LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

இந்திய அரசின் மிக உயரிய விருதுகள் - ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!!

உலக அளவில் 

 

காந்தி அமைதிப் பரிசு :

 

மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

 

தேசியளவில் :

 

பாரத ரத்னா :

 

பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது

 

பத்ம பூசன் :

 

இந்த விருது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 

 

தாமரைத் திரு(பத்மஸ்ரீ) : 

 

தாமரைத் திரு என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டு சான்றிதல் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. 

 

தேசிய வீரதீர விருது :

 

இந்தியச் சிறாருக்கான தேசிய வீரதீர விருது  ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும் மற்றும் சிறார் நலத்திற்கான இந்திய மன்றமும் இணைந்து பல இடர்களின் இடையிலும் வீரமாகச் செயல் புரிந்த இந்தியச் சிறாருக்காக வழங்கப்படுகிறது.

 

துறை வாரியாக :

 

இலக்கியம்

 

சாகித்திய அகாதமி விருது :

 

சாகித்திய அகாதமி விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. 

 

ஞானபீட விருது :

 

ஞான பீட விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். 

 

திரைப்படம் : 

 

தாதாசாகெப் பால்கே விருது : 

 

தாதாசாகெப் பால்கே விருது இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவாக வழங்கப்படுகிறது.

 

தேசிய திரைப்பட விருதுகள் :

 

தேசிய திரைப்பட விருதுகள் இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும்[1]. 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.

 

இசை, நடனம், நாடகம் :

 

சங்கீத நாடக அகாதமி விருது :

 

சங்கீத நாடக அகாதமி விருது இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்துகலைகளில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும்.

 

விளையாட்டு 

 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா :

 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது. 

 

அருச்சுனா விருது :

 

அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது.

 

துரோணாச்சார்யா விருது :

 

துரோணாச்சார்யா விருது 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. 

 

தியான் சந்த் விருது :

 

தியான் சந்த் விருது இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது :

 

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது ஆண்டுதோறும் இந்தியாவில் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் இளம் அறிவியலாளர்களுக்கு "அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சிலால் வழங்கப்படும் விருதாகும்.

 

போர்ப்படை துறை 

 

பரம வீர சக்கரம் :

 

பரம் வீர் சக்கரம் எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்த விருது மரணத்திற்கு பின்பும், பெரும்பாலும் அவ்வாறே நிகழ்கின்றது, கொடுக்கக்கூடியது. 

 

மகா வீர சக்கரம் :

 

மகா வீர சக்கரம் எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கான இந்தியப் படைத்துறையின் இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம்

 

வீர சக்கரம் :

 

வீர சக்கரம் எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கு இந்தியப் படைத்துறை வழங்கும் பரம வீர சக்கரம், மகா வீர சக்கரம் விருதுகளுக்கு அடுத்து மூன்றாவது மிக உயரிய விருதாகும். 

 

அசோகச் சக்கர விருது :

 

அசோகச் சக்கரம் இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லாது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம்; 

 

கீர்த்தி சக்கரம் : 

 

கீர்த்தி சக்கரம் போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் அசோகச் சக்கரத்திற்கு அடுத்த நிலையிலும் சௌர்யா சக்கரத்திற்கு மேல் நிலையிலும் உள்ள உயரிய விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது. 

by Swathi   on 23 Oct 2013  3 Comments
Tags: India Awards   National Awards   Important Awards   இந்திய விருதுகள்   விருதுகள்   உயரிய விருதுகள்   இந்திய அரசு விருதுகள்  
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகள்... அமெரிக்கத் தமிழர் முன்னோடி விருதுகள்...
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
இந்திய அரசின் மிக உயரிய விருதுகள் - ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!! இந்திய அரசின் மிக உயரிய விருதுகள் - ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!!
கலைமாமணி விருதுகள் 1991-2010 கலைமாமணி விருதுகள் 1991-2010
விஜய் டிவி விருதுகள் - 2013 விஜய் டிவி விருதுகள் - 2013
விஜய் டிவி விருதுகள் - 2012 விஜய் டிவி விருதுகள் - 2012
விஜய் டிவி விருதுகள் - 2011 விஜய் டிவி விருதுகள் - 2011
விஜய் டிவி விருதுகள் - 2010 விஜய் டிவி விருதுகள் - 2010
கருத்துகள்
26-Aug-2019 07:47:30 கண்ணன் said : Report Abuse
Usefull thank you
 
21-Jun-2019 12:47:58 பி. சதீஷ் பாபு said : Report Abuse
விளம்பரங்கள் ஆதிகமாக உள்ளது ஆகையால் முக்கியமான வார்த்தைகள் புரியவில்லை. விளம்பரங்களை குறைத்துக்கொள்ளுங்கள்
 
13-Nov-2014 05:50:51 சத்தியா said : Report Abuse
எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.