LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

அதிகரித்து வரும் விவாகரத்துகள் !! தவிர்ப்பது எப்படி !!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்  என்பது நம் முன்னோர்களின் கூற்று. 


இந்த கூற்றை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் முக்கிய பொறுப்பு உண்டு.


பெற்றோரும், சொந்தங்களும் புடை சூழ நடைபெற்ற திருமணங்களும் அல்லது நண்பர்கள் புடை சூழ நடைபெற்ற காதல் திருமணங்களில் கூட கணவன், மனைவிக்கு இடையே புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.


பிரச்னையை மனம் விட்டு பேசுங்கள் :


பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், முதலில் கோபப்படமாலும், பதட்டப்படாமலும் கணவன், மனைவி ஒன்றாக இருந்து, சமாளிக்க வேண்டும். 


அப்படி செய்யாமல், இந்த பிரச்னைக்கு நீதான் காரணம், இல்லை நீதான் காரணம் என்று மோதிக் கொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.


ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுங்கள் :


இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல தம்பதிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும்.


அன்பு – அரவணைப்பு :


ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லுங்கள். 


கணவன் மனைவி இருவரில் யார் தவறு செய்தாலும் அதை ஒத்துக் கொள்ளுங்கள், அதற்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டாதீர்கள். 


அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள். 


குடும்ப சந்தோஷம் நீடிக்க அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். 


மண வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியோடு இருக்கும்...

by Swathi   on 24 May 2014  0 Comments
Tags: விவாகரத்து   Avoid Divorce   Divorce   Vivagarathu           
 தொடர்புடையவை-Related Articles
அதிகரித்து வரும் விவாகரத்துகள் !! தவிர்ப்பது எப்படி !! அதிகரித்து வரும் விவாகரத்துகள் !! தவிர்ப்பது எப்படி !!
பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் ஒரு பார்வை !! பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் ஒரு பார்வை !!
விவாகரத்து சரியா? விவாகரத்து சரியா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.