுத்தபாத் திரமடங் கலினு
மிரங்கும் பால்கறந் தணியணி நிரப்பின ளினியென்
கரங்கள் சோர்ந்ததென் றிடைநிலஞ் சேர்த்தினள் கடைகால்.     3.6.15
346    அடுத்த கேளிருக் குரைத்தலு மவரவர் கரத்தி
னெடுத்த பாத்திரந் தொறுந்தொறுங் கறந்தனி தேகி
விடுத்த போதினு மொழுகிய சுரப்புமென் மேலுங்
கொடுத்து நின்றது முகம்மது காரணக் கொறியே.     3.6.16
347    வாய்ந்த மெல்லிடை யிடையர்தங் குலத்துறு மடவா
ளாய்ந்த வர்க்கிடர் விளைப்பவர் வளமெனு மடுப்பிற்
காய்ந்த பாலினை வடித்துவண் டாமரைக் கரத்தி
னீய்ந்து நின்றன ளருந்தினர் துணையொடு மிறசூல்.     3.6.17
348    இதந்த ரும்பெரும் புதுமையை யருணபி யிறசூல்
பதந்த னிற்பணிந் திருங்கலி மாமொழி பகர்ந்து
மதந்த ழீ இயிசு லாமினி லாயினாள் வணங்கி
நிதந்த ருந்தவத் தொழுகையின் முறைவழி நின்றாள்.     3.6.18
349    இன்று வந்திவ ணிருவர்க ளிருந்தனர் கிழவா
டொன்று கண்டனர் பாலுரு வாக்கின் ருலகிற்
பொன்றி லாப்புகழ் விளைத்தனர் புதுமைகொ லெனவே
நின்று நோக்கினர் பாடியிற் றொறுவர்க ணிறைந்தே.     3.6.19
350    தேயுஞ் சிற்றிடை மடந்தைய ளொருத்திதன் றிறத்தான்
மாய வன்குபிர் போக்கிநந் நபிவழி வழுத்திப்
பாய ரிக்கயல் விழிமட வாரொடும் பாடி
யாயர் தங்குலத் தவரிசு லாமினி லானார்.     3.6.20
351    அற்றைப் போதினின் மக்கமா நகரவ ரறியச்
சுற்றுங் காவதங் கேட்டிடக் கவிதையின் றொடராப்
பற்ற லார்குலங் கெடச்செழுந் தீனிலை படர
வெற்றி கொண்டொரு தொனிமுழங் கியதுவிண் ணிடத்தில்.     3.6.21
352    மரும லர்ப்பொழின் மதீனத்தி னேகுமவ் வழியி
லிருவர் வந்தொரு முல்லையம் பாடியி னிறங்கிப்
புரிவெண் ணூற்குழன் முதியவண் மனையிற்புக் கிருந்து
விரியுங் காரணப் புதுமைகள் பலபல விளைத்தார்.     3.6.22
353    கதிகொள் காரணங் கண்டுகண் களித்தவ ணிருந்தவ
பொதுவர் தங்குலத் தொடுமிசு லாமினிற் பொருந்தி
யதிவி தத்தொடுந் தீனிலைக் குரியவ ராகிப்
பதவி பெற்றுநற் செல்வமும் வளம்பெறப் படைத்தார்.     3.6.23
354    பலாப லன்றருந் தீனிலை மறுத்தவர் பலர்க்கும்
பலாய டைந்ததென் றிரும்பொருள் பிறந்திடும் வசனங்
குலாவும் வெங்குபிர்த் தலைவர்கள் செவியினிற் குறுகக்
கலா மதிக்கதி ரறுமிரு ளெனமுகங் கரிந்தார்.     3.6.24
355    அஞ்ச லின்றிவிண் ணதிர்ந்தெடு மொழியினை யாய்ந்த
விஞ்சை வல்லவர் தெரிதர முகம்மது விளைத்த
வஞ்சத் துட்படுஞ் சின்களி லொன்றென மதித்து
நஞ்சுண் மீனென வொடுங்கினர் மக்கமா நகரார்.     3.6.25
356    விம்மி தப்புயத் தாயர்க டிரண்டுமெய் மகிழ்ந்து
செம்ம லர்ப்பதந் தொழுதினி திறைஞ்சிடத் தெருண்ட
நம்மி னத்தினு முரியளென் றினியநன் மொழிக
ளும்மி மஃபதுக் கிசைத்தெழுந் தனர்மறை யுரவோர்.     3.6.26

உம்மி மகுபதுப் படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 6க்குத் திருவிருத்தம்...356

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.07 மதீனம் புக்க படலம் (357 -- 422 )
357     உதய மால்வரைப் பருதியை நிகர்ப்பவொட் டகத்தின்
விதிய வன்றிருத் தோழருந் துணைவரும் விரிபூ
வுதிருஞ் சோலையி னளியிசைத் திசைதிசை யோங்கும்
பொதுவர் முல்லையுங் குறிஞ்சியுங் கடந்தயல் போனார்.     3.7.1
358    மக்க மாநகர் விடுத்துநன் மதீனமா நகரம்
புக்கு தற்கிட மெனவரு நெறியினிற் புறத்தி
லொக்க லோடக ஹாபிக ளொவ்வொரு பெயரா
யக்கம் போக்கிப்பின் படைத்தவர் போலவந் தடுத்தார்.     3.7.2
359    பின்னு மோர்பகற் போக்கிய நெறியினிற் பிரியா
மின்னும் வெங்கதிர் வேலவர் நூற்றினு மேலார்
மன்னு மெய்யிடம் விடுத்தநல் லுயிரென வந்தார்
சொன்ன யம்பெறு முகம்மது மனக்களி துளங்க.     3.7.3
360    வான கத்துடுக் கணத்திடை நடுவெழு மதிபோற்
கான வேங்கைக ணடுவருங் கேசரி கடுப்பச்
சோனை மாமுகிற் கவிகைநுண் டுவலைக டூற்ற
நான மெத்திசை யினுங்கமழ் தரநபி நடந்தார்.     3.7.4
361    உகளும் வாளைகண் டனப்பெடை யொதுங்கும்வா விகளு
முகில டைந்துகண் படுத்தபைம் பொழில்களு முன்னிப்
புகைத வழ்ந்தவெண் மாளிகைப் புறம்பல செறிந்து
திகழும் பொன்னகர் மதீனமுந் தெரிதரச் சென்றார்.     3.7.5
362    வேறு
வடவரை பொருவன மலிந்த மேனிலைக்
கடலென வொலித்ததா வணத்தின் கம்பலைப்
புடவியை யளந்தன போன்ற வீதிக
ளிடனற நெருங்கின மாட மெங்குமே.     3.7.6
363    கலைவலார் மறையவர் கருத்தி லெண்ணிய
திலையெனா தரும்பொரு ளியாவு மெய்தலான்
மலைவிலா தருளிய வள்ளி யோரினுந்
தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர்.     3.7.7
364    தோரணத் தொடுங்கொடிக் காடு துன்னலால்
வாரண மதமலை மலிந்து நிற்றலாற்
காரணத் தொடும்வர வாறு காணலாற்
பூரணப் புவியெனப் பொலிந்த பொன்னகர்.     3.7.8
365    கதையொளி மேனிலை துலங்கித் தோன்றலாத்
புதுமலர்த் தெருத்தொறுஞ் சிந்திப் பொங்கலா
லெதிர்பணிந் திடுவிருந் தினிதி னல்கலால்
வதுவையின் மனையென விருந்த மாநகர்.     3.7.9
366    உறுபகை வறுமைநோ யோட வோட்டிமேற்
குறைவற மனுமுறைக் கோன டாத்திநீ
ணிறைதரு பெரும்புகழ் நிலைநி றுத்தியோர்
மறுவிலா தரசென விருந்த மாநகர்.     3.7.10
367    பொறிகளைந் தெனப்பவ மைந்தும் போக்கலாற்
குறியுட னொருநிலை கொண்டு மேவலா
னெறியுட னெங்கணும் வாய்மை நிற்றலா
லறிவரொத் திருந்ததவ் வணிகொண் மாநகர்.     3.7.11
368    தெண்டிரை யாரமும் பூணுஞ் சிந்தலால்
விண்டுபற் பலபல மொழிவி ளம்பலான்
மண்டிய வளந்தலை மயங்க லான்மது
வுண்டவ ரெனமதர்த் திருந்த வொண்ணகர்.     3.7.12
369    தானமு மொழுக்கமுந் தவமு மீகையு
மானமும் பூத்ததிண் மறனும் வெற்றியு
மூனமி லூஉக்கமு மொளிரக் காய்த்தநல்
தீனெனுஞ் செல்வமே பழுத்த சேணகர்.     3.7.13
370    அந்நகர் நாப்பணோ ரணிகொண் மேனிலைத்
தன்னிடத் திருந்தொரு காபிர் தன்மகன்
சென்னியை நீட்டியோர் திசையை நோக்கினான்
மன்னிய புயற்குடை வரவு கண்டனன்.     3.7.14
371    சூன்முகிற் கவிகையிற் பல்லர் சூழ்வர
மீனடு மதியென விளங்கித் தோன்றிய
தானவ னியாவனென் றுளத்திற் றானுணர்ந்
தீனமின் முகம்மதா மென்று தேறினான்.     3.7.15
372    மதினமண் ணிருந்துமுன் மார்க்க நிண்ணய
விதியினை யினத்தொடும் வெறுத்து வேறொரு
புதியநிண் ணயத்தினைப் பொருந்து மாந்தர்கா
ளிதமுறக் கேண்மினென் றெடுத்துச் சொல்லுவான்.     3.7.16
373    கறாவெனுந் திசையையோர் கடிகை நீங்கிலா
துறாதெதிர் சென்றுபார்த் துலையும் வீரர்கா
ளறாநெறி முகம்மதென் பவன்பல் பேருடன்
மறாதமைக் கவிகையின் வருகின் றானென்றான்.     3.7.17
374    மாதவ நபியிவண் வருகின் றாரெனத்
காதினிற் கேட்டலுங் களித்தன் சாரிகள்
சீதவொண் கவிகையின் றிசையை நோக்கியப்
பாதையி னிடமறப் பற்றி யேகினார்.     3.7.18
375    ஒருவருக் கொருவர்முன் னோடி யாவரும்
வருபவ ரிவ்வழி விரைவின் வம்மென
விருளறு மனத்தரா யெதிர்ந்து சென்னெறித்
திருநபி பதத்தினிற் சென்னி சேர்த்தினார்.     3.7.19
376    துன்னிய திரைக்கடற் றோழர் நாப்பணி
னந்நபி பதங்கனைப் போன்ற நாடிய
மன்னவர் களிப்பினா னோக்கு மாமுகப்
பொன்னிதழ்த் தாமரைக் காடு பூத்ததால்.     3.7.20
377    அல்லெனுங் குபிர்க்கச டறுத்து தீனெறி
யெல்லவ னெனவருந் தூத ரியாரையு
மல்லணி மார்புறத் தழுவி மான்மதத்
வில்லுமிழ் மேனியும் புயமும் வீங்கினார்.     3.7.21
378    இடரறுத் தடைந்தமு ஹாஜி ரீன்களு
மடலுறும் வேற்கையன் சாரி மார்களு
முடனுவந் தொருவருக் கொருவ ரவ்வயி
னிடனுறக் காந்தமு மிரும்பு மாயினார்.     3.7.22
379    வரிசிலைக் குரிசிலு மதீன மன்னருங்
கருதலர்ச் செகுக்கமு ஹாஜி ரீன்களுந்
தருவென வருமபூ பக்கர் தம்மொடு
மரியவ னருளொடும் புறப்பட் டார்களால்.     3.7.23
380    நீடியகற் றாவெனு மெல்லை நீங்கியோர்
பாடியுங் கடந்துதம் பரிச னத்தொடுங்
கூடிய பனீயமு றென்னுங் கூட்டத்தை
நாடியங் கொருநெறி நடந்து போயினார்.     3.7.24
381    வரிவராற் பகடுகள் வனச வாவியுஞ்
சொரிமதுச் சோலையுங் கதலிச் சூழலுந்
தெரிதரக் கண்டுசென் றின்பச் செல்வமே
தருகுபா வென்னுமத் தலத்தை நண்ணினார்.     3.7.25
382    ஆசிலா தவரொடும் றபீயு லவ்வலின்
மாசம்பன் னிரண்டினில் வதிந்த திங்களிற்
பாசமுற் றவரிடம் பரிந்து நந்நபி
வாசமுற் றுறைந்தனர் மகிழ்வின் மாட்சியால்.     3.7.26
383    ஏடவிழ் மாலையர் பலரு மேந்தலும்
பீடுபெற் றவ்விடத் திருப்பப் பெய்ம்முகி
லோடிய தெனநற வூற்றுந் தாருடை
யாடக வரைப்புயத் தலியும் வந்தனர்.     3.7.27
384    பண்டரு மறைப்பய காம்பர் மாமுகங்
கண்டனர் பதத்தினிற் கரங்க டேய்த்தனர்
விண்டன ராகுலம் வீறு மேன்மையுங்
கொண்டனர் மனத்தினுங் களிப்புக் கொள்ளவே.     3.7.28
385    திருப்பரு முயிருடற் சேர்ந்த தொத்தென
வரிப்புலி யலிதமை மார்பு றத்தழீ இ
யிருப்பமற் றவ்விடத் திருந்த மன்னரும்
பொருப்பெனும் புயங்களிற் பொருந்தப் புல்லினார்.     3.7.29
386    அவிரொளி முகம்மது மாவி போன்றவ
