LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

இந்த வார நட்சத்திர பலன்கள் (17 – 09 – 2017 முதல் 23 - 09 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ.  (99948 11158)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி
இந்த வாரம் தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது. பயணசுகம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும்.  மனைவிமார்கள் தங்கள் கணவரிடமிருந்து உண்மைக் காதலையும், உன்னத அன்பையும் பெறுவர்.
பரணி
இந்த வாரம் அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். தந்தைவழி உறவுகளால் ஆதாயங்களும், நன்மைககளும் ஏற்படும். பயணங்களின் போது பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதன் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம். அரசு வகையில் கட்டண பாக்கிகளை  உடனே கட்டவேண்டிய கெடுபிடி இருக்கும். அதற்குத் தேவையான பணவுதவிகள் கிடைத்துப் பிரச்சனைகள் தீரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பது,  முன்னேற்றங்களையும் பதவி உயர்வையும் தரும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். அலுவலகங்களில்  வேலைப்பளு அதிகமானாலும், அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். ஒரு சிலருக்கு உழைப்பின் காரணமாக, அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம். நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும்.  குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்வுகளுக்காக வெளியில் அதிகம் அலைந்து திரியும் நிலை ஏற்படும். சகோதரர்களின் நடவடிக்கைகள் சஞ்சலத்தைத் தரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு இல்லாமல் வங்கியில் ஓவர் டிராப்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தனவரவு உண்டாகும். அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களின் புதிய நட்பால் உங்கள் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும். பெற்றோர்கள் பெருமை கொள்ளவும்,  உற்றார் உறவினர் பொறாமை கொள்ளும் அளவுக்கு, அளவில்லாத முன்னேற்றம் இருக்கும்.  நீங்கள் நினைத்தபடி, எல்லாக் காரியங்களுமே  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் அதிகாரிகளின் பலத்த சிபாரிசின் மூலமாகவோ அல்லது கையூடு அளிப்பதினாலோ கிடைத்துவிடும்.
ரோகிணி
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை   ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். தொழிலாளர்கள் சிறு வேலைக்கும் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
தாராளமான தனவரவு இருக்கும். இரக்ககுணத்தால் மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். மனைவியுடனான உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம் ஏற்படும். அதன் காரணமாக மனதில் மிகுந்த உற்சாகமும் அமைதியும் பெருகும். நவநாகரீக உடைகள், ருசியான உணவுவகைகள் ஆகியவை கிட்டும்.  செலவுகள் அதிகமாகி புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரிக் கனவுகளில் மிதப்பர். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து குதூகலம் உண்டாகும். மனைவி, குழந்தைகளின் மன விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் உங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவே, கடினமான காரியங்களையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். தொட்டில் ஆட்டிக் கொஞ்சி மகிழ, புத்திர பாக்கியம் ஏற்படும். சினத்தை அடக்கினால் சிக்கல்கள் தீரும்.
திருவாதிரை
இந்த வாரம் நெடுநாட்களாகப் பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக ஆகாயத்தில் மிதப்பார்கள். உங்களின் அன்பு மிக்க செயல்களால், உறவுகள் மகிழ்ச்சி கொள்வர். பயணங்கள் இனிமை தரும். புத்திர பாக்கியம் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தாங்களே சமாளித்துக் கொள்வர். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் இருக்கும். என்னதான்  சமாதானக் கொடி பறக்கவிட்டாலும், வீட்டில் ஏற்படும் சச்சரவுகளைச் சமாளிக்க முடியாமல் போகலாம்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் புதிய வேலை வாய்ப்புக்கான ஆணைகள் பெற்று, இளைஞர்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்குச் சென்று மகிழ்வார்கள். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.  புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது மாடல் இருசக்கர வாகனத்தை வாங்க முயற்சி செய்வீர்கள். சீருடைப் பணியாளர்களுக்கு சீரிய சேவைக்கான பதக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் குழந்தைகளின்  சுட்டித் தனங்களைக் கண்டு  மனமகிழ்ச்சி ஏற்படும்.   சில மாணவர்கள் பள்ளிக் கல்வி முடிந்து, புதிய கல்லூரிகளைத் தேடி அலையநேரும். தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாசமாக சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும்.  தொழிலைப் பொருத்தவரை எதிர்பாராத, சிறு சிறு தடைகள் ஏற்படலாம். இடைவிடாத உழைப்பின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.
பூசம்
இந்த வாரம்  உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும்.  சிலருக்கு பேரின்பம் பெறும் விதமாக மனைவி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். பணவரவு தடையின்றிக் கிடைப்பதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.
ஆயில்யம்
இந்த வாரம் உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளால் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். தாய், மனைவி எனப் பெண்களால் இலாபம் உண்டு. வாக்குவன்மை ஓங்கும்.  சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். சிலருக்கு ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைத்து, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.  சிலர் இருக்கும் போதே கீழே விழுந்து காயம் பட நேரலாம். எனவே, எச்சரிக்கை தேவை. படிப்பைப் பொருத்தவரை, கல்லூரியில் சேருவதற்கான உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அன்றாட வருமானத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வங்கிக் கணக்குகளில் கையிருப்புக் கூடும். சிலருக்கு மனை வாங்கும் யோகம் ஏற்படும். தெய்வபக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்குத் துணைபுரிய அனேக கீழ்நிலை உதவியாளர்கள் அமைவர்.
பூரம்
இந்த வாரம் அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். தொலைதூர சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் தடைகள் ஏற்படும். பணவரவு அதிகரித்து வருமானம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளைக் கருணை உள்ளத்தோடு அணுகுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்பட்டு தகுதிக்கு ஏற்ப நல்ல கல்லூரிகளைத் தேடிகொள்வர்.  
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் பல வழிகளிலும் தடங்கல் இன்றி தனவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.  வாக்குவன்மை ஓங்கி ஆதாயம் பெருகும்.  புதிய வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் கிடைக்கும்.  எல்லாவகையிலும் பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  உங்களுக்கு தந்தைவழி உறவுகளால் நன்மை ஏற்படும். புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் திருமணம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படலாம்.  சகோதரரால் நன்மைகள் உண்டு. வீட்டில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். தலைமைப் பதவிகள் தேடிவரும். வீரம் பெருகும். தங்கள் சேவைகள் அங்கீகரிக்கப்படும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும் இருப்பதால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களின் சிறந்த பணிக்காக கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் கிடைக்கும்.
ஹஸ்தம்
இந்த வாரம் உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனைகள் கூடும். தாய்க்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்.  பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் அழகிய உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டு  தான தருமங்கள் செய்வீர்கள். தெய்வீகப் பணாகளை ஆற்றுவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. சில மாணவர்கள் உயர் கல்விக்கான நல்ல கல்லூரிகளைத் தேடி அலைவர். அரசு உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று இன்பம் பொங்கும். வீட்டுக்கு விருந்துக்கு வரும் உறவுகளால் ஏற்படும் இன்பத்திற்கு அளவே இருக்காது. செலவும் கூடும்.  புதிய திட்டங்களால் தொழிலில்  இலாபம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது வேகத்தைக் குறைத்து, எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம். வியாபரிகளே, வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வீர்கள்.
சுவாதி
இந்த வாரம் கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் குடும்பத்தோடு பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்து மகிழும் வாய்ப்புக் கிட்டும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அரசுப்பணியில் உள்ளவர்களுக்குப் பலநாள் கனவான, உயர்பதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய அரசுத் தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்குப் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். வியாபார சம்பந்தமாக  வெளிநாட்டுப் பயணங்களும், அதனால் ஆதாயங்களும் ஏற்படும். உங்கள் அசாத்தியத் திறமைகளை மெச்சி கௌரவ டாக்டர் பட்டம், உயர்பதவி ஆகியவை தேடிவரும். எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
அனுஷம்
இந்த வாரம் பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். பெண்களுக்கு அலுவலகத்தில் புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். பிரபலமானவர்களின் நட்பால் உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்க, எதிர்பார்த்தபடி அரசு உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.  பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும்.
கேட்டை
இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.  குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். தொழில் சம்பந்தமான திடீர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம்.  பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரலாம். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் எதிர்பாராத அளவுக்கு அசாத்திய வளர்ச்சி ஏற்படும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும். ஆரவாரம் மிக்க சூழலில், கேளிக்கை விருந்துகள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
பூராடம்
இந்த வாரம் நல்ல பண்பாளர்களின் தொடர்பால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். எப்போதும்  மனதில் ஏற்படும் தெய்வ சிந்தனையால் மனநிம்மதி கூடும். சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக ஆக்குவீர்கள். திருமண வயது வந்தும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும். நல்ல விஷயங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.  பங்களாப் போன்ற பெரிய வீடும் கிடைக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் குடும்பத்தினர் ஒத்துழைப்பால், நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் இல்லத்தில்  மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். சிலரிடம் கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தைப் புதிய கலைகளைக் கற்பதில் செலவழிப்பர்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். பதவி உயர்வு எளிதாகக் கிடைக்கும். சிலருக்குத் தலைவலி/கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். கவலை வேண்டாம். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்துப் புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது.
திருவோணம்
இந்த வாரம் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். செல்வத்துக்கு அதிபதியான அலைமகளே உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழச்சி அடையமாட்டீர்களா ? மகிழ்ச்சி பொங்கும் அளவுக்குத் தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.  மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். செலவுகள் அதிகமாவதின் காரணமாக சிலருக்குப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். ஓய்வெடுக்கும் விதமாக நமக்கு  எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. புதிய வசதி வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  அதிக இலாபம் கிடைக்கும். அரசு சிபாரிசால் பல நாட்களாகத் தள்ளிப் போன, அதிகாரம் மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.  அவற்றை சில காலம் ஒத்திப்போடுவது நல்லது.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். வீண் ஆசைகளை விலக்கி வைப்பது நல்லது. விவசாயிகளுக்கு வளம் கொளிக்கும் வயல்களால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் சுயமான முன்னேற்றம் நிலவும்.  உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.
சதயம்
இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள்.  வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பக்தி மார்க்கத்தில்  தீவிர ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் தனச்சேர்க்கை உண்டு. பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். மனம் எப்போதுமே மகிழ்ச்சியால் நிரம்பி வழியும். வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. பண விஷயத்தைப் பொருத்தவரை வியாபாரிகளுக்கு வரவுகள்  திருப்திகரமாக இருக்கும். நீண்டநாளாக வராத கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. முயற்சிகள் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வார சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். அரசுப்பதவியில் உள்ளவர்களுக்கு வேண்டியவர்களாகி அவர்களால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்.  எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் அனைத்துக் காரியங்களிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். மதிப்பும், அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். திருமகளின் கருணையால் ஓரளவுக்குப்  பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய இருசக்கர வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். பலவழிகளில் உங்களை நீங்களே அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும்.
ரேவதி
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல் இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வாசல் வந்து நிற்கும். மனக்கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும். விடுமுறைச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். மாணவர்களின் புதிய கல்லூரிக்கான தேடல் ஆரம்பமாகும்.  ஓய்வின்றி, அடிக்கடி ஏற்படும் வெளியூர்ப் பயணங்களால் அசதி ஏற்படும்.

by Swathi   on 15 Sep 2017  0 Comments
Tags: Rasi Palangal   Natchathira Palangal   ராசி பலன்கள்   நட்சத்திர பலன்கள்           
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 03 – 2018 முதல் 10 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (04 – 03 – 2018 முதல் 10 - 03 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (11 – 02 – 2018 முதல் 17 - 02 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (11 – 02 – 2018 முதல் 17 - 02 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (10 – 12 – 2017 முதல் 16 -12 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (10 – 12 – 2017 முதல் 16 -12 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 – 12 – 2017 முதல் 09 -12 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 – 12 – 2017 முதல் 09 -12 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (26 – 11 – 2017 முதல் 02 - 12 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (26 – 11 – 2017 முதல் 02 - 12 – 2017 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.