ஸ்டெம் செல்களை வைத்து இதுவரை இதய செல்கள், குடல் செல்கள், கல்லீரல் செல்கள், நரம்பு செல்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்நிலையில், ஸ்டெம்செல்கள் மூலம் முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மனித ஸ்டெம்செல்களைக் கொண்டு முதன்முறையாக செயல்பாட்டு நுரையீரல் செல்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், நுரையீரல் நோய் குறித்த மாதிரிகளை ஆய்வு செய்வதிலும், மருந்துகளைப் பரிசோதிப்பதிலும், மனித நுரையீரல் வளர்ச்சிகளைப் பற்றி அறிவதிலும், மாற்று நுரையீரல் திசு உருவாக்குவதிலும் முக்கியத்துவம் பெறுவதாக கருதப்படுகிறது.
செயல்பாட்டு நுரையீரல் செல் கண்டுபிடிப்பு குறித்து, மருத்துவ பேராசிரியர் ஹான்ஸ் வில்லியம் கூறுகையில், இந்த புதிய கண்டுபிடிப்பு, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும். இவற்றை முறையாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பல வருடங்கள் ஆகும் என்றபோதிலும், ஒரு நோயாளிக்கு அவரது தோலை பயன்படுத்துவதன் மூலம் நுரையீரல் மாற்று சிகிச்சை அளிப்பது குறித்து நாம் யோசிக்கத் தொடங்கமுடியும்' எனத் தெரிவித்துள்ளார்.
|