LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...

பூரிக்கு தேவையானவை:
1. மைதா - ஒரு கப்
2. ரவை - 50 கிராம்
3. தண்ணீர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பூரி செய்முறை :
பூரி செய்வதற்கு: மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைச் சேர்த்து, மாவைப் பிசைந்து, அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து அந்த உருண்டைகளைத் தேய்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை சிறு பூரிகளாகப் பொரிக்கவும். பூரி உள்ளங்கைக்குள் கொள்ளும் அளவுக்கு சிறியதாக இருக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையானவை :
1. உருளைக்கிழங்கு - 2
2. சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
3. மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
4. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
5. உப்பு - தேவையான அளவு.

மசாலா செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, நன்கு உதிர்த்துக்கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து மசாலா செய்து வைத்துக்கொள்ளவும்.

பானிக்கு தேவையானவை :
1. புதினா - 1/2 கட்டு
2. கொத்தமல்லித் தழை - 1/2 கட்டு
3. பச்சைமிளகாய் - 4
4. வெல்லம் - 50 கிராம்
5. புளி - 50 கிராம்
6. சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
7.உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

பானி செய்முறை : புளியைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டவும். பிறகு வெல்லத்தை அதனுடன் சேர்த்து நன்கு கரைக்கவும். அதனுடன் புதினா, கொத்தமல்லித் தழையை அரைத்துச் சேர்க்கவும். பிறகு, பச்சைமிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து புளித்தண்ணீருடன் சேர்த்துக் கலக்கவும்.

பூரியில் சிறிய ஓட்டை போட்டு அதனுள் சிறிது மசாலாவை வைத்து, பானியில் தோய்த்து எடுத்துப் பரிமாறவும்.

by Swathi   on 03 Mar 2017  4 Comments
Tags: பானி பூரி   பானி பூரி செய்வது எப்படி   பானி பூரி வீட்டில் செய்வது எப்படி   பானி பூரி செய்முறை   பானி பூரி தயாரிப்பது எப்படி   சுவையான பானி பூரி   பானி பூரி செய்ய தேவையானவை  
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
கருத்துகள்
11-Nov-2020 14:48:41 Manikandan said : Report Abuse
Maitha and ravai gram la sollunga
 
17-Sep-2019 13:43:26 Subburaj said : Report Abuse
இ like
 
23-Dec-2018 11:13:54 மனோ said : Report Abuse
இனி சுகாதாரமாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். வீட்டு சமையல் குறிப்புகள் எல்லாமுமே பிரமாதம்.
 
23-Dec-2018 10:57:02 மனோ said : Report Abuse
இனி சுகாதாரமாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.