LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன?

ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை நாம் எடுத்துக்கொள்ளலாமா?

எடுத்துக்கொள்ளலாம். நமது பகுதியில் உள்ள ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாய தேவைகளுக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

யாரிடம் முன் அனுமதி பெறவேண்டும்?

மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது இதற்காக அவரால் நியமிக்கப்பட்ட அலுவலரிடமோ முன் அனுமதி பெறவேண்டும்.

விவசாய நிலம் உள்ளவர்கள் மட்டும் தான் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள முடியுமா?

இல்லை. பொதுமக்களும் தங்கள் தேவைகளுக்காக வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம்

ஒருவர் தனது வீட்டுப் பயன்பாட்டிற்கோ அல்லது விவசாய பயன்பாட்டிற்கோ எவ்வளவு மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அளவீடு ஏதும் உள்ளதா?

உள்ளது. 30 கன மீட்டர் (தோராயமாக 10 யூனிட் லோடு) அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம்

இந்த அளவிற்கு வண்டல் மண்ணை எடுக்க அரசுக்கோ அல்லது வேறு எவருக்கோ கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?

இல்லை. எவ்வித கட்டணமும் யாருக்கும் செலுத்த தேவையில்லை. ஆனால் , மேற்குறிப்பிட்ட அளவிற்கு மேல் மண் எடுக்க வேண்டுமெனில் மாவட்ட நிர்வாகம் கூறும் தொகையினை செலுத்த வேண்டும்.

எந்தெந்த ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம்?

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகிய இவ்விரண்டு அரசுத் துறைகளின் பொறுப்பில் இருக்கும் ஏரி குளங்களில் நாம் வண்டல் மண் எடுக்கலாம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் மற்றும் இதர நீர்நிலைகள் இத்துறைகளின் பொறுப்பில் வரும். எனவே நமது பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான ஏரி மற்றும் குளங்களில் நாம் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கென உள்ள அரசாணை எண் என்ன?

அரசாணை நிலை எண் 233, தொழில்துறை (எம்.எம்.சி.2) நாள்: 23.09.2015

அரசாணையை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tnmine.tn.nic.in/GO/G.O.MS.NO.233.pdf

நன்றி: திரு.ரமேஷ் கருப்பையா, தமிழ்க்காடு, தொழுதூர், கடலூர் மாவட்டம் 9444219993

ஏரி குளங்களில் தூர்வாரி நீர் பெருக்குவோம் ! நிலங்களில் வண்டல் மண் இட்டு, வளம் பெருக்குவோம் !!

by Swathi   on 13 Jun 2018  0 Comments
Tags: வண்டல் மண்   ஏரி   குளங்கள்   விவசாய தேவை   Vandal Soil   Vandal Man     
 தொடர்புடையவை-Related Articles
விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன? விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன?
செவ்வாய் கிரகத்தில் 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு !! செவ்வாய் கிரகத்தில் 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.