|
|||||
டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது இந்திய அணி ! |
|||||
டெல்லியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 81 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதன் முறையாக 4-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாறு சாதனை படைத்தது. இந்த தொடரில் நிகழ்த்தப்பட்ட சாதனை துளிகள் சில பின்வருமாறு, * நேற்று டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக 4-0 என கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. * ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் லியான் முதல் முறையாக ஏழு விக்கெட் கைப்பற்றினார். * ஆஸ்திரேலிய அணி 0-4 என்ற புள்ளிக்கணக்கில் ஒட்டுமொத்தமாக எதிரணியிடம் தோற்றது இதுவே முதல் முறை. * டில்லி டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.
இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன் அடித்த டாப் 5 வீரர்கள் :
வீரர் போட்டி ரன்கள் 100/50 முரளி விஜய் (இந்தியா) 4 430 2/1 புஜாரா (இந்தியா) 4 419 1/2 தோனி (இந்தியா) 4 326 1/0 கிளார்க் (ஆஸி.,) 3 286 1/1 கோஹ்லி (இந்தியா) 4 284 1/1
இந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் :
வீரர் போட்டி விக்கெட் அஷ்வின் (இந்தியா) 4 29 ஜடேஜா (இந்தியா) 4 24 லியான் (ஆஸி.,) 3 15 பட்டின்சன் (ஆஸி.,) 3 9 சிடில் (ஆஸி.,) 4 9 |
|||||
by Swathi on 25 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|