LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உடலை உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்...

1. வாரத்திற்கு இரண்டு முறை, உடம்பு மற்றும் தலையில் நன்றாக எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக ஊறிய பிறகு சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.

 

2. தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். மேலும் சருமத்தில் வைட்டமின் டி சத்து அதிகரிக்கும்.

 

3. கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். பாடி ஸ்ப்ரே அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும்.  

 

4. 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவதும் தடவி வந்தால் சருமம் புது பொலிவுடன் இருக்கும்.

 

5. சூடான நீரில் 5 சொட்டுகள் கேமோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள்.  சுவாசம் சீராகும்.  சருமம் மிருதுவாகும்.

 

6. வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். 

 

7. இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்து தினமும் குளிப்பதற்கு முன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளபளவென மின்னும்.

 

8. காலை 5 .30 மணிக்கு தேன் கலந்து ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிற்றில் எந்த பிரச்சனையும் அண்டாமல் வயிறு லேசாக இருக்கும். 

 

9. காலை 7.30 மணிக்கு மூன்று வகையான பழத்துண்டுகள், ஒரு கிளாஸ் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.

 

10. காலை 9.30 மணிக்கு ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடியுங்கள், இது உங்கள் கண்ணை பிரகாசமாக வைத்திருக்க உதவும்.

 

11. காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட் சாப்பிடுங்கள்.  இது உங்கள் சருமத்தை பளபளவென வைத்திருக்கும். 

 

12. மதியம் 2.30 மணிக்கு ஒரு கிளாஸ் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

 

13. இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக்கும்.இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது.  சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும்.   

by Swathi   on 29 Sep 2013  3 Comments
Tags: உடல் உற்சாகம்   உடல் சுறுசுறுப்பு   Body Stamina              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உடலை உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்... உடலை உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்...
கருத்துகள்
13-Mar-2017 04:15:43 Arun said : Report Abuse
I have no money than how to follow the is kind of points.
 
15-Jul-2016 23:22:18 MOHAMED ASHIQ ALI said : Report Abuse
Mugathirku melum azhagu serppathu eppdi give the tips.. Handsome look vara enna tips
 
25-Nov-2013 22:59:10 Maniraj said : Report Abuse
நல்ல பயனுள்ள கருத்து
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.