LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !!

சென்னையில் உள்ள இராணுவ அகாடமியில் ஆண்களுக்கான 43வது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்னிக்கல்) கோர்ஸ் மற்றும் பெண்களுக்கான 14வது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்னிக்கல்) கோர்ஸ்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


துறைவாரியான காலியிடங்கள் விவரம் :


01. சிவில் - ஆண்- 20, பெண்- 01


02. பி.ஆர்க்கிடெக்சர் - ஆண் - 02, பெண் -01


03. மெக்கானிக்கல் - ஆண் - 15, பெண்- 02


04. புரொடக்சன் - ஆண்- 03, பெண்- 01


05. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - ஆண் - 02, பெண்- 01


06. ஏரோநாட்டிக்கல்/ ஏராஸ்பேஸ்/ அவியோனிக்ஸ் - ஆண் - 02, பெண் - 01


07. மெட்டாலர்ஜிக்கல்/ மெட்டலர்ஜிக்கல் மற்றும் எக்ஸ்பிளோசிவ்ஸ் - ஆண் - 01, பெண் - 01


08. எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - ஆண் - 15, பெண் - 02.


09. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் - ஆண் - 15, பெண் - 03


10. பயோ டெக்னாலஜி/ உணவு தொழில்நுட்பம் - ஆண்- 03, பெண்- 02


11. இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ எம்.எஸ்சி (கம்ப்யூட்டர்) - ஆண்- 10, பெண்- 02


கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் படிக்கும் கல்லூரி முதல்வரிடமிருந்து குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக தேர்வு முடிவு வெளியாகும் என்று உறுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.10.1987க்கு முன்னரோ, 01.10.1994க்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது.


உடற் தகுதிகள் : 


ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீட்டர் உயரமும், 


பெண்கள் 152 செ.மீட்டர் உயரமும், 42 கிலோ எடையும் பெற்றிருக்க வேண்டும்..


தேர்வு செய்யப்படும் முறை : இரண்டு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உளவியல் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு என இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 49 வாரங்கள் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை : www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.03.2014.


கூடுதல் விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 27 Feb 2014  1 Comments
Tags: Indian Army Recruitment   Indian Army Jobs   Indian Army Jobs Engineering Candidates   பொறியியல் பட்டதாரி   இந்திய ராணுவம்   இந்திய இராணுவ வேலைவாய்ப்பு     
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !! இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !!
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !! பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !!
தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு !! தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு !!
கருத்துகள்
06-Oct-2015 02:40:10 madhan said : Report Abuse
completed BE and DIPLOMA IN CSE department i want apply computer related position
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.