LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ? தேவையான ஆவணங்கள் என்னென்ன?

வீட்டில் வைத்தது ஒரு பெயராக இருக்கும். கூப்பிடுவது ஒரு பெயராக இருக்கும். சிலர் தங்களது பெயரை மற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் பெயர் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?


பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.

கட்டணம் செலுத்தும் முறை:

பெயர் மற்றம் செய்யும் அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:

பெயர் மாற்றத்திற்கான காரணம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி பெறுவது?

அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:


சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:

சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

by Swathi   on 29 Dec 2014  10 Comments
Tags: Gazette Name Change   Name Change   அரசு பதிவேட்டில் பெயர் மாற்றம்   பெயர் மற்றம் செய்ய           
 தொடர்புடையவை-Related Articles
அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ? தேவையான ஆவணங்கள் என்னென்ன? அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி ? தேவையான ஆவணங்கள் என்னென்ன?
கருத்துகள்
14-Oct-2019 03:06:06 Madavan K P said : Report Abuse
I had changed my name K.P.Madavan instead of K.Mayavan. s/oPalaniyammal& Kandasamy.. my address 1/2, Mahalai street, mathiyalagan nagar, sulur, coimbatore-641402.. I have lost my gazzette book copy.. how I get back
 
17-Jun-2019 15:59:04 Nithiyanandam.T.A said : Report Abuse
Sir ,I have changed my name From T.A.Nithiyanantham ,S/O M.Arumugam,residing at 18,Gangs Block,Vignesh Avenue,Palayam bazzar ,Woraiyur ,Tiruchirappalli-620 003, my native district Tiruchirappalli hereforth changed to T.A.Nithiyanandam (during 2011-2012) and published in Tamil Nadu gazette and Tamil news paper.Now I lost that gazette published printed book .So please let me know the page number ,serial number in the page of gazette. please send me the copy of my change of name to the given mail I'd which is enable to show to bank as it is needed to submit in person to prove as am T.A.Nithiyanandam instead of T.A.Nithiyanantham
 
24-May-2019 14:12:02 உ.பேட்ரிக் சேவியர் said : Report Abuse
எனது பெயர் தமிழில் சரி ஆனால் ஆங்கிலத்தில் p பதில் b உள்ளதை மாற்ற வேண்டும்
 
29-Jan-2019 08:16:24 வெங்கடேஷ் said : Report Abuse
எனது அப்பா பெயர் கண்ணுப்பையன் எனது பள்ளி சான்றிதழ் மாதப்பன் என்று உள்ளது மாற்றம் செய்வதற்கு உதவுங்கள்
 
30-Jul-2018 10:45:23 சம்சுதீன் said : Report Abuse
என் பெயர் மணிகண்டன் நான் கடந்த 2016 ம் ஆண்டு முஸ்லிம் மதம் மாறி திருமணம் செய்து கொண்டு முஸ்லிம் மதம் பெயர் சம்சுதீன் என்று மாற்றம் செய்து கொண்டேன் எனக்கு ஒரு ஆவணம் இல்லை அதா்க்கு எனக்கு உதவி செய்மாறு கேட்டு கொள்கிறேன்
 
01-Feb-2017 09:40:17 கோ.பாலமுருகன் said : Report Abuse
தமிழ்நாடு அரசு கெஷெட் மூலம் பெயர் மாற்றம் செய்த பின் அனைத்து ஆவணங்கலும் பெயர் மாற்றம் செய்துக் கொண்டேன் ஆனால் மதிப்பெண் பட்டியலில் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை சொல்லவும் நான்றி
 
11-Jan-2017 21:26:14 சதிஷ் said : Report Abuse
பெயர் மாற்றம் பன்ன மற்ற அதுல எதும் பிரச்சன என்ன இருக்கு சொல்லுக பீலிஷ்
 
11-Jan-2017 20:52:34 சதிஷ் said : Report Abuse
பதிவேட்டில பெயர் மாற்றம் பன்னினால் ரேஷன் கார்ட் வொட்டர் ஐடி வேர சட்டிபிக்கட் பிரச்சன என்ன இருக்கு கொன்சம் தெலிவா சொல்லுங்க ப்லீஷ்
 
24-Dec-2016 06:48:01 Magesh said : Report Abuse
இதனால் ஏதேனும் பின்விழைவுகள் வருமா..! ரேஷன் கார்டில் பெயர் மாற்றிவிடலாமா.
 
31-Dec-2014 08:41:11 குருமூர்த்தி. கு said : Report Abuse
நன்றி ! நல்ல உபயோகமான தகவல்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.