LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

விரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன் 

ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை

உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹூஸ்டனில் தமிழர்களின் முன்னெடுப்பால், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனைத்து தமிழர்களின் உதவியை அங்கு அமைந்துள்ள தமிழ்ச் சங்கமானது நாடியுள்ளது. அதன் முதற்கட்ட நிதியாக ஒரு கோடி ரூபாயை ஹூஸ்டனில் நடைபெற்ற சந்திப்பில் அங்குள்ள தமிழர்கள் வழங்கியுள்ளனர். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க மொத்தம் இந்திய ரூபாயில் 42 கோடி தேவைப்படுகிறது. இதில் பாதித்தொகையான 21 கோடி ரூபாயை டெக்ஸாஸ் மாகாண அரசு வழங்குகிறது. மீதமுள்ள 21 கோடி ரூபாயைச் சர்வதேச அளவில் அனைத்து தமிழர்களிடமும் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஹூஸ்டனில் தமிழ் இருக்கை எதற்காக?

கின்னஸ் சாதனை புரிந்த முதல் தமிழ் இருக்கை

 

அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒன்றுகூடி அனைவரும் தமிழில் கையொப்பமிட்டு உலக அரங்கில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை கின்னஸ் சாதனை !!!

 

தமிழ் நம்முடைய தமிழின் தொன்மையால் நாம் உலகறியப்படவில்லை. பழங்காலத்தில் தமிழர்கள் கடலோடி வணிகர்களாக இருந்தார்கள். உலக வணிகத்தின் ஒரு பகுதியை நாம் ஆட்சி செய்துகொண்டிருந்தோம். இந்துமா பெருங்கடலைத் தமிழர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதன் தொன்மை மட்டும் அதற்கு உதவாது. அந்த மொழியைப் பேசுபவர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களைப் பெருக்கிக் கொண்டால், அவர்களுடைய பொருளாதார வளங்கள் நிலைத்து நிற்கும் என்றால் மொழி நிலைத்து நிற்கும், இன்னும் செழித்து வளரும்.

மொழியின் தொன்மையை ஆராய ஹார்வர்டில் இருக்கை அமைக்கப்பட்டது என்றால், தமிழர்களுடைய வணிக கூறுகள், வணிக மேலாண்மை, வணிக மேன்மை 2000 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க ஹூஸ்டன் தமிழ் இருக்கை உதவும். தமிழர்களின் வணிக மேம்பாடு 2000-ம் ஆண்டுக்கு முன் எப்படி இருந்தது? தற்போது எப்படிப் பின்தங்கி இருக்கிறது? இதை எப்படி சீர் செய்வது என்பது போன்ற ஆய்வுகள்தான் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் முதன்மையான நோக்கம். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைய வேண்டியது அவசியம். இன்று ஏறத்தாழ 188 நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்த 188 நாடுகளிலும் இருக்கும் தமிழர்கள் வளத்துடன், நிறைவுடன் அந்தந்த நாடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் மிகப்பெரும் அதிகார வர்க்கத்தினராகவோ, ஆட்சி, அதிகாரம் மிக்கவராக இல்லை. சாதாரண மனிதர்களாக, வியாபாரிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களோ அந்த நாட்டில் மட்டுமே வணிகம் செய்கிறார்கள்.

ஒரு நாட்டில் வாழும் தமிழர்களை பிற நாட்டில் வாழும் தமிழர்களுடன் வணிக உறவை ஏற்படுத்த முயற்சி செய்தோம் என்றால் அது மிகப்பெரிய பலன் அளிக்கக்கூடியவையாக இருக்கும். இதன் மூலமாக மற்ற நாட்டவர்களுடனும் வணிகம் செய்ய முடியும். இதெல்லாம் சாத்தியமாக 50 அல்லது 60 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அதற்கான வித்து இன்றே விதைக்கப்பட வேண்டும். அப்படி செய்யப்படுமானால் தமிழர்களின் நிறை, குறைகளை ஆய்வு செய்யப்பட முடியும்.  இப்படிப்பட்ட ஆய்வுகள் தமிழர்களை மறுபடியும் வணிக சக்திகளாக நிலைநிறுத்த செய்ய இயலும். அதனால் தான் ஹூஸ்டன் தமிழ் இருக்கை தமிழர்களின் வணிக மேம்பாட்டை ஆராய்வதே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. தமிழர்களின் வணிக மேம்பாடுகள் உயர பல்வேறு இருக்கைகள் தேவைப்படுகின்றன. இதனால்தான் ஹூஸ்டனில் தமிழ் இருக்கை விரைந்து அமைய வேண்டிய தேவை இருக்கிறது.

 

ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைய உலகத் தமிழர்கள் கை கோர்த்ததுபோல் ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைவதற்கும் அனைவரும் கைகோர்த்து நம்மால் முடிந்த பொருளாதார உதவியை வழங்கி கைகோர்ப்போம். 

 

தொடர்புக்கு: 

Perumal Annamalai

Secretary, Houston Tamil Studies Chair Inc.,

https://houstontamilchair.org
+1(908)-516-3069

501(c)(3) tax exempt approved educational non profit organization

 

by Swathi   on 04 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.