LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

முடிந்தது ஐ படத்தின் படபிடிப்பு... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்...

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் ஐ.


இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். 


கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ஐ படத்தின் பாடல்களும், டீஸரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீஸரை இதுவரை 60 இலச்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கு முன்பு எந்த ஒரு தமிழ் படத்தின் டீஸரையும் இவ்வளவு பார்வையாளர்கள் பார்த்ததில்லை. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்த ஐ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. 


இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் படத்தின் இயக்குனர் ஷங்கர், நாயகன் விக்ரம், நாயகி எமி ஜாக்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த தகவலை படத்தின் நாயகியான எமி ஜாக்சனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஐ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த சந்தோஷத்தில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

ஐ படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவிலேயே ஐ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 26 Sep 2014  0 Comments
Tags: I Movie   I Movie Shooting      ஐ திரைப்படம்           
 தொடர்புடையவை-Related Articles
புல்ஸ் ஐ ஆப்பம் புல்ஸ் ஐ ஆப்பம்
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !! ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !!
புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !! புலியின் ஒரு வார வசூல் 71 கோடியாம் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !! புலி குடும்பத்தோடு ரசிக்கவேண்டிய படம் : சொல்கிறார் ஜீவா !!
கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !! கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.