LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

ட்விட்டரில் இசையை பகிர்ந்திடும் வழிகள்

இணையம் வாயிலாக விரைவாக, எளிதாக மற்றும் உடனடியாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வழிகளில் அதிமுக்கியமான ஒன்றாக ட்விட்டர் நிலைபெற்றுள்ளது. புதுமையான வழிகளில் பயனர்கள் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பயன்பாட்டு கோப்புகளை ஒருங்கிணைத்து வெறும் 140 எழுத்துகளுக்குள் பகிர்ந்துகொள்ள உதவுகிறது. இசை மற்றும் பாடல்களைப் பகிர்ந்திடவும் டிவிட்டரில் பல வழிகள் உள்ளன. அவற்றில் சிறந்த சிலவற்றை பார்ப்போம்.
 
Song.ly: ரஷ்ய ஊடக தேடல் இயந்திரமான Tagoo-வால் இயக்கப்படும் டிவிட்டர் இசைப்பகிர்வு சேவை. ஒரு பாடகர் அல்லது பாடலை தேடி நீங்கள் டிவீட் பொத்தானை அழுத்தியவுடன், அந்த பாடலுக்கான குறுக்கப்பட்ட சுட்டி மற்றும் பாடல் பற்றிய வர்ணனையுடன் கூடிய டிவீட் தானாகவே உருவாக்கப்பட்டு உங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்படும். IE மற்றும் FireFox ற்கான நீட்சி, நிரலாக்க இடைமுகம் போன்றவையும் இதில் உண்டு.Tinysong : P2P முறையில் இயங்கும் Grooveshark எனும் இசைப்பகிர்வு தளத்திற்கான அடிப்படை சுட்டி குறுக்கியாகும். தேவையான இசையை எடுத்தாள இது மிகப்பெரிய இசை நூலகமாக இருப்பது சிறப்பு. டிவிட்டறுடன் இறுக்கமாக ஒருங்கிணைக்கப் படவில்லை என்பதே குறை. இசை அல்லது பாடலை தேடுதல், பின் தேர்வு செய்தல், பின்பு அதற்கான குறுக்கப்பட்ட சுட்டியை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளுதல் என பயன்படுத்துவது மிக எளிது.. மேலும் API நிரலாக்க இடைமுகம் இதில் இருப்பதால் நிரலாளர்கள் மற்றும் பதிவாளர்களால் எளிதில் நிரலிகளுடன், பதிவுகளுடன் ஒருங்கிணைக்க முடிகிறது.

Twisten.fm : Tinysong தளத்தைப் போலவே இதிலும் Grooveshark நூலகத்திலிருந்து பாடல்களை தேடித் தேர்வு செய்யும் வசதி உள்ளது. ஆனால் மேற்கொண்டு இரண்டு விதமான பகிர்தல்களுக்கு இதில் இடமுண்டு. ஒன்று நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலை நேரடியாக தளத்திலிருந்து பகிர்வது, மற்றொன்று உங்கள் நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்களை கண்காணித்து உங்கள் Twitter Timelineல் ஓடச்செய்வது.

Blip.fm : டிவிட்டர் பாணியிலேயே இசைக்கென்றிருக்கும் சேவை தளம். டிவிட்டரைப் போலவே பயனர்கள் சமகாலத்தில் பாடல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வசதி இதில் உண்டு. டிவிட்டர் தளத்துடனும் ஒருங்கிணைந்து, உங்கள் கணக்கு (synchronize) ஒத்திசைக்கப் பட்டவுடன் ஒரே தட்டலில் பாடல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி செய்கிறது. டிவிட்டரின் retweet சேவையைப் போன்றே reblipping எனும் வசதி இதில் உள்ளது. பயனர்கள் தங்களை ஒத்த இசைச்சுவை உடையவர்களை கண்டு கொள்வதோடு சமகால வானொலி நிலையம் போன்றதொரு இசைக் கோவையையும் உருவாக்கி கொள்ள முடியும்.

SongTwit : இதில் imeem மற்றும் youtube தளங்களிலிருந்து பாடல்களை தேடவும், mp3 பாடல்களின் சுட்டிகளைக் குறிக்கவும், MP3 M4A WAV WMA OGG அல்லது ACC வகை இசைக் கோப்புகளைப் பதிவேற்றவும் முடியும். உங்கள் பாடலுக்கான குறுக்கப்பட்ட சுட்டியுடன் மீதமுள்ள 115 எழுத்துக்களில்
உங்களுக்கான செய்தியை நீங்களாகவே நிரப்பி டிவீட் செய்ய வேண்டும்.

