LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதை நீக்க பல் துலக்கும் பிரஷ் பயன்பட்டது

சர்வதேச விண்வெளி ஆராயச்சி நிலையத்தில் ஏற்பட்ட பழுதை, பல் துலக்கும் "பிரஷ்'சை" பயன்படுத்தி, விஞ்ஞானிகள் சரி செய்துள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ., தொலைவில் விண்வெளியில் அமைந்துள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, சூரியசக்தி மூலமாகவே மின்சாரம் பெறப்படுகிறது. சூரிய சக்தியை கிரகிக்க, விண்வெளி நிலையத்தின் மேலே, எட்டு அடுக்குத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு அடுக்கில் இருந்து விண்வெளி நிலையத்துக்கு உள்ளே வரும் இணைப்பில் பழுது ஏற்பட்டதையடுத்து மின்சாரம் பெறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி அகிஹிகோ ஹோஷிடே ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். சூரிய சக்தியை, நிலையத்துக்கு உள்ளே கடத்தும் இணைப்பு ஒன்றில் பொருத்தப்பட்ட "போல்ட்"டின் நடுவே, விண்துகள்கள் படிந்திருப்பதால், மின்சார கடத்தலில் பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், "போல்ட்"டில் இருந்த தூசிகளை அகற்ற முடியாமல், கடந்த வாரம் எட்டு மணி நேரத்துக்கும் மேல் சுனிதாவும், சக விஞ்ஞானியும், அந்தரத்தில் நின்ற படி சிரமப்பட்டனர். தூசிகளை அகற்ற, சரியான கருவி கிடைக்காத நிலையில், பல் துலக்கப் பயன்படும் மூன்று "டூத் பிரஷ்"களை பயன்படுத்தி, தூசிகளை அகற்றி, "போல்ட்"ஐ, மீண்டும் பொருத்தும் பணியை சுனிதா வில்லியம்சும், அகிஹிகோ ஹோஷிடேவும் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

by Swathi   on 07 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.