LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

இளம் வயதில் நரைமுடி அதிகமாவதை தடுக்க - ஆயுர்வேத மருத்துவம்

   தலைமுடியின் வேர்களின் ஆதாரமாக உள்ள தோலின் பாதுகாப்பு குறைவதால் நரை ஏற்படுகிறது. தோலின் அருகே சூடு அதிகமாவதால் மயிர்க்கால்களில் அழற்சி ஏற்பட்டு முடி நரைக்கிறது. உடலின் சூடு அதிகரிக்கக் காரணம் கோபம், சோகம், பயம், தாபம், கவலை போன்ற மன உணர்ச்சிகள் முடியின் வேர்ப்பகுதிகளில் சூட்டை அதிகப்படுத்தி முடி வெளுக்கிறது. மனதின் அமைதிக்கான நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டைக் குறைக்க எண்ணெய் தேய்த்துக் குளித்தல், இரு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தமாக்கப் பேதிக்குச் சாப்பிடுதல், இரவு படுக்குமுன் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் போன்றவை உதவுகின்றன.

 

   பிருங்காதித் தைலம் அல்லது பிருங்காமலகத் தைலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கேசம் வறண்டு சிக்குப் பிடிக்காமலும் அழுக்கடையாமலும் பழுப்பு, செம்பட்டை அடையாமலும் இருக்கத் தலை முடியில் தடவவும். இதில் கவனிக்க வேண்டியது - ஈரமுள்ள தலையில் எண்ணெய் தடவக் கூடாது. தலையில் ஈரம் உலர்ந்த பின்புதான் எண்ணெய் தடவ வேண்டும். எண்ணெயை லேசாகவாவது தலைக்குத் தடவிக் கொண்ட பின்னர்தான் தலைக்குக் குளிக்க வேண்டும். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிமுள்ளி, அதிமதுரத்தையும் பாலில் அரைத்து, பாலில் தளரக் குழப்பி, சிறிது சுடவைத்துத் தலைக்கு எண்ணெய் தடவி, இதையும் ஊறவைத்து குளிக்கவும். குடலினுள்ளே தங்கும் மலப்பொருள்கள் உடல் சூட்டை அதிகமாக்குகின்றன. அவற்றை நீக்க அடிக்கடி நீராகப் பேதியாகும்படி திராட்டை கடுக்காய்க் கஷாயம் அல்லது சூரத்தாவாரை விதையை ஊற வைத்த தண்ணீர் இரு மாதங்களுக்கு ஒருமுறை சாப்பிட வேண்டும். மலம் தினமும் சரியாக எளிதில் வெளியேறும் பழக்கமுள்ளவர்கள் கூட பேதிக்குச் சாப்பிடுவது அவசியம். மலப் பாதையைத் தேய்த்து அலம்புவது போன்று இது பயன்படுகிறது.நரைக்கு மற்றொரு காரணம் உடலின் போஷணைக் குறைவும் துவர்ப்பு, கசப்பு மிக்க பொருள்களை உணவில் குறைப்பதும்தான். திரிபலா சூர்ணம் 5 கிராம் வீதம் எடுத்து நெய், தேனுடன் கலந்து இரவில் படுக்குமுன் சாப்பிடவும். சியவனப்பிராசம் 1 ஸ்பூன் அளவு காலை, மாலை வெறும் வயிற்றிலும், நாரசிம்ஹ ரஸாயனம் 5 கிராம் காலை, இரவு உணவுக்குப் பிறகும் சாப்பிடவும். இவை உடல் போஷாக்கை ஏற்படுத்தி மயிர்க்கால்களுக்குப் பலமளித்து முடியைக் கறுக்கச் செய்யும்.

by Swathi   on 10 Dec 2012  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
27-May-2017 04:01:35 premkumar said : Report Abuse
மிகவும் பயனுள்ள குறிப்புகள். என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.