Twittytunes : yahoo வினுடைய foxytunes இசை இயக்கியிற்கான Firefox உலவியின் துணை நீட்சியே TwittyTunes. பாடல் பாடப்பட்டிருக்கும் பொழுது TwittyTunes பொத்தானை ஒரே முறை அழுத்துவதன் மூலம் பயனர்கள் தாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் பாடலை மற்றவர்களுக்கு டிவிட் மூலம் தெரியப்படுத்தச் செய்கிறது. இத்தகைய டிவீட்டுகளில் பாடல்களுக்கான நேரடிச் சுட்டிகள் இருப்பதில்லை. மாறாக பாடல், பாடகர்களைப் பற்றிய Foxytunes தகவல் தளங்களின் துண்டுப் பிரதிகள், இசை காணொளிகளின் இணைப்பு சுட்டிகளைக் கொண்டிருக்கும்

Imeem : இசைச்சேவையை அளிக்கும் தளங்கள் சிலவற்றில் “இதை டிவீட்டு” (tweet this) எனும் ஒரு பொத்தான் இணைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அத்தளங்கள் இந்த மிகபெரிய இசை நூலக தொகுப்பு தளத்தைச் சார்ந்தே செயல் படுகின்றன. இது ஒரு மிகவும் எளிய வழிமுறை. நீங்கள் ஒரு பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அதை பற்றி டிவீட்ட இந்த “tweet this” பொத்தானை அழுத்தினால் போதும். பாடல் மற்றும் பாடகரின் விவரங்களை அடங்கிய imeem தளத்தின் சுட்டி உங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிரப் படும்.

Twiturm : விசிறிகளுடன் தங்களது இசைக்கோப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்பும் இசைக்கலைஞர்களை இலக்காக கொண்ட ஒரு சேவை தளம் twiturm. இதில் “urm” என்பது “ur music” அதாவது உங்கள் இசை என்பதைக் குறிக்கிறது. இந்த தளமானது பயனர்கள் தங்கள் இசைக் கோப்புகளை பதிவேற்றவும், இணையத்தில் ஏற்கனவே உள்ள பாடல்களைக் தேடவும், அவற்றின் சுட்டிக் குருக்கிகளை டிவிட்டரின் மூலம் twiturm பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. பார்வையாளர்கள் பாடல்களை கேட்கவும், retweet செய்யவும், தரவிறக்கம் செய்யவும் முடியும். அது மட்டுமேயன்றி பாடல் எவ்வளவு முறை கேட்கப்பட்டது, தரவிறக்கப் பட்டது போன்ற புள்ளி விவரங்களையும் பெற முடியும்.

Twt.fm : OAuth எனப்படும் திறந்த அங்கீகார முறை கொண்டு டிவிட்டர் தளத்துடன் நம்மை இணைக்கிறது. உங்கள் இசை டிவீட்டுகள் மட்டும் அடங்கிய தனி பக்கத்தை ஃபிளாஷ் இயக்கியுடன் உதவியுடன் மறு உருவாக்குகிறது. SoundCloud, Imeem போன்ற தளங்களிலிருந்து பாடல்கள், Youtube லிருந்து காணொளிகள் தேடவும், சுட்டிகளை குறுக்கி நேரடியாக இணைக்கவும் முடியும். சிலநேரங்களில் துரதிர்ஷ்டவசமாக பாடகர்கள் அல்லது பாடல் வரிகள் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொடுத்து தேடும் வாய்ப்பில்லாமல் பாடலின் முழுப்பெயர் மற்றும் பாடகர்கள் விவரத்தை மிகச்சரியாக கொடுக்க வேண்டியிருக்கிறது.

Musebin : உங்களுக்கு பிடித்த இசைத்தொகுப்புகள், பாடல் தொகுப்புகள் போன்றவற்றை இசைக்குறியீடுகளுடன் கூடிய நேர்த்தியான சிறு சுட்டிகள் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள உதவும் தளமே Musebin. ( உ.ம் http://♬.ws/ ) பகிரப்படும் சுட்டிகளின் மூலம் இணைய பக்கமானது பாடல், பாடல் வெளிவந்த வருடம், சாதனை விபரம், முகப்பு உறை படங்கள், மேலதிக தகவலுக்கான இணைப்புகள் மற்றும் பாடகர் பற்றிய டிவீட்டுகளின் தொகுப்பு (stream ) போன்றவற்றை கொண்டிருக்கும்.

நண்பர்களுடன் பாடல்களை கேட்டு பகிர்ந்து மகிழ்ந்திட பயனுள்ள இந்த பதிவினை RT செய்து அவர்களுக்கு பரிந்துரையுங்கள்.

Guest Post By @ganesukumar

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: மியூசிக்   ட்விட்டர்   இசை   ட்விட்டர் பகிர்வு   Twitter   Music   To Share Music  
 தொடர்புடையவை-Related Articles
”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும்  டிசம்பர் 18 முதல் 25 வரை ”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும் டிசம்பர் 18 முதல் 25 வரை
24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!! 24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!!
இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!! இசை வெளியீட்டு விழாவில் குட்டி கதை!! வருத்தம் தெரிவித்த விஜய்!!
சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்... சிங்கம் 3-ல் அனிருத் இல்லையாம்...
கபாலிக்கு பிறகு விஜய் 60!! கபாலிக்கு பிறகு விஜய் 60!!
பரபரப்பாக நடந்து முடிந்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா !! பரபரப்பாக நடந்து முடிந்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா !!
பறையிசை - ஒரு பார்வை பறையிசை - ஒரு பார்வை
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.