LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்தியாவில், சீன தொழில் பூங்கா பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு !!

இந்தியாவில், இந்தியாவில் சீன நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக, பிரத்யேக தொழில் பூங்காவை அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

நேற்று முதல் சீனாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சீன அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, கடந்த 9 ஆண்டுகளாக, இந்தியா, சீன இடையேயான உறவு மேம்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக உறவு கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில், சீன வர்த்தக பூங்கா அமைக்கும் திட்டம் வரவேற்புக்குரியது. இந்திய-சீன மக்களின் கூட்டுத்தொகை, 250 கோடி. எல்லை பகுதியில் அமைதி நிலவினால் தான், இவ்வளவு மக்களும் நிம்மதியாக இருக்க முடியும். எல்லை பகுதி தொடர்பான பிரச்னையை தீர்ப்பதற்காக தான், சிறப்புப் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பை இருநாடுகளும் இணைந்து ஏற்படுத்தியுள்ளோம். எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக, இந்த சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதற்கு தீர்வு காண்பதற்கு சிறிது காலம் பிடிக்குமென்றாலும், இந்த விவகாரத்தில் இதுவரை அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் பாராட்டுதல்களுக்கு உரியவை. எல்லையில் அமைதியை நிலை நாட்டுவதில் இரு நாட்டு அரசுகளும் உறுதியாக உள்ளன. இருதரப்பு உறவில் முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படுவதற்கு எல்லையில் நிலவும் அமைதிதான் அடிப்படையாக அமையும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். 

by Swathi   on 22 Oct 2013  0 Comments
Tags: Business Park   Manmohan Sing   India PM   Prime Minister   China   Chinese Investment   சீன தொழில் பூங்கா  
 தொடர்புடையவை-Related Articles
சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !! சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !!
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே ! இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே !
தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !! தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !!
சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை 27 சதவீதம் வரை உயர வைத்த ஜாக்கி ஜான் படம் !! சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை 27 சதவீதம் வரை உயர வைத்த ஜாக்கி ஜான் படம் !!
கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !! கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !!
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி !! காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி !!
மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் ஒரே மேடையில் !! மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் ஒரே மேடையில் !!
மன்மோகன் சிங்கிடம் தனியாக செல்போன் இல்லை !! மன்மோகன் சிங்கிடம் தனியாக செல்போன் இல்லை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.