அமெரிக்க பாராளமன்ற தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இந்தியர், மஞ்சு கோயல் போட்டியிடுகிறார். கடந்த, 8ம் தேதி மஞ்சு தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளார். இந்த பிரசார ஊர்வலத்தில், டெக்சாஸ் மாகாண, எம்.பி. உள்ளிட்ட, குடியரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தியாவின், வடமாநிலத்தைச் சேர்ந்த, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த மஞ்சு கோயல், 21வது வயதில், அமெரிக்காவில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது..
|