LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் : அர்ஜுன் !!

எல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது. என்ற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் - 2 படம்  மூலம் சொன்னதற்காக படம் பலமான வரவேற்பை பெற்ற தெம்பில் இருந்தார் அர்ஜுன். அவரை சந்தித்தோம்.


தனியார் பள்ளிகூடங்களை எல்லாம் அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல காரணம் என்ன ?


மே மாதம் வந்தாலே நிறைய பெற்றோர்கள் ஸ்கூல் பீஸ் கட்ட ஆலாய்ப் பறக்கிறதை பார்த்திருக்கிறேன் . சினிமா தொழிலாளர்கள் நிறைய பேர் பீஸ் கட்ட உதவி கேட்டு வருவதை தொடர்ந்து பார்த்திருக்கிறேன் பாவமாக இருக்கும். கல்விங்கிறது அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சி. ஒருத்தனின் வளர்ச்சியையும், வருங்காலத்தையும் பணம் என்கிற காரணத்தைக்  காட்டி தடுக்க நினைப்பது பாவமில்லையா ! வசதியான வீட்டில் பிறந்த குழந்தைகளை விட ஏழை குழந்தைகள் புத்திசாலிகளாக  இருப்பதை பார்த்திருக்கிறேன். அந்த ஏழை குழந்தைக்கும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இந்த பதிவு.


சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாமே !


உண்மை தான் நல்ல கருத்தை நல்ல கருத்தாக சொல்ல முற்பட்டால் டாக்குமென்டரி பீலிங் வந்துவிடும்.அதற்காகத் தான் கமர்ஷியல் பார்முலாவை புகுத்தினேன். அதுதான் இன்று வெற்றியை கொடுத்திருக்கிறது. நான் நடிகனாக மட்டும் யோசிக்க வில்லை இரண்டு பெண்களுக்கு தகப்பனாகவும் யோசித்தேன்.. வசதி இருந்ததால் தான் என் மகள்களை படிக்க வைத்தேன்..வசதி இலையென்றால்.... நான் அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன்.


ஜெய்ஹிந்த் - 2 அனுபவம் எப்படி ?


ஒன் மேன் ஆர்மி என்பார்களே! அப்படிதான்  இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என நான்கு பக்கம் யோசிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிக்காகவும் உழைக்க வேண்டும் அப்பாடா என்று ஆகிவிட்டது. படம் வெளியாகி வெற்றி என்று ஆன பிறகு பட்ட கஷ்டமெல்லாம் சந்தோஷமாகி விட்டது.


அடுத்த படம் பற்றி ...


நிறைய பெற்றோர்கள் ஜெய்ஹிந்த் -2 படத்தை பார்த்து பாராட்டுகிறார்கள் . அதனால் அடுத்தும் வேறொரு அழுத்தமான கதை களத்தோடு விரைவில் துவங்க உள்ளோம். பணம் மட்டுமே நிறைவை தராது. சமூகத்துக்கு நல்லதை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்த போகிறேன் என்றார் பெருமிதத் தோடு அர்ஜுன்.

by Swathi   on 17 Nov 2014  0 Comments
Tags: Jaihind 2   Jaihind 2 Movie   Next Generation   Arjun   அர்ஜுன்   அடுத்த தலைமுறை   ஜெயஹிந்த் 2  
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் : அர்ஜுன் !! அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கிறேன் : அர்ஜுன் !!
அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறார் ஆக்சன் கிங் அர்ஜூன் !! அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறார் ஆக்சன் கிங் அர்ஜூன் !!
ஜெய்ஹிந்த் -2 எனது லட்சியப்படம் : அர்ஜுன் !! ஜெய்ஹிந்த் -2 எனது லட்சியப்படம் : அர்ஜுன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.