LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Inidan Law) Print Friendly and PDF

முதல் தகவல் அறிக்கை(First Information Report) பதிவு செய்வது எப்படி?

முதல் தகவல் அறிக்கை'. என்பது குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.


"இந்திய தண்டனைச் சட்டத்தில்,(ipc) அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.


உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட் டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.


சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக் கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும்.


அவருக்கும் மேல் உள்ள அதிகாரி களான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.


பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, 'குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்' ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்.


ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.

by Swathi   on 22 May 2014  12 Comments
Tags: File FIR   FIR   முதல் தகவல் அறிக்கை              
 தொடர்புடையவை-Related Articles
முதல் தகவல் அறிக்கை(First Information Report) பதிவு செய்வது எப்படி? முதல் தகவல் அறிக்கை(First Information Report) பதிவு செய்வது எப்படி?
விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை. விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை.
கருத்துகள்
17-Jan-2018 07:38:36 thileep said : Report Abuse
ரேஷன் அரிசியை ப்ளாக்கில் விற்பனை செய்கிறார்கள்..
 
23-Dec-2017 06:23:55 CHELLLAPPA said : Report Abuse
ஐயா வணக்கம் வெளிநாடு போவதற்க்காக ஒருவரிடம் பணத்தை கட்டி ஏமாந்து விட்டோம் கிட்டத்தட்ட 10 நபர்.அவர்கள் என் உறவினர் என்ற முறையில் நான் நம்பி கட்டினேன் அவர்களுடன் பேசிய வாய்ஸ் ரெகார்ட் இருக்கு அதை பயன்படுத்தி புகார் அளிக்கலாமா ஒரு 5 நபர்கள் சேர்ந்து ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார்
 
05-Oct-2017 16:52:59 பழனிக்குமார் said : Report Abuse
ஐயா, நான் வெளிநாடு செல்வதற்காக பாலகாட்டில் உள்ள ஒரு நபரிடம் பணம் கொடுத்தேன்.அவர் என்னை ஏமாற்றி விட்டார் இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் புகார் அழித்தேன். அனைத்து தரப்பு போலீஸ்கும் பதிவு தபால் அனுப்பினேன்.ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ரதி போடலாம் அப்டின்னு நினைத்தால் போலீசை பகைத்து கொள்வது போல் ஆகும் என்பதற்காக நான் அதை செய்யவில்லை ஆகையால் என்ன செய்தால் என் பணத்தை மீட்க முடியும் என்று விளக்கம் கொடுக்கவும். நன்றி
 
04-Oct-2017 08:35:17 உதயா said : Report Abuse
சார் யாரவது? லைசென்ஸ் எடுக்காம போலீஸிடம் மாட்டினால் போலீஸ் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் வண்டியை பிடிங்கி வைக்க போலீஸிக்கு அதிகாரம் இருக்கா? அப்படி பிடிங்கி வைத்தால் அந்த போலீஸ் மேல் எப்படி வழக்கு தொடர்வது?
 
25-Apr-2017 10:53:45 பாலமுருகன் .v said : Report Abuse
ஐயா என் தயை முன்றுபேர் சேர்த்து கொடூரமாக தகிக்கி கையே முறித்துவிட்டார்கள். வழகுக்கு பதிவச்செய்து நன்கு ஆண்டுக்காகியும்.நீதி மன்றத்திற்கு நடைமுறைக்க்கி வரவில்லை.என்ன செய்ய வேண்டும் ஐயா
 
24-Mar-2017 06:45:12 சுரேஷ் said : Report Abuse
தமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் மூலம் FIR பதிவு செய்யும் வசதி இப்போது உள்ளது www.tnpolice.gov.in என்ற முகவரியில் சென்று புகார் அளிக்கலாம்.
 
04-Mar-2017 04:48:00 க.RAJADURAI said : Report Abuse
FIR - இத பத்தி மக்களிடம் விழிப்புணர்வு இருந்த நல்லது .....போலீஸ் நல்ல முறைல மக்களை போலீஸ் ஸ்டேஷன் ல நடத்தணும் .......மகிழ்ச்சி ........
 
11-Feb-2017 07:55:11 குருமூர்த்தி.v said : Thank you
அய்யா , முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்ட தகவல் மாற்ற வேன்டும் எனில் என்ன செய்ய வேண்டும் காவல் நிலைத்தில் கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தான் மாற்ற வேண்டும் என்கிறார்கள்
 
03-Feb-2017 22:58:16 மாயா said : Report Abuse
இப்பொது நம் ஒருவர் மீது பதியும் FIR கு குற்றம் சட்டப்பட்டவரின் மீது தவறு அதிகமாக இருப்பின்,நம் மீது உள்ள கோபத்தினால் மீண்டும் நம் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா. .வழக்கு பதிய பட்ட பின்பும் கூட நம்மை தொல்லை செய்து வந்தால் என்ன செய்வது ? .
 
02-Feb-2017 12:19:21 மொதமேது rafeek said : Report Abuse
வோட்டர் ஈத் கார்டு மிஸ்ஸிங்
 
02-Jan-2017 02:27:35 prithivi said : Report Abuse
Farm la adu madu mencha ena case kudukarthu ji
 
07-May-2016 00:48:58 premkumar k said : Report Abuse
accident nadanthu piragu yan makkal help pana bayapadranga
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.