LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்

கடந்த 2013 ஜனவரியில் தான் ட்விட்டர் தளம் பயனர்கள் தங்களின் மொத்த கீச்சுகளையும் Backup எடுத்துக் கொள்ளும் வசதியை வழங்கியது. முன்பெல்லாம் கீச்சுகளை பிரதி எடுக்க பெரும் பிரயத்தனமாக இருந்தது. favorite செய்வது ஒன்றே எளிதான வழியாக இருந்தது. அதிலும் 3200 கீச்சுகளுக்கு மேல் பின்னே செல்ல முடியாது. திடீரென ஒருநாள் டிவிட்டரில் மொத்த கீச்சுகளும் “0″ எனக் காட்டி பயமுறுத்தியது. இப்படி பல குழப்படிகளின் பின் ட்விட்டர் தளம் நமது கீச்சுகளை மொத்தமாக தரவிறக்கி கொள்ள வழி செய்தது. அதுவும் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பதிவில் நாம் காணப்போவது கீச்சுகளை மொத்தமாக தரவெடுப்பது மற்றும், தேவை இல்லாத கீச்சுகளை தேர்ந்தெடுத்து நீக்குவது.

1. முதலில் உங்களின் ட்விட்டர் settings பகுதிக்கு சென்று கீழே Your Twitter Archive – Request Your Archive சொடுக்குங்கள்.
backup

உங்களது கீச்சுகள் archive செய்யப்பட்டதற்கு We’ve Received Your Request என்று ஒரு செய்தி காட்டப்படும்.
request received

2. உங்கள் டிவிட்டர் கணக்கில் நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் archive அனுப்பப்பட்டிருக்கும். Your Twitter Download is Ready என வந்துள்ள மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைத் திறவுங்கள். இப்போது ட்விட்டர் settings பகுதியில் Your Twitter Archive – Download செய்து கொள்ளலாம்.
download achive

ஒருவேளை மின்னஞ்சல் வரவில்லையென்றால் ட்விட்டர் settings பகுதியில் Your Twitter Archive – Resend Email என்று இருக்கும். மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.


3. Download கொடுத்த பின், ட்விட்டர் archive ஆனது tweets.zip file ஆக உங்கள் கணினியில் சேமிக்கப்படும்.
save zip

அதை ஒரு folder இல் unzip செய்து கொள்ளுங்கள். அதில் இருக்கும் கோப்புகளில் Index.html தனை திறப்பதின் மூலம் உங்களது அனைத்து கீச்சுகளையும் மாதம்வாரியாக பட்டியலிட்டுப் பார்க்கலாம்.

ட்விட்டர் தொகுப்பில் கீச்சுகளை பார்க்க மட்டுமே முடியும். தேவை இல்லாத கீச்சுகளை அழிக்க வேண்டும் என்றால் அதில் நீங்கள் ஒவ்வொரு கீச்சாக தனி window/tab ல் திறந்து தான் அளிக்க வேண்டும். இதை எளிமைபடுத்த சிறிய script ஒன்றை @martani_net உருவாக்கியுள்ளார்.

4. இந்த Twitter Archive Eraser செயலியை பயன்படுத்த உங்கள் கணினியில் DotNet Framework இருக்க வேண்டும். அப்படி இருந்தால் StandAlone Versionஐ தரவிறக்கி கொள்ளுங்கள். Zip file ஆக தரவிறங்கும், unzip செய்து கொள்ளுங்கள். Install செய்ய அவசியமில்லை. அப்படியே பயன்படுத்தலாம். ஏதும் சிக்கல்கள், அல்லது Dotnet Framework இல்லாதபட்சத்தில் Installer Version தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

5. Eraser செயலியை திறந்ததும் முதலில் SignIn கேட்கும். ட்விட்டர் SignIn மூலம் Authorize Application கொடுக்க, ஒரு 7இலக்க எண் வழங்கப்படும். அதை Enter The PIN number ல் கொடுங்கள்.இதே போல் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செயலியை திறந்து வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் மொத்தமாக கீச்சுகளை அழிக்க விட்டுவிட்டு நம் வேலையைப் பார்க்கலாம். ஒவ்வொரு திறப்பிற்கும் 7இலக்க எண் பெற வேண்டும்.
enter pin

இப்போது உங்கள் ட்விட்டர் கணக்கை செயலி authorize செய்து விட்டது. இப்போது Next பொத்தானை அழுத்துங்கள்.
next

6. திறக்கும் window ல் Add Files என்பதை அழுத்தி உங்கள் ட்விட்டர் archive கோப்பிலிருந்து .js file களை இணைக்க வேண்டும்.
select files

அதாவது Tweets.zip தனை unzip செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா, அந்த folder ல் data -> js -> tweets sub folderகள் உள்ளே .js file கள் மாதம்வாரியாக இருக்கும். ஒவ்வொன்றாக தேர்வு செய்து அழிப்பது நல்லது. எளிதாக முடியும்.
deleting

7. கவனத்தில் கொள்க! அழிப்பதற்கு அனைத்து கீச்சுகளும் தேர்வு செய்யப்பட்டு இருக்கும், உங்களுக்கு தேவைப்படும் கீச்சுகளில் மட்டும் unchecked செய்து விடுங்கள். அழிக்க வேண்டிய, Tick செய்யப்பட்ட கீச்சுகளை ஒருமுறை சரிபார்த்துவிட்டு, கீழிருக்கும் Erase Selected Tweets! பொத்தானை அழுத்துங்கள். கீச்சுகளை அழித்து விட்டால் திரும்ப மீட்க வாய்ப்பு இல்லையாதலால் கவனம் தேவை.
clean

கீச்சுகள் அழித்து முடிந்ததும் Done! Everything Is Clean என்று செய்தி காட்டும். இப்போது மேலே இருக்கும் Back பொத்தானை அழுத்தி அடுத்த மாதத்தின் .js file தனை இணையுங்கள். அதற்கு முன் Remove Selected பொத்தான் மூலம் ஏற்கனவே அழித்த மாதத்தை நீக்கி கொள்ளுங்கள்.

இப்படி ஒவ்வொரு மாதமாக தேர்வு செய்து தேவை உள்ள கீச்சுகளை மட்டும் uncheck செய்து மற்றவற்றை மொத்தமாக விரைவாக அழித்து விடலாம். செயலி நல்ல வேகமாகவே செயல்படுகிறது. எப்படி பயன்படுத்துவது என்பது உங்களைப் பொறுத்தது. நீங்கள் மொத்தமாக எல்லா கீச்சுகளையும் அழித்து விட்டாலும், archive file லிருந்து கீச்சுகளை மறுபடி Copy Paste செய்து பழையதை புதிதாக ட்வீட் செய்து கொள்ளலாம்.

உங்களது ட்விட்டர் கணக்கை signout செய்துவிட்டு, சில மணி நேரங்கள் அல்லது ஒரு நாள் கழித்து உங்களது புதிய ட்விட்டர் archive மீண்டும் தரவிறக்கி கொள்ளலாம். உங்களது யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவிட வேண்டுகிறோம்.

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: Twitter   Backup Twitter   கீச்சு   ட்விட்டர்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.