ரெவருமற் றின்புற விருந்தவ் வூரினிற்
சவிதரும் வெண்சுதை தயங்க வெங்கணுங்
கவினுறப் பள்ளியொன் றரிதிற் கட்டினார்.     3.7.30
387    ஆயவப் பள்ளியிற் றொழுதன் னோருட
னாயக நபிபதி னாலு நாளின்மேற்
றாயக மெனபனீ சாலி மென்னுமத்
தூயவ ரிருப்பிட மதனிற் றோன்றினார்.     3.7.31
388    பனியமு றென்பவர் வாழ்கு பாவுக்கும்
நனிபுகழ் மதீனமா நகர்க்கு நாப்பணி
னனைமலர் வாவிசூழ் றாத்தூ னாவெனப்
புனையெழிற் குடியிடைப் பொலிய வைகினார்.     3.7.32
389    தரைபுகழ் வலிபனீ சாலி மென்னுமப்
புரவலர் தலத்தினி லிருக்கும் போழ்தினி
லரிஹமு சாவும றாதி மாமறை
தெரியுது மானொடும் வந்து சேர்ந்தனர்.     3.7.33
390    தந்தைய ரெனும்ஹமு சாவுந் திண்புய
வெந்திற லுமறுது மானு மேயபின்
புந்தியிற் களித்திரு புயங்கள் வீங்கிடச்
சந்தணி மார்புறத் தழீஇயி னாரரோ.     3.7.34
392    மரைமல ரொடுமரை மலரை வைத்தெனச்
சரகணி முறையொடுந் தடக்கை தாங்கொடுத்
துரியபா றயிரொடு முணவு மீந்திடு
கரையிலா வுவகையங் களிப்பின் வைகினார்.     3.7.35
392    வேலிடுஞ் செழுங்கர வீர ராம்பனீ
சாலிமென் பவருறை தலத்தி னன்புற
நாலுநா ளிருந்துபி னவர்க்கு நன்கொடு
பாலினு மினியசொற் பயிற்றி னாரரோ.     3.7.36
393    அத்தலத் துறைந்துபி னடுத்த வெள்ளிநா
ளுத்தமத் தமரொடவ் வுறைந்த பேர்கட்கு
மித்தலத் தின்றுதொட் டீறு நாண்மட்டுங்
குத்துபா வெனநபி குறித்துக் காட்டினார்.     3.7.37
394    மாமுகிற் குடைநபி வகுத்த வாசகந்
தேமலர்ப் புயத்தவ ரியாருஞ் சிந்தித்துப்
பூமரு வண்டெனப் பொலிய நந்நபி
தோமில்வண் குத்துபாத் தொழுவித் தாரரோ.     3.7.38
395    தூயவன் றூதரென் றெவர்க்குஞ் சொன்னிறீ இத்
தேயமெங் கணும்பெருந் தீனை வித்திய
நாயக முகம்மது நாட்கொண் டவ்விடத்
தேயுயர் குத்துபா வியற்றி னாரரோ.     3.7.39
396    வெற்றிசேர் நால்வரும் வேந்தர் தம்மொடு
முற்றினி தோங்கியங் குறைந்த பேரொடு
மற்றைநா ளிருந்தவ ணகன்று பூம்பொழில்
சுற்றிய மதீனமா நகரிற் றோன்றினார்.     3.7.40
397    கதிரயி லேந்துமு ஹாஜி ரீன்களுஞ்
சதிபயில் புரவியன் சாரி மார்களு
முதிருந்தீன் தீனெனு முழக்க மார்த்தெழப்
புதியவன் றிருநபி புரத்திற் புக்கினார்.     3.7.41
398    வட்டவா னிழறர வந்த நந்நபி
யொட்டகை மேற்கயி றதனை யூரவர்
தொட்டனர் நெருங்கினர் சுமைகொண் டார்த்தனர்
விட்டில ரவரவர் விருப்பின் செய்கையால்.     3.7.42
399    பொன்மனை யிடத்தவர் பொங்கி யாவரு
மென்மனை யிடத்திற்கொண் டேகு வேனெனத்
தன்மனக் களிப்பினாற் சாற்றி வாகனத்
தின்மணிக் கயிற்றினை யீர்க்கின் றார்களால்.     3.7.43
400    வித்தக முகம்மதின் விருப்பின் மாட்சியாற்
றத்தமில் கொடுபுகச் சார்ந்த மன்னவ
ரத்தனை பெயரையு நோக்கி யத்திரி
சித்திர மெனத்தனி சிறந்து நின்றதால்.     3.7.44
401    கடுவிசைப் பரியுனுங் கடிய வேகமாய்க்
கொடுவருஞ் சோகினைக் கூண்டி யாவருந்
தொடுவதன் றெனக்கரந் தூண்டிப் பாசத்தை
விடும்விடு மெனநபி விளம்பி னாரரோ.     3.7.45
402    பிடிபடுங் கயிற்றினைப் பிடித்து நீவிர்கட்
டடைபடுத் திடிலது சார்ந்தி டாதுநம்
முடையநா யகன்றிரு வுளத்தி னுன்னியே
வடிவுறு மொட்டகம் வருவ தீண்டரோ.     3.7.46
403    கறங்கிய கடலெனக் களித்தி டாநகர்ப்
புறங்கிடந் துறையினு நடுவண் புக்கினு
நிறங்கிள ரொட்டக நினைவி னேர்வழி
யிறங்கிய விடத்தியா னிருப்ப னென்றனர்.     3.7.47
404    மாசிலா னருள்கொடு நடந்த வாகனப்
பாசமெற் குவிகரப் பதுமக் கொள்ளைகள்
காசில்வண் புகழ்நபி கழறுஞ் சொற்கதிர்
வீசிடச் சடுதியின் விரிந்து நின்றவால்.     3.7.48
405    கோதிலா தடர்ந்தெதிர் குவிந்த மன்னவர்
வீதியி னத்திரி விடுத்த பின்னெழிற்
சோதிமெய் துகள்படாத் தூத ரும்மரைப்
போதெனுஞ் செழுங்கரப் பூட்டு நீக்கினார்.     3.7.49
406    இடந்தனி னின்றவ ரியாரு மின்புற
வடந்தனை விடுத்தன ரென்று மாசிலா
நெடுந்தட வரையென நின்ற வொட்டக
நடந்தது தனியவ னருளை நாடியே.     3.7.50
407    சோதிமென் கொடியெனத் தோன்று மாமினா
மாதுல ராகிய பனீநஜ் ஜாறுகள்
காதர மறவருங் காணி யாகிய
பூதலத் திடைதனி பொருந்தி நின்றதே.     3.7.51
408    நின்றுநாற் றிசையினு நோக்கி நேரிலா
வென்றிகொண் மெய்யசை யாது மெல்லென
வொன்றிய தாளினை யொடுக்கி நீடருங்
குன்றென வுறைந்தவண் படுத்துக் கொண்டதே.     3.7.52
409    உறைந்தவொட் டகம்பின ரெழுந்தவ் வூரவர்
நிறைந்துநோக் கலுமெல நடந்து நீடொளி
குறைந்திலாத் தெருப்பல குறுகி நின்றது
மறைந்திடா தொருதலை வாயின் மேவியே.     3.7.53
410    கொடிமதிண் மாடவாய்க் குறுகிக் கோதற
நெடியவன் றூதரைச் சுமந்து நேரிலா
வடிவுற நின்றவொட் டகமவ் வாயிலின்
படியுறப் படுத்தது பலருங் காணவே,     3.7.54
411    கொய்யுளைப் பரியவர் குழுமிப் பின்வரக்
கையினிற் றரித்தவேற் காவ லோர்அபூ
அய்யுபு வாயிலிற் படுத்த வத்திரி
வையகம் புகழ்தர மறுத்தெ ழுந்ததே.     3.7.55
412    எழுந்தவொட் டகம்விரைந் தேகித் தேன்மழை
பொழிந்தென நபிசல வாத்துப் பொங்கவே
யழுந்திமெய் யுறமுதற் படுத்த வவ்வயி
னிழிந்திடும் படிபினும் படுத்தி ருந்ததே.     3.7.56
413    ஒடுங்கிடத் தாண்மடித் துறைந்த வொட்டக
நெடுங்கழுத் தின்கரிப் பின்றி நீட்டியே
யிடங்கொள்வாய் பிளந்துநா வெடுத்து நின்றவ
ரடங்கலுஞ் செவிக்கொளாக் கூப்பிட் டார்த்ததால்.     3.7.57
414    ஒட்டகைக் குரற்பொரு ளுணர்ந்து நந்நபி
வட்டவொண் டவிசின்மேல் வதிந்த மெல்லணை
விட்டிழிந் தரியதீன் விளக்கு மேன்மையி
னிட்டமுற் றவர்க்கெலா மெடுத்துக் கூறுவார்.     3.7.58
415    இன்றுதொட் டீறுநா ளளவு மென்னுயிர்க்
கொன்றிய நால்வரோ டுறைந்து தீனிலை
வென்றிகொண் டுறைவதித் தலமல் லாதுவே
றின்றுநம் மேலவ னிசைத்த மாற்றமே.     3.7.59
416    சடுதியி னொட்டகந் தரித்த நீணிலத்
திடுமதிண் மனையெமக் கியற்று நாண்மட்டு
மடுதிற லபூஅய்யூ பன்சாரி யாரகம்
விடுதியென் றெடுத்துரை விளம்பி னாரரோ.     3.7.60
417    முத்திரை முகம்மது மொழிந்து காட்டிய
வுத்தரஞ் செவிப்புகுந் துணர்வு விம்மவே
யித்தவ மெய்திய தெனக்கென் றன்னவர்
மத்தகக் கரியென மதர்ப்பு வீங்கினார்.     3.7.61
418    ஆதிதன் றிருவுளத் தாய வொட்டக
மோதிய மொழிவழி யுணர்ந்து நன்னெறி
வேதிய ருரைத்தனர் விதியி தென்னவே
மாதவ ரியாவரு மகிழ்வுற் ரார்களால்.     3.7.62
419    ஈரநன் மனத்துமு காஜி ரீன்களைக்
கார்நிழற் கவிகையார் கடிதிற் கூவியிவ்
வூரினி லவரவ ருறவின் றன்மையிற்
சார்பிட மெவணவண் சார்மி னென்றனர்.     3.7.63
420    மாமறை முறைதெரி மதீன மன்னரைத்
தாமதி யாதவர் சார்பிற் சார்கென
நாமவேன் முகம்மதாண் டுரைப்ப நன்கெனக்
கோமறு கிடந்தொறுங் குறுகி னார்களால்.     3.7.64
421    கவரறு புந்திமு ஹாஜி ரீன்களு
மவரவர் சார்பினிற் புகஅபீ அய்யூப்
திவளொளி மாளிகைத் திசையை நோக்கிநன்
னபிகளி னாயக நடந்து போயினார்.     3.7.65
422    படரொளி விரிதரப் பதியின் விதிவா
யிடனற நெருங்கிநின் றெவரும் வாழ்த்தவே
யடல்பெறும் வீர ரபூஅய் யூபெனும்
வடவரைப் புயத்தினர் மனைபுக் காரரோ.     3.7.66

மதீனம் புக்க படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 7-க்குத் திருவிருத்தம்...422

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.08 கபுகாபுப் படலம் (423 - 506 )
423     மாரியங் கவிகை வள்ளன் மதீனமா நக்ரம் புக்கிச்
சீரிய மறையின் றீஞ்சொற் செவ்வியோர்க் கினிதி னூட்டிக்
கூரிலைக் கதிர்வேற் செங்கைத் தீனவர் குழாங்கொண் டேத்த
வேரணி அபூஅய் யூபி னில்லிடத் திருக்கு நாளில்.     3.8.1
424    அறத்தினிற் புகுந்து வேதத் தறிவினிற் குடிகொண் டோங்குந்
திறத்தினர் அம்மா றென்னுஞ் சீயமற் றொருவ ரேனும்
பெறற்கரும் வடிவின் மிக்கோ ரிளவல்கைப் பிடித்து விண்ணோர்
புறத்தினிற் காவ லோம்பும் புண்ணியர் திருமுன் வந்தார்.     3.8.2
425    மந்தரப் புயமுஞ் சோதி வடிவுமேல் வளர்ந்து நீண்ட
சுந்தரக் கரமு மாறாச் சுடர்மதி முகமு நோக்கிச்
சிந்தையுட் களித்துத் துன்பத் திருக்கறத் திருக்குங் கையுங்
கந்தமென் பதத்திற் சேர்த்தித் கண்ணினீர் கலுழ நின்றான்.     3.8.3
426    பதத்தினி லிறைஞ்சித் தாழ்ந்து பணிந்துவாய் புதைத்துப் போற்றி
யிதத்தொடு சலாமுங் கூறி யினிதுனின் றவனை நோக்கி
யுதித்தெழும் பருதி யேய்ப்பா னுரைக்கரும் வடிவ னியாவன்
மதித்துரை யெனஅம் மாறு முகம்மதுக் கெதிர்ந்து சொல்வார்.     3.8.4
427    அடிமையிற் சிறியேன் வாழு மகத்தினி லிருந்து நுந்தங்
கடிமலர்ப் பதத்தைப் போற்றிக் கட்டுரைக் கலிமா வாழ்த்தி
நெடியவன் மறைநே ரின்சொ னிகழ்த்தினன் செவியிற் கேட்டுச்
சடுதியி னென்முன் றோன்றி விருப்பொடு சலாமுஞ் சொன்னார்.     3.8.5
428    அந்தமு முடிவு மில்லா வரியவர்க் குரிய தூதர்
வந்தமா வரவா றெல்லாம் வகுத்தெடுத் துரையா நின்றீர்
சந்திர வதன வள்ள றனைக்கண்ணாற் றெரிசித் துண்டோ
