LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !!

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி , ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ரோமியோ ஜூலியட். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சுமாரான ஹிட் பெற்றுள்ளது. முன்னதாக படத்தின் ஒரு பாடலாக அனிருத் பாடிய டண்டனக்கா பாடல் வெளியானது. அப்பாடலில் டி.ஆரை அவமதித்ததாக கூறப்பட்டது, இது பற்றி நடிகர் ஜெயம்ரவி கூறும்போது,

ரோமியோ ஜூலியட் படத்தில் நான் விஜய டி.ராஜேந்தரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னபிக்கையும், எதுவும் என்னால் முடியும் முயற்சி செய்து பார். இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும் என்கிற அவரது தன்னம்பிக்கை தான் என் கதாப்பாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன்.

அதனால் தான் அவரது எவர்கிரீன் வரிகளான டண்டணக்கா என்கிற வரிகளையும், அவரையும் சேர்த்து இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம். எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாக குறிப்பிடவில்லை. அவரை பெருமை படுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப் பட்டுள்ளது. நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே மாதிரியே எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப்படுகிறேன்.

அதனால் தயவு செய்து இந்த பாடலை யாரும் ரீமிக்ஸ் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக கூறியிருக்கிறார் ஜெயம் ரவி..

by Swathi   on 17 Mar 2015  0 Comments
Tags: ஜெயம் ரவி   Jayam Ravi   T. Rajendar   டி.ராஜேந்தரின்   டண்டணக்கா   Dandanga     
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !! கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !! டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !!
ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா? ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?
ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !! ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !!
பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !! பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !!
ஜெயம் ரவிக்கு ஜோடியானார் அஞ்சலி !! ஜெயம் ரவிக்கு ஜோடியானார் அஞ்சலி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.