LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் !

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.


2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.


3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.


4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.


5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.


6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.


7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.


8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

உண்மையை மற்றவருக்கும் பகிருங்கள்.

by Swathi   on 28 May 2014  4 Comments
Tags: தாழ்வு மனப்பான்மை   Inferiority Complex                 
 தொடர்புடையவை-Related Articles
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் ! தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் !
கருத்துகள்
25-Oct-2016 02:42:49 வினோத் said : Report Abuse
மத்தவங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியல, அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுருக்குமா, தெரிஞ்சு தான் சொல்ராங்கலா எண்ணம் இருக்கு.. வார்த்தை தடுமாறுது.. பேசவே தயக்கமா இருக்கு
 
24-Nov-2015 02:50:52 megala said : Report Abuse
இது எனக்கு ஒரு மறக்க முடியாத ஒரு விஷயம் என்னுடைய வாழ்க்கையில் அது என்ன என்றல் என்னுடைய தாழ்வு மனப்பான்மைஇன் காரணமாக பல சந்தோசங்களை இழந்து விட்டேன், எனக்கு உதவி செய்ய கூட யாருமில்லாத ஒரு தனிமனிதன நான் என்ன செய்வது ப்ளீஸ் ஹெல்ப் மீ . .
 
01-Nov-2015 04:35:55 sahana said : Report Abuse
எனக்கு நட்பு சரியாய் அமைவதில்லை என் கோவத்தினால் தாழ்வு மனப்பான்மையால் அவர்கள் விளையாட்டிற்கு சொன்னாலும் கூட கோவம் வருகிறது .. அவர்கள் மேல் எரிந்து விழுகிறேன் . என் நட்பை நான் அடியோடு எழந்து விட்டேன் எனக்கு uthavungal... நன் என்ன செய்ய vendum
 
26-Jun-2014 04:22:22 EZHIL said : Report Abuse
மிகவும் உபயோகமுள்ளது நாமும், ட்ரை பண்ணலாமே..........
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.