LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

குழந்தையை கண்டித்த பெற்றோருக்கு சிறை தண்டனை! நார்வே நீதிமன்றம் தீர்ப்பு !

நார்வேயில் தனது குழந்தையை கண்டித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தம்பதிக்கு சிறைத் தண்டனை வழங்கி நார்வே நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் சந்திரசேகர், அவரது மனைவி அனுபமா. இவர்கள் இருவரும் தனது குழந்தைகளுடன் நார்வேயில் வசித்து வருகின்றனர்.இவர்களது
ஏழு வயது மகன், பள்ளி வாகனத்தில் சிறுநீர் கழித்தான் என்றும், பள்ளியில் விளையாடக் கொடுத்த பொம்மை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டான் என்றும் பள்ளியிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர், தங்களின் குழந்தையைக் கண்டித்தனர். இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று குழந்தையை மிரட்டி வைத்ததாக கூறப்படுகிறது.இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் நார்வே போலீசில் புகார் செய்தது.இதனால் பெற்றோர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கில் நேற்று நார்வே நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதில் குழந்தையை பெல்ட் போன்ற பொருளால் தாக்கியுள்ளதும், கரண்டியால் சூடுபோட்டதும் நிரூபிக்கப்பட்டது.எனவே, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.இத்தீர்ப்பை எதிர்த்து இரண்டு நாள்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அனுமதியளித்தது.

Indian Couple Found Guilty Get Jail Terms

 An Indian software professional and his wife were held guilty here on Tuesday of “serious child abuse” and awarded imprisonment for 18 months and 15 months.Chandrasekhar and his wife Anupama, who were arrested last month, were convicted of gross or repeated maltreatment of their child  by threats, violence or other wrongs. They have a couple of days to appeal.Oslo District Court has found an Indian couple guilty on several counts of child abuse. In the view of the court the couple deliberately burned their son’s leg with a hot spoon an official statement said.The court said it was proven that on one occasion, the parents had even threatened to brand their son’s tongue with a hot spoon.

by Swathi   on 05 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.