LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி

சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக (அக்டோபர் 28) பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்குள்ள ரியாத் நகரில் நடைபெற்ற 'எதிர்கால முதலீடு' குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சவுதி அரேபியா நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வழியாகச் செல்வதற்கு அந்நாடு அனுமதி மறுத்ததால், பிரதமரின் பயணம் கூடுதலாக 45 நிமிடங்கள் ஆனது. வான்வெளி அனுமதி மறுத்த விவகாரம் குறித்து, சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பான ICAO-விடம் (International Civil Aviation Organization) இந்தியா புகார் அளித்துள்ளது. சவுதி அரேபியாவும் இந்தியாவும் எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்றும், இந்தப் பயணத்தின் மூலம் இரு தரப்பு உறவுகளுக்கு பலம் சேர்க்கும் என்றும் 'ட்விட்டரில்' மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

ரியாத் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு சவுதி அரேபிய மன்னர் 'சல்மான் பின் அப்துல் அசீஸ்' மற்றும் இளவரசர் 'முகமது பின் சல்மான்' இருவரும் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியாவில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ரியாத்தில் நடைபெற்ற 'எதிர்கால முதலீடு' குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர், சவுதி அரேபியாவின் 'ஆரம்கோ' நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தொழில் தொடங்குவதற்கு உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதால், சர்வதேச முதலீட்டாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவும் சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள் மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். இந்தியா-சவுதி அரேபியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அண்மையில் நடைபெற்ற 'ப்ளூம்பெர்க் சர்வதேச வர்த்தகம்' மன்றத்தில் பல நாடுகளைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது மிகப்பெரிய சந்தையில் 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பினால் இந்தியாவிற்கு வாருங்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்குள் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி அதற்கான திட்டமிடுதலில் ஒவ்வொன்றாக மேற்கொண்டுள்ளார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

by Madurai karthika   on 31 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்
இந்திய-சீன  தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள் இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை!
‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்! ‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்! முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்!
சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு-  இஸ்ரோ அறிவிப்பு! சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு!
தமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்! தமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.