LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

ஹோட்டல் வெஜிடேபிள் குருமா

தேவையானவை :

1. காய்கறிகள் - 1 1/4 கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு நன்றாக நறுக்கியது)

2. வெங்காயம் - 1 (நறுக்கியது)

3. தக்காளி - 1 (நறுக்கியது)

4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

5. கரம் மசாலா - 1 டீஸ்பூன்

6. மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

7. மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

8. எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

9. கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்

10. உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு :

1. தேங்காய் - 1/2 கப் (துருவியது)

2. முந்திரி - 4

3. கசகசா - 1/2 டீஸ்பூன்
 
4. சோம்பு - 1 டீஸ்பூன்

5. பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

6. பச்சை மிளகாய் - 2

7. கிராம்பு - 2

8. பட்டை - 1/2 இன்ச்

9. ஏலக்காய் - 1

தாளிப்பதற்கு :

1. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 
2. பிரியாணி இலை - 1

3. கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

1. அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, காய்கறிகளைப் போட்டு, உப்பு சேர்த்து பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.

2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் பச்சை வாசனைப் போக வதக்கி விட வேண்டும்.

3. பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஐந்து நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்த காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து, குருமா ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால், ஹோட்டல் வெஜ் குருமா ரெடி!!!

by Swathi   on 20 Jan 2016  1 Comments
Tags: வெஜிடேபிள் குருமா   Vegetable Korma                 
 தொடர்புடையவை-Related Articles
ஹோட்டல் வெஜிடேபிள் குருமா ஹோட்டல் வெஜிடேபிள் குருமா
கருத்துகள்
14-Mar-2017 08:57:26 mercy said : Report Abuse
wow super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.