LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

ஓட்டுனர் உரிமம்(டிரைவிங் லைசென்ஸ்) பெற விண்ணப்பிப்பது எப்படி ?

பழகுனர் உரிமம்(எல்எல்ஆர்) எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி சென்ற பதிவில் விரிவாக பார்த்தோம். இந்த பதிவில் பழகுனர் உரிமம் பெற்றபின் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக காண்போம். 

 

பழகுனர் உரிமம்(எல்எல்ஆர்) பெற்ற முப்பது நாட்களில் சாலை விதிகளை நன்றாகப் புரிந்துகொண்டு, வாகனம் ஓட்டிப் பழகி, நெரிசல் மிகுந்த இடங்களிலும், வாகனத்தை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையை பெற்று விட்டீர்களா! இப்போது நீங்கள் தாரளமாக டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிக்க தகுதியானவராகிவிட்டீர்கள். 

 

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில், நேரடியாக விண்ணப்பிப்பவர்களுக்கும், டிரைவிங் ஸ்கூல் மூலமாக விண்ணப்பிக்கிறவர்களுக்கும் படிவம் 4, படிவம் 5 என்று தனித்தனி விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

 

இந்த விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 

 

1.உங்களுடைய பழகுனர் உரிமம்.

 

2.நீங்கள் ஓட்டிக் காட்டப்போகும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்.

 

3.அந்த வாகனத்தின் இன்ஷ்யூரன்ஸ்

 

4.மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்.

 

5.வாகன உரிமையாளரிடமிருந்து, அந்த வாகனத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் கடிதம்.

 

6.ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம்.

 

கட்டணம் :

 

கட்டணம் ரூ.250 (ஒரு வாகனத்திற்கு, பைக் மற்றும் காருக்கு சேர்ந்து எடுத்தால் 250+250 = ரூ.500) இதனுடன் சேவைக்கட்டணம்ரூ.100 கூடுதலாக கட்ட வேண்டும். போக்குவரத்து வாகனங்களுக்கு சேவைகட்டணம் ரூ.50 மட்டும்.

 

இதன்பின், நடைபெறும் ஓட்டுனர் தேர்வில் நீங்கள் வாகனத்தை சரியாக இயக்கத் தெரிகிறதா மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுகிறீர்களா என்பதை பார்த்து உங்களக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் டிரைவிங் லைசென்ஸ் வழங்க பரிந்துரைப்பார். இந்த தேர்வில் தோல்வி அடைந்தால் 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் விண்ணப்பித்து இதேபோன்று வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். அதில், வெற்றி பெற்றால் உங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் உடனே கிடைத்து விடும். 

 

ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க : http://transport.tn.nic.in/transport/appointment.do?_tq=1a38059e15442b6fca9c88d4a3ad8978 என்ற முகவரியை கிளிக் செய்யவும்.

 

பழகுனர் உரிமம் விண்ணப்பிப்பது எப்படி : http://www.valaitamil.com/how-to-apply-llr-in-online_11618.html

by Swathi   on 22 Jan 2014  7 Comments
Tags: Driving Licence   ஓட்டுனர் உரிமம்   டிரைவிங் லைசென்ஸ்   டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிப்பது எப்படி   ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிப்பது எப்படி   Driving Licence   Driving Licence Tamil  
 தொடர்புடையவை-Related Articles
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது? பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது?
ஓட்டுனர் உரிமம்(டிரைவிங் லைசென்ஸ்) பெற விண்ணப்பிப்பது எப்படி ? ஓட்டுனர் உரிமம்(டிரைவிங் லைசென்ஸ்) பெற விண்ணப்பிப்பது எப்படி ?
எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்) பெற விண்ணப்பிப்பது எப்படி ? என்னென்ன சான்றுகளை சமர்பிக்க வேண்டும் ? எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்) பெற விண்ணப்பிப்பது எப்படி ? என்னென்ன சான்றுகளை சமர்பிக்க வேண்டும் ?
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - போக்குவரத்து துறை எச்சரிக்கை !! செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - போக்குவரத்து துறை எச்சரிக்கை !!
கருத்துகள்
12-Apr-2019 15:56:39 mani said : Report Abuse
சைகிள் ஓட்டியதில்லை பைக்கும் ஓட்டியதில்லை காரை மட்டும் ஓட்டி காருக்கு லைசன்ஸ் பெற முடியுமா டூவீலர் லைசன்ஸ் இல்லாமல்
 
18-Mar-2019 07:07:08 அழகுபொன்னிருள் said : Report Abuse
பேட்ஜ் ஓட்டுனர் உரிமம் பெற வழி என்ன! தகுதி என்ன! நான் எட்டாம் வகுப்பு வரை படித்தவன்! எனக்கான வழிமுறைகள் கூறவும்.
 
08-Jan-2018 07:41:13 Śubash said : Report Abuse
ஓட்டுனர் உரிமம் தொலைந்தால் பெறுவது எப்படி
 
16-Jun-2017 05:22:34 மணிகண்டன் said : Report Abuse
ஹெவி எல் எல் ஆர் வைத்து வாகனம் ஓட்டலாமா
 
23-Apr-2017 06:56:47 ஜிவா said : Report Abuse
பைக் கார் 2 சேர்த்து 7500 வாங்கரனுங்க
 
08-Aug-2014 05:15:58 சரண்ராஜ் said : Report Abuse
வெறும் 550 ரூபாய் இருந்தால் மட்டும் போதும்மா எஅங்கள் ஊரில் 4000 ரூபாய் வங்குரங்கல் ஏத்தர்க்காக இதை ஏன் அரசாங்கம் கேட்டக மாட்டார் கல அங்கு பணி புரியும் அணைத்து அட் களும் அரசு ஊழியர் தன்னெஅ
 
27-May-2014 22:06:14 ஸ்ரீனிவாசன் said : Report Abuse
ஓட்டுனர் உரிமம் புதிப்பிக்க வேண்டும் !!!!அதன் விவரம் சொலமுடியுமா?????
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.