LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்படுமாம்: வர்த்தகச் சந்தையில் பரபரப்பு!

அமெரிக்காவினெ கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வர்த்தக சந்தையில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வாரம் 74 ரூபாய் வரை சரிவை  சந்தித்தது. இந்த சரிவு இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். 

இந்த நிலையில் மேலும் ஒரு சறுக்கலாக இந்திய ரூபாயை கரன்சி கண்காணிப்பு  பட்டியலில் இருந்து நீக்க ட்ரம்ப் அரசு பரிந்துரைத்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐந்து நாடுகளுடன் சேர்ந்து அந்நிய செலாவணி கொள்கைகள் கொண்ட நாடுகளின் கவனிப்பு பட்டியலில் இந்திய ரூபாயை கண்காணிப்பு பட்டியலில் இணைத்ததாக கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் கருவூலத் துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய பணங்களை தனது கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. இந்தப் பட்டியலில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாடுகளின் பணங்கள் மட்டும் இந்த பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும். 

ஜி.எஸ்.டி. வந்த பின் இந்திய ரூபாய் மதிப்பு பல பொருளாதார பின்விளைவுகள் காரணமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இந்த தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது கண்காணிப்பு பட்டியலில் இருந்து  நீக்கப் போவதாக முடிவெடுத்து இருக்கிறது. 

இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை கணக்கிட்டு, ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம் என்று தெரிவித்து உள்ளனர். அதன் பின்னர் அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அது சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 

by Mani Bharathi   on 19 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.