வெந்தைகேட் டிசைக்கு மாறோ யாதெடுத் தியம்பு மென்றார்.     3.8.6
429    புதியதோ ரழகு வாய்ந்த புரவல வேத வாய்மை
மதிவ லோர்க் கேவ லாளாய் மலரடி விளக்கி நாளுந்
துதிசெய்து பவங்க டீர்த்துத் தொல்வினைப் பகுதி யானற்
கதிபெறத் தினம றாது கண்டுகண் களித்தே னென்றேன்.     3.8.7
430    கண்டன னென்னு மாற்றஞ் செவிப்புக ஹபீபைத் தேடிக்
கொண்டுற நடந்த பொற்றா ளிதுகொலோ வென்னக் கூறி
முண்டக மலரின் வாய்ந்த முகத்தையென் றாளிற் சேர்த்திப்
பண்டருந் திருவாய் முத்திப் பற்பல்கான் மோந்து கொண்டார்.     3.8.8
431    காலினை விடுத்து மாறாக் காரணர் வடிவை நாளு
மாலுறப் பருகுங் கண்க ளிவையென மணிவாய் வைத்து
மேலுற முகந்து முத்தி மெய்மயிர் சிலிர்ப்பப் பூரித்
தோலவா ருதியை யொப்பா ருவந்தனைப் புகழ்ந்து நின்றார்.     3.8.9
432    நந்நபி பெயர்கேட் டுள்ளக் களிநனி பெருகா நின்றா
ரின்னவர் வரிசை மேலோ ரென்பதை யிதயத் தெண்ணிப்
பின்னொரு மொழிகொ டாம லிவர்கரம் பிடித்து வல்லே
பொன்னடி யடைந்தே னென்றார் சூழ்ச்சியும் பொறையு மிக்கார்.     3.8.10
433    இசைத்தநன் மொழிகேட் டந்த யிளவலை யினிது கூவித்
திசைத்தல மியாண்டி யாவன் சேயுனக் கிடுபே ரியாது
விசைத்திவ ணடைந்த வாறும் விளம்பெனக் குரிசில் கூற
நசைத்தடக் குணக்குன் றன்னா னினியன நவில லுற்றான்.     3.8.11
434    வானவ ரேவல் பூண மானிட வடிவாய் வந்த
தானவ அரசு செய்யத் தவமுயன் றழகு பெற்ற
கோனகர் மதீனத் துற்ற ஜ்ஊதர்கள் சூழூஉக்கொண் டேத்து
மீனமின் மறைகள் வல்ல பண்டித னெந்தை மன்னோ.     3.8.12
435    எந்தையு மாயும் பன்னா ளியற்றிய தவத்தால் வந்த
சந்ததி யென்ன வேறு தனையரில் லாது நாளும்
புந்தியி னுவகை கூரப் போற்றிநற் புராணந் தேர்ந்து
நந்தலில் கபுகா பென்னு நாமமு நவின்றிட் டாரால்.     3.8.13
436    உத்தமர் செல்வம் போன்று முளத்தணு மாசொன் றில்லாப்
பத்தியர் தவமே போன்றும் பகரரும் விசும்பிற் றோன்
சித்திர மதியம் போன்றுஞ் செவ்விய ரிருவ ராவி
வைத்ததோ ருடம்பு போன்று நாட்குநாள் வளர்த்திட் டாரால்.     3.8.14
437    பேதமை யகற்றிப் புந்திப் பெருக்கெடுத் தொழுகல் செய்யும்
வேதவா சகம்பு ராண காவிய விதிக ளியாவு
மோதென வோது வித்தென் னுளத்தினுக் கியைந்த தாகப்
போதரச் செய்து நின்றார் பொருவிலா வண்ணத் தன்றே.     3.8.15
438    முன்னவ ரோதும் வேத மூன்றினுந் தெரிந்த நூல்கள்
பன்னெறி ஞான நூல்க ளினையன பலவுந் தொக்க
மின்னவிர் பேழை நூற்றின் மேலுமுண் டருங்காப் பின்றி
யென்னுளம் பொருந்து நூன்மற் றெவையவை தெருள்பவன் மன்னோ     3.8.16
439    நாடொறுங் கருத்தீ தல்லால் வேறொரு நாட்ட மில்லேன்
வீடுறைந் தோர்நா ளோர்பால் விரிகதிர் மணியிற் செய்த
மோடுயர் பேழைப் பூட்டின் முத்திரை விடுத்து வல்லே
தேடினன் கண்ணிற் காணாச் செய்யுளின் விருப்பத் தன்றே.     3.8.17
440    அன்னவிற் பேழை யுட்க ணறையினா டகத்தின் வாய்ந்த
மின்னவிர் கிரணச் செப்பொன் றிருந்தமென் விரலாற் றீண்டி
யென்னிதென் றறிவோ மென்ன வெடுப்பமுத் திரைக டம்மாற்
பின்னரும் வைத்து மீண்டே தோவெனப் பேதுற் றேனால்.     3.8.18
441    சிந்தையி னையந் தோன்றித் தௌிவிலா தெம்மான் பாலின்
வந்துதாள் வழுத்தி யில்லின் வயங்குபொற் பேழை யின்க
ணெந்தையே யிருப்ப தென்னென் றியம்பினே னியம்ப லோடுஞ்
சந்ததி யென்னக் கூவி யன்பொடு சாற்று வானால்.     3.8.19
442    சொல்லிய கனகச் செப்பிற் சுடர்மணித் தொகுதி யேனு
மெல்லையி னிதிய மேனு மிழைபல வேனு மியாது
மொல்லைநீ யறியா வண்ண மொளித்ததென் றெள்ளல் வேண்டா
மல்லலம் புவியிற் செய்த தவத்தினால் வந்த மைந்த.     3.8.20
443    மாயமுங் கவடும் பொய்யு மறையெனத் திரட்டி முன்னா
ளாயதே வதத்தின் மார்க்கத் தறத்தினை வழுக்கிப் பேசுந்
தீயவ னொருவன் றோன்றித் தீனெனு மதமுண் டாகக்
காய்கதி ரவனைப் போற்பிற் காலத்தில் வருவ னென்றே.     3.8.21
444    அன்னவ னெறியான் மாந்தர்க் கடுபகை பெரிதுண் டாகு
மென்னமுற் பெரியோ ராய்ந்த வியன்மறை யதனுட் கண்டு
பன்னிநிச் சயித்துப் பேரும் புள்ளியும் பரிவிற் றீட்டும்
பொன்னின்முத் திரைநீ தீண்ட லன்றெனப் புகழ்ந்து சொன்னான்     3.8.22
445    பண்டைமுற் பெரியோர் தேர்ந்த பழமொழி வழக்க மியாவுங்
கண்டறிந் திடுத னன்றென் றெண்ணிய கருத்தி னானு
மீண்டுதந் தையர்சொன் மாற்ற லென்பதோர் வெறுப்பி னானு
மண்டுமை யங்க டம்மால் வைகினன் சிறிது நாளால்.     3.8.23
446    இவ்வண்ண நிகழுங் காலத் தெந்தைபே ரீந்தி னூறுங்
கவ்வையிற் பெரிது மாந்திக் கண்சிவந் திதயம் வேறாய்ச்
செவ்விதி னுணர்வு மாறித் தெரிந்துரை பகர்கி லாது
வெவ்விய சீற்ற மீக்கொண் டிருந்தனன் வெறியின் மன்னோ     3.8.24
447    வெறியினாற் றந்தை வைகும் வேளையி லீன்றா டானு
மறிகிலா வண்ணம் புக்கி யறைதிறந் தரும்பொற் செப்பைக்
குறியொடு மெடுத்து வல்லே கொண்டொரு புறத்திற் சார்ந்து
செறியுமுத் திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னோ.     3.8.25
448    பத்தியின் றந்தை கூறும் படிக்கொரு கடுதா சங்ஙன்
வைத்திருத் ததின்மே லோர்பால் வரியொன்றிற் கலிமா வென்னு
முத்தரம் பிறக்கத் தீட்டு மெழுத்தினை வாசித் தோர்ந்து
வித்தையும் வீடும் பெற்றோ மெனவிரு விழியிற் கொண்டேன்.     3.8.26
449    விரித்ததை நோக்கும் போழ்தின் விறனபி முகம்ம தென்னத்
திருத்திய பெயரும் வீறுஞ் சிறப்புமெய்ப் புதுமைப் பேறுங்
கருத்துறத் தௌிய வாசித் தனன்கடு தாசின் கண்ணே
யொருத்தருந் தெரியா வண்ண மொளியொன்று பிறந்த தன்றே.     3.8.27
450    பதிவுபெற் றிருக்குந் தாராக் கணத்தொளி பலவும் வெய்ய
கதிரவ னொளியுஞ் சோதியுக் கலைநிறைந் துவாவிற் றோன்று
மதியினல் லொளிவுந் தூண்டா வண்சுட ரொளிவுந் தோன்றும்
புதியபே ரொளிவுக் கேற்பப் பொருத்தினும் பொருந்தி டாதே.     3.8.28
451    கண்களும் வழுக்கிக் கூசிக் காரணப் பயமுள் ளூறிப்
பண்கெழுங் கலிமா வென்னும் பத்திவே ரிதயத் தூன்றித்
திண்கொளு மீமா னென்னுஞ் செழும்பயிர் தழைத்து நீண்ட
மண்கொளாப் பெரும்பே ராசை மனதுறப் படர்ந்த தன்றே.     3.8.29
452    தீனெனும் பெரும்பே ராசை மயக்கத்தாற் சிந்தை நேர்ந்து
வானவர் பரவும் வண்மை முகம்மதே முகம்ம தேயென்
றானநுந் திருநா மத்தை யடிக்கடி யுரையா நின்றே
னேனிவன் புலம்பற் றானென் றேங்கியாய் பதறி வந்தாள்.     3.8.30
453    மனப்பயம் பெருத்து வாடி மறுகுறு மனைக்கோர் மாற்றந்
தனைக்கொடுத் திலனியா னென்னச் சஞ்சலம் பெரிது முற்றி
யினத்துளா டவரைக் கூவ வென்பிழை விளைந்த தென்னக்
குனித்தவிற் றடக்கை வீரர் திடுக்கொடுங் கூண்டு வந்தார்.     3.8.31
454    ஏதெனு மறியே னிங்ங னிருந்தனன் புலம்பு கொண்டான்
மாதவ முடையீர் பித்தோ வஞ்சனைத் தொழிலோ சூழ்ந்த
தீதெவை குறிப்பு நோக்கிச் செப்புமென் றினைய கூறி
வாதையிற் பதைத்துச் சோர்ந்து கண்ணினீர் வடித்து நின்றா     3.8.32
455    அன்னையா குலத்தை நோக்கி யடுத்தவர் பலரு மேங்கி
யென்னையு நோக்கித் தாதை பாலிற்கொண் டேகு கின்றார்
முன்னனை மயக்கந் தீர்ந்து முகமலர்ந் திருந்தான் கண்டா
னின்னவை விளைந்த தென்னென் றிடைந்தெதி ரோடி வந்தா     3.8.33
456    திடுக்கொடும் பதறி யேங்கிச் செங்கையாற் றழுவி வாய்விண்
டடிக்கடி யைய னேயெ னையனே யென்னக் கூவி
வடிக்கண்ணீர் பணித்து நிற்கு மாதையு நோக்கிச் சூழ்வீ
ரிடுக்கணே தென்னக் கேட்ப யாதொன்று மறியே மென்றார்.     3.8.34
457    எனக்குமுன் னிருந்து தாதை யிருகணீ ரொழுகப் பார்த்தின்
றுனக்குறும் வரவா றென்னோ டுரையென வுரைப்பப் பின்னர்
கனக்கருங் கவிகை வள்ளல் நும்பெயர் கருத்து ணாட்டி
மனைக்கணி னிருந்தோர்க் கெல்லாந் தெரிதர வகுக்க லுற்றேன்     3.8.35
458    தெறுகொலைப் பவங்க ளியாவுஞ் சிதைத்துநற் கதியிற் சேர்க்கு
முறுபொருட் டந்தை தாய ருயிரெனு மனைவி கேளிர்
பெறுமனைக் குரிய மக்கள் பெறுவதற் குரைத்துக் காட்டா
ரிறுதியி னொழியாத் துன்பத் தெரிநர கிடையின் வீழ்வார்     3.8.36
459    அரியபொன் மணிபூ ணாடை யாதியா மற்று முள்ள
பொருள்பல வெனினு மியார்க்கும் வழங்குதல் பொதுமை யன்றோ
வொருதிரு மொழியால் வாழு முலகென்றா லதனைத் தோன்றா
திருள்பட மறைத்தல் கல்லாப் புல்லர்க்கு மிழிவ தமால்.     3.8.37
460    போதமுந் தரும நேர்ந்த புந்தியும் புகழின் பேறும்
வேதமுங் கலையும் ஞான விளக்கமு மனுவி னூலுங்
காதலிற் பயந்த மைந்தர் கருத்தினிற் சிறப்பச் செய்தல்
தாதையர் கடனே யன்றிக் கரப்பது தகைமைத் தன்றே.     3.8.38
461    என்னுளத் தவிசின் வாழு மிறையவன் றூதை யன்றோர்
நன்னிலைக் கலிமாத் தன்னை நாட்டியோர் செப்பின் வைத்தென்
றன்னையு நோக்கா வண்ணந் தடுத்தனை யையா வேறு
பன்னுவ தென்கொல் பன்னிற் பழுதன்றிப் பயனு மின்றே.     3.8.39
462    சேணுல கிருந்து வாழச் செயுநபி திருநா மத்தைக்
காணுதற் கரிதா வைத்த காரண மதனா லுள்ள
