LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் ராணுவ மரியாதையுடன் நடந்தது!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான  2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம், அவர்களது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நடந்தது.  பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் , உடையார் பாளையம் தாலுகா கார்குடியைச் சேர்ந்த சின்னையன்-சிங்காரவள்ளி மகன் சிவசந்திரன் (வயது 33), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த சவலாப்பேரியைச் சேர்ந்த கணபதி-மருதம்மாள் மகன் சுப்பிரமணியன் (28) ஆகிய 2 பேரும் வீரமரணம் அடைந்தனர்.  தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு தமிழக வீரர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டன.

 பின்னர் சிவசந்திரனின் உடல், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து மற்றொரு  விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட சுப்பிரமணியனின் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சியினர், காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
தொடர்ந்து ராணுவ வாகனத்தில் சுப்பிரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரி கிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது உடலைப் பார்த்து அவரது மனைவி கிருஷ்ணவேணி, பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். 

சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். 

முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சுப்பிரமணியன் உடல், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். இதையொட்டி சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருச்சி விமான நிலையம் வந்த சிவச்சந்திரன் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் சிவசந்திரன் உடலுக்கு மரியாதை செலுத்தினர். 

 இதையடுத்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஆனந்த குமார் ஹெக்டே ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் நின்றிருந்த சிவசந்திரனின் மைத்துனர் அருண், உறவினர்கள் ஜெயபால், குணவேலு, கண்ணன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். அவர்களை பார்த்து, உறவினர்கள் கதறி அழுதனர்.

 தொடர்ந்து முக்கியப் பிரமுகர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் வீர வணக்கம் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பொது மக்கள், இளைஞர்கள் திரண்டு வந்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் 12.30 மணியளவில் சிவசந்திரனின் உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திருச்சியில் இருந்து ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சிவசந்திரனின் உடல் மாலை 4.30 மணி அளவில் கார்குடி வந்து சேர்ந்தது. அங்கு அவரது வீட்டு முன் உறவினர்கள் ஒரு சில சடங்குகளை செய்த பின்னர் அருகில் உள்ள திடலில் அமைக்கப்பட்ட ஷாமியானா பந்தலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டு சென்றார்.பின்னர் பேரிகார்டு தடுப்பில் பொதுமக்கள், உறவினர்கள் வரிசையாக சென்று சிவசந்திரன் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினர். அதனை தொடர்ந்து வீட்டிற்கு பின்புறம் உள்ள அவர்களுக்கு சொந்தமான வயலில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்ட சமாதிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் நடந்தது. முன்னதாக சிவசந்திரன் சடலத்தின் மீது போர்த்தி இருந்த தேசியக் கொடியை மடித்து அவரது தந்தை சின்னையனிடம் ஐஜி வழங்கினார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் அரசு நிதி உதவி ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை சிவசந்திரனின் மனைவி காந்திமதியிடம் வழங்கினர். மேலும் அவருக்கு அரசு சார்பில் நர்ஸ் பணி வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். அப்போது காந்திமதி கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

இதேபோல, சுப்பிரமணியன் இறுதிசடங்கில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசு சார்பில் 20 லட்சத்திற்கான காசோலையை சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார். 

சிவசந்திரன் உடல் அடக்கம் நடந்தபோது, மகன் சிவமுனியன் மற்றும் சிவசந்திரனின் தந்தை சின்னையன் ஆகியோர் ராணுவ வீரர் உடை அணிந்து இறுதி மரியாதை செய்த காட்சி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.

by Mani Bharathi   on 19 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.