LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

23,900 கோடி டாலர் அன்னிய முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளது- 2019-20 பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் பியூஷ் கோயல்!

23,900 கோடி டாலர் அன்னிய முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளதாக பட்ஜெட்டில் தகவல் வெளியாகி உள்ளது.

2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

பதினாறாவது மக்களவையின் கடைசி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. 

முன்னதாக 2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். 

பியூஷ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்ய எழுந்தவுடனேயே காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் அருண்ஜெட்லி விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தி தனது பட்ஜெட் உரையை பியூஷ் கோயல் தொடங்கினார். 

மோடியின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் திட்டடங்கள் தீட்டப்படுவதாகவும், 2022-ல் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது என்று தெரிவித்தார்.

இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்க விகிதத்தை அரசு ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் பியூஷ் கோயல் தெரிவித்தார். 

2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் வருமாறு:

2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிரணயிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத வகையில் 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்து உள்ளது.

பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றுஉலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் 6-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

நிதிப்பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டு உள்ளது.

உற்பத்தி மதிப்பில் 5.6% ஆக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 % ஆக குறைக்கப்பட்டு உள்ளது. வங்கித்துறையில் சீர்திருத்த நடவடிக்கையால் வாராக்கடன் குறைந்துள்ளது.  ரியல் எஸ்டேட்டில் சீர்திருத்த சட்டம் நிறைவேற்றியதால் வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது.

5 லட்சம் கிராமங்களில் கழிவறைகள் அமைத்து சுகாதாரத்துக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது
வங்கிகளின் வாராக்கடன் ரூ.3 லட்சம் கோடி மீட்கப்பட்டு உள்ளது.உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

23,900 கோடி டாலர் அன்னிய முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளது.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கிராம சாலைகள் அமைக்கும் திட்டம் 3 மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது.கிரமபுற சாலைகள் அமைக்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1.53 லட்சம் விடுகள் கட்டப்பட்டு உள்ளன.

22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அரியானாவில் அமைய உள்ளது.

சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் சிறப்பு திட்டம் மூலமாக,12 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும்.

சிறிய விவசாயிகளுக்கு உதவ ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

நேரடி வருமான உதவி திட்டம் செயல்படுத்தப்படும். 

கால்நடை வளர்ப்பு மற்றும் மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

22 விளைபொருட்களின் ஆதார விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. 

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஓய்வூதிய நிதிக்கு தொழிலாளர் செலுத்தும் தொகைக்கு ஈடாக அரசு செலுத்தும்.  ஓய்வூதிய திட்டம் மூலம் 10 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும்.

மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும். இந்திய பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பு மீன்வளத்துறை அளித்து வருகிறது

சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அகல ரயில் பாதையில் இருந்த ஆளில்லா ரயில்வே கேட் அகற்றப்பட்டுவிட்டன.

இணையதள பயன்பாடு 50 மடங்கு அதிகரித்து உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்

திருட்டு விசிடியை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும். திரைப்பட தயாரிப்புக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க பெட்ரோல் கிணறுகள் அதிகரிக்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

வருமான வரி வசூல் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு ரூ.58,166 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஜன்தன் திட்டத்தின் கீழ் 34 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி வரி தாக்கல் ஆன்லைன் மூலம் மேற்கொள்வது மேலும் எளிதாக்கப்படும்.  அடுத்த 5 ஆண்டில் ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

2019 இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்த்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

வரிவிலக்கு சலுகையால் அரசுக்கு ரூ.18,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

ரூ.40,000 வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வருமான வரி பிடித்தமில்லை.அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டியை வழங்கும் போது வருமான வரி பிடித்தமில்லை

6.25 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் கூட வரி கட்ட தேவை இருக்காது
அடுத்த ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.1%-க்கு கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பேட்டரி கார்களை இந்தியாவில் தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படும். 2030-ம் ஆண்டில் உலகிலேயே பேட்டரி கார் அதிகம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

2030-க்குள் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வேலை தேடுபவர்கள் எல்லாம் வேலை கொடுப்போராக மாறியுள்ளனர்.

வீட்டுக்கடனுக்கான வட்டி சலுகை இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும்.

2022-க்குள் விண்வெளியில் இந்தியா தடம் பதிக்கும்.

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது.  செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்ததன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது. இவை பட்ஜெட்டில் இடம்பெற்று உள்ளன.

by Mani Bharathi   on 01 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.