நாணிநின் வதன நோக்க நடுங்கின னன்றி வேறு
பூணுவ திலையென் னையா வென்றிவை புகன்றிட் டேனால்.     3.8.40
463    அறிவினா லுரைத்த சொல்லென் னையற்கு வேம்பாய்க் கண்கள்
சிறுபொறி தெறிப்பச் சேந்து கனலெழக் சீற்ற மீக்கொண்
டுறுமொழி யுரைத்தா னல்ல னுரவர்க ணகைக்க மாறா
வெறிமருட் கொண்டா ரென்னச் சேயெனும் வேட்கை தீர்ந்தான்     3.8.41
464    முகம்மதென் னுஞ்சொ னாவின் மொழிந்திட லென்னப் பேசி
யகமுகங் கைகா னோக்கா தலக்கழித் தடித்து வீழ்த்திப்
பகையருஞ் செவியிற் கொள்ளா வசைமொழி பலவுஞ் சாற்றிச்
சகியிலா தடர்ந்து நின்றா னனற்பொறி தவழுங் கண்ணான்.     3.8.42
465    தாக்குவன் வருவன் போவன் றடக்கைக ளிரண்டுங் கொட்டி
மூக்கினிற் சேர்ப்பன் வெள்ளை முறுவலி னிதழைத் துண்ட
மாக்கிடக் கறிப்ப னின்ற னாவியைக் கசக்கி வீணிற்
போக்குவ னென்னச் சீறிப் புழுங்குவ னழுங்கு வானே.     3.8.43
466    உறுக்குவ னசாவை நீட்டி யோங்குவ னுடலை யின்னே
நொறுக்குவன் காண்டி யென்ன நொடியினிற் பலகான் மீசை
முறுக்குவ னங்கை வாளான் மோதுவ னென்றே யாடை
யிறுக்குவன் கடுப்பன் கோபித் தெழுவன்மற் றிருப்பன் மன்னோ.     3.8.44
467    அருந்தவ மியற்றிப் பெற்றென் னகத்தினு ளிருத்தி மேனி
வருந்திடா வண்ணம் போற்றி வளர்த்தனன் றாதை மாற்றம்
பொருந்திடா தழித்து மாய முகம்மதைப் புகழ்ந்தோன் பாரி
லிருந்தென்கொ லிறந்தா லென்கொ லென்றெனை யிகழ்ந்து சொன்னான்.     3.8.45
468    ஒடிந்தவன் மாறு கைகொண் டுதிரங்க ளொழுக வீசி
யடித்ததற் கடியேன் மேனி யசைந்தில கொடுஞ்சொற் கூறிக்
கடுத்ததற் கொல்கி நெஞ்சங் கலங்கில கருத்து ளாரப்
படித்தது கலிமா நாவிற் பகர்ந்ததும் நாம மையா.     3.8.46
469    பொற்புட னுமது நாமம் புகல்வதே யெற்கு வேலைப்
பற்பக றாதைக் கென்னை பங்கமே படுத்த வேலை
யற்பக லீன்றாள் கண்ணி னருவிநீர் சொரிய வேலை
யிற்புறத் திருந்தோ ரியாரு மிரங்கவே வேலை யெந்தாய்.     3.8.47
470    இனையன கண்டோர் கேட்டோ ரெந்தையை நோக்கி மக்கள்
குனிதரக் கண்ணாற் கையாற் கோபித்து விடுத லன்றித்
தினமிது தொழிலோ நல்லோர் செவிக்கிது தகுமோ நுந்த
மனவெகு ளியையு மாற்றித் தண்டனை மறுத்தி டென்றார்.     3.8.48
471    மரபினுக் குரியீர் நந்த மார்க்கநன் னெறியை மாறிக்
குருமுகம் மதுவென் றீமான் கொண்டென னதனை யின்னே
தெரிதரத் தவுபாச் செய்தாற் றீவினை மறுப்பே னல்லா
லெரிதர விவன்ற னாவி யேற்றுவன் விசும்பி லென்றான்.     3.8.49
472    பண்டைநின் னெறியை மாறி நின்றபா விகளைச் செய்யாத்
தண்டனை படுத்தலி யார்க்குந் தகைமையென் றிதயத் தெண்ணி
விண்டவர்க் குரைகொ டாமன் மேலவ ரென்னைக் கூவிக்
கண்டிதத் தொடுமன் போடுஞ் சிலமொழி கழற லுற்றார்.     3.8.50
473    தந்தைமுன் னவர்கள் கொண்ட நெறிமுறை தவிர வேதம்
வந்ததென் றொருவன் மக்கா புரத்தினின் மாற தாக
நிந்தனை பெற்றா னன்னோன் பெயரினை நினைவிற் கொண்டாய்
புந்திய தன்று நுந்தங் குலத்துக்கும் புகழ தன்றே.     3.8.51
474    மதிக்குநல் லறமுண் டாதன் மானிட ராகிச் செம்பொற்
பதிக்குறுங் கதிபே றெய்தல் பாரினிற் றந்தை யென்போன்
விதித்தசொற் கடவா தன்றி வேறுமந் திரமு முண்டோ
வுதிக்குநின் னுள்ளத் துள்ளும் பெயரினை யொழித்தல் வேண்டும்     3.8.52
475    உறைந்தவிப் பதியுள் ளோர்க்கு முறுமறை தெரிந்த பேர்க்குந்
திறந்துரைத் திடுத றீது தாதைதன் செவிக்குந் தீதாய்ப்
பிறந்தோர் மொழியை நீயோர் பொருளெனப் பிதற்ற றேறா
நிறைந்திலா வயதுக் கொத்த புந்திநீ நினைத்த தென்றார்.     3.8.53
476    அன்னையுட் டுயர நீங்க வையர்தன் வெகுளி மாறத்
துன்னிய கிளைஞர் நெஞ்சத் துன்புறா தமைய நாளு
மென்னையுங் காப்பர் போல வெடுத்தவர் கொடுத்த மாற்றந்
தன்னையுள் ளுணர்ந்தி யானுஞ் சிலமொழி சாற்று வேனால்.     3.8.54
477    மண்ணகத் தடியுந் தோன்றா மான்மத நறையு மாறா
விண்முகிற் கவிகை நீங்கா மெய்யொளி யிருளின் மாயா
நண்ணுமிப் புதுமை யெல்லா முகம்மது நபிக்கல் லாதே
யெண்ணிலா மக்க ளியாக்கை யெடுத்தவ ரியார்க்கு மின்றே.     3.8.55
478    வாரணத் தரசர்க் கேற்ப வருமமா வாசைப் போதிற்
பூரண மதியந் தோன்றி முகம்மதைப் புகழ்ந்து நுந்த
மாரணக் கலிமா யானு மறைந்தனென் றுரைத்துப் போமாற்
பாரினி லைய மெய்தப் படுவதென் பகரு வீரே.     3.8.56
478    இறுதியில் புறுக்கான் வேதத் தின்வழி சுவன வாழ்வு
பெறுவரென் றாதி வேத மூன்றினும் பேசித் தென்றான்
மறுமொழி யோது வேனென் றியாவர்வாய் திறக்க வல்லா
ருறுதியைத் தவிர்தல் செய்த லுலகினுக் கிழிவ தாமால்.     3.8.57
479    ஈதெலா மறிந்து மென்ற னிதயம்வே றாகி னுந்தம்
போதனைக் கடங்கே னாவி பொன்றினுந் தாதைக் கேற்பச்
சூதரு முடன்று செய்யாத் துன்பமே செய்யக் சொன்மின்
வேதமு முணர்ந்து நீதி விளக்குதற் கமைந்து நின்றீர்.     3.8.58
480    மறுவிலா வேத நூலின் முகம்மதின் கலிமா வோதிப்
பெறுகதி பெறுவ தல்லாற் பேசுநும் மாற்றந் தன்னா
லிறுதியி னரக வாதி யெனும்பெய ரெடுப்ப தின்றென்
றறுதியின் மொழிந்து நின்றே னாதிதன் றூதின் மிக்கோய்.     3.8.59
481    பன்னிய மொழிகள் கேட்டி யாவரு நகைத்துப் பாவி
சொன்னவை யறியா னூழிற் சூழ்விதித் துன்ப மாற்ற
மன்னவ ருளரோ வென்ன வருமமுற் றெனது தாதை
தன்னகம் பொருந்த வேறு சூழ்ச்சியிற் சாற்று வாரால்.     3.8.60
482    புதுநறைக் கனிபா றேனெய் நாடொறும் பொசித்துத் தின்ப
ததிமது ரங்க ளியாவும் பசியின்றி யயின்ற தாலுங்
கதிர்விரி மணிபொன் னாடை பூண்டுகண் களித்த தாலு
மதிவலோய் பெரிது போற்றி வைத்துநீ வளர்க்க லாலும்.     3.8.61
483    மீறிய செல்வந் தன்னால் வெறிமதம் பெருத்து மேன்மே
லூறிய நினைவு போக்கி யுணர்வழிந் தொடுங்கா நின்று
மாறுகொண் டிசையா மாற்றம் வைகலும் பிதற்று கின்றான்
சீறுத றவிர்ந்திக் கோட்டிக் கேற்பவை செய்தல் வேண்டும்.     3.8.62
485    கரியகம் பளத்தைப் போர்த்து வீக்கிய கலைக ணீத்தோ
ரிருடரு மனையி லாக்கி யாவரு முகங்கொ டாமற்
பொருதரு முவர்நீ ரோடு கசந்தபோ சனமு மாக
வொருபிடி மூன்று நாளைக் கொருதர மளித்தல் வேண்டும்.     3.8.63
486    இத்தொழி லியற்று வீரே லிடும்பெனு மதத்தால் வந்த
பித்தமும் பிதற்று நீங்கும் பிறிதொரு தீங்கும வாரா
துத்தம மிவைகொ லென்ன வுரைத்தவர் பலரும் போனா
ரத்தனு மனத்துட் கொண்டா னனையுமொத் திருந்தா ளன்றே.     3.8.64
487    அடுத்தநா ளோர்பாழ் வீட்டி லடைத்துக்கம் பளத்தான் மூடி
யெடுத்துவர் நீருங் கைப்பி னியைந்தபோ சனமு மாகக்
கொடுத்தனர் மூன்று நாளைக் கொருதரங் கொள்க வென்ன
முடித்தன ரீன்றார் கேளிர் குழுவுடன் மொழிந்த வாற்றால்.     3.8.65
488    உய்த்திட மூன்று நாளைக் கொருதர மிருளி னென்பால்
வைத்திடு முணவிற் சற்றே தீண்டிவாய் பெய்தே னாவும்
பத்தியி னெயிறு முள்ளுங் கண்டமும் படர்ந்து வேம்பின்
கைத்தது கூறக் கேட்டோர் செவியினுங் கசக்கு மன்னோ.     3.8.66
489    காசினி யிடத்தி னந்தக் கசப்பன்றித் கசப்பு மில்லை
யோசைமாக் கடனீர் வைத்த வுப்புநீர்க் குவமை யென்ன
வாசினற் பசிமீக் கொண்டு மருந்திடப் பொருந்தி டாமன்
மாசுறு மிருளிற் றன்னந் தனியொடும் வருந்தி னேனால்.     3.8.67
490    இருளடை மனையின் முன்ன ரிருந்தபா ளிதத்தை யேந்திப்
பரிவினல் லமுத மாகத் தருகெனப் பணிந்து நீங்கா
வரிசைநந் நபியே நும்பேர் பற்பல்கால் வழுத்தி வாழ்த்தி
யரிதினிற் கலிமா வோதி யங்கையா லருந்தி னேனால்.     3.8.68
491    வானகத் தமுத மென்பால் வந்ததோ மதுர மூறித்
தேனினு மினிதாய் வாசந் திகழ்ந்தன வுவர் நீராலைப்
பானமும் பொருவா வண்ண முருசிக்கும் படிக்கும் வாய்ந்த
தானமு முண்ண வுண்ணப் பொலிந்தன தமியிற் கன்றே.     3.8.69
492    ஒருபிடி யமுத முட்கொண் டுவரிழி நீரும் வாயாற்
பருகிடி னிரப்ப மாகிப் பத்துநாட் பசித்தி டாது
பிரிவிலிவ் வண்ணஞ் சின்னா ளுண்டுமெய் பெரிது பூரித்
தருளொடு மிருந்தேன் றாதை விடுஞ்சிறை யறையி லன்றே.     3.8.70
493    திருந்திலா மதப்பித் தின்னந் தீர்ந்ததோ விலையோ வென்னக்
கரந்தொரு பானின் றென்னை நோக்கினன் ஹபீபே நும்பேர்
வருந்திலா துரைப்பத் தாதை முன்னின்மும் மடங்கா யார்க்கு
மருந்திடாக் கசப்பு முப்பு மளித்தனன் மேலு மன்றே.     3.8.71
494    கொடிதெனு முப்புங் கைப்புங் குவலயத் தினிலில் லாத
வடிநறா வமுத மாக வினிதுண்டு வருமந் நாளி
லடிகணா மதீனா மூதூர்க் கெழுந்தரு ளுவதா மாற்றஞ்
சடுதியி னெந்தை கேட்டுச் சாலையின் வந்து புக்கான்.     3.8.72
495    காலினில் விலங்குஞ் சேந்த கையினிற் றளையும் பூட்டிச்
சாலையை விடுத்துக் காலித் தொறுவர்கைச் சாட்டி நுந்தம்
பாலினிற் கொடுபோ யேற்ற வேலையுட் படுத்து மென்னக்
கோலிய வெகுளி யோடுங் கொடுத்தன னென்னை யன்றே.     3.8.73
496    இட்டகாற் றளையி னோடு மெண்பதின் காவ தத்தின்
மட்டெனைக் கொடுபோய்க் காலித் தொழுவினோர் மருங்கிர் சேர்த்து
விட்டிடா வண்ண மாறா வேலைகள் பலவுஞ் சாட்டிக்
கட்டளை யாக வைத்தார் பசுத்தொழுக் காவ லோரே.     3.8.74
497    கரத்தினிற் றாளிற் பூட்டுந் தளைவிடுத் திலர்கண் ணாரா
வருத்தமீ தென்று நோக்கார் வயிறள வுணவு மீயார்
பொருந்திடாத் தொழில்க ளெல்லாம் பூட்டுவர் தாதை யென்பா
லிருத்திய வெகுளி மாறாக் கொடுமைக்கெண் மடங்கு செய்தார்.     3.8.75
498    தொல்லைமுன் விதியாற் றோன்றுந் துன்பங்கள் விடுத்து நீங்கு
மெல்லைய தன்றி நீங்கா தென்பதை மனத்தி லெண்ணி
முல்லையம் பாடி யோர்க்கு முறைமுறைத் தொழும்ப னாகி
யல்லலுற் றுறைந்தேன் பன்னா ளருளடை கிடக்குங் கண்ணாய்.     3.8.76
499    அடிமையின் றொழில்செய் தங்ங னிருந்தன னருக்க னோடிக்
குடதிசை புகத்தி காந்தக் குலவரை தொடுத்து விண்ணும்
படியுந்தோன் றாத வண்ணம் விடம்பரந் தென்ன மூடி
யிடியொடு மழையு மின்னுந் தோன்றிட விருண்ட மேகம்.     3.8.77
500    அந்தவல் லிருளின் கண்ணே யையநுந் திருநா மத்தைப்
புந்தியி னினைத்துக் காண்ப தென்றெனப் பொருமி வாடி
நொந்திருந் தழுதேன் பூட்டுந் தளையெல்லாம் நுறுங்கி நூறாய்ச்
சிந்தின மனத்திற் கூண்ட துன்பமுஞ் சிதறிற் றன்றே.     3.8.78
501    என்னிரு விழியி னுள்ளார்ந் திருந்தநன் மணியே தேற்றத்
துன்னிநுந் திசையை நாடி நடப்பமென் றுள்ளத் தெண்ணிப்
பன்னிய புவியி னெட்டிப் பத்தடி நடந்தே னிப்பான்
மன்னவ னெனும்அம் மாறு தலைக்கடை வாயில் வந்தேன்.     3.8.79
502    மாதவ னெனும்அம் மாறு மதிமுகங் கண்டே னாளுங்
காதலித் திருந்த நெஞ்சுங் கண்களுங் களிப்ப நுந்தம்
பாதபங் கயத்தைக் கண்டேன் பருவர றவிரக் கண்டேன்
றீதறும் பெரும்பே ரின்பச் செல்வமுங் கண்டே னென்றான்.     3.8.80
503    செவ்வியன் கபுகா பென்னுஞ் செம்மல்சொல் லனைத்துங் கேட்டு
நவ்விமுன் னவின்ற தூதும் நகைமுக மலர வான்மட்
டெவ்விடத் தினுங்கு லாவு மிருஞ்சிறை யொடுக்கி நீண்ட
குவ்விடத் தினிதின் வந்தார் ஜிபுறயீ லென்னுங் கொண்டல்.     3.8.81
504    ஒல்லையி னிழிந்த னாதி யோதிய சலாமுங் கூறிச்
செல்லுலாங் கவிகை வள்ளற் சீதசெம் முகத்தை நோக்கி
யல்லலில் கபுகா பென்னு மன்பருக் குற்ற பேறை
மல்லலம் புவனம் போற்றும் வானவர்க் கரசர் சொல்வார்.     3.8.82
505    உலகிடத் தினில்அய் யூபென் றோதிய நபியு மெண்ணெண்
கலைதெரி கபுகா பென்னுங் காளையுஞ் சமான மாக
நிலைபெற வமைத்தே னென்ன விறையவ னிகழ்த்தி னானென்
றிலகிய வள்ளற் கோதி ஜிபுறயீ லேகி னாரால்.     3.8.83
506    விண்ணவர்க் கரசர் கூறு மெய்மொழி யெவர்க்குங் கூறிக்
கண்ணெனுங் கபுகா பென்னுங் காளையைத் தழுவிப் போற்றி
நண்ணிமுன் கொணர்ந்து விட்ட நாயகர் தமையும் வாழ்த்தி
மண்ணினுக் கழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்தி ருந்தார்.     3.8.84

கபுகாபுப் படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 8க்குத் திருவிருத்தம்...506
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.09 விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் (507 - 521 )
507     மதிமுகம் மதுதா யாமினாக் குரிய
    மாதுலர் பனீநச்சா றுகளின்
    முதியரை யழைத்திந் நிலம்விலைப் படுத்தித்
    தருகென மொழிதலு மெவர்க்கும்
    புதியவ னெமக்கு விலைகொடுத் தருள்வ
    னும்மிடம் பொருள்கொளோ மென்ன
    விதமொடு முரைப்ப வவர்தமக் கெதிரி
    னபூபக்க ரினிதெடுத் துரைப்பார்.     3.9.1
508    மற்புய வரிசை முகம்மது நயினார்
    வாழுமா ளிகைநிலம் விலையா
    நிற்சயித் திடலே கருமமென் றுரைப்ப
    யாவரும் விலைநிசப் படுத்தி
    விற்பிறழ் கனகக் காசுபத் தென்னப்
    பொருந்தலும் விறலபூ பக்க
    ரற்புட னெடுத்தங் கவர்கரத் தளித்தா
    ரவர்களு நிலமளித் தனரால்.     3.9.2
509    தங்கமோ ரீரைந் தளித்தபூ பக்கர்
    வாங்கிய தலத்தினை யினிதின்
    கொங்கிருந் துலவு முகம்மது நபிக்குக்
    கொடுத்தன ரந்நிலத் திடத்தின்
    மங்குறோய்ந் திலங்கும் பள்ளியு மனையும்
    வகுத்தெடுத் தியற்றிட வருளிச்
    சிங்கவே றனைய அபூஅய்யூப் மனையி
    னிருந்தனர் குருநெறிச் செம்மல்.     3.9.3
510    செழுமறைக் குரிசி லிருக்குமந் நாளிற்
    றிறல்அபூ அய்யூபை விளித்துப்
    பழுதுறும் பசிதீ ருணவுள தெனிலிங்
    கருள்கெனப் பணித்திடப் பரிவி
    னெழுதரும் வடிவோ யிருவருக் குளதிவ்
    வுணவென வெடுத்தளித் திடலு
    மழையெனத் தருஞ்செங் கரத்தினில் வாங்கி
    வைத்தொரு மொழிபகர்ந் திடுவார்.     3.9.4
511    இப்பெரும் பதியின் றலைவரிற் சிறந்த
    வியன்மறைப் பெரியவர்த் தெரிந்து
    முப்பது பெயரை யழைத்திவண் வருக
    வெனமுக மலர்ந்தினி தேகி
    யொப்பருந் திறனுந் தலைமையுஞ் சிறந்தோ
    ருவரிவ ரவரென வோடிச்
    செப்பருங் குணத்தா லழைத்துமுன் விடுத்தார்
    செழுமழைக் கவிகையர் திருமுன்.     3.9.5
512    மருமலர்ப் புயத்தா ரழைத்துமுன் விடுத்த
    மன்னரை யுபசரித் திருத்தி
    யிருவருக் கிருந்த வுணவினை யளித்தி
    யாவரு மயின்றிடு மென்ன
    வொருமொழி யன்புற் றியனபி யுரைப்ப
    வொருவருக் கொருவருண் மகிழ்வுற்
    றரியசெங் கரத்தாற் றிருவயி றார
    வனைவரு மமுதுசெய் தனரால்.     3.9.6
513    உண்டிரு வருக்கிவ் வமுதென விருந்தோ
    மூரவர் முப்பது பெயருங்
    கொண்டிட வமுதுங் குறைந்தில விவர்தங்
    குறிப்பினை யெவர்வகுத் துரைப்பார்
    கண்டிடாப் புதுமை புதுமையீ தென்ன
    யாவரு மொருப்படக் கலிமா
    விண்டன ரீமான் கொண்டசு ஹாபி
    மார்களாய் வீடுபெற் றனரால்.     3.9.7
514    முன்னரி னமுது குறைந்தில வளர்ந்த
    முப்பது பெயரினுக் கிரட்டி
    மன்னரை யினங்கொண் டிவன்வரு கென்ன
    வழங்கலு மன்னவ ரெழுந்து
    சொன்னவப் படியே யழைத்துமுன் விடுத்தார்
    தோன்றலு மகிழ்வுட னிருத்தி
    யன்னவர்க் களித்த வதிசயஞ் சிறப்ப
    வன்புட னினிதெடுத் தளித்தார்.     3.9.8
515    நீண்டசெங் கரத்தா லுவந்தெடுத் தருந்தி
    நிறைந்தது வயிறென்பர் சிலர்கை
    பூண்டது மதுரம் விடுத்தில வெனவுண்
    டுதரங்கள் பொருமினர் சிலர்மேல்
    வேண்டும்வேண் டாதென் றிருவிலாப் புறமும்
    வீங்கிட வருந்தினர் சிலர்பாற்
    கூண்டவ ரெவரும் பொசித்திட முனம்போ
    லிருந்தது குறைந்தில வமுதம்.     3.9.9
516    சிறியபாத் திரத்தி னிருந்தபோ னகநுந்
    திருக்கையாற் றீண்டிடப் பெருகி
    யறுபது பேரும் பொசித்தன மின்னு
    மளவினிற் குறைந்தில புதுமை
    பெறுவதிங் கினிமே லியாதுள வுமது
    பெயர்க்கலி மாவலா லுலகி
    லுறுபொரு ளிலையென் றனைவரு மீமான்
    கொண்டன ருளத்துவ கையினால்.     3.9.10
517    மறுத்தும்அவ் வபூஅய் யூபென வோது
    மன்னரை முகம்மது விளித்து
    நிறைத்தமூ ரலினுக் கினம்பதி புகுந்து
    நீண்மறு கிடந்தொறுங் குறுகிக்
    குறித்ததிற் றொண்ணூ றியன்மறை யவரைக்
    கூட்டியிங் குறைகெனக் கூற
    வெறுத்திடா தேகி யுரைத்தசொற் படியே
    வேந்தரைக் கொணர்ந்துமுன் விடுத்தார்.     3.9.11
518    வந்தமன் னவர்க ளனைவர்க்கு மினிய
    வாசகங் கொடுத்தரு கிருத்திச்
    சிந்தையிற் பொருந்தி யான்றரு மமுது
    செய்துவந் தேகுமி னென்னப்
    பந்தியிற் படுத்தி யமலையை யெடுத்துப்
    பதுமமென் கரத்தினாற் றிருந்தக்
    கொந்தலர் மரவத் தொடைப்புயக் குரிசி
    லீந்தனர் குறைவற வன்றே.     3.9.12
519    ஈய்ந்தன ரெவரும் பொசித்தன ரமுது
    மிருந்தது குறைந்தில வதனா
    லாய்ந்தகேள் வியர்கள் காட்சியிற் பெரிய
    வதிசய மெனச்சிர மசைத்து
    வாய்ந்தபே ரொளியு மான்மத நறையு
    மாறிலா திருந்துமண் ணகத்திற்
    றோய்ந்திலாப் பதத்திற் கரங்களிற் பலகாற்
    றொட்டுமுத் தமிட்டுவந் தனரால்     3.9.13
520    பதமல ரதனிற் கண்மலர் பரப்பிக்
    களிப்பொடும் பற்பல்காற் போற்றி
    யிதமுறுங் கலிமா வெடுத்தினி தோதி
    யிதயத்தி னிடுந்திர வியம்போற்
    புதியதோ ரீமா னெனுநிலை நிறுத்திப்
    பொருவிலாக் குறான்வழி பொருந்தி
    யதிசயம் பிறப்ப முகம்மது தமக்கன்
    சாரிக ளெனும்பெய ரானார்.     3.9.14
521    ஒருபெரும் பகலிற் பெரியகா ரணமா
    யுலகெலா மறிந்திட மனைக்க
    ணிருவருக் கிருந்த வமுதினா லொருநூற்
    றெண்பது பெயர்க்கினி தருத்தி
    யருமறைக் குரிய நல்வழி யினரென்
    றறைதரக் தீனிலை யமைத்துப்
    பரிவுபெற் றிருந்தா ரவர்திரு மனையிற்
    பார்த்திவ ரெனுமிற சூலே.     3.9.15

விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 9க்குத் திருவிருத்தம்...521

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.10 உகுபான் படலம் (522- 546 )
522    மலிபெரும் புகழான் அபூஅய்யூப் மனையின்
    மனமகிழ்ந் திருக்குமந் நாளி
    னிலைபெறு மனையும் பள்ளியும் வனைந்த
    தெனுமொழி தொழிலவர் நிகழ்த்த
    விலையுறும் பெயரிற் சைதையும் அபாறா
    பிகையுநண் புடன்விரை வழைத்தே
    யலகில்வண் புகழ்சேர் மக்கமா நகருக்
    கனுப்பினர் முகம்மது நபியே.     3.10.1
523    மக்கமா நகர்விட் டுடன்வரும் பேரின்
    மனையுட னடைந்தவ ரல்லா
    ரொக்கலின் மனைவி யுடன்வராப் பெயர்க
    ளுயர்தரும் பள்ளியி னடுப்பப்
    பக்கலி னிரைத்துப் பந்தர்கள் வனைந்திங்
    கிருமின்க ளெனநபி பகர
    மிக்கவ ரெவரு மவ்வண முறைந்து
    மேலவன் றனைத்தொழு திருந்தார்.     3.10.2
524    ஆயிழை சௌதா அபூபக்கர் மனைவி
    தன்னொடு மாயிஷா அலியின்
    றாயெனும் வரிசைப் பாத்திமா நயினார்
    தரும்புதல் வியர்கணால் வரையுஞ்
    சேயினு மினிய வடிமைக ளிருவர்
    திருந்தலர் நோக்கிலா வண்ணம்
    நாயகப் பதியென் றோதிய மதீனா
    நகரினி லழைத்துவந் தனரால்.     3.10.3
525    மலையெனும் புயநந் நபியுடன் கூடி
    வந்தமன் னவர்மனை யனைத்தும்
    விலையற விற்றார் மக்கமா நகரா
    ரெனுமொழி யடைந்தவர் விளம்ப
    விலைமலி கதிர்வேன் முஹாஜிரீன் களுக்கெம்
    மிறையவன் சுவனத்தி னிலவு
    குலவுமா ளிகைக ளொன்றுக்கா யிரமாய்க்
    கொடுத்தன னெனநபி யுரைத்தார்.     3.10.4
526    பொன்னக ரதனின் மணிமனை யெமக்குக்
    கொடுத்தன னிறையெனப் புகழ்ந்து
    நந்நபி யுரைத்தா ரெனமுஹா ஜிரீன்க
    ணன்குற மகிழ்ந்தினி திருந்தா
    ரிந்நக ரடைந்த கன்னிய ரவர்க்கென்
    றியற்றிய மனைதொறு மிருந்தா
    ரன்னமென் னடையி னாயிஷா வெனுமா
    னபூபக்க ரகத்தினி லிருந்தார்.     3.10.5
527    இருந்தநன் மனைவிட் டிடம்வலம் பிரியா
    தியற்கையாற் காபிர்தம் மிடரால்
    வருந்தமெய் நடந்த வவதியி னாலு
    மதீனத்தி னசல்பெரி தாலும்
    பொருந்திலாச் சலவேற் றுமையதி னாலும்
    புரவலர் வனிதையர் சிறுவர்
    சுரந்தனி பிடிப்ப வுடலுலைந் தொடுங்கிச்
    சோர்வுறத் துன்பமுற் றனரால்.     3.10.6
528    அடைந்தவ ரெவருஞ் சுரத்தினா லறநொந்
    தவதியுற் றனரென நபியுள்
    ளிடைந்திரு கையேத் தருந்துஆ விரப்ப
    வினிதிறை யவன்கபூ லாக்கத்
    தொடர்ந்திடுஞ் சுரங்க ளியாவர்க்குந் தீர்ந்து
    துன்பமற் றிருந்தனர் சுகமே
    நடந்தநாட் டொடுத்து வளம்பெறு மதீனா
    நகரினிற் சுரமென்ப திலையே.     3.10.7
529    மக்கமா நகர முஹாஜிரீன் களுக்கு
    மதீனத்தன் சாரிக டமக்கு
    மொக்கலின் பிரியா தனந்தரத் தவரு
    முவந்தசம் பந்தரு மாக
    மிக்கநந் நயினார் சேர்த்தன ரியாரும்
    விள்ளுதற் கிடமற வுடலும்
    புக்கிய வுயிரும் போற்பிரி யாதங்
    கவர்களும் பொருந்தியங் கிருந்தார்.     3.10.8
530    மதினமன் னவரு மக்கமா நகர
    மன்னரு நால்வரு மடுத்த
    பதியின்மன் னவரு முடனுறைந் திருப்ப
    வவையினிற் பண்புற நோக்கி
    யிதமுறப் பள்ளி யெடுத்தன மினியிவ்
    விறஜபு மாத்தையின் முதலாய்
    நுதிதரும் வேலி ராசுறா நோன்பு
    நோற்பதை நோக்குவீ ரெனவும்.     3.10.9
531    இற்றைநாட் டொடுத்தைந் தொகுத்தினும் வாங்கென்
    றியற்றிய திருமொழி சிதையா
    துற்றவ ரெவருங் கொணர்மின்க ளெனவு
    முடையவன் றிருநபி யுரைத்தார்
    கற்றவல் லோர்க ளியாவரும் விரும்பிக்
    கருத்துறும் படிமுடித் துவந்தார்
    வெற்றியும் புகழுந் தழைத்தினி தோங்கி
    வீறுபெற் றிருக்குமந் நாளில்.     3.10.10
532    முருகயின் றினவண் டிசைத்தகம் பலையின்
    முழக்கறா நறுமலர்த் துடவை
    விரிபரப் புடுத்த மதீனமா நகரின்
    கொறியுடைத் தொறுவரில் வியந்தோ
    னுருளுலம் பொருத புயத்தின னுஃபா
    னென்னுமப் பெயரினை யுடையோன்
    றிரளொருச் சிதகா முளரியி னடைந்து
    காப்பொடுங் கொடுநிதந் திரிவான்.     3.10.11
533    கொறிநிரை திரட்டி நெடுவனம் புகுந்தோர்
    குவட்டடி மருங்கினிற் பசும்புற்
    செறிதரு மிடத்தில் விடுத்தொரு தருவி
    னீழலிற் றனிசிறந் திருப்ப
    நிறைதரு நீத்தம் பரந்தெனப் பொறையு
    மடவியு நிழல்செறி பொதும்பு
    மறைதரு திடரு மருவிநீ ரிடமு
    மலிதரப் பரந்துமேய்ந் தனவால்.     3.10.12
534    காத்திரக் கோலு நீள்கடை காலுந்
    தரித்திடுங் சுரத்தினிற் சிரத்தைச்
    சேர்த்துஃ பான்கண் டுயிறரும் வேளை
    சிறுசெவி பெரியவாய்த் தீக்கட்
    கூர்த்தவள் ளுகிர்க்கா னீண்டவால் வரியார்
    கொடிப்புலி கொடியவெம் பசியாற்
    போர்த்ததன் பொதும்பர் நீத்தெழுந் தருங்கான்
    புறத்தினன் னிரையைநோக் கியதால்.     3.10.13
535    காய்ந்தவெம் பசியால் விரைவுட னடந்தோர்
    கல்லடி யிடத்தினி லொதுங்கி
    வாய்ந்தகான் மடக்கிப் பயப்பயப் பதுங்கி
    வல்லுடல் சுருக்கிவா னிமிர்த்துப்
    பாய்ந்தொரு கொறியைப் பிடித்தது கானின்
    பரப்பெலாந் திசைதிசை வெருண்டு
    சாய்ந்தன சிறுவாற் பேருடற் கவைக்காற்
    றுருவைக டலைமயங் கிடவே.     3.10.14
536    தீயென மிளிர்கட் கொடிப்புலிப் பேழ்வாய்ச்
    சிக்கிய துருவையின் பலகால்
    வாயெனுந் தொனிகேட் டருந்துயி லிழந்து
    மனத்திடுக் கொடுமெழுந் துஃபான்
    வீய்வுறுங் கொறியின் றொனியிதென் றேங்கி
    விரைவொடு மொருதிட ரேறிப்
    போயிரு நான்கு திசையினு நோக்கிக்
    கொறியினம் பொருந்தல்காண் கிலனால்.     3.10.15
537    சிதறின கூண்டு நின்றில விரண்டு
    செவிகளு மடைப்பவித் திசையிற்
    கதறிய தெனநின் றோடின னவணிற்
    காண்டன் கொறியோடும் புலியைப்
    பதறினன் சினையா டென்பதி னிரங்கிப்
    படர்ந்தனன் வெகுண்டனன் படுமுள்
    ளுதறினன் றொருவர்க் கூவினன் சிறுதூ
    றொடிபட வோடினன் றொடர்ந்தே.     3.10.16
538    எடுத்தனன் பெருங்கல் விண்ணெனத் துரத்தி
    யெறிந்தன னார்த்தனன் கோலாற்
    புடைத்தனன் கொறியைக் கைவசப் படுத்திப்
    புலியினை யொருபுறம் போக்கி
    விடுத்தனன் பரலான் மெலமெல நடந்தோர்
    விரிமலர்ச் சினைத்தரு நிழலி
    லடுத்தன னிருந்தான் கானினிற் றொடர்ந்த
    வருந்தவிப் பாறுதற் கன்றே.     3.10.17
539    மையினை விடுத்த கொடிப்புலி யடுத்த
    வரைப்புறத் துச்சியி னேறிக்
    கையினிற் றரித்த கோலொடு மிருந்த
    தொறுவனைக் கடிதினி னோக்கி
    வெய்யவா விறையோ னின்றெனக் களித்த
    பொசிப்பினை விரும்பினால் வேறு
    செய்யவு நினக்குத் தகுவதோ வென்னத்
    தௌிவுட னுரைத்துநின் றதுவே.     3.10.18
540    மலிதரு மொழிகேட் டெண்டிசை யிடத்து
    மாசற நோக்கினன் பொருவா
    தொலிசெவிக் கறிவாய்ப் புகுந்தது மாந்த
    ரொருவரு மிவணிலை யீதோர்
    கலியெனத் திகைக்கும் போதினி லியானே
    கழறின னெனமறுத் துரைப்பப்
    புலிபகர்ந் திடுத லறப்பெரும் புதுமை
    புதுமையென் றகத்ததி சயித்தான்.     3.10.19
541    எண்டிசை யிடத்துந் தொறுவரைக் கூவி
    யாவரு மிவணிடம் புகுமின்
    கண்டறி யாதோர் பெரியகா ரணத்தைக்
    காண்மின்கள் பொருப்பிடைக் கிடந்து
    கொண்டொரு புலியென் னெதிரினி லறிவாய்க்
    கூறிய மொழிசெக தலத்தும்
    விண்டலந் தனினுங் காண்பரி தென்ன
    விரைவொடு முரைத்துநின் றனனால்.     3.10.20
542    ஆயர்க ளறிய விலங்கின முரைத்த
    ததிசய மதிசய மென்னக்
    கூயபே ருவகைப் பொதுவனை நோக்கிக்
    கொடிப்புலி மறுத்தும்வாய் திறந்து
    மாயிரும் புவியி னியானெடுத் துரைத்த
    மாற்றமே புதுமையென் றுரைத்தாய்
    தூயநற் பெருமைப் புதுமையொன் றுளதிங்
    கிதனினுங் கேளெனச் சொல்லும்.     3.10.21
543    மக்கமா நகர்விட் டணிமனை மதீனா
    நகரினின் முகம்மது நயினார்
    புக்கின ரவர்சொ லுண்மையென் றீமான்
    கொண்டுளம் பொருந்தித்தீ னிலையைக்
    கைக்கொளா திருத்தல் புதுமையே யன்றிக்
    கானிடை விலங்கின மொழிவ
    திக்கணம் புதுமை யெனவிடுத் திசைத்த
    லேழமை யெனவுரைத் தகன்ற.     3.10.22
544    புடவியின் மாந்த ரெனச்சட மெடுத்தோ
    ரேவலும் விலகலும் பொருந்தல்
    கடவதே யன்றி விலங்கின மறிந்து
    கழறுத லறிகிலோ மென்னின்
    மடமையின் மடமை யெனமனத் திருத்தி
    வன்குபி ரகற்றிநல் லுணர்வு
    நடைதர நடந்தீ மானெறி தோன்ற
    நபிகணா யகமிடத் தடைந்தான்.     3.10.23
545    விலங்கினங் காத்து விலங்கினும் விலங்காய்த்
    திரிந்தனன் மெய்மறை முதியோர்
    குலங்களு மறியே னின்றுநும் பொருட்டாற்
    கொடிப்புலி கானகத் துரைத்த
    நலங்கெழு மறிவாற் குபிரினை யகற்றி
    நன்னெறி தீனினைப் பிடித்துப்
    பலன்களும் படைத்தீ மானிலை நின்றே
    னெனமலர்ப் பதம்பணிந் தனனால்.     3.10.24
546    விண்டகத் துரைத்த கொடிப்புலி குருவாய்
    மேலவன் விதிமறை யீமான்
    கொண்டன னுஃபா னெனப்பலர் குழுமிப்
    புகழ்ந்திடக் கொண்டலைப் போற்றி
    வண்டிமி ரலங்கன் மன்னவ ரெவர்க்கு
    மனமகிழ் தரசலா முரைத்துத்
    தெண்டிரை யொலியின் மத்தொலி கறங்கு
    மாயர்தஞ் சேரியிற் புக்கான்.     3.10.25

உகுபான் படலம் முற்றிற்று.

ஆகப் படலம் 10-க்குத் திருவிருத்தம்...546

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
3.11 சல்மான் பாரிசுப் படலம் (547- 607)
547     பூண்டநன் கலம்போற் காரண வரைகள்
    புடையுடுத் திருந்தமக் காவிற்
    கூண்டிருந் தெழுந்து மதீனமா நகரிற்
    குலத்தொடு மினிதுறப் புகுந்தோ
    ராண்டுசென் றதற்பி னகுமது மறையோ
    ரணிதர விருக்குமந் நாளிற்
    காண்டகண் களிப்ப வந்தொரு முதியோன்
    கட்டுரை யொடுஞ்சலா முரைத்தான்.     3.11.1
548    வந்தநன் முதியோன் முகமலர் நோக்கி
    மறுமொழி கொடுத்தவ ணிருத்திச்
    சிந்தையிற் கனிவும் வணக்கமு மொழுக்கச்
    செய்கையும் பொறுமையுந் தரித்தா
    னிந்தநற் குணத்தோ னியாவனென் றறிய
    வேண்டுமென் றிதயத்தி னமைத்துச்
    சுந்தரப் புயத்தோய் நின்வர வெனக்குச்
    சொல்லுக வெனநபி யுரைத்தார்.     3.11.2
549    உரையெனு மொழிகேட் டும்பரின் முதியோ
    யுலகினுக் கொருதனி யரசே
    சரநெறி நடத்து மறைமதக் களிறே
    தரியலர்க் கடலரி யேறே
    பெருகிய குலமும் பெயருமென் பதியும்
    பேரறி வாளரிற் பழகி
    வருமுளக் கருத்துங் கேண்மினென் றொதுங்கி
    வாய்புதைத் துரைக்கலுற் றனனால்.     3.11.3
550    வேரியங் கனித்தேன் பொழிதர வோடி
    விடுநெடு மதகினில் வழிய
    வாரிசக் கழனி வரிவரா லருந்தி
    மேதினியின் மடுநடுக் குடையும்
    பாரிசென் றுரைக்கும் வளமைநா டுடுத்த
    புரிசைசூழ் பதியினிற் பிறந்தோ
    னேரிசைந் தீன்றா ரிருவருஞ் சல்மா
    னெனவிடும் பெயரினன் சிறியேன்.     3.11.4
551    அப்பெரும் பதியில் வளர்ந்தனன் சிலநா
    ளாதியி னூழ்வினைப் பயனா
    லிப்பெரும் பதியோர்க் கடிமைய னானே
    னிப்பொழு திதற்குமு னயங்கூர்
    செப்பரு நூல்கள் பலபல வுணர்ந்துஞ்
    செவிவழி யொழுகிடப் பெரியோ
    ரொப்பரு மறைநூ லுரைத்தவை கேட்டு
    முளத்தறி வொடுமிருந் தன்னால்.     3.11.5
552    தெரிதரு மறைகண் மூன்றினும் பெரியோர்
    செய்யுளிற் கணிதநூ லிடத்து
    மருளினி லுருவாய்த் தோன்றியே யாதத்
    தைம்பதின் றலைமுறைப் பின்னர்
    நரர்களி னொளிவி னிருவமைந் தாதி
    நபியவ தாரமென் றெடுத்து
    வருமவர் தமக்குத் தௌிதரும் புறுக்கான்
    மறைமொழி யிறங்கிடு மெனவும்.     3.11.6
553    அந்நெறி மறையின் முறைவழி யொழுகி
    நின்றவ ரரம்பையர்ச் சேர்ந்து
    பொன்னுல காள்வ ரென்னவு மறுத்தோர்
    பொறிதெறித் தெரியழற் குழியிற்
    பன்னெடுங் கால மழுந்துவ ரெனவுந்
    தெரிந்தனன் பரவைசூழ் புவியி
    னெந்நிலத் துதித்தா ரென்பதை யறியே
    வேண்டுமென் றெழுந்தன னௌியேன்.     3.11.7
554    நாற்கடற் பரப்பி ணெண்டிசைப் புறத்தின்
    றேயங்க டொறுந்தொறு நடந்து
    நூற்கடற் கரைகண் டவர்கள்பா லடுத்துக்
    கேட்டலு நூதன நபியாய்
    மார்க்கமுங் கொண்டிவ் வறபினில் வருவ
    ரென்றுரைத் தனரவர் வகுத்த
    தாற்கலை வல்லோய் காட்சியி னரிய
    வித்திசை புகுந்தன னடியேன்.     3.11.8
555    அறபெனுந் தலத்தில் ஞானவா ருதிக
    ளாமெனத் திசைதொறுந் துதிப்பக்
    குறைஷியங் குலத்தி லுதித்துநன் னூல்கள்
    கோதறத் தெரிந்துநந் நயினார்
    பிறவியெவ் விடமெங் கிருப்பவர் மார்க்கப்
    பெயரெவை யெனத்தௌிந் தறிந்து
    நறைகமழ் புயத்தோய் நும்வழிப் படுதற்
    கிருந்தனர் பெரியர்க ணால்வர்.     3.11.9
556    மூதுரைக் குரிய சைதும்நன் னிலையின்
    முதியரில் ஒறக்கத்தென் பவரும்
    வேதிய ரெனும்பேர் தருமுது மானும்
    விறலுடை யுபைதுல்லா தானும்
    பேதியா நினைவின் முகம்மதைக் காண்போ
    மென்றுமவ் வேட்கையின் பெருக்காற்
    றீதிலா திதயங் களிப்புறத் தேடிப்
    போயினர் பலபல திசையில்.     3.11.10
557    திறலுடை சைதும் ஷாமிராச் சியத்திற்
    சென்றருங் கணிதரைக் கேட்ப
    நறைவிரி யலங்கற் புயத்திபு றாகீம்
    நன்னபி நடத்திய மார்க்க
    முறைவழி முகம்ம தெனுநபி யறபின்
    வருகுவ ரெனவவர் மொழிய
    வுறுதியின் றிரும்பி வருநடு வழியி
    னிறந்தனர் முறைமையி னுரவோய்.     3.11.11
558    ஒறக்கத்தென் பவருந் திசைதொறுந் திரிந்து
    மக்கமா நகரினி லுறைந்து
    துறக்கமும் புகழுந் சுரிகுழற் கதீஜா
    வென்னுமத் தோகைக்கு நிதமுஞ்
    சிறக்குநும் புதுமைக் காரண மனைத்துஞ்
    செப்பிநல் வழிக்குரி யினராய்
    நறைக்கதிர்க் கமலப் பதம்பணிந் திருந்தா
    ரறியலா நடுநிலை மறையோய்.     3.11.12
559    மிகுமதி யுதுமா னென்பவ ருறூமிப்
    பதியினின் மேவிநல் லறிவின்
    பகுமனத் தறிவோர்க் குரைத்துமங் கவர்க
    டெரிந்துநூல் படிப்படி கேட்டும்
    முகம்மது நபியாய் வருவரங் கவர்தம்
    மார்க்கமே மார்க்கமென் றோதி
    யிகலறு மந்நாட் டரசனுக் குவந்த
    வியன்மறைப் பெரியரா யிருந்தார்.     3.11.13
560    பெருக்குநல் லறிவி னுபைதுல்லா வென்னும்
    பெயரினர் காண்டலின் பொருட்டாற்
    றருக்கொடுந் தௌிந்து மெண்ணிறந் தனைய
    சாத்திரங் கற்றுவல் லவரா
    யிருக்குநற் றவர்பால் வினவியுங் கணிதத்
    தியலினான் மதித்துமே தேடித்
    திரைக்கடற் புடவித் திசையினிற் பதிக
    டொறுந்தொறு மினந்திரி கின்றார்.     3.11.14
561    இவ்வணந் திரிந்து தேடின பெரியோ
    ரெண்ணில் ரிஃதெலா மறிந்து
    மைவண்ணக் கவிகை முகம்மது மதீனா
    நகரினில் வருகுவ ரென்னச்
    செவ்வியர் பலகா லுரைத்தலுஞ் தேறித்
    திருமறை முழக்குமா வணத்தின்
    கவ்வையு மொடுங்கா மதீனமா நகரிற்
    காத்திருந் தனன்சில நாளால்.     3.11.15
562    வேறு
சுரிமு கக்குட வளைக்குலஞ் சூலுளைந் தீன்ற
தரள வெண்டுளித் திரையெறி தடந்திகழ் ஷாமின்
வருமெ ஹ்ஊதிக டலைவரி லிபுனுகை பானென்
றுரைத ரும்பெய ரினர்மறை யாவையு முணர்ந்தோர்.     3.11.16
563    உததி சூழ்தரு பாரிடைத் திசைதொறு முலவிப்
பதிக டோறினுந் திரிந்துநற் பழமறைக் குரித்தாய்
மதின மாநக ரிடைமுகம் மதுவரு குவரென்
றிதமித் தன்புறுங் கருத்தொடு மிவணில்வந் தடைந்தார்.     3.11.17
564    ஆதி நாயகன் றிருநபி வருவதிங் கணித்தென்
றோதி மாசறப் பனீகுறை லாவிடத் துறைந்து
நீதி நன்னெறி விலகுதற் பவநெறி நிகழ்த்திப்
போத நேர்தரக் காத்திருந் தனர்சில போழ்தால்.     3.11.18
565    இங்கி வர்க்குறு மறிவினிற் றலைவர்க ளிலையென்
றங்கை நீட்டிநற் பதம்பணிந் தவர்களா சரிப்பப்
பங்க மற்றவன் விதிவழி யிவருயிர் பருகப்
பொங்கி வந்ததா யாசமென் றொருபெரும் புலியே.     3.11.19
566    வீர மிக்குயர் பனீகுறை லாவெனும் வேந்தர்
யாரை யும்விளித் தியனபி யொல்லையி னிவணிற்
கார்நி ழற்றிட வருவர்செய் வினைப்பவங் களைந்து
சாரு நற்பெயரும் பதவிபெற் றிடுவிர்க டாழ்ந்தே.     3.11.20
567    முற்ற நாளிவ ணிருந்தியன் முகம்மதைக் காணப்
பெற்றி லேன்வருத் தமும்பெருத் தனவினி வீந்தா
லுற்று நீவிர்க ளென்சலா முரைமினென் றோதி
வெற்றி மன்னவர் சூழ்தர விறந்தனர் மேலோய்.     3.11.21
568    கவின்ப டைத்தநல் லிபுனுகை பானுமைக் காண
விவண டைந்துகாத் திருந்தன ரெனுமியல் வலியாற்
புவியின் மற்றொரு தேசத்திற் புகுந்திடா வண்ணஞ்
சவிகொண் மெய்யவர் வருவரிங் கெனவிருந் தனனால்.     3.11.22
569    தெருளு மாந்தர்கள் சூழ்தர மதீனத்திற் செறிந்த
விருள றும்படி வந்தன ரெனுமொழி கேட்டு
மருளுஞ் சிந்தையிற் களிப்புற வுவகையின் மகிழ்ந்து
திரும லர்ப்பதங் காணுதற் கெழுந்தனன் சிறியேன்.     3.11.23
570    வள்ள லென்றுத வியநபி முகம்மதுக் கீமான்
கொள்ளு தற்கிசைந் தனனிவ னெனக்குறிப் பறிந்து
விள்ள லன்றிமுன் னெனைவிலை கொளுமவர் வெகுண்டு
தள்ளு தற்கிட மறமற மனத்தொடுந் தடுத்தார்.     3.11.24
571    தடுத்துத் தீங்கியற் றியதையுள் ளகத்தினிற் றரித்துப்
படுத்தும் பாடறி குவமென லவர்கண்முன் பரிவின்
விடுத்து ரைத்தில னும்பெருந் தீனிலை விருப்பால்
வடித்த நன்மறை வகுத்திசு லாமினை வளர்த்தீர்.     3.11.25
572    புதிய மார்க்கமென் றெடுத்துவ னிடத்தினைப் பொருந்தி
மதிம யங்கின னிவன்றனைப் புறம்விடா வண்ணம்
பதியி னிற்சிறைப் படுத்தலே கருத்தெனப் பரிவிற்
சிதைவி லாதெனைக் காவலி னகத்திடைச் சேர்த்தார்.     3.11.26
573    புறத்தி னிற்புகு தாதடைத் தருந்திடும் பொசிப்பைக்
குறைத்து வைகலு மிதமறப் பேசியுங் கொடிதாய்ச்
செறுத்துந் தீவினை செயத்துணிந் தவர்களே யன்றி
மறுத்தும் வேண்டுமென் றெள்ளள வினுமதித் திலரே.     3.11.27
574    ஈத லாற்பெருங் கொடுமையிற் றொடரிடர் படுத்துந்
தீதெ லாமொரு துயரெனக் குறித்திலன் சிறியேன்
காதும் வெஞ்சினத் தவரிவன் றீனிலைக் கருத்திற்
கோதி நின்றன னிடர்க்கடங் கிலனெனக் குறித்தார்.     3.11.28
575    அடிமை கொண்டவ ருரைவழிக் கேவலி னாளாய்
முடியு மேலவ னுட்கருத் தின்படி முடியும்
படியின் மாறுகொண் டிகலுமே லுடலுயிர் பதைப்பத்
தடிவ ரென்பதற் கையமி லெனவுரைத் தனரால்.     3.11.29
576    என்ம னத்தின்வே றிலைமுகம் மதுநபிக் கீமா
னன்ம னத்தொடுங் கொளப்பொருந் தினனென்னை நாடி
வன்ம னத்தினை வெறுத்தொரு வழிப்படுத் துவிரேற்
சொன்ம றுத்தில னுரைமின்க ளெனத்தொகுத் துரைத்தேன்.     3.11.30
577    நன்று நன்றெனச் சிரமசைத் தனைவரு நலியா
தின்று தொட்டுமுந் நூற்றினிற் குறைந்திடா தீத்தங்
கன்று வைத்துநீ ரிறைத்தவை பலன்படக் காய்த்து
நின்ற வண்பொழி லாக்கிநீ யளிப்பது மல்லால்.     3.11.31
578    ஆயி ரத்திரு நூற்றின்மே லைம்பதி னளவி
னேய தானவி ராகனென் றோதிய வெடையின்
றூய தங்கமு மளித்தியேற் றூதரென் பவர்பாற்
போயீ மான்கொளத் துணிவது துணிவெனப் புகன்றார்.     3.11.32
579    இன்ன வாசக மிசைத்தவ ரிதயங்கட் கேற்ப
நன்ன யத்தொடுஞ் சிலமொழி நவின்றவ ணீங்கி
மன்னர் மன்னவ நும்பத மடைந்தனன் மனத்தி
லுன்னி யேற்பவை யெற்குரைத் திடுகவென் றுரைத்தான்.     3.11.33
580    பாரி சென்னுமவ் வூரவன் பகர்ந்தசொல் லனைத்தும்
வேரி யம்புய முகம்மது கேட்டகம் விரும்பிச்
சாரு நல்வழிக் குரியனென் றுளத்திடை தரித்து
மாரி போன்றுநன் மறைதரு வாய்திறந் துரைப்பார்.     3.11.34
581    இருநி லத்திடை பிறந்துநன் னபியென விவணின்
வருவ ரென்றெனைத் தேடிய வுண்மைவல் லவர்க
ளரிதிற் காண்கினு மிறக்கினு மும்மத்தி னவராய்ப்
பெருகுந் தீனில்ச லாமத்துப் பெறுவர்க ளென்றே.     3.11.35
582    பழுதி லாதவ னுரைத்தநன் மறைமொழிப் படியே
தழுவி வெங்குபிர் களைதர வேல்வலந் தரித்தோய்
வழுவி முன்விலை கொண்டவ ருரைத்திடும் வழியே
யெழுதி நீகொடுத் திவண்வரு கெனநபி யிசைத்தார்.     3.11.36
583    மன்னு நந்நபி யுரைத்தலுங் களிப்புடன் வாழ்த்தி
முன்னு ரைத்திவண் விடுத்தவ ரிடத்தினின் முன்னிச்
சொன்ன சொன்னமுந் துடவையு மவதியி லளிப்பே
னென்ன வோர்முறி யெழுதியங் கவர்கரத் தீந்தான்.     3.11.37
584    மருங்கு நின்றசல் மான்றனை நோக்கிநீ வரைந்து
தருங்க டுத்தமுந் தந்தனை யுனக்குறுஞ் சார்பி
னிருங்கு லத்தவர்க் குரைத்தெமக் கீதலு மியற்றி
யருங்க ணத்திசு லாமினில் வழிப்படென் றறைந்தார்.     3.11.38
585    தண்ட ளிர்ப்பொழிற் பாரிசின் விலையெனத் தலைநாட்
கொண்ட பேரிடம் விடுத்துநந் நபியிடங் குறுகிப்
பண்டு ரைத்தவப் படிமுறைப் பத்திர மெழுதி
விண்ட ளித்தன னெனவுரைத் தனன்புகழ் விறலோன்.     3.11.39
586    மன்ற றுன்றிய மதுமலர்ப் புயமுகம் மதுவு
நன்று நன்றென வெழுந்துசல் மானைமுன் னடத்திச்
சென்று தோழர்க ளுடனொரு துடவையைச் சேர்ந்து
நின்று கன்றெடுத் திவண்டரு கெனநிகழ்த் தினரால்.     3.11.40
587    ஈத்தங் கன்றுமுந் நூற்றையு மெடுத்தவ ரிருந்த
மாத்தி ரத்தினின் முன்புவைத் தனர்மன மகிழ்ந்து
தேத்த தும்பிய மலர்ப்புய மசைதரத் திருத்தும்
பாத்தி தோறினும் பதுமமென் கரத்தினிற் பதித்தார்.     3.11.41
588    ஆதி நாயக னபியுட னமைசகு பிகளிற்
போத மேவிய முதியவ ரொருவரப் புவியிற்
சோதி வீசிய மரகதப் பாசடை துலங்குந்
தீதி லாதொரு கன்றுநட் டினரவண் சிறப்ப.     3.11.42
589    எய்த்தி டாப்புகழ் நபிதிருக் கரத்தினி லெடுத்து
வைத்த கன்றுக ளியாவும்வா னுலகுற வளர்ந்து
நெய்த்து வீறொடுந் திரண்டன நெருங்கின நிறைகண்
மொய்த்த பூங்குலை சாய்த்தன காய்த்தன முழுதும்.     3.11.43
590    கலந்து நின்றமெய்த் தோழரி லொருவர்கை யார
நிலந்த னிற்பதித் திருந்தகன் றொன்றுமந் நிலையா
யுலந்து நின்றது கண்டுநந் நபியொளிர் கரத்தா
னலந்த ரும்படி யெடுத்ததை மறுத்துநட் டினரால்.     3.11.44
591    ஈத்தங் காவகம் பனிரண்டு வருடத்தி னியல்பாக்
காய்த்து நற்பலன் றருதல்போல் நபிசெழுங் கரத்தால்
வாய்த்து மாதம்பன் னிரண்டினிற் குறைவற வளர்ந்து
பூத்துக் காய்த்துநற் பழக்குலை யொடும்பொருந் தினவால்.     3.11.45
592    மதுர மூறிய பழக்குலை பொறுக்கிலா வளைந்து
சிதறு கின்றன துடவைகண் டருங்களி சிறந்து
நுதிகள் வேல்வலந் தாங்குசல் மான்றனை நோக்கி
யிதுகொல் நீயவர்க் களித்திடு நிதியமென் றெடுத்தார்.     3.11.46
593    சிறைகொள் வாரண மீடுஞ்சினை யளவெனத் திரண்ட
நிறையில் காஞ்சனத் தினிற்றிரு வாயுமிழ் நீராற்
குறைவி லாதுறத் தடவிநற் செழுங்கரங் கொண்டு
மறுவி லாதசல் மான்மலர்க் கரத்தில்வைத் தனரால்.     3.11.47
594    இறைக்குந் தேன்கனித் துடவையு மவர்களுக் கீந்து
குறிக்கும் பொன்னையு முன்னரி னெழுதிநீ கொடுத்த
நிறைக்கு ளெவ்வள வவ்வள விந்தமா நிதியி
னறுக்கி யீந்திடு கென்றனர் முகம்மது நபியே.     3.11.48
595    பொன்னை வாங்கிவெண் டுகிலினி லிருகுறப் பொதிந்து
பன்னு நன்னபி முகம்மதி னிருபதம் பணீந்து
துன்னு தோழர்க ளியாரையு மினிதுறத் துதித்துத்
தென்னு லாமரைப் பதம்பெயர்த் தெழுந்தனன் றிறலோன்.     3.11.49
596    கொண்ட றூங்கிய துடவையுங் கனகமுங் கொடுத்து
மண்டு பூம்பொழிற் பொன்னகர் வாங்கினம் வாய்ப்பத்
தெண்டி ரைப்புவி யிடத்தினின் முகம்மதைக் தேடிக்
கண்ட பேறிதென் றுவகையிற் றெருத்தலை கடந்தான்.     3.11.50
597    வருந்தி லாநிதி யளித்துமுன் விலையென வாங்கி
யிருந்த மன்னவன் மைந்தர்கண் மனையிடத் தேகித்
திருந்த வாய்புதைத் தடிகள்சொற் படிமுறை சிறியேன்
பொருந்தி வந்தனன் கொண்மினென் றிசைதரப் புகன்றான்.     3.11.51
598    கேட்டு மன்னவ ரொல்லையி னெழுந்துகாய் கிளைத்த
தோட்ட முற்றினுஞ் சுற்றிநன் கெனச்சிரந் தூக்கிக்
காட்டின் மிக்கநற் றுடவைகைக் களித்தனை கடிதின்
வேட்ட பொன்னையுந் தருகென வெதிர்விளம் பினரால்.     3.11.52
599    பொன்ன ளித்திடென் றுரைதரத் துகிலிடை பொதிந்த
மின்னு மாடகக் கட்டியைத் தெரிதர விரைவிற்
சொன்ன சொல்லெடை மாட்டிய துலையினிற் றூக்க
நன்ன யம்பெற விடைக்கிடை நறுக்கிவைத் தனனால்.     3.11.53
600    எத்த லத்தினு நிறையென வியற்றும்வி ராகன்
பத்தி ரண்டுநூற் றைம்பதென் றிடுமெடைப் படியே
தத்த ரத்தினிற் பலபட நறுக்கியுஞ் சரியா
வைத்து மாடகக் கட்டிமுன் போல்வளர்ந் திருந்த.     3.11.54
601    தனந்த னிற்குறை யாதளித் தனைபொழி றனையுங்
கனிந்த தீங்கனி யொடுமளித் தனையினிக் கடிதுன்
மனந்த னிற்றுணிந் திடுமிசு லாநெறி மார்க்கத்
தினந்த னிற்செல்லென் றிசைத்தலும் விரைவுட னெழுந்தார்.     3.11.55
602    தொண்டெ னக்குறித் தாண்டவர் துடரறத் துடைத்துக்
கொண்டு போனபொன் னினிலணு வெனுங்குறை யாமற்
றிண்டி றற்புயம் வீங்கிடச் செழுமுக மிலங்க
வண்டர் நாயகன் றூதுவ ரவையிடத் தானார்.     3.11.56
603    சிறையெ னத்தனி யாண்டவ ருரைவழி திருந்த
நறைத ருங்கனி பொழிலளித் தவர்கண்முன் னடுவா
யறைத ருங்கன கத்தினை யளித்துமுன் னளவாய்க்
குறைவி லாதின்னம் வளர்ந்தபொன் னிதுவெனக் கொடுத்தார்.     3.11.57
604    அடுத்த ளித்தசல் மான்றனை நோக்கியன் புடனே
தொடுத்த காரிய முடித்தருந் துன்பமுந் துயரும்
விடுத்த னைப்பதம் படைத்தனை வீறொடு நிதியு
மெடுத்து நீகொடு போவென வுரைத்தன ரிறசூல்.     3.11.58
605    இறைய வன்றிருத் தூதுவ ரீந்தபொன் னதனால்
வறுமை யென்றில நிலத்திடை வாழுநா ளளவும்
பொறையின் மீதிடுஞ் சுடரெனத் தீனெனும் பொருட்டா
லுறையும் பாவமற் றமரர்கள் பதவியுற் றிருந்தார்.     3.11.59
606    பூணுந் தஞ்செல வடங்கலும் போக்கியும் புகழாற்
பேணு நல்லவர்க் கினிதெடுத் தருளியும் பெரிதி
னீணி லத்தினி னபிதரு கட்டிமா நிதிய
மாணு றத்தனி யிருந்தது நாட்குநாள் வளர்ந்தே.     3.11.60
607    மானி லம்புகழ் முகம்மது நபிபதம் வழுத்தித்
தீனி லைக்குரி யவரெனப் பெரும்புகழ் செலுத்தி
யானுங் காவுமொவ் வாதசல் மானெனு மரசர்
தான மிக்குயர் தலைவரின் வாழ்ந்திருந்தனரால்.     3.11.61

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.