சென்னை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. அடுத்து டி20 தொடர் நடக்கவிருக்கிறது. விசாகப்பட்டினத்தில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற இருந்த முதலாவது டி20 போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2வது போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கவுள்ளது.
|