LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

ஆசிய கோப்பை ஹக்கி தொடர் - இறுதி போட்டியில் இந்திய அணி !!!

ஆசிய கோப்பை ஹக்கி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, இந்திய வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் இந்தியாவுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய ரகுநாத், முதல் கோல் அடித்தார். இதற்கு மலேசிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் அசத்திய இந்திய அணிக்கு, 60வது நிமிடத்தில் மலேசிய கோல்கீப்பரை ஏமாற்றி ராமன்தீப் "பாஸ்' செய்த பந்தை மன்தீப் சிங் கோலாக மாற்றினார். சாமர்த்தியமாக விளையாடிய இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மலேசிய வீரர்களின் பெனால்டி கார்னர்  வாய்ப்புகளை தடுத்து, கோல் அடிக்கும் முயற்சியை முறியடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஏழாவது முறையாக இறுதி போட்டிக்கு  முன்னேறியது.  நாளை நடைபெறும் இறுதி போட்டியில், இந்திய அணி, நடப்பு சாம்பியன் தென் கொரியாவை சந்திக்கிறது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வி கண்ட மலேசியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

by Swathi   on 30 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்... காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...
ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !! ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !!
7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !! 7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !!
பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !! பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !!
அதிவேக சதத்தால் உலக சாதனை படைத்தார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் !! அதிவேக சதத்தால் உலக சாதனை படைத்தார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் !!
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜாக் காலிஸ் ஓய்வு அறிவிப்பு !! டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜாக் காலிஸ் ஓய்வு அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.