LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தகவல் அறியும் உரிமை சட்டம் - சென்னை உயர் நீதி மன்றம் வித்தியாசமான தீர்ப்பு

தகவல் அறியும் உரிமை சட்டம் - சென்னை உயர் நீதி மன்றம் வித்தியாசமான தீர்ப்பு


 

வெளிப்படையான, விரைவான, இலஞ்ச ஊழலற்ற அரசு நிருவாகத்தை ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டம்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005. பல போராட்டங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தை முடமாக்கும் வேலையை அரசு அலுவலர்களும், தகவல்  ஆணையமும், நீதிமன்றங்கலும் செய்வது அடித்தட்டு மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.


 

சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த இளங்கோவும், அரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொது தகவல் அலுவலரிடம் தகவல் கேட்டு உள்ளனர். அதாவது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதி மன்றங்களில் எத்தனை நீதிபதிகள் உள்ளனர். ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர். நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு எதிராக எத்தனை ஊழல் புகார்கள் வந்துள்ளது அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என தகவல் கேட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் தகவல் தர மறுக்கவே மாநில தகவல் ஆணையத்தை அனுகியுள்ளனர் மனுதாரர்கள். ஆணையம் 15 தினங்களுக்குள் தகவல் தர சென்னை உயர் நீதிமன்ற பொது தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது. தகவல் தர வேண்டிய சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை வாங்கியுள்ளார். உயர் நீதிமன்றமே தன் மீதான வழக்கை விசாரித்து தனக்கு சாதகமான தீர்ப்பை கொடுத்துள்ளது வியப்பாக உள்ளது. இத்தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு இனி அரசு துறைகள் பலவும் தனக்கு எதிரான தகவல் ஆணையத்தின் தீர்ப்புக்கு தடை வாங்கும் அவலம் ஏற்படும் சூழல் உள்ளது. மனுதாரர் கேட்டுள்ளது அரசு நிருவாகத்தின் சாதாரண அடிப்படை விசயங்களை பற்றியது. இதற்கு பதில் கொடுத்தால் பல ஊழல் புகார்கள் வெளிவந்துவிடும் என்ற பயம்தான் காரணம்


 

எனவே இச்சட்டத்தின் நோக்கத்தை கருத்தில் கொண்டு அரசு இயந்திரம் செயல்படவேண்டும். வெளிப்படையான, விரைவான, இலஞ்ச ஊழலற்ற நிருவாகத்திற்கு தகவல் ஆணையமும், நீதிமன்றங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்

by Swathi   on 02 Aug 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
28-Apr-2018 06:08:02 Ayyanar. said : Report Abuse
பள்ளிகல்வித்துறைதில் அரசாணை பெறுவது எப்படி என்று கூறுங்கள்
 
28-Apr-2018 06:00:59 Ayyanar. said : Report Abuse
பள்ளிகல்வித்துறைதில் அரசாணை பெறுவது எப்படி என்று கூறுங்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.