LOGO
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF

இந்திய பாராளுமன்ற தேர்தல் குறிப்புகள் - (1952 - 2014)


இந்திய பாராளுமன்ற தேர்தல் குறிப்புகள் - (1952 - 2014)

Total: 16 Elections    Congress: 11 Times,      BJP : 4 Times 

பிரதமர்  
வரிசை

பிரதமர்  

வரிசை

தேர்தல் ஆண்டு
வெற்றிக் கட்சி 

பெற்ற

இடங்கள்

வாக்கு

சதவீதம்

பிரதமர் குறிப்புகள்
1 1952 காங்கிரஸ் 364/489 44.99 ஜவகர்லால் நேரு

 

2 1957  காங்கிரஸ்   371/494 47.78 ஜவகர்லால் நேரு முதன் முதலாக பாரதீய ஜனசங்கத்தின்  சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.
3 1962 காங்கிரஸ் 361/494 44.72 ஜவகர்லால் நேரு 1964ம் ஆண்டு மரணம் அடைந்தார்.  நேருவின் மரணத்தால் குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமர் ஆனார். அதன்பின் லால்பகதூர் சாஸ்திரி அந்த ஆண்டில் ஜூன் 9-ந் தேதி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவரும் 1966 ஜனவரி 11-ல் சாஸ்திரி மரணம் அடைந்ததால் குல்சா ரிலால் நந்தா இடைக்கால பிரதமர் ஆனார். அதன் பின் ஜனவரி 24-ந் தேதி இந்திராகாந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
4 1967 காங்கிரஸ் 283/520 40.78 இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சி முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய வில்லை.இந்திரா காந்தியின் தலைமை எதிர்க்கட்சிகளின் கடும் மர்சனத்துக்கு உள்ளானது.  தேர்தலுக்கு ஓர் ஆண்டுக்கு முன் இந்திரா காந்திக்கு எதிராக மொரார்ஜி தேசாய் போர்க்கொடி உயர்த்தினார்.
5 1971 காங்கிரஸ்

352/518

43.68 இந்திரா காந்தி   
6 1977 ஜனதா 345/542 52.74 மொரார்ஜி தேசாய் (1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால் தாமதமாக தேர்தல் நடந்தது.) ஜனதா பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை. அதிகாரத்தை இந்திரா காந்தி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 2 1/2 ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, இந்திரா காந்தியின் ஆதரவுடன் லோக்தளம் கட்சியின் சரண்சிங் பிரதமர் ஆகிறார். 1979 ஜூலை 28-ந்தேதி முதல் 1980 ஜனவரி 14-ந் தேதி வரை அவர் பிரதமராக இருந்தார் சரண் சிங்
7 1980 இந்திரா காங்கிரஸ் 353/529 42.69 இந்திரா காந்தி  பதவியில் இருந்த போது 1984-ம் ஆண்டு அக்டோபர்       31-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
8 1984 இந்திரா காங்கிரஸ் 404/514 49.1 ராஜீவ்காந்தி தேர்தலுக்கு முன் நடந்த இந்திரா காந்தி படுகொலை. இதனால் ராஜீவ்காந்தி பிரதமராக பதவி ஏற்றார்
9 1989 ஜனதாதளம் 143/529 17.79 வி.பி.சிங்,   சந்திரசேகர் முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை. வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த அரசு சில மாதங்களில் கவிழ்ந்ததால் சமாஜ்வாடி ஜனதாவின் சந்திரசேகர் தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. ஆனால் அந்த அரசும் விரைவிலேயே பதவி இழந்தது. 16 மாதங்களில் இரு கூட்டணி அரசுகளும் முடிவுக்கு வந்தது  
10 1991 காங்கிரஸ் 232/521 17.79 நரசிம்மராவ் இடது சாரி கட்சிகளின் ஆதரவில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து தனது முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்தது.
11 1996 பா.ஜ.க. 161/543 20.29

வாஜ்பாய்

தேவேகவுடா

ஐ.கே.குஜ்ரால்

முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை.காங்கிரஸ் கட்சி 140 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் அரசு கவிழ்ந்தது. அதன்பின் காங்கிரஸ் ஆதரவுடன் தேவேகவுடா தலைமையில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு அமைந்தது. பின்னர் காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதன் காரணமாக இந்த அரசும் 1997ம் ஆண்டு ஏப்ரல் வரைதான் நீடித்தது. அதன் பின் ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆக்கப்பட்டார். பின்னர் அவரது அரசையும் 1998-ல் காங்கிரஸ் கவிழ்த்தது.11வது நாடாளுமன்றம் 2 ஆண்டு காலத்தில் 3 பிரதமர்களை கண்டது.
12 1998 பா.ஜ.க. 181 /543 25.59 வாஜ்பாய் முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யவில்லை. காங்கிரசுக்கு கிடைத்த இடங்கள் - 141.வாஜ்பாய் தலைமையில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் ஓர் ஆண்டிலேயே இந்த அரசு கவிழ்ந்து விட்டது.
13 1999 பா.ஜ.க 182/543 40.8 வாஜ்பாய் பாரதீய ஜனதா தலைமையில் தேர்தலை சந்தித்த தேசிய ஜனநாயக கூட்டணி 270 இடங்கள் வெற்றி பெற்றது. வாஜ்பாய் 3வது முறையாக நாட்டின் பிரதமர் ஆனார்.
14 2004 காங்கிரஸ் 141/543 35.4 மன்மோகன்சிங் பா.ஜ.க. வெற்றி பெற்றது 137, சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. மன்மோகன்சிங் முதல் முறையாக பிரதமர் ஆனார்.
15 2009 காங்கிரஸ் 203/543 37.22 மன்மோகன்சிங் பா.ஜ.க. கட்சிக்கு கிடைத்த இடங்கள் 117.மன்மோகன்சிங் மீண்டும் 2வது முறையாக பிரதமராகி 5 ஆண்டுகளை ஆட்சியை பூர்த்தி செய்துள்ளார்.
16 2014 பா.ஜ.க. 283/543   நரேந்திர மோடி  
by Swathi   on 16 May 2014  0 Comments
Tags: பாராளுமன்ற தேர்தல்   1952 - 2014   India Parliament Election   Election Statistics           
 தொடர்புடையவை-Related Articles
2014-பாராளுமன்றத் தேர்தல் சில புள்ளி விபரங்கள் 2014-பாராளுமன்றத் தேர்தல் சில புள்ளி விபரங்கள்
இந்திய பாராளுமன்ற தேர்தல் குறிப்புகள் - (1952 - 2014) இந்திய பாராளுமன்ற தேர்தல் குறிப்புகள் - (1952 - 2014)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.