LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- உதடு (Lip)

அழகான உதடுகளை பெற அற்புதமான ஆலோசனைகள் !!

முகத்தின் அழகை வெளிப்படுத்துவதில், கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது. 


ரோஜா இதழ்கள் போன்ற நமது உதடுகளில் கருமை, பிளவு, ஓரங்களில் புண், ரத்தக்கசிவு என்று அவ்வப்போது ஏதாவது ஒன்று ஏற்பட்டு, நம்மை வருத்தப்பட வைத்துவிடும்.


வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே உதடுகள் பொலிவு பெறும். 


மேலும் உதடுகளை பராமரிக்க சில ஆலோசனைகள் இதோ, 


உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:


கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், ‘வாசலின்’ தடவிக் கொள்ளலாம். 


வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். 


வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின் “இ’ சத்துகள் நிறைந்த, உணவுகளை சாப்பிடலாம். 


உதடு பராமரிப்பிற்கு பொதுவான சில ஆலோசனைகள் :


உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.


பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.


வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.


தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.


வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.


உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.


அடுத்தவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.


இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.


தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.


லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.


லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.


முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.


தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.


முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.


இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.


கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.


உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.


லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.


லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.


உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.


குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமபூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.  

by Swathi   on 21 May 2014  21 Comments
Tags: உதடு சிவப்பாக மாற   Chapped Lips Tips   Lips Care Tips   உதடு கருமை நீங்க   உதடு        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
அழகான உதடுகளை பெற அற்புதமான ஆலோசனைகள் !! அழகான உதடுகளை பெற அற்புதமான ஆலோசனைகள் !!
கருத்துகள்
27-Sep-2020 00:05:50 Karthi said : Report Abuse
என்னுடைய உதடு கீழ் உதடு மட்டும் பெரியதாக உள்ளது அதை சிறியதாக மாற்ற என்ன வழி சொல்லுங்கள் சார்
 
26-Mar-2019 17:19:02 karthick said : Report Abuse
என்னுடைய உதடு பெரியதாக உள்ளது.. சிறியதாக மாற்ற வழி சொல்லுங்க
 
27-Dec-2018 14:58:48 Sabana said : Report Abuse
Yennoda lip perusadhaga ulladhu chinnadhaga matra tips sollunga
 
10-Nov-2017 06:41:49 karthika said : Report Abuse
மீ லிப்ஸ் பிளாக் இருக்கு.. நா லிப்ஸ்டிக் use பண்ணி பிளாக் maritushu சிஸ்டர் எப்புடி சரி பண்ணுறது ப்ளீஸ் டிப்ஸ் சொல்லுக... நா லாஸ்ட் 3years லிப்ஸ்டிக் யூஸ் பண்ணுரேய்.. என்னால வீட்டா முடியல சிஸ்டர், லிப்ஸ்டிக் போடடின ரொம்ப பிளாக் இருக்கு சிஸ்டர்... ப்ளீஸ் டிப்ஸ் சொல்லுக..
 
27-Jan-2017 00:56:57 லோகேஷ் said : Thank you
எனது லிப்ஸ் மிகவும் பெருசாக உளது அதை சிறிதாக மாறும் வலிகள் குறுக
 
27-Jan-2017 00:56:55 லோகேஷ் said : Thank you
எனது லிப்ஸ் மிகவும் பெருசாக உளது அதை சிறிதாக மாறும் வலிகள் குறுக
 
26-Nov-2016 22:03:27 Revathy said : Report Abuse
உதடுகள் மிகவும் வறண்டது போல் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
 
07-Jul-2016 01:48:20 மணிமேகலை.A said : Report Abuse
என்னோடைய உதடுகள் நன்றாக உள்ளது ஆனால் சில நேரத்தில் கருப்பாக மாறி விடுகிறது. சில நேரத்தில் மிகவும் வரட்சியாகவும் ஆகி விடுகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கூறுங்கள். அது மட்டும் இல்லாமல் எனக்கு உடல் எடை அதிகரிக்க குறிப்புகள் இருந்தால் கூறுங்கள். பிலீஸ்..............
 
15-Jun-2016 07:30:18 ராம் said : Report Abuse
என்னுடைய உதடுகள் மிகவும் அதிக கருமையாக உள்ளது அதை நீக்க சிறந்த தீர்வு சொல்லுங்க.மேலும் பல்லில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவது எவ்வாறு சொல்லுங்க.
 
27-May-2016 02:48:26 pandi said : Report Abuse
சூப்பர் சார்
 
20-Mar-2016 06:56:22 மணி bharathi said : Report Abuse
Vathadu பாதி சிவப்பு ,வடித்தோம் இருகின்றன thiruvu
 
11-Feb-2016 00:19:02 anu said : Report Abuse
En லிப்ஸ் first பிங்க் இருந்துச்சி இபோ black ஆகிடே வருது நல்ல டிப்ஸ் சொல்லுங்க அப்புறம் eyes அழகா இருக்க prite இருக்க டிப்ஸ் சொல்லுங்க ப்ல்ழ்
 
02-Feb-2016 10:41:20 pakeer mohamed said : Report Abuse
மை லிப்ஸ் பிக் ரொம்ப அத எப்படி சரிபன்னுவது அதை எப்படி சின்னம்மாக்குவது ப்ளீஸ் சிக்கிரம் மருந்து
 
13-Dec-2015 07:50:17 banu said : Report Abuse
என்னோட லிப்ஸ் பழசக் இருக்கு ப்ல்ழ்ழ்ழ் யன்ன பண்றது சொல்லுங்க
 
09-Nov-2015 08:42:33 Raja said : Report Abuse
எனக்கு எந்த பழக்கமும் கிடையாது. நான் ஒரு டீடோட்லேர் ஆனா என்னோட உதடு மிகவும் கருமையாக இஉக்கிரது இதர்குஎஅதெனும் தீர்வு சொல்லுங்க ப்ளீஸ்.
 
26-Jul-2015 01:20:02 A.SUNDAR said : Report Abuse
நன் மாநிறமாக இருப்பேன் naan வெள்ளையாக எதாவது இயற்கை குறிப்புக்கள்
 
12-Jul-2015 07:21:28 revathi said : Report Abuse
na munadi irunthatha Vida black akiday vare atha sari panalam tip kuduga plzzz
 
18-Mar-2015 11:11:36 subhashini said : Report Abuse
பழசக் லிப்ஸ்
 
30-Nov-2014 03:28:55 kaviya said : Report Abuse
எனுடைய லிப்ஸ் பளக்க இருக்கு அதுக்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்
 
17-Oct-2014 03:50:51 rajeshwari said : Report Abuse
என் உதடு வெள்ளையாக மாறுகிறது. அதனால் அசிங்கமாக இருக்கிறது. இதற்கு வலி சொலுங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
 
22-May-2014 20:20:41 ஜெயக்குமார் said : Report Abuse
நன் ஸ்மோகர் அதனால் என் உதடு கருப்பாக இருக்கிறது இதற்கு எதாவது வழி சொல்லுங்